என் மலர்
மேற்கு வங்காளம்
- சிவசேனாவின் 40க்கு மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
- அவர்கள் அரசுக்கு எதிராக முடிவெடுக்கும் பட்சத்தில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
கொல்கத்தா:
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார் சிவசேனா மூத்த தலைவரும், மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே. அவர்கள் அரசுக்கு எதிராக முடிவெடுக்கும் பட்சத்தில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தவ் தாக்கரே மற்றும் அனைவருக்கும் நீதி வேண்டும். இன்று நீங்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்கள். அதனால் பணபலம், மாபியா பலத்தைப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருந்து சென்றாக வேண்டும். உங்கள் கட்சியையும் யாராவது உடைக்கலாம். இது தவறு, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மகாராஷ்டிராவிற்கு பிறகு மற்ற மாநில அரசுகளையும் கவிழ்ப்பார்கள். மக்களுக்கு நீதி வேண்டும் என தெரிவித்தார்.
- கோர்ட்டில் வழக்கு இருப்பதால் நூபுர் சர்மாவின் பெயர் தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை.
- தீர்மானத்தைக் கண்டித்து மேற்கு வங்காள பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கொல்கத்தா:
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டார். இதில் நூபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியான நவீன் ஜிண்டால் கருத்து வெளியிட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சர்ச்சைக்குரிய பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீதும் கட்சி மேலிடம் நடவடிகை எடுத்துள்ளது. நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவைக் கண்டித்து மேற்கு வங்காள சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை சட்டசபை விவகார மந்திரி பார்த்தா சட்டர்ஜி தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சில தலைவர்கள் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதங்களுக்கிடையே வெறுப்பை பரப்பும் மிகப்பெரிய சதியில் இது ஓர் அங்கம் என தெரிவித்தார்.
- மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பில்லை.
- குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்த பிறகே எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம்.
குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து மம்தா பானர்ஜி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை என தெரிகிறது.
குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்த பிறகே எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளனர்.
- டி-பிரிவில் 9 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்தது.
- ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இந்தியா தகுதி பெற்றது.
கொல்கத்தா:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் டி பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இந்த தகுதி சுற்று போட்டியின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் 2 வது நிமிடத்தில் இந்திய அணியின் அன்வர் அலி ஒரு கோல் அடித்தார்.
தொடர்ந்து 45 வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியின் 85வது நிமிடத்தில் மண்விர் சிங்கும், 93வது நிமிடத்தில் இஷான் பண்டிதாவும் கோல் அடித்தனர்.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 29 ஆண்டுகள் கழித்து கால்பந்து போட்டியில் ஹாங்காங் அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் டி-பிரிவு அணிகளில் 9 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்ததுடன் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
- நூபுர் சர்மாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புக்கு வழிவகுத்தது.
- கலவரம் நடந்த ஹவுராவுக்குச் செல்ல முயன்ற பா.ஜ.க. தலைவர் கைதுசெய்யப்பட்டார்.
கொல்கத்தா:
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நூபுர் சர்மா, டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டார். இதில் நூபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியான நவீன் ஜிண்டால் கருத்து வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புக்கு வழி வகுத்தது. சர்ச்சைக்குரிய பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீதும் கட்சி மேலிடம் நடவடிகை எடுத்துள்ளது.
நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மேற்கு வங்காளத்தின் ஹவுரா மற்றும் மூர்ஷிதாபாத் பகுதிகளில் வன்முறை வெடித்தது.
இதுதொடர்பாக, முதல் மந்திரி மம்தா பானர்ஜி டுவிட்டரில், இந்த வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். இதனை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க. செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.
கலவரம் ஏற்பட்ட ஹவுரா பகுதிக்குச் செல்ல முயன்ற பா.ஜ.க. மாநில தலைவர் சுகந்தா மஜூம்தாரை மாநில போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் கலவரம் ஏற்படுத்தியது தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என டிஜிபி மனோஜ் மாளவியா தெரிவித்தார்.
- விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக மம்தா குறிப்பிட்டுள்ளார்.
- கவலை தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதுடெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை இப்போதுதான் அறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து பொது வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நாம் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் சோனியா அவர்களே.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய அணி அடுத்ததாக ஹாங்காங் அணியுடன் மோதுகிறது
- ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது.
கொல்கத்தா:
ஆசிய கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து போட்டியின் 3வது சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.
போட்டியின் 83வது நிமிடத்தில் இந்திய கால்பந்து நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ஜுபைர் அமிரி தலையால் முட்டி கோல் அடிக்க ஆட்டம் சம நிலை ஆனது.
இதையடுத்து போட்டி நிறைவடைய சில நொடிகள் இருந்த போது இந்திய வீரர் சாஹல் அப்துல் சமத் ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்று விளையாடுவதை இந்திய அணி உறுதி செய்துள்ளது. தகுதி சுற்று போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நாளை மறுநாள் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.
- மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தல், பல்வேறு மாநிலத் தேர்தல்கள் குறித்தும் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே, நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் தேசிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலில் மாநில கட்சிகளின் பங்கு அதிகளவில் தேவை என்பதால் மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர், தென் மாநிலங்களை ஒன்றிணைத்து சரத்பவாரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி டெல்லி, கேரளா, தமிழகம், ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநில முதல் மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஜூன் 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
- நூபுர் சர்மாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் 57 இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புக்கு வழிவகுத்தது.
- நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா:
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நூபுர் சர்மா, டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டார். இதில் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியான நவீன் ஜிண்டால் கருத்து வெளியிட்டார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் 57 இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புக்கு வழி வகுத்தது. சர்ச்சைக்குரிய பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீதும் கட்சி மேலிடம் நடவடிகை எடுத்துள்ளது.
இதற்கிடையே, நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், மேற்கு வங்காளத்தின் ஹவுரா பகுதியில் வன்முறை வெடித்தது.
இதுதொடர்பாக, முதல் மந்திரி மம்தா பானர்ஜி டுவிட்டர் பதிவிடுகையில், இந்த வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். இதனை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.
இந்நிலையில், கலவரம் ஏற்பட்ட ஹவுரா பகுதிக்குச் செல்ல முயன்ற பா.ஜ.க. மாநில தலைவர் சுகந்தா மஜூம்தாரை மாநில போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தா:
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சையான கருத்தை தெரிவித்த பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய கோரி இஸ்லாமியர்கள் நேற்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடு பட்டனர். சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது.
மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
ஹவுரா மாவட்டம் பஞ்சலா பசார் பகுதியில் இன்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இங்கு போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினார்கள். இதை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.
அங்கு இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். இதே போல் 13-ந் தேதி காலை 6 மணி வரை இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
மக்கள் பொய்யான தகவலை நம்பி கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே டெல்லி ஜூம்மா மசூதிக்கு வெளியே நடந்த போராட்டம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- ஹவுரா மாவட்டத்தில் பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டது.
- இந்த போராட்டத்தின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நுபுர் சர்மாவை கைது செய்த கோரி மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தர காண்ட், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள உலுபெரியா பகுதியில் பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டது. மேலும் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகளை வரவழைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனிடையே, ஹவுரா மாவட்டத்தின் பன்ஹாரிஷ்பூர் உள்பட பதற்றம் நிறைந்த பகுதிகளில் வரும் 13ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதள இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பல்வேறு பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்றன. இதில் 11 காவலர்களும், 12 போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். இதையடுத்து ராஞ்சி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. வன்முறையாளர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து உயர் அதிகாரிகளுடன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவசர ஆலோசனை நடத்தினார்.
போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முழு அதிகாரமும், உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 136 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
- மேற்கு வங்காளத்தில் வங்காளதேச தூதரகம் அருகே பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸ்காரர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
- துப்பாக்கிச்சூடு நடத்தியது சோதுப் லெப்சா என்ற போலீஸ்காரர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் பகுதியில் வங்காளதேச தூதரக அலுவலகம் அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க. பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம்கள் இன்று அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த தூதரகத்திற்கு வெளியே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் திடீரென சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள், வாகன ஓட்டிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பெண் ஒருவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன்பின், துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த போலீஸ்காரர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த 2 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்தியது சோதுப் லெப்சா என்ற போலீஸ்காரர் எனவும், மன அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக விடுமுறையில் இருந்த லெப்சா இன்று பணியில் சேர்ந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்






