என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    • சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சுக்விந்தர் சிங் சுகு முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
    • அறிவிப்பின்படி இன்று காலை 11 மணிக்கு சுக்விந்தர் சிங் சுகு முதலமைச்சராக பதவியேற்கிறார்.

    இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின.

    68 இடங்களில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. அங்கு 1985ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்ற சரித்திரம், இந்த முறையும் மாறவில்லை.. தொடருகிறது. குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்தது.

    இங்கு 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கி நடத்திய சுக்விந்தர் சிங் சுகு, மாநில முதல்வரா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தௌன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுக்விந்தரை முதலமைச்சராக கட்சித் தலைமை நேற்று அறிவித்தது.

    இந்நிலையில், சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சுக்விந்தர் சிங் சுகு முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு சுக்விந்தர் சிங் சுகு முதலமைச்சராக பதவியேற்கிறார்.

    • குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.
    • நாளை காலை 11 மணிக்கு சுக்விந்தர் சிங் சுகு முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின. 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. அங்கு 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்ற சரித்திரம், இந்த முறையும் மாறவில்லை; தொடருகிறது.

    குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கிறது.

    இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கிய நடத்திய சுக்விந்தர் சிங் சுகு, மாநில முதல் மந்திரியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தௌன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுக்விந்தரை முதல் மந்திரியாக கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது.

    சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சுக்விந்தர் சிங் சுகு முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். நாளை காலை 11 மணிக்கு அவர் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    • முதல்வரை முடிவு செய்யும் அதிகாரம் கட்சி மேலிடத்துக்கு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பிரியங்கா தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்கி பெற்ற முதல் வெற்றி என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் அந்த கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. ஆட்சியை இழந்த பாஜகவுக்கு 25 தொகுதி கிடைத்தது.

    தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பாஜக முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளதால் அங்கு புதிய முதல்வராக பதவி ஏற்க போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய முதல்வரை தேர்வு செய்ய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் ராஜீவ் சுக்லா, பூபேந்தர் ஹூடா, பூபேஷ் பாகல் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வரை பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இதையொட்டி முதல்வரை முடிவு செய்யும் அதிகாரம் கட்சி மேலிடத்துக்கு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் இமாச்சல பிரதேச முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா அறிவிக்கிறார். இதை கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன. பிரியங்கா தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்கி பெற்ற முதல் வெற்றி என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மறைந்த முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவியும், மாநில காங்கிரஸ் தலைவருமான பிரதீபா சிங், சுக்வீந்தர் சிங், முகேஷ் அக்னி கோத்ரி, ராஜீந்தர் ரானா ஆகிய 4 பேரது பெயர்கள் போட்டியில் உள்ளனர். இதில் பிரதீபா சிங்குக்கு குறைவான வாய்ப்பே இருக்கிறது.

    • ராணுவ கர்னல் தானிராம் சாதில் சோலன் தொகுதியில் வெற்றி.
    • ராஜேஷ் காஷ்யபை 3858 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    சிம்லா.

    இமாச்சல பிரதேச சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ கர்னலுமான தானிராம் சாதில் (வயது82) சோலன் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரும் மருமகனுமான ராஜேஷ் காஷ்யபை 3858 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இதன் மூலம் அவர் சோலன் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். தானிராம் சாதில் மகளின் கணவர் ராஜேஷ் காஷ்யப் ஆவார்.

    கடந்த முறையும் சோலன் தொகுதியில் மாமனார் தானிராம் சாதில், மருமகன் ராஜேஷ் காஷ்யப் இடையே தான் போட்டி இருந்தது. அப்போது சாதில் 671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இப்போது 3-வது முறையாக அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் இந்த தேர்தலில் போட்டியிட்ட மிக வயதான வேட்பாளரும் தானிராம் சாதில் ஆவார்.

    • காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள 40 தொகுதிகளில் 23 தொகுதிகளை பா.ஜனதாவிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளது.
    • 20 தொகுதிகளை பா.ஜனதா தக்கவைத்துக்கொண்டது. காங்கிரசிடம் இருந்த 4 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

    குஜராத்தில் இமாலய வெற்றியை ருசித்த பா.ஜனதா இமாச்சல பிரதேசத்தில் கைவசம் இருந்த ஆட்சியை இழந்தது ஏன் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. கடந்த 37 ஆண்டுகளாக மாறி மாறிதான் ஆட்சிகள் அமைந்துள்ளன.

    ஆனால் இந்த முறை அந்த சரித்திரம் மாறும். மீண்டும் பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும் என்றே கருத்துக்கணிப்புகளும் தெரிவித்தன. கணிக்க முடியாத அளவுக்கு தான் கள நிலவரம் இருந்து இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    மொத்த தொகுதிகள்-68 காங்கிரஸ் வென்ற தொகுதிகள்-40, பா.ஜனதா வென்ற தொகுதிகள்-25. ஆட்சி அமைக்க 35 தொகுதிகள் தான் தேவை. ஆனால் 'கை' கைப்பற்றி இருப்பது 40 தொகுதிகள். அப்படி இருந்தும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் இமாலய வெற்றி என்று சொல்ல முடியவில்லை.

    நூலிழையில் தான் காங்கிரஸ் வென்றுள்ளது. அதே போல் நூலிழையில் தான் பா.ஜனதா வெற்றி வாய்ப்பை இழந்தும் இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரசுக்கு 43.9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.

    பா.ஜனதாவுக்கு 43 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. அதாவது 1 சதவீதத்தை விட குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் வென்றுள்ளது. கடுமையான இழுபறிக்கு இடையே தான் காங்கிரஸ் கரையேறி இருக்கிறது.

    2017 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதில் இருந்து 19 தொகுதிகளை பா.ஜனதா இழந்துள்ளது. அந்த தொகுதிகள் காங்கிரசுக்கு கை கொடுத்துள்ளது.

    பா.ஜனதாவை விட காங்கிரஸ் 15 தொகுதிகள் அதிகம் பெற்றுள்ளது. ஆனால் 18 தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே பா.ஜனதா தோற்றுள்ளது.

    காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள 40 தொகுதிகளில் 23 தொகுதிகளை பா.ஜனதாவிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளது. 20 தொகுதிகளை பா.ஜனதா தக்கவைத்துக்கொண்டது. காங்கிரசிடம் இருந்த 4 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

    9 தொகுதிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. ஆனால் 4 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா 25 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. 50 சதவீதம் வாக்குகளை காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், பா.ஜனதா 9 தொகுதிகளிலும் பெற்றுள்ளது.

    இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை ஒரு கோடிக்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய மாநிலம். சிம்லா, குலுமணாலி, தர்மசாலா ஆகிய சுற்றுலா தலங்கள் புகழ் பெற்றவை. ஆப்பிள் விவசாயம் தான் முக்கியமான தொழில்.

    அங்கு வாழும் மக்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கிறார்கள். இந்த தேர்தலில் நகர்புறத்தில் பா.ஜனதா 43.2 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 6.2 சதவீதம் குறைவு ஆகும்.

    ஆனால் காங்கிரஸ் 44 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலை விட 2.6 சதவீதம் அதிகம் ஆகும். இதற்கு காரணம் நகர் பகுதியில் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடுகிறார்கள்.

    இதை காங்கிரஸ் கெட்டியாக பிடித்துக் கொண்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்றார்கள். அதை நம்பி நகர்புறத்தின் வாக்குகள் காங்கிரசுக்கு சாதகமாக விழுந்துள்ளது.

    இதேபோல் புறநகர் பகுதிகளில் 10 சதவீதமும், கிராம பகுதிகளில் 4 சதவீதம் வரையிலும் வாக்குசதவீதம் குறைந்துள்ளது. 6 முறை அந்த மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங் அண்மையில் காலமாகிவிட்டார். அவரது மனைவி தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். எனவே அந்த அனுதாபமும் வெற்றியை தேடி கொடுத்திருக்கலாம்.

    தேர்தல் தோல்விக்கான காரணங்களை பா.ஜனதா ஆராய்ந்து வருகிறது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும். முக்கியமாக பிரபலங்கள் சிலர் இரு கட்சிகளிலும் தோற்றுள்ளனர்.

    காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக கருதப்பட்ட ஆஷா குமாரி, தோல்வி அடைந்தார். பா.ஜனதாவை சேர்ந்த ஜெய்ராம் தாக்கூர், ஜெய்ராம் ரமேஷ், வீரேந்திர குமார், அனில் சர்மா ஆகியோரும் வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள்.

    • ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது
    • பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது.

    சிம்லா:

    இமாசல பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. 68 இடங்களை கொண்ட இந்த மாநிலத்தின் சட்டசபைக்கு கடந்த நவம்பர் 12-ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கின. ஆம் ஆத்மி கட்சியும் அத்தனை இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. எனினும், பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அந்த கட்சி 8 லட்சம் பேருக்கு வேலை, பொது சிவில் சட்டம் அமல் என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கியது. காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு 1 லட்சம் பேருக்கு அரசு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை என கவர்ச்சி வாக்குறுதிகளை அக்கட்சி அளித்தது. ஆம் ஆத்மி கட்சிக்காக அதன் நிறுவனர் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் பிரசாரம் செய்தனர். அந்த கட்சி 300 யூனிட் மின்சாரம், 6 லட்சம் பேருக்கு அரசு வேலை, வீடுதோறும் ரேஷன் பொருட்கள் வினியோகம் என வாக்குறுதிகளை வாரி வழங்கியது. இதனை தொடர்ந்து, கடந்த நவம்பர் 12-ந்தேதி வாக்கு பதிவு நடந்து முடிந்தது.

    இதனை தொடர்ந்து, குஜராத் சட்டசபைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து இமாச்சல பிரசேத தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

    வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இரண்டு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி ஏற்படலாம் என கருதப்பட்டது. ஆனால் பிற்பகல் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் முன்னிலை பெற்றது. மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், அதைவிட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றதால் காங்கிரசின் வெற்றி உறுதியானது.

    இரவு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்று உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 24 தொகுதிகளையே கைப்பற்றி உள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதன்மூலம் இமாசல பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனை தொடர்ந்து, காங்கிரசார் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், சரவெடிகளை வெடித்தும் மகிழ்ந்து வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை நெருங்கியது
    • மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதை நிறுத்தமாட்டேன் என ஜெய்ராம் தாக்கூர் பேட்டி

    சிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில், மாலை நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.

    ஆளும் பாஜக தோல்வியை தழுவி உள்ளது. இதையடுத்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த அவர், பதவியில் இல்லாவிட்டாலும் மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதை நிறுத்த மாட்டேன் என்றார்.

    பாஜக தோல்வி அடைந்துள்ள நிலையில், சில விஷயங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டி உள்ளது. சில பிரச்சனைகள் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுபற்றி விளக்கம் கேட்டு மேலிடம் அழைத்தால் டெல்லி செல்வேன் என்றும் ஜெய்ராம் தாக்கூர் கூறினார்.

    • இமாச்சல பிரதேசத்தில் 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியால் ஆட்சி அமைக்க முடியும்.
    • 12 மணிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை

    சிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் 68 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 76.44 சதவீத வாக்குகள் பதிவானது.

    அந்த மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவியது. தேர்தலுக்குரிய கருத்துக் கணிப்புகளில் அங்கு ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் இழுபறி காணப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    கருத்துக் கணிப்புகளை உறுதிபடுத்துவது போல இன்று ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அமைந்தன. இன்று காலை 8 மணிக்கு இமாச்சல பிரதேசத்தில் 59 இடங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜனதாவும், காங்கிரசும் மாறி, மாறி முன்னிலை பெற்றன.

    மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 35 இடங்கள் கைப்பற்றும் கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் இந்த மேஜிக் எண்ணை எட்டுவதற்கு இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது.

    ஒருகட்டத்தில் பா.ஜனதா 34 இடங்களில் முன்னிலை பெற்றது. அடுத்த சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் கட்சியும் 34 இடங்களில் முன்னிலை பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    காலை 10 மணி அளவில் பா.ஜனதா 30 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று இருந்தது. எனவே காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. 10.30 மணி அளவில் மீண்டும் முன்னிலையில் மாற்றம் ஏற்பட்டது. இந்த தடவை பா.ஜனதா கட்சி 35 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. 11 மணிக்கு பிறகும் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை அடைந்தன. எனவே, ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்பதில் கடும் இழுபறி நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 12 மணிக்குப் பிறகு நிலைமை மாறி, காங்கிரசின் கை ஓங்கியது. காங்கிரஸ் கட்சி 38 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 27 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலை உள்ளதால், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. 

    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக தேர்தல் முடிவு அமைந்து உள்ளதால் இமாச்சலப்பிர தேசத்தில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • அம்மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆளும் கட்சி வெற்றி பெறுவது இல்லை என்ற நிலை உள்ளது.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஓட்டு எண்ணிக்கையில் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

    இமாச்சல பிரதேசத்தில் எப்படியும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா உள்ளது. அதே போல் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் ஆர்வத்துடன் இருக்கிறது.

    ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா குதிரை பேரம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என காங்கிரஸ் கருதுகிறது. இதனால் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா பக்கம் தாவி விடாமல் இருப்பதற்காக அவர்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பத்திரமாக ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தனி பஸ்கள் மூலம் அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கு அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மற்றும் மூத்த தலைவர் பூபேந்திர சிங்கோடா ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த பணிகளை காங்கிரஸ் மேலிடம் அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறது. இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உன்னிப்பாக கவனித்து வருகிறார். இன்று பிற்பகல் அவர் சிம்லா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக இந்த தேர்தல் முடிவு அமைந்து உள்ளதால் இமாச்சலப்பிர தேசத்தில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆளும் கட்சி வெற்றி பெறுவது இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் இம்முறை காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விடும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அதே சமயம் இந்த வரலாற்றை முறியடித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்பில் பாரதிய ஜனதா உள்ளது. இதனால் இமாச்சல பிரசேத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • 68 இடங்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
    • இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற குஜராத், இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 68 இடங்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

    இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    பாஜக 31 இடங்களிலும், மற்றவை- 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

    • காலை 8 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது.
    • வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    சிம்லா:

    இமாசலப் பிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர்.

    இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5.00 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. வாக்குப்பதிவுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மண்டி மாவட்டத்தில் உள்ள செராஜில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். அதேபோல மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் ஹமிர்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    இந்நிலையில், இமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 65.92 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்று பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 8-ம் தேதி எண்ணப்பட உள்ளது.

    ×