என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசியன் மாநாடு"

    • பிரதமர் நரேந்திர மோடி ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசியா செல்கிறார்.
    • இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுவதால், பிரதமர் மோடி நாளை மாலை இந்தியா திரும்புகிறார்.

    இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார்.

    ஏசியன் மாநாடுகளில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி நாளை (செப்டம்பர் 7) மாலையே இந்தியா திரும்புகிறார். இந்தியாவில் ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதால், இது குறுகிய பயணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை தனியாக நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

    இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனை, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியோ ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    • ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார்.
    • ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெறுவதால் பிரதமர் மோடி இன்று மாலை இந்தியா திரும்புகிறார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார்.

    இந்நிலையில், இன்று அதிகாலை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அங்கு குவிந்திருந்த இந்திய வம்சாவளியினர் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

    ஏசியன் மாநாடுகளில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி இன்று மாலை இந்தியா திரும்புகிறார். இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருப்பதால் இது குறுகிய பயணமாக அமைந்துள்ளது.

    ×