பிலாவல் பூட்டோ தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு - உ.பி. பா.ஜ.க நிர்வாகி அறிவிப்பு

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தார்.அவரது தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என உத்தர பிரதேச பா.ஜ.க நிர்வாகி அறிவித்தார்.
பிலாவல் பூட்டோ
பிலாவல் பூட்டோ
Published on

லக்னோ:

பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிலாவல் பூட்டோவுக்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாக்பாத் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. அப்போது அங்கு பேசிய பா.ஜ.க. உள்ளூர் நிர்வாகியும், மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவின் தலையை துண்டித்துக் கொண்டு வருபவர்களுக்கு நான் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என அதிரடியாக அறிவித்தார்.

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் நன்கு அறிந்துதான் அவ்வாறு பேசியதாகவும், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com