மனைவியை கொன்று உடலை 12 துண்டுகளாக வெட்டிய கணவர்- போலீசார் விசாரணை

ஜார்க்கண்ட் மாநிலம் சந்தாலி மொமின் தோலா பகுதியில் உள்ள பழைய வீட்டில் ஒரு பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.ரூபிகா பழமையான பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மனைவியை கொன்று உடலை 12 துண்டுகளாக வெட்டிய கணவர்- போலீசார் விசாரணை
Published on

டேராடூன்:

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா காதலனால் கொல்லப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அதே மாதிரியான நிகழ்வு நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மனைவியை கொன்று அவரது உடலை 12 துண்டுகளாக கணவன் வெட்டியுள்ளான்.

ஜார்க்கண்ட் மாநிலம் சந்தாலி மொமின் தோலா பகுதியில் உள்ள பழைய வீட்டில் ஒரு பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரூபிகா பஹாடின் என்றும், அவரை அவரது கணவர் தில்தார் அன்சாரி கொன்று உடலை 12 துண்டுகளாக வெட்டியதும் தெரிய வந்தது. தில்தார் அன்சாரிக்கு 2-வது மனைவி ரூபிகா ஆவார்.

உடலின் பல பாகங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அவற்றை தேடும் பணியில் போலீசார் ஈடுபடுகிறார்கள். அந்த பெண் பழமையான பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொன்று உடலை 12 துண்டுகளாக வெட்டிய கணவர் தில்தார் அன்சாரியை கைது செய்தனர்.

எலக்ட்ரிக் கட்டர் போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தி உடலை பல துண்டுகளாக வெட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மூலம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக மாநில அரசை பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com