search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் வாக்குச்சீட்டுகள் மூலமாக இருக்க வேண்டும்...! தோட்டாக்களால் அல்ல...!- மேற்கு வங்காள கவர்னர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தேர்தல் வாக்குச்சீட்டுகள் மூலமாக இருக்க வேண்டும்...! தோட்டாக்களால் அல்ல...!- மேற்கு வங்காள கவர்னர்

    • பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான வன்முறையில் 4 பேர் படுகொலை
    • வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை 20-க்கும் மேற்பட்டோர் பலி

    மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மழைபெய்து கொண்டிருக்கும் நிலையிலும் மக்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

    பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறை வெடித்து வருகிறது. இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்காள கவர்னர் சி.வி. ஆனந்தா போஸ், வடக்கு 24 பர்கனாஸ் பகுதிக்குச் சென்றார். அப்போது அவர் கூறும்போது ''மக்கள் எனது வாகன பேரணியை வழிமறித்து, தங்களை சுற்றி நடைபெறும் கொலைகள் பற்றி கூறினார்கள்.

    குண்டர்கள் தங்களை வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிப்பதில்லை என்றனர். இது நம் அனைவருக்கும் கவலைத்தர வேண்டிய விசயம். இது ஜனநாயகத்தின் மிகவும் புனிதமான நாள். தேர்தல் வாக்குச்சீட்டுகள் மூலமாக வேண்டும். தோட்டாக்களால் அல்ல'' என்றார்.

    73,887 இடங்களுக்கு 2.06 லட்சம் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். 22 மாவட்டங்களில் உள்ள 63,229 கிராம பஞ்சாயத்து, 9,730 பஞ்சாயத்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 928 மாவட்ட கவுன்சிலர், 9,419 பஞ்சாயத்து கவுன்சிலர், 61,591 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    பா.ஜனதா 897 மாவட்டர் கவுன்சிலர், 7032 கவுன்சிலர், 38475 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    70 ஆயிரம் மாநில போலீஸ் உடன் 600 கம்பெனி மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×