என் மலர்
தெலுங்கானா
- ரூ.12 கோடி மதிப்பிலான காரை முதல் முறையாக நசீர்கான் வாங்கினார்.
- 2-வது காரை கொல்கத்தாவை சேர்ந்த மற்றொரு தொழிலதிபர் வாங்கி உள்ளார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நசீர் கான். தொழிலதிபரான இவர் புதியதாக அறிமுகப்படுத்தப்படும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ரூ.12 கோடி மதிப்பிலான 2 கார்களை மெக்லாரன் நிறுவனம் மெக்லாரன் 765, எல்.டி.ஸ்பைடர் என்ற புதிய வகை காரை மும்பையில் அறிமுகப்படுத்தியது.
இந்த கார் கூபே போன்று ஏரோ டைனமிக் வடிவமைப்பை கொண்டது. காரின் மேற்கூரை 11 வினாடிகளில் விரிவடைந்து திறக்கும் வடிவமைப்பை கொண்டது. 4.0 ட்விண்டர் போசார்ஜ் செய்யப்பட்ட வி.8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
7 கியர்களைக் கொண்ட இந்த டார்போ கார் உடனடியாக வேகம் எடுக்கும் சக்தி கொண்டது.
ரூ.12 கோடி மதிப்பிலான இந்த காரை முதல் முறையாக நசீர்கான் வாங்கினார். 2-வது காரை கொல்கத்தாவை சேர்ந்த மற்றொரு தொழிலதிபர் வாங்கி உள்ளார்.
நேற்று ஐதராபாத்தில் உள்ள தாஜ் பலக்னுமா அரண்மனையில் நடந்த விழாவில் இந்த கார் நசீர்கானிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவர் ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் குல்லினன் பிளாக் பேட்ஜ், பெர்ராரி 812 சூப்பர் பாஸ்ட், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி, போர்டு மாஸ்டாங், லம்போகினி அவென்டடோ, லம்போகினி உருஸ் என பல வகையான விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
- அவர் இன்று அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
ஐதராபாத்:
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா ஆவார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
அங்கு ஆட்சியில் உள்ள சந்திரசேகரராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி அரசை கடுமையாக சாடி வருகிறார். இதையொட்டி அவர் மாநிலம் தழுவிய பாதயாத்திரை நடத்தி வந்தார்.
ஆனால் அந்த பாதயாத்திரையை தொடர்வதற்கு அவருக்கு போலீஸ் அனுமதி தர மறுத்து விட்டது. போலீஸ் அனுமதி தராவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என அவர் அதிரடியாக அறிவித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "தெலுங்கானா ஐகோர்ட்டு எனது பாதயாத்திரைக்கு அனுமதி அளித்தும் போலீஸ் தடுத்து நிறுத்திவிட்டது. இந்த பாதயாத்திரையை தொடரவிடக்கூடாது என்று முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கருதி, போலீசை பயன்படுத்தி உள்ளார்" என குற்றம் சாட்டினார்.
அவர் அறிவித்தபடியே ஐதராபாத்தில் உள்ள தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
முன்னதாக அவர் அங்கு உசேன் சாகர் ஏரி பகுதி அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலையிடம் ஒரு மனு அளித்தார்.
அதைத் தொடர்ந்து அங்கேயே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரினார். ஆனால் அங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கவும், மனு அளிக்கவும் மட்டுமே அனுமதி தருவது வழக்கம். உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி தருவதில்லை. இதையடுத்து சர்மிளா தனது கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதத்தைதத் தொடங்கினார். அவர் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.
இதனால் அவரது உடல்நலம் பாதிக்கத்தொடங்கியது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்று அதிகாலையில் போலீசார் சர்மிளா கட்சியினரையும், பத்திரிகையாளர்களையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றினர்.
அதைத் தொடர்ந்து சர்மிளாவின் உண்ணாவிரதத்தை முறியடித்து, அவரை வலுக்கட்டாயமாக அங்குள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி சர்மிளாவின் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-
சர்மிளா தண்ணீர்கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை அதிரடியாக மோசமானது.
ஊடகத்தினரையும், கட்சியினரையும் அகற்றிவிட்டு, சர்மிளாவை போலீசார் வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்து விட்டனர்.
அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள். சர்மிளாவின் ரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு அபாயகரமான அளவுக்கு குறைந்துள்ளது. அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது 'எலக்டிரோலைட்' சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தி விடும். இது அவரது சிறுநீரகங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது எனவும் டாக்டர்கள் கூறி உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஐதராபாத் அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சர்மிளா தற்போது சிகிச்சையில் உள்ளார். சிகிச்சை பலன் அளிக்கிறது. அவர் இன்று அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என கூறப்பட்டள்ளது.
மேலும், அவர் 2 முதல் 3 வாரங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகளும், எம்.எம்.எல்.சி.யுமான கவிதாவுக்கு தொடர்பு.
- விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு கடந்த வாரம் சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
ஐதராபாத்:
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த முறைகேட்டில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகளும், எம்.எம்.எல்.சி.யுமான கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.
இதைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு கடந்த வாரம் சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 6-ந்தேதி ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் அவகாசம் கேட்டு பதில் கடிதம் அனுப்பினார்.
11 முதல் 15 வரையிலான தேதிகளில் (13 தவிர) விசா ரணைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கவிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
- மணமகள் தற்கொலை செய்து கொண்டதால் திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத், நயிம்பேட்டையை சேர்ந்தவர் ரவளி (வயது22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் அவரது பெற்றோர்கள் திருமணம் நிச்சயித்து இருந்தனர்.
இந்த திருமணத்தில் ரவளிக்கு விருப்பம் இல்லாததால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இருப்பினும் ரவளியின் பெற்றோர் திருமணத்திற்கு தடல்புடலாக ஏற்பாடுகளை செய்து வந்தனர். இன்று காலை 10 மணிக்கு திருமணம் நடக்க இருந்ததால் நேற்று மாலையே மணமகன், மணமகள் உறவினர்கள், நண்பர்கள் திருமண மண்டபத்தில் குவிந்தனர். நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் திருமணம் மண்டபம் கலை கட்டியது.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு ரவளி வீட்டிற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்றார். வீட்டிற்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் திருமண மண்டபத்திற்கு திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த அறையில் மின்விசிறியில் ரவளி பிணமாக தொங்கினார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிஜாமாபாத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவளியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ரவளியின் விருப்பத்திற்கு மாறாக திருமண ஏற்பாடு செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
மணமகள் தற்கொலை செய்து கொண்டதால் திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த பெயர் மாற்றத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
- கட்சித்தலைமை அலுவலகத்தில் சந்திரசேகர் ராவ் கொடியேற்றினார்.
ஐதராபாத் :
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) என்ற பெயரில் கடந்த 2001-ம் ஆண்டு கட்சி தொடங்கினார். தெலுங்கானா பிரிவினைக்காக பாடுபட்ட அவர், மாநில பிரிவினைக்குப்பின் தெலுங்கானாவில் ஆட்சியையும் பிடித்து உள்ளார்.
இந்த நிலையில் தனது கட்சியை கடந்த அக்டோபர் மாதம் தேசிய கட்சியாக மாற்றி, பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) என பெயரையும் மாற்றி சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.
பின்னர் இதற்கு அங்கீகாரம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு டி.ஆர்.எஸ். கட்சி கடிதம் அனுப்பியது. இந்த பெயர் மாற்றத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
இதைத்தொடர்ந்து தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பாரதிய ராஷ்டிர சமிதியாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கட்சித்தலைமை அலுவலகத்தில் சந்திரசேகர் ராவ் கொடியேற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- எங்களுக்கு டிசி கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவதாகவும் மிரட்டல் விடுக்கின்றனர்.
- போலீசாரை அங்கு சென்று விசாரித்து வருமாறு போலீஸ் நிலைய அதிகாரி மகேந்தர் ரெட்டி உத்தரவிட்டார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மீர்பேட்டை நகராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி அங்குள்ள போலீஸ் நிலையம் சென்று, தான் படிக்கும் பள்ளி நிர்வாகம் மீது புகார் செய்துள்ளார்.
போலீஸ் நிலையத்தில் அந்த மாணவி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு கொடுக்கும் மதிய உணவில் கற்கள், புழுக்கள் கிடக்கின்றன. இந்த உணவை எங்களால் சாப்பிட முடியவில்லை. இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், எங்களுக்கு டிசி கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவதாகவும் மிரட்டல் விடுக்கின்றனர். இவ்வாறு அந்த சிறுமி கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீசாரை அங்கு சென்று விசாரித்து வருமாறு போலீஸ் நிலைய அதிகாரி மகேந்தர் ரெட்டி உத்தரவிட்டார். இதன்படி, அங்கு சென்ற போலீசார் சமையலறையை சோதனை யிட்டனர்.
சோதனையில் அழுகிப்போன காய்கறிகள், புழுக்கள் கலந்த அரிசி, கெட்டுப்போன எண்ணை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி மீது சிறுமி கொடுத்த புகார் அங்கு பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- ‘வாட்ஸ் அப்’ குழு மூலம் 14 ஆயிரம் அப்பாவி பெண்களை விபசாரத்தில் தள்ளியது அம்பலம்
- ஒவ்வொரு ‘வாட்ஸ் அப்’ குழுவிலும் தலா 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
நகரி :
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 'ஹைடெக்' விபசாரம் நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
விபசாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-
தெலுங்கானாவின் பேகம் பேட்டையை சேர்ந்தவர் முகமது சல்மான்கான் என்கிற சமீர். இவர் முதலில் ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்தார்.
அப்போது விபசார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஓட்டலில் தங்குவதை கவனித்த அவர், சுலபமாக பணம் சம்பாதிக்க இது சிறந்த வழி என முடிவு செய்துள்ளார். போதைப்பொருள் பழக்கம் உள்ள சமீருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் ஆர்னவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து சோமாஜி கூடா பகுதியை மையமாக கொண்டு விபசார விடுதி நடத்த ஆரம்பித்தனர். இவர்களோடு மொத்தம் 17 பேர் முக்கிய அமைப்பாளர்களாக வேறு வேறு மாநிலங்களில் 'வாட்ஸ் அப்' குழுக்கள் மூலம் இதை நடத்தி வந்தனர்.
ஒவ்வொரு 'வாட்ஸ் அப்' குழுவிலும் தலா 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 14 ஆயிரத்து 190 இளம்பெண்களுடன் விபசார விடுதிகளை நடத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள இவர்களது ஹைடெக் விபசார தொழில் வெளிச்சத்துக்கு வந்தது. வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி பெண்களை புகைப்படம் எடுத்து அவற்றை 'வாட்ஸ்அப்' குழு மூலமாக அனுப்பி வைப்பார்கள். அவற்றை பார்க்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பெண்களை தேர்ந்தெடுத்து கால் சென்டர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.
கால் சென்டர் ஊழியர்கள் குறிப்பிட்ட தங்கும் விடுதியில் விபசார அழகி இருப்பார் என்றும், அவருக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி ஒரு தொகையை ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்வார்கள்.
அந்த பணத்தில் 30 சதவீதம் விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்கும், 35 சதவீதம் அந்தப்பெண்களின் படங்களை விளம்பரம் செய்பவர்களுக்கும் கால் சென்டர் பிரதிநிதிகளுக்கும் கொடுப்பார்கள். எஞ்சிய 35 சதவீத பணத்தை நிர்வாகிகள் பங்கிட்டு கொள்வார்கள்.
விபசாரத்திற்கு பெண்களை கேட்கும் ஆண்களுடன் பேசுவதற்காக நிர்வாகிகள் ஐதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் கால் சென்டர்களை ஏற்பாடு செய்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், கர்நாடகா, மராட்டியம், டெல்லி, கொல்கத்தா, அசாம் மாநில பெண்களோடு தாய்லாந்து, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், ரஷிய நாட்டு பெண்களையும் வைத்து கூட இவர்கள் விபசாரம் நடத்தியுள்ளனர்.
வெளிநாட்டு பெண்களுக்கு போலி பாஸ்போர்ட்டுகள் ஆதார் கார்டுகளை தயாரித்து இவர்களை இந்தியா முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன.
- 50 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள்.
ஐதராபாத் :
தெலுங்கானாவின் ஜாக்டியால் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக குற்றம் சாட்டினார்.
அவர் கூறுகையில், 'பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதன்மூலம் 50 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டுக்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை' என விமர்சித்தார்.
விவசாயம், மின்சாரம், வளர்ச்சி என எந்த துறையாவது நாட்டில் வளர்ச்சி கண்டிருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பாக எந்த இடத்திலும் விவாதத்துக்கு தயார் எனவும், மத்திய அரசின் திறமையின்மையால் சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு மாநிலம் இழந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பதை சுட்டிக்காட்டிய சந்திரசேகர் ராவ், அறிவுஜீவிகள், இளைஞர்கள் இது குறித்து சிந்திக்குமாறும், இந்த தீய பாரம்பரியம் ஒழிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
- மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது.
- எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது.
ஐதராபாத் :
தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், மெகபூப்நகரில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். கட்சியின் மாவட்ட அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-
தெலுங்கானாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடியும், மத்திய அரசும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். மாநிலத்தின் மொத்த உற்பத்தி ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்திருந்தால், ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருக்கும். ரூ.3 லட்சம் கோடி வருவாய் போய்விட்டது.
இப்படி மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பது நியாயமா? நீங்களும் வேலை செய்வதில்லை. மற்றவர்களையும் வேலை செய்ய அனுமதிப்பது இல்லை. யாராவது கேள்வி கேட்டால், உங்கள் அரசை தூக்கி எறிவோம் என்கிறீர்கள்.
பிரதமர் மோடி சொல்கிறார். ''சந்திரசேகர ராவ், உங்கள் அரசை தூக்கி எறிவேன்'' என்கிறார். இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது?. உங்களைப் போல், நாங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லையா? மக்கள் ஆதரவு இல்லாமலா ஆட்சி அமைத்துள்ளோம்?.
என்ன காரணத்துக்காக ஆட்சியை தூக்கி எறிவீர்கள்?. ஒரு பிரதமர், மேற்கு வங்காளத்துக்கு சென்று, ''உங்கள் எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்'' என்று பேச முடியுமா?. அவர் சொல்வாரா?
தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களிடையே பிளவை ஏற்படுத்த சில திருடர்கள் வந்தனர். அவர்கள் இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள்.
யார் ஆள வேண்டும், யார் எதிர்க்கட்சி வரிசையில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். மாநில அரசு, எந்த இடையூறும் இன்றி 5 ஆண்டுகள் ஆள அனுமதிக்கப்பட வேண்டும்.
அற்ப அரசியல் ஆதாயத்துக்காக நாட்டின் உயிர்நாடியையே பா.ஜனதா பாழாக்குகிறது. மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது.
கிருஷ்ணா நதிநீர் பிரச்சினையில் தெலுங்கானாவின் பங்கை அளிக்க மத்திய அரசு முன்வரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- வழக்கில் தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்துவதில் ஊழல் நடைபெற்றதாகவும், இந்த ஊழல் பணம் பல்வேறு அரசியல் தலைவர்கள் இடையே கைமாறியதாகவும் புகார் எழுந்தது.
இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த 30-ந் தேதி அவரை கைது செய்தனர். மேலும் அவரது வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி ரூ.2.82 கோடி ரொக்கப்பணம் மற்றும் 1.80 கிலோ தங்கம் ஆகியவற்றை கைப்பற்றினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். மதுபான ஊழல் தொடர்பாக டெல்லியில் தொழிலதிபர் அமித்அரோரா சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில் சவுத் குரூப் என்ற நிறுவனம் மூலம் ஆம்ஆத்மி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் தரப்பட்டதாக கூறியுள்ளார்.இந்த சவுத்குரூப் நிறுவனத்தை சரத்ரெட்டி, கவிதா, மகுந்தாரெட்டி ஆகியோர் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கவிதா தற்போது டி.ஆர்.எஸ்.கட்சியின் எம்.எல்.சி.யாவும் உள்ளார்.
இந்நிலையில் மதுபான ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த கவிதாவுக்கு வருகிற 6-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. துணைகண்காணிப்பாளர் அலோக் குமார் ஷாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஜூலை 27-ந் தேதி உள்துறை இயக்குனர் பிரவின்குமார் ராயிடம் இருந்து எழுத்து பூர்வமாக ஒரு புகார் வந்தது. அதன் அடிப்படையில் டெல்லி அரசின் கலால் கொள்கை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ்சி சோடியா மற்றும் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பான மேல் விசாரணைக்காக வருகிற 6-ந் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கவிதா தரப்பிலும், ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 160-வது பிரிவின் கீழ் என்னிடம் விளக்கம் கேட்டு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன்படி வருகிற 6-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள எனது இல்லத்தில் அவர்களை சந்திக்கலாம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் என கூறப்பட்டுள்ளது.
மேலும் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அமலாக்கத்துறை என எந்த அமைப்புகள் கேள்விகள் கேட்டாலும் அதற்கு பதில் சொல்ல தயாராக உள்ளேன் என கவிதா கூறியுள்ளார்.
- சுக்தேவ் வியாழக்கிழமை தோறும் கல்யாண் சவுத்ரியின் நகைக்கடைக்கு நகைகளை சப்ளை செய்வது வழக்கம்.
- நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நாகோல், சினேகாபுரியில் ராஜஸ்தான் மாநிலம் பாலிய சேர்ந்த கல்யாண் சவுத்ரி என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். செகந்திராபாத்தை சேர்ந்தவர் சுக் தேவ். நகை மொத்த வியாபாரியான இவர் நகைக்கடைகளுக்கு நகை சப்ளை செய்து வருகிறார்.
சுக்தேவ் வியாழக்கிழமை தோறும் கல்யாண் சவுத்ரியின் நகைக்கடைக்கு நகைகளை சப்ளை செய்வது வழக்கம். இவர் நகை சப்ளை செய்வதை ஒரு கும்பல் நோட்டமிட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சுக் தேவ் நேற்று இரவு வழக்கம்போல் நகைகளை கல்யாண் சவுத்ரி கடைக்கு கொண்டு வந்தார். நகைகளை சவுத்ரி சரி பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது 3 வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கிக் கொண்டு இருந்தனர்.
இரவு 10 மணி அளவில் 2 பைக்கில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கடைக்கு சிறிது தூரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு 2 பேர் அங்கேயே நின்று கொண்டனர். 2 வாலிபர்கள் மட்டும் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு திடீரென கல்யாண் சவுத்ரியின் நகைக்கடைக்குள் புகுந்தனர். அவர்கள் இரண்டு பேரும் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து மிரட்டி கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு கடையின் ஷட்டரை மூடினர்.
பின்னர் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை பணத்தை கல்யாண் சவுத்ரியிடம் கேட்டனர். இதனைக் கண்ட கடையில் இருந்த ஊழியர்கள் அங்கு இருந்த அறைகளுக்குள் சென்று பதுங்கிக் கொண்டனர். கல்யாண் சவுத்ரி மற்றும் சுக் தேவ் ஆகியோர் நகை பணத்தை தர மறுத்ததால் அவர்கள் மீது வாலிபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் கல்யாணி சவுத்ரி மார்பில் 3 துப்பாக்கி குண்டுகளும், சுக் தேவ் மூக்கின் மீது ஒரு துப்பாக்கி குண்டும் பாய்ந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தனர்.
துப்பாக்கி சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் வெளியே நின்று கொண்டு இருந்த வாடிக்கையாளர்கள் கடையின் ஷட்டரை திறந்தனர்.
அப்போது வாலிபர்கள் நகை பணத்துடன் வெளியே வருவதை கண்ட அவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். தங்களை பிடிக்க முயற்சி செய்தால் துப்பாக்கியில் சுட்டு விடுவதாக வாலிபர்கள் மிரட்டுதால் யாரும் அவர்களை நெருங்க வில்லை.
இதையடுத்து நகை பணத்தை எடுத்துக்கொண்டு பைக்கில் தயார் நிலையில் இருந்தவர்களுடன் தப்பி சென்றனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ரச்ச கொண்ட கூடுதல் போலீஸ் கமிஷனர் சுதிர் பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க ஐதராபாத் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 15 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- மாணவியுடன் உல்லாசமாக இருப்பதை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தார்.
- எம்.எல்.ஏ.வின் உதவியாளர் சிவகுமார் மற்றும் விடுதி உரிமையாளர் ஷோபா அவரது உறவினர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ஹனம் கொண்டா பகுதியில் தனியார் விடுதி உள்ளது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் தங்கி கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
இந்த விடுதியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் 22 வயது மாணவி தங்கியிருந்தார். விடுதியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை மீறி மாணவி செல்போன் பயன்படுத்தி வந்தார். இதனை விடுதியின் உரிமையாளர் ஷோபா என்பவர் பார்த்துவிட்டார். அவர் மாணவியை மிரட்ட தொடங்கினார்.
தன்னுடைய உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் விடுதியில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டினார்.
அவரது மிரட்டலுக்கு பயந்துபோன மாணவி அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஜயகுமார் மாணவியை அங்குள்ள ஒரு அறையில் வைத்து பலாத்காரம் செய்தார். ஒரு மாதத்திற்கு மேலாக மாணவியை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்தார். மாணவியுடன் உல்லாசமாக இருப்பதை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தார்.
பின்னர் இதுகுறித்து விஜயகுமார் அவரது நண்பரான வாரங்கல் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வின் தனி உதவியாளர் சிவகுமார் என்பவரிடம் தெரிவித்தார். அவரும் மாணவியை அடைய விரும்புவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாணவியிடம் சிவகுமாருடன் உறவில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் செல்போனில் உள்ள போட்டோ வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர்.
இந்த அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாத மாணவி அவர்கள் கூறியபடி சிவகுமாரின் வீட்டிற்கு சென்றார். அங்கு வைத்து சிவக்குமார் மாணவியை பலாத்காரம் செய்தார்.
மாணவியின் பயத்தை பயன்படுத்திக் கொண்ட சிவகுமார் ஐதராபாத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவருக்கும் மாணவியை விருந்தாக்க துடித்தார்.
இது குறித்து அவர் மாணவியிடம் கூறினார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அனைவரும் சேர்ந்து மாணவியை மிரட்டினர்.
ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்ட மாணவி இது குறித்து ஹனம் கொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் மாணவியை ஒரு மாதத்திற்கு மேலாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீசார் இது தொடர்பாக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் சிவகுமார் மற்றும் விடுதி உரிமையாளர் ஷோபா அவரது உறவினர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






