என் மலர்
இந்தோனேசியா
- மத்திய ஜாவா மற்றும் கிழக்கு ஜாவாவிலும் வீடுகளும் கட்டிடங்களும் அதிர்ந்தன.
- சுனாமி ஆபத்து இல்லை என அறிவிப்பு.
இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவின் சில பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. யோக்யகர்த்தா மாகாணத்தின் பந்துல் ரீஜென்சியில் உள்ள பாம்பாங்லிபுரோவில் இருந்து தென்மேற்கே 84 கிலோமீட்டர் (52 மைல்) தொலைவில் 86 கிலோமீட்டர் (53.4 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யோககர்த்தாவின் சிறப்பு மாகாணத்திலும் அதன் அண்டை மாகாணங்களான மத்திய ஜாவா மற்றும் கிழக்கு ஜாவாவிலும் உள்ள வீடுகளும் கட்டிடங்களும் சில நொடிகள் அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிவித்தது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றுக்கான ஆட்டம் இன்று நடைபெற்றது.
- இந்திய அணி மலேசிய உலக சாம்பியன் ஆரோன் சியா- சோ வூய் யிக் இணையை எதிர்கொண்டது.
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தென் கொரியா கேங், சியோ ஜோடியுடன் போட்டியிட்டனர்.
இந்த ஆட்டத்தில், தென் கொரியாவின் கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி வெற்றிப்பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றுக்கான ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை மலேசிய உலக சாம்பியன் ஆரோன் சியா- சோ வூய் யிக் இணையை எதிர்கொண்டது.
இந்த போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக் சாய்ராஜ் - சிராஜ் ஷெட்டி இணை 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் ஆரோன் சியா-சோ வூய்யிக் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- இந்திய ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- தென் கொரியாவின் கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்.
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர் ஒன் ஜோடியான ஃபஜர் அல்ஃபியன், முகம்மது ரியான் ஆர்டியான்டோவுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தென் கொரியா கேங், சியோ ஜோடியுடன் போட்டியிட்டனர்.
இந்த ஆட்டத்தில், தென் கொரியாவின் கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி வெற்றிப்பெற்றது.
- இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி இந்தோனேசிய ஜோடியுடன் மோதியது.
- இதில் 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வென்றது.
ஜகார்த்தா:
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர் ஒன் ஜோடியான ஃபஜர் அல்ஃபியன், முகம்மது ரியான் ஆர்டியான்டோவுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ஜப்பான் வீரருடன் மோதினார்.
- இதில் 21-18, 21-16 என்ற செட் கணக்கில் பிரனாய் வென்றார்.
ஜெகார்த்தா:
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ஜப்பான் வீரர் நராகோவை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் அக்செல்சென்னை எதிர்கொள்கிறார்.
- இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ஹாங்காங் வீரருடன் மோதினார்.
- இதில் 21-18, 21-16 என்ற செட் கணக்கில் பிரனாய் வென்றார்.
ஜெகார்த்தா:
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச் எஸ் பிரனாய் ஹாங்காங் வீரர் ஆங்க்சை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் காலிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் வீரர் நரகோடாவை எதிர்கொள்கிறார்.
- இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி சீன வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் மலேசியா வீரரை எதிர்கொண்டார்.
ஜெகார்த்தா:
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் மலேசிய வீரரை 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதேபோல், மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பி, சீன வீரரை 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்ரீகாந்த் கிடாம்பியை நாளை எதிர்கொள்கிறார்.
- இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது விபரீதம்.
- சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றனர்.
இந்நிலையில், இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருவரும் திடீரென படகில் இருந்து விழுந்து நீரில் மூழ்கினர்.
இதையடுத்து அங்கு இருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மட்டுமே கிடைத்துள்ளார். விபூஷ்னியாவின் உடலை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இருவரின் சடலங்களை இந்தியாவிற்கு எடுத்து வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருமணமான 10 நாளில் மருத்துவ தம்பதி உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள கோவிலில் ஜெர்மனி பெண் ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிந்தார்.
- மனநிலை சரியில்லாதவர் என தெரிய வந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஜெகர்த்தா:
இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள கோவிலுக்குள் ஜெர்மனியைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் சென்றார். அவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்டார். அப்போது அங்கு ஏராளமானோர் உடனிருந்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோவில் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோவிலில் நிர்வாணமாக இருந்ததற்காகவும், புனித தலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் அந்தப் பெண்ணை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, அவரை மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பாலி கோவிலில் ஜெர்மனி பெண் ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்தோனேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்தனர்.
- அதிகமான பாரத்தை ஏற்றிச்சென்றதாலேயே விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். இந்தப் படகு புளாவ் புருங் என்ற இடத்தின் அருகிலுள்ள கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தைகள், பெண்கள் என 58 பேரை மீட்டனர்.
திடீரென ஏற்பட்ட விபத்தால் 11 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். மேலும் 10 பேர் மாயமாகினர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
முதல் கட்ட விசாரணையில், அதிகமான பாரத்தை ஏற்றிச்சென்றதாலேயே விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
- சுமத்ரா தீவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் வீடுகள், ஆஸ்பத்திரி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கெப்புலவுன் படு நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உண்டானது.
இந்த நிலையில் இந்தோனோசியாவில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது.
இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் பீதியடைந்த மக்கள், வீடுகளில் இருந்து வெளியேறி உயரமான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
மேற்கு சுமத்ரா, வடக்கு சுமத்ரா, மென்டலாய் தீவு உள்ளிட்ட இடங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், ஆஸ்பத்திரி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழுமையான சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. அதிகாலையில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பு நிலவியது.
- இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் இன்று அதிகாலை நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது.
நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துபடி வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.
முதல் நிலநடுக்கம் 43 கி.மீ. ஆழத்திலும் 2-வது நிலநடுக்கம் 40.கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






