என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • ஜார்க்கண்ட் மாநிலம் சந்தாலி மொமின் தோலா பகுதியில் உள்ள பழைய வீட்டில் ஒரு பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
    • ரூபிகா பழமையான பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

    டேராடூன்:

    டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா காதலனால் கொல்லப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அதே மாதிரியான நிகழ்வு நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்றன.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மனைவியை கொன்று அவரது உடலை 12 துண்டுகளாக கணவன் வெட்டியுள்ளான்.

    ஜார்க்கண்ட் மாநிலம் சந்தாலி மொமின் தோலா பகுதியில் உள்ள பழைய வீட்டில் ஒரு பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரூபிகா பஹாடின் என்றும், அவரை அவரது கணவர் தில்தார் அன்சாரி கொன்று உடலை 12 துண்டுகளாக வெட்டியதும் தெரிய வந்தது. தில்தார் அன்சாரிக்கு 2-வது மனைவி ரூபிகா ஆவார்.

    உடலின் பல பாகங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அவற்றை தேடும் பணியில் போலீசார் ஈடுபடுகிறார்கள். அந்த பெண் பழமையான பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொன்று உடலை 12 துண்டுகளாக வெட்டிய கணவர் தில்தார் அன்சாரியை கைது செய்தனர்.

    எலக்ட்ரிக் கட்டர் போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தி உடலை பல துண்டுகளாக வெட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் மூலம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக மாநில அரசை பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

    • உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் இன்று அதிகாலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
    • விபத்தில் காயமடைந்த 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    நொய்டா:

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் இன்று அதிகாலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் 3 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    • விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பேருந்துக்குள் இருந்த பயணிகள் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் விபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், பலர் படுகாயமடைந்த நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
    • அவரது தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என உத்தர பிரதேச பா.ஜ.க நிர்வாகி அறிவித்தார்.

    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பிலாவல் பூட்டோவுக்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாக்பாத் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. அப்போது அங்கு பேசிய பா.ஜ.க. உள்ளூர் நிர்வாகியும், மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவின் தலையை துண்டித்துக் கொண்டு வருபவர்களுக்கு நான் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என அதிரடியாக அறிவித்தார்.

    அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் நன்கு அறிந்துதான் அவ்வாறு பேசியதாகவும், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    • உத்தர பிரதேசம் என்றாலே புல்டோசரே நினைவுக்கு வரும் அளவுக்கு மாறிப் போயுள்ளது.
    • அங்கு திருமண பரிசாக மருமகனுக்கு புல்டோசரை மாமனார் வழங்கி பரபரப்பு ஏற்படுத்தினார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், குறிப்பிட்ட குற்ற செயல்களைப் புரிந்தோரின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதனால், தவறுகள் குறைவதுடன், குற்றம் செய்ய குற்றவாளிகள் அஞ்சும் நிலையும் காணப்படுகிறது.

    எனவே, உத்தர பிரதேசம் என்றாலே புல்டோசரே நினைவுக்கு வரும் அளவுக்கு மாறிப் போயுள்ளது. இந்த ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலின்போது கூட இந்த விவகாரம் பற்றிய விவாதம் சூடு கிளப்பியது.

    இதற்கிடையே, ஓய்வுபெற்ற ராணுவ வீரரான பரசுராம் பிரஜாபதி என்பவர் தனது மகள் நேகாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதன்படி, சாவன்கார் பகுதியை சேர்ந்த யோகேந்திரா பிரஜாபதி என்பவருக்கும், நேகாவுக்கும் திருமணம் முடிவானது. யோகேந்திரா கடற்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், தனது மகள் மற்றும் மருமகனுக்கு திருமண பரிசாக மாமனார் ஆடம்பர ரக காரை தருவதற்கு பதிலாக புல்டோசரை வழங்கியுள்ளார். இதற்கான காரணம் பற்றி பரசுராம் கூறுகையில், தனது மகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால், பணம் ஈட்ட இந்த புல்டோசரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    • அசையா சொத்துக்களில் ஒரு பங்கை ஷாஜெப்புக்கு வழங்குவதாக தாத்தா உயிலில் கூறியிருந்தார்.
    • நீண்ட தேடுதலுக்கு பிறகு ஷாஜெப், பிரன்காளியாரில் பிச்சைக்காரனாக வாழ்வது தெரியவந்தது.

    ரூர்க்கி:

    உத்தரபிரேதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள பன்டோலி கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுவன் ஷாஜெப். இவரது தந்தை முகமது நவேத் கடந்த 2019-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக நோய் வாய்ப்பட்டு இறந்தார்.

    சிறுவனின் தாயார் இம்ரானாபேகம், கணவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே யமுனா நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு மகனை அழைத்து கொண்டு சென்று விட்டார். அங்கு பெற்றோருடன் வசித்த இம்ரானாபேகம் சிறிய வேலைகளுக்கு சென்று தனது மகனை கவனித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு இம்ரானாபேகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இதனால் திடீரென அனாதையாக தவித்த ஷாஜெப் அப்பகுதியில் புனித தலங்களில் ஒன்றான பிரன்காளியார் பகுதியில் உள்ள கோவிலில் அடைக்கலம் புகுந்தார். பின்னர் பிச்சை எடுத்து வாழ்ந்த ஷாஜெப் திடீரென கோடீஸ்வரனாக மாறியுள்ளார்.

    அதாவது ஷாஜெப்பின் தந்தை வழி தாத்தா முகம்மது யாகூப் கடந்த 2021-ம் ஆண்டில் இறந்தார். அப்போது ரூ.2 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களில் ஒரு பங்கை ஷாஜெப்புக்கு வழங்குவதாக உயிலில் கூறியிருந்தார்.

    அதன்படி ஷாஜெப்புக்கு சொந்தமாக இரட்டை மாடி வீடு மற்றும் 5 பெரிய நிலங்கள் அவருக்கு சென்றது. இதையறிந்த உறவினர்கள் ஷாஜெப்பை பல இடங்களிலும் தேடிப்பார்த்த போது அவரை காணவில்லை. பின்னர் இதுபற்றி அவரது உறவினர்கள் சமூக வலைத்தளத்தில் ஷாஜெப்பின் புகைப்படத்தை பதிவிட்டு தேடினர். எனினும் அவர் உடனடியாக கிடைக்கவில்லை. நீண்ட தேடுதலுக்கு பிறகு ஷாஜெப், பிரன்காளியாரில் பிச்சைக்காரனாக வாழ்வது தெரியவந்தது.

    உடனே அங்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு தங்களுடன் அழைத்து சென்றனர். இதுகுறித்து ஷாஜெப்பின் உறவினரான ஷாஆலம் கூறுகையில், ஷாஜெப் எங்களுடன் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமமாக இருந்தது. நாங்கள் நம்பிக்கை இழந்த நேரத்தில் தான், அவரை கண்டுபிடித்து விட்டோம் என்றார்.

    • வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • வாரணாசியில் நடைபெற்று வந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெற்றது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியது. பிரதமர் மோடி 19-ம் தேதி தொடங்கி வைத்தார்.

    பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையே பாரம்பரிய ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக நடைபெற்று வந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இந்த நிறைவு விழாவில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலை வகித்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார் . இவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசுகையில், வாரணாசியில் ஒரு மாதமாக நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாயிலாக, நம் நாட்டின் கலாசார பெருமையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி பெரும் முயற்சி எடுத்துள்ளார். சுதந்திரத்துக்குப் பிறகும் நம்

    தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழகத்தில் இருந்து வந்த சகோதர, சகோதரிகளுக்கு காசி மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். காசியைப் பற்றிய நினைவுகளை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என குறிப்பிட்டார்.

    • போலீஸ்காரர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    • 4 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றவர்கள் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வில் மேல்முறையீடு செய்தனர்

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் கடந்த 1991-ம் ஆண்டு நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் என நினைத்து 10 சீக்கியர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், 47 போலீஸ்காரர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில் இடைப்பட்ட காலத்தில் 4 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், இந்த தண்டனைக்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    விசாரணையின் முடிவில், 43 போலீசாருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொடுங்குற்றத்தை செய்ததால் ஒருவரை கொல்வது போலீசாரின் கடமை அல்ல என்றும், தவறு செய்தவர்களை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பணி நேரத்தில் இந்தி பட பாடல்களை கேட்டுக்கொண்டும், அதில் ஒருவர் ஆட்டம் போட்டும் உற்சாகமாக பொழுதைப் போக்கி உள்ளனர்.
    • பெண் போலீசார் 4 பேரை இடைநீக்கம் செய்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு முனிராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் உள்ள ராமர் கோவிலில் பாதுகாப்பு பணியில் 4 பெண் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    அவர்கள் பணி நேரத்தில் இந்தி படப் பாடல்களை கேட்டுக்கொண்டும், அதில் ஒருவர் ஆட்டம் போட்டும் உற்சாகமாக பொழுதைப் போக்கி உள்ளனர்.

    இதுபற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகி வைரலானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அந்த பெண் போலீசார் 4 பேரையும் இடைநீக்கம் செய்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு முனிராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • வாரணாசியில் நடந்து வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்று நிறைவு பெறுகிறது.
    • இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம் நவம்பர் 17-ம் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி 19-ம் தேதி தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 16) நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்கிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே, தொன்மையான நாகரிக பிணைப்பையும், பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட 12 விரைவு ரெயில்களில், இதற்காக ஒதுக்கப்பட்ட 36 பெட்டிகளில் மொத்தம் 2,592 பேர் பயணம் செய்துள்ளனர் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • சாலை விபத்தில் 21 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
    • உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் நாக்லா கங்கர் பகுதியில் லக்னோ- ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    உயிரிழந்தவர்களில் ரீனா (வயது 22), அவரது ஒரு வயது மகன் அயன்ஷ், பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 25), கவுசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த சந்த் லால் (வயது 70) ஆகிய 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்ற இருவரின் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • காது மற்றும் வால் அறுக்கப்பட்டதால் நாய் குட்டிகள் இரண்டு கதறி சத்தமிட்டன.
    • சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் பிராணிகள் நல வாரியத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் அடிக்கடி விலங்குகளை கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் பரேலி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் குடிபோதையில் 2 நாய் குட்டிகளின் காது மற்றும் வாலை அறுத்து கொடுமைப்படுத்தும் சம்பவம் பிராணிகள் நல வாரியத்தினரை பதற வைத்துள்ளது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர், தனது நண்பருடன் சேர்ந்து மது அருந்துகிறார். அப்போது அவர் அருகில் நின்ற 2 நாய் குட்டிகளையும் பிடித்து அதன் காதுகளை அறுக்கிறார். பின்னர் வாலையும் துண்டிக்கிறார்.

    அதன்பின்பு அறுக்கப்பட்ட நாய்குட்டியின் காது மற்றும் வாலில் உப்பு தடவி அதனை மதுவில் தொட்டு சாப்பிடுகிறார்.

    காது மற்றும் வால் அறுக்கப்பட்டதால் நாய் குட்டிகள் இரண்டு கதறி சத்தமிட்டன.

    இது பற்றி அக்கம் பக்கத்தினர் பிராணிகள் நல வாரியத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நாய் குட்டிகளை மீட்டு கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசிலும் புகார் செய்தனர். போலீசார் நாய் குட்டிகளை கொடூரமாக சித்ரவதை செய்த வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×