என் மலர்

  இந்தியா

  மேற்கு வங்காளத்தில் கலவரம் ஏற்படுத்தியது தொடர்பாக 200 பேர் கைது
  X

  ஹவுரா வன்முறை

  மேற்கு வங்காளத்தில் கலவரம் ஏற்படுத்தியது தொடர்பாக 200 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நூபுர் சர்மாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புக்கு வழிவகுத்தது.
  • கலவரம் நடந்த ஹவுராவுக்குச் செல்ல முயன்ற பா.ஜ.க. தலைவர் கைதுசெய்யப்பட்டார்.

  கொல்கத்தா:

  பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நூபுர் சர்மா, டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டார். இதில் நூபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியான நவீன் ஜிண்டால் கருத்து வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புக்கு வழி வகுத்தது. சர்ச்சைக்குரிய பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீதும் கட்சி மேலிடம் நடவடிகை எடுத்துள்ளது.

  நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதற்கிடையே, மேற்கு வங்காளத்தின் ஹவுரா மற்றும் மூர்ஷிதாபாத் பகுதிகளில் வன்முறை வெடித்தது.

  இதுதொடர்பாக, முதல் மந்திரி மம்தா பானர்ஜி டுவிட்டரில், இந்த வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். இதனை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க. செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.

  கலவரம் ஏற்பட்ட ஹவுரா பகுதிக்குச் செல்ல முயன்ற பா.ஜ.க. மாநில தலைவர் சுகந்தா மஜூம்தாரை மாநில போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

  இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் கலவரம் ஏற்படுத்தியது தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என டிஜிபி மனோஜ் மாளவியா தெரிவித்தார்.

  Next Story
  ×