என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
    • கொல்லப்பட்டவர்களில் 8 பேர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்.

    மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதிகள், கிராம பஞ்சாயத்துகள் போட்டியிட்டன.

    மேலும், பா.ஜ.க., பஞ்சாயத்து சமிதி, கிராம பஞ்சாயத்துகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், நேற்று நள்ளிரவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 8 பேர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்.

    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வன்முறை தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டா, மாநில எதிர்க்கட்சித் தலைவர் (எல்ஓபி) சுவேந்து அதிகாரி மற்றும் பாஜக மேற்கு வங்க பொறுப்பாளர் மங்கள் பாண்டே ஆகியோரிடம் இன்று பேசினார்.

    அப்போது அவர், "ஜனநாயகத்தை அழிய விடமாட்டோம்" என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ஜனநாயகத்தின் இந்த மரணத்தை பாஜக அனுமதிக்காது. ஜனநாயக வழியில் இந்த போராட்டத்தை தீர்க்கமான நிலைக்கு கொண்டு செல்வோம்.

    மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் உயிர்களைக் காப்பாற்றவும், அமைதியை மீட்டெடுக்கவும் தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறார். ஆனால், மாநிலத்தில் தேர்தல் தொடர்பான வன்முறைகள் தொடர்வதால் அவரது வேண்டுகோள் வீணாகிவிட்டது.

    இப்போது மதியம் 3 மணி ஆகிறது. 15க்கும் மேற்பட்டோர் குண்டர்களால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். 20,000க்கும் மேற்பட்ட பூத்களை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் கைப்பற்றியுள்ளனர். மாநில காவல்துறை முன்னிலையில். சிஏபிஎஃப் ஒத்துழையாமையால் முற்றிலும் செயல்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.
    • இன்று நடந்த வன்முறையில் 14 பேர் பலியாகினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஜில்லா பரிஷத்தில் உள்ள 928 இடங்களிலும், பஞ்சாயத்து சமிதிகளில் 9,419 இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 61,591 இடங்களிலும் போட்டியிடுகிறது.

    பா.ஜ.க. 897 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 7,032 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 38,475 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    நேற்று நள்ளிரவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே நேற்றிரவு கடும் மோதல் ஏற்பட்டது. தங்களது கட்சி தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் மாநிலம் முழுவதும் பரவலான வன்முறைகள் பதிவாகின. ஒரு இளம்பெண் உள்பட 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இன்றைய வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 8 பேர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள். பா.ஜ.க., இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எப் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் தலா ஒருவர், அரசியல் அடையாளம் தெரியாத 2 நபர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் வன்முறையில் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மேலும், மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. இன்று பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான வன்முறையில் 4 பேர் படுகொலை
    • வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை 20-க்கும் மேற்பட்டோர் பலி

    மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மழைபெய்து கொண்டிருக்கும் நிலையிலும் மக்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

    பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறை வெடித்து வருகிறது. இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்காள கவர்னர் சி.வி. ஆனந்தா போஸ், வடக்கு 24 பர்கனாஸ் பகுதிக்குச் சென்றார். அப்போது அவர் கூறும்போது ''மக்கள் எனது வாகன பேரணியை வழிமறித்து, தங்களை சுற்றி நடைபெறும் கொலைகள் பற்றி கூறினார்கள்.

    குண்டர்கள் தங்களை வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிப்பதில்லை என்றனர். இது நம் அனைவருக்கும் கவலைத்தர வேண்டிய விசயம். இது ஜனநாயகத்தின் மிகவும் புனிதமான நாள். தேர்தல் வாக்குச்சீட்டுகள் மூலமாக வேண்டும். தோட்டாக்களால் அல்ல'' என்றார்.

    73,887 இடங்களுக்கு 2.06 லட்சம் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். 22 மாவட்டங்களில் உள்ள 63,229 கிராம பஞ்சாயத்து, 9,730 பஞ்சாயத்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 928 மாவட்ட கவுன்சிலர், 9,419 பஞ்சாயத்து கவுன்சிலர், 61,591 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    பா.ஜனதா 897 மாவட்டர் கவுன்சிலர், 7032 கவுன்சிலர், 38475 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    70 ஆயிரம் மாநில போலீஸ் உடன் 600 கம்பெனி மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டு போட திரண்டனர்.
    • பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் 63 ஆயிரத்து 239 உள்ளாட்சி பதவிகளுக்கான பஞ்சாயத்து தேர்தல் இன்று(8-ந்தேதி) ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் கருதப்பட்டதால் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

    தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியதில் இருந்து அரசியல் கட்சியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கடந்த 1 மாதமாக அங்கு நடந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 18 வயது சிறுவன் உள்பட 12-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த சூழ்நிலையில் இன்று காலை 7 மணிக்கு மேற்கு வங்காளத்தில் பலத்த பாதுகாப்புடன் பஞ்சாயத்து தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. தேர்தலையொட்டி வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காக 65 ஆயிரம் மத்திய படை போலீசாரும், 70 ஆயிரம் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அம்மாநிலத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள். 2 லட்சத்து 6 ஆயிரம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

    ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டு போட திரண்டனர். பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். ஒட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிராமப்புறங்களில் மழையையும் பொருட்படுத்தாது வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள்.

    அதே சமயம் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தீ வைப்பு, வாக்குச்சாவடிகள் சூறை, துப்பாக்கி சூடு என வன்முறைகளும் வெடித்தது. கூச்பெகார் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அங்குள்ள ஓட்டுச்சாவடிக்குள் புகுந்த கும்பல் வாக்குப்பெட்டிக்கு தீ வைத்தது. ஓட்டு சீட்டுகளையும் கிழித்தெறிந்தனர்.

    இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.

    சிடாய் என்ற இடத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குள் புகுந்த கும்பல் வாக்குச்சீட்டுகளை தீ வைத்து எரித்தது. ஓட்டு பெட்டிகளையும் உடைத்தது. மேலும் வாக்குச்சாவடியில் இருந்த மேஜை, நாற்காலிகளை அக்கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடியது. மேலும் தீயும் வைத்தது. இதனால் அங்கிருந்த பொருட்கள் தீ பற்றி எரிந்தது. இது குறித்து அறிந்ததும் கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.

    முர்ஷிதாபாத் மாவட்டம் ஷாம் ஹெர்சந்த் என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு வீடு சூறையாடப்பட்டது.

    தேர்தல் தொடங்குவதற்கு முன்பு நேற்று இரவே பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தலை விரித்தாடியது. இந்த வன்முறையில் முர்ஷிதாபாத் மாவட்டம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    அங்குள்ள கபாஸ் தங்கா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பாபர் அலி என்பவர் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்படும் வழியில் இறந்தார்.

    ரெஜிநகர் பகுதியில் அக்கட்சியை சேர்ந்த மற்றொரு தொண்டர் குண்டு வீசி கொல்லப்பட்டார். கார்கிராம் என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

    கூச்பெகார் மாவட்டம் ராம்பூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பூத் கமிட்டி சேர்மன் கணேஷ்சர்கார் என்பவர் நேற்று இரவு கத்தியால் குத்தப்பட்டார். படுகாயத்துடன் அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இந்த வன்முறைக்கு மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரும் பலியானார்.

    பாலிமாரி வாக்குச்சாவடிக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பாரதிய ஜனதா பூத் ஏஜெண்டு மாதவ் விஷ்வாஸ் என்பவரை வெடிகுண்டு வீசி கொன்றது. இந்த சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரசார் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டி உள்ளது. 24 பாராகான்ஸ் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு பூத் ஏஜெண்டாக செயல்பட்ட அப்துல்லா என்பவர் மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த சம்பவத்தின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் பெண் வேட்பாளரின் கணவர் இருப்பதாக கூறி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமாக இருந்தது.

    நேற்று இரவு முதல் இன்று வரை மாநிலம் முழுவதும் நடந்த தேர்தல் வன்முறை சம்பவத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 5 பேர் மற்றும் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் தலா 3 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர். சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளரும் இறந்தார்.

    இதனால் வன்முறைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்து உள்ளது. இந்த சம்பவங்களில் பலர் காயம் அடைந்தனர்.

    கூச்பெகார் மாவட்டம் ஒக்ராபாரி கிராமத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் ஹபிசூர் ரகு மான் என்பவர் காயம் அடைந்தார். நாடியா மாவட்டம் காசானாகிராம் பஞ்சாயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பாரதிய ஜனதா நிர்வாகிகளால் தாக்கப்பட்டார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நாராயண்பூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஹசினா சுல்தானா என்பவரது கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த தாக்குதலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

    தெற்கு பர்கானாஸ் பகுதியில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இன்று மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிகிறது. அதன் பிறகு ஓட்டு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் யாருக்கு அதிக இடம் கிடைக்கும் என்பது தெரியவரும். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. பாரதிய ஜனதா கட்சி 2-ம் இடத்தை பிடித்தது. இம்முறை எந்த கட்சிக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பது 11-ந்தேதி தெரியவரும். இந்த தேர்தல் முடிவு சட்டசபை தேர்தல் முடிவை போல இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • 73 ஆயிரம் இடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி
    • தேர்தல் வன்முறையில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

    மேற்கு வங்காள மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே வன்முறை தலைவிரித்தாடியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தங்களது வேட்பாளர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இதனால் மத்திய பாதுகாப்புப்படை பாதுகாப்புடன் வேட்புமனு தாக்கல், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். உயர்நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது.

    இருந்தாலும் வன்முறை, கொலைவெறி தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று 3 தொண்டர்கள் உயிரிழந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேவையானபோது மத்தியப்படை எங்கே போனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

    இதையெல்லாம் தாண்டி பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 73,887 இடங்களுக்கு 2.06 லட்சம் வேட்பாளர்களர் களம் இறங்கியுள்ளனர்.

    22 மாவட்டங்களில் உள்ள 63,229 கிராம பஞ்சாயத்து, 9,730 பஞ்சாயத்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கும் நிலையிலும், மக்கள் காலை 6 மணியில் இருந்து நீண்ட வரிசையில் வாக்களிக்க திரண்டு வந்தனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 928 மாவட்ட கவுன்சிலர், 9,419 பஞ்சாயத்து கவுன்சிலர், 61,591 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    பா.ஜனதா 897 மாவட்டர் கவுன்சிலர், 7032 கவுன்சிலர், 38475 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    70 ஆயிரம் மாநில போலீஸ் உடன் 600 கம்பெனி மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.
    • அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 27-ந்தேதி வடக்கு வங்காள பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோசமான வானிலை காரணமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இதில் மம்தா பானர்ஜிக்கு இடது கால் மூட்டு மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

    பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு நேற்று மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் மற்றும் முதல்வர் சக்கர நாற்காலியில் வீடு திரும்பினார்.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்," முதல்வர் மம்தா பானர்ஜி இப்போது நன்றாக இருக்கிறார். ஆனால், அவர் வீட்டில் ஓய்வில் இருக்க வேண்டும். அடுத்தகட்ட சிகிச்சைக்காக இன்னும் சில நாட்களில் அழைப்போம்" என்றார்.

    • பஞ்சாயத்து தேர்தலையொட்டி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
    • புருலியா மாவட்டம் மோடோ பகுதியில் பாரதியஜனதா தலைவர் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில கவர்னர் ஆனந்த்போஸ் நேரில் சென்று பார்வையிட்டார். வன்முறையை தடுக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புருலியா மாவட்டம் மோடோ பகுதியில் பாரதியஜனதா தலைவர் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது பெயர் பன்கிம் ஹன்ஸ்டா. இவர் அப்பகுதியில் பா.ஜ.க. பூத் கமிட்டி உறுப்பினராக செயல்பட்டு வந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.பஞ்சாயத்து தேர்தல் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

    • மம்தா பானர்ஜிக்கு இடது கால் மூட்டு மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
    • வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

    கொல்கத்தா :

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 27-ந்தேதி வடக்கு வங்காள பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அப்போது மம்தா பானர்ஜிக்கு இடது கால் மூட்டு மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

    தனக்கு தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் காயத்தில் இருந்து குணமடைந்து வருவதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தனது டுவிட்டர் தளத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    • மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும்.
    • எல்லை பாதுகாப்பு படை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.

    மேற்கு வங்காளத்தின் கிராமப்புறங்களில் ஜூலை 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றுவதற்காக ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

    அவ்வகையில், ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் போகலாம் என்பதை உணர்ந்து எல்லை பாதுகாப்பு படை (BSF) பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும். பா.ஜ.க. அரசின் பதவிக்காலம் இன்னும் வெறும் 6 மாதங்களே உள்ளது. தேர்தலில் அடையப் போகும் தோல்வியை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். அதனால், அவர்கள் பல்வேறு குழுக்கள் மற்றும் சமூகங்களை லாபி செய்ய முயற்சிக்கவில்லை.

    எல்லா எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளையும் நான் குற்றம் சாட்டவில்லை, அவர்கள் எங்கள் எல்லைகளைக் காக்கிறார்கள். ஆனால் எல்லை பாதுகாப்பு படை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். ஏனெனில், நாளை பா.ஜ.க. ஆட்சியில் இருக்காது. ஆனாலும், அவர்கள் (BSF) தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும், எல்லைப் பகுதிகளில், எல்லை பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தரப்படும் என்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு வேலைகள் வழங்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

    எல்லையோர பகுதிகளில் உள்ள வாக்காளர்களை பா.ஜ.க. சார்பாக எல்லை பாதுகாப்பு படை மிரட்டுவதாக மம்தா நேற்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அவரது ஹெலிகாப்டர் மோசமான வானிலையில் சிக்கியது.
    • ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதையடுத்து விமான நிலையத்திற்கு சாலை வழியாக சென்றார்.

    மேற்கு வங்காளத்தில் ஜூலை 8ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலை சட்டசபை தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் தருகின்ற அதே தீவிரத்தோடு அணுக வேண்டும் என மம்தா பானர்ஜி, தன் கட்சி பிரமுகர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக வடக்கு பகுதிகளில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார் மம்தா.

    இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர், சிலிகுரி அருகே உள்ள செவோக் விமானதளத்தில் இன்று பிற்பகல் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    ஜல்பைகுரி எனும் இடத்தில், ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிவிட்டு, பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு செல்லும் வழியில், பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அவரது ஹெலிகாப்டர் மோசமான வானிலையில் சிக்கியது.

    "இங்கு மிகவும் கனமழை பெய்து கொண்டிருந்தது. அதனால் விமானி ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, மம்தா பானர்ஜியின் பயணம், பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு சாலை வழியாக செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கொல்கத்தாவுக்கு விமானத்தில் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது," என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • கூச் பெஹார் பகுதியில் இன்று காலை திடீர் மோதல் ஏற்பட்டது.
    • மேற்கு வங்காளத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டதில் இருந்து ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் அடுத்த மாதம் ( ஜூலை) 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதியஜனதா கட்சியினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.கூச் பெஹார் பகுதியில் இன்று காலை திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 7 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். குண்டு காயம் அடைந்த அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பாபுஹக்கே என்பவர் இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவத்தையொட்டி கூச் பெஹார் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் நடந்த பகுதி வங்காளதேசத்தையொட்டிய பகுதியாகும்.உள்ளூரை சேர்ந்த சில அரசியல்வாதிகள் வங்காளதேசத்தை சேர்ந்தவர்களை தங்களுடன் வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    மேற்கு வங்காளத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டதில் இருந்து ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த 8-ந்தேதியில் இருந்து இதுவரை நடந்த வன்முறைக்கு 11 பேர் பலியாகி விட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த மோதலின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக பாரதிய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.

    • தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் 11-ந் தேதி எண்ணப்பட உள்ளது.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள 63 ஆயிரத்து 229 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 8-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் 11-ந் தேதி எண்ணப்பட உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் தேர்தல் தீவிரமடைந்துள்ளது. மாநில முதல்-மந்திரியும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதில் ஒரு பகுதியாக ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால்பஜார் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது, பெண் ஒருவர் நடத்தி வரும் டீக்கடைக்கு சென்ற முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அங்கிருந்த டீத்தூளை எடுத்து கிளாஸ்களில் டீ போட்டு பொது மக்களுக்கும், கட்சியினருக்கும் கொடுத்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×