என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசுத்தலைவர் வேட்பாளர் தேர்வு- மம்தா நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி, டிஆர்எஸ் பங்கேற்பில்லை
    X

    குடியரசுத்தலைவர் வேட்பாளர் தேர்வு- மம்தா நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி, டிஆர்எஸ் பங்கேற்பில்லை

    • மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பில்லை.
    • குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்த பிறகே எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம்.

    குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து மம்தா பானர்ஜி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை என தெரிகிறது.

    குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்த பிறகே எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளனர்.


    Next Story
    ×