என் மலர்
சத்தீஸ்கர்
- ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை ஆய்வு செய்த போது அதில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது.
- திருமணத்தின் போது யாரெல்லாம் பரிசு பொருட்கள் வழங்கினார்கள் என்று போலீசார் ஆய்வு செய்தனர்.
ராய்ப்பூர்:
சத்தீஷ்கர் மாநிலம் கபீர்தனம் மாவட்டம் ரெங்காகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமேந்திரா மெராவி (வயது 22). இவருக்கு கடந்த 1-ந்தேதி திருமணம் நடந்தது.
திருமணத்தில் பல்வேறு பரிசு பொருட்கள் குவிந்தன. அதில் ஒன்று ஹோம் தியேட்டர் (ஸ்பீக்கர்) மியூசிக் சிஸ்டம். இதை புது மாப்பிள்ளை ஹேமேந்திரா மெராவியும் அவரது சகோதரர் ராஜ்குமாரும் இயக்க முயன்றார்.
இதற்காக ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை மின் இணைப்போடு இணைத்த போது அது வெடித்து சிதறியது. இதில் மணமகன், அவரது சகோதரர், 1½ வயது குழந்தை உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் புதுமாப்பிள்ளை ஹேமேந்திரா, அவரது சகோதரர் ராஜ்குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை ஆய்வு செய்த போது அதில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து திருமணத்தின் போது யாரெல்லாம் பரிசு பொருட்கள் வழங்கினார்கள் என்று ஆய்வு செய்தனர். மணமகளின் முன்னாள் காதலன் சர்ஜூ மார்கம் ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை பரிசாக வழங்கியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மனிஷா தாகூர் கூறியதாவது:-
விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட சர்ஜூ தனது முன்னாள் காதலியை திருமணம் செய்து கொண்ட ஹேமேந்திரா மெராவி மீது கோபமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். எனவே அவர் வெடிப்பொருட்கள் நிரப்பிய ஹோம் தியேட்டரை பரிசாக கொடுத்து கொலை சம்பவத்தை நிகழ்த்தி இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
- திடீரென மேடை சரிந்து விழுந்தது.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ராய்ப்பூர்:
பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாகப் பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக அரசு பங்களாவை காலி செய்யக்கூறி நோட்டீசும் அனுப்பப்பட்டது.
ஆனாலும் கோர்ட்டின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த சூழலில், அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என பேசியதற்காக ராகுல் காந்தி மீது மற்றொரு அவதூறு வழக்கு பாய்ந்துள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காக மற்றொரு அவதூறு வழக்கும் ராகுல் காந்தி மீது பதிவாகி உள்ளது.
இதற்கிடையே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக, சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இதற்காக கட்சிக்காரர்கள் அமரும் வகையில் மேடை ஒன்று அமைக்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென மேடை சரிந்து விழுந்தது. மேடையில் இருந்த ஆண், பெண் உறுப்பினர்கள் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 540 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டில் காங்கிரஸ் தலைவர்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ராம் கோபால் வர்மா, கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் சுனில் அகர்வால் உள்ளிட்டவர்கள் பலரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.
- விபத்தை ஏற்படுத்திய டிரக் ஓட்டுனர் மீது அப்பகுதி கிராம மக்கள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டம் சாரங்கர் தாலுகாவில் உள்ள படௌபாலி கிராமத்தில் சாலையைக் கடக்கும்போது டிரக் ஒன்று ஐந்து குழந்தைகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 சிறுவர்கள் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதி கிராம மக்கள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து கோட்வாலி காவல் நிலைய நிர்வாகம் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுவர்கள் குளத்தில் குளிக்க சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சாலையை கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- மந்திரவாதி பெண்ணை கொளுந்துவிட்டு எரிந்த நிலக்கரி மீதும், ஆணிகளின் மீதும் நடக்க வைத்துள்ளார்.
- இது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
செய்வினை வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை எரியும் நிலக்கரி, ஆணிகளின் மீது நடக்க வைத்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்ச் 20 ஆம் தேதி துர்க் கிராமத்தின் கைலாஷ் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதை அடுத்து, பெண்ணை துன்புறுத்திய இரண்டு பெண்கள், ஒரு ஆண் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மம்தா நிஷாத் இது குறித்து கூறும் போது, "சூனியம் வைத்ததாக குற்றம்சாட்டி எனது கணவரின் தம்பி, அவரது மனைவி மற்றும் சகோதரி என்னை அடிக்கடி துன்புறுத்தி வந்தனர். மார்ச் 20 ஆம் தேதி இரவு எனது கணவர் வெளியில் சென்றிருந்தார். அப்போது இவர்கள் மூவரும் சேர்ந்து, மந்திரவாதி ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்று நான் சூயனிம் வைக்கும் செயலில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்குமாறு கூறினர்."
அங்கிருந்த மந்திரவாதி தன்னை 12 முறை கொளுந்துவிட்டு எரிந்த நிலக்கரி மீதும், ஒன்பது முறை ஆணிகளின் மீதும் நடக்க வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் தெரிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட மூன்று உறவினர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பெண்ணை துன்புறுத்திய மந்திரவாதி மைனர் என்பதால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கைதான உறவினர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறார்.
- வெளியூர் சென்ற சமீரன் சிக்தரும், அவரது குடும்பத்தினரும் ஊர் திரும்பவில்லை என்பதால் பதறி போன உறவினர்கள் கான்கர் போலீசில் புகார் செய்தனர்.
- கான்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் சமீரன் சிக்தரையும் அவரது குடும்பத்தினரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ராய்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் பகுதியை சேர்ந்தவர் சமீரன் சிக்தர் (வயது 29), தொழில் அதிபர்.
சமீரன் சிக்தருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் இவருக்கு தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது.
இதனை சரிகட்ட சமீரன் சிக்தர் பலரிடமும் கடன் வாங்கினார். வங்கியிலும் லோன் எடுத்தார். இதில் அவருக்கு ரூ.35 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை திருப்பி கேட்டு வங்கிகளும், நண்பர்களும் நெருக்கடி கொடுத்தனர்.
சமீரன் சிக்தர் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார். இதற்கான தவணை தொகையை அவர் முறையாக கட்டி வந்தார். தற்போது அவருக்கு கடன் நெருக்கடி ஏற்பட்டதால் இந்த தவணையையும் கட்ட முடியாமல் அவர் தவித்தார்.
அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இன்சூரன்ஸ் எடுத்திருப்பதால் அவர் இறந்தால் குடும்பத்திற்கு ரூ.72 லட்சம் பணம் கிடைக்கும். எனவே இந்த பணத்தை பெற என்ன செய்யலாம் என மீண்டும் தீவிரமாக யோசித்தார்.
இதில் தொழில் அதிபர் சமீரன் சிக்தர் மனதில் ஒரு திட்டம் உருவானது. அதன்படி விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடினால் குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் பணம் ரூ.72 லட்சம் கிடைக்கும். அதில் ரூ.35 லட்சத்தை கடன்காரர்களுக்கு கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொண்டு தொழிலை விரிவுப்படுத்தலாம் என முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 1-ந்தேதி சமீரன் சிக்தரும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் ஒரு காரில் சார்மா பகுதிக்கு சென்றனர்.
அங்கு தனது நாடகத்தை சமீரன் சிக்தர் அரங்கேற்றினார். அவர் சென்ற காரை ஒரு மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது போல் சித்தரித்தார். பின்னர் அந்த காரை தீவைத்து எரித்து விட்டு சென்று விட்டார்.
வெளியூர் சென்ற சமீரன் சிக்தரும், அவரது குடும்பத்தினரும் ஊர் திரும்பவில்லை என்பதால் பதறி போன உறவினர்கள் இதுபற்றி கான்கர் போலீசில் புகார் செய்தனர்.
கான்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் சமீரன் சிக்தரையும் அவரது குடும்பத்தினரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அவரது கார் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
காரில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று போலீசார் கண்டுபிடிக்க முயன்றனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் தொழில் அதிபர் சமீரன் சிக்தர் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் அனைவரும் அலகபாத், பாட்னா, கவுகாத்தி, ராஞ்சி ஆகிய நகரங்களில் சுற்றிதிரிவது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலமும், சமீரன் சிக்தர் பயன்படுத்திய செல்போன் மூலமும் இதனை கண்டுபிடித்த போலீசார், அவரை அதிரடியாக தொடர்பு கொண்டனர். பின்னர் அவரை உடனே ஊருக்கு வருமாறு அழைத்தனர். போலீசார் தன்னை கண்டுபிடித்ததை அறிந்து கொண்ட சமீரன் சிக்தர் நேற்று ஊர் திரும்பினார். இதன்மூலம் அவரது நாடகம் முடிவுக்கு வந்தது.
- முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற கார், அந்த லாரி மீது மோதியது.
- அடுத்த ஓரிரு வினாடிகளில் பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள், கார் மீது மோதியது.
பலோட்:
சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டம் மார்கோடலா கிராமத்தின் அருகே இன்று கார், லாரி, மோட்டார் சைக்கிள் என மூன்று வாகனங்கள் அடுத்துடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
முதலில் பலோட்டில் இருந்து பானுபிரதாபூர் நோக்கி சென்ற கார், முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. அடுத்த ஓரிரு வினாடிகளில் பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள், கார் மீது மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் சிறுமி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து டவுண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்தீஸ்கர் மாநில பட்ஜெட்டை பூபேஷ் பாகேல் நேற்று தாக்கல் செய்தார்.
- அப்போது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.2500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் நடப்பு 2023-24 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பூபேஷ் பாகேல் நேற்று தாக்கல் செய்தார். அதன்படி 18முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இவை தவிர அங்கன்வாடி ஊழியர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை ரூ.6500-ல் இருந்து பத்தாயிரம் ரூபாயாக அதிகரித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- சத்தீஷ்காரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- மாநில முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான பூபேஷ் பாகல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ராய்ப்பூர் :
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் சத்தீஸ்கரில் 2023-2024-ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான பூபேஷ் பாகல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சத்தீஷ்காரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை முதல்-மந்திரி பூபேஷ் பாகல் வெளியிட்டுள்ளார்.
பட்ஜெட்டின் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:-
* ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களை சேர்ந்த 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரையிலான வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரு.2,500 உதவி தொகை வழங்கப்படும்.
* ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் ரூ.3,250-ல் இருந்து ரூ.5,000 ஆகவும், ரூ.6,500-ல் இருந்து ரூ.10,000 ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அண்டை வீட்டார் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.
- போலீசார் ஆய்வு செய்தபோது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த பவன் தாக்கூர் என்பவர் தனது மனைவி சாஹு என்பவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரத்தில் மனைவியைக் கொன்ற பவன் தாக்கூர், உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார். இதனிடையே, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அண்டை வீட்டார் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் ஆய்வு செய்தபோது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் பவன் தாக்கூரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 52 வயதுக்குப் பிறகுதான் ராகுல் காந்தி தனது பொறுப்புகள் என்ன என்று யோசிக்கத் தொடங்கியுள்ளாா்.
- கட்சியினா் அனைவரும் ராகுலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகின்றனா்.
ராய்பூர்:
சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாட்டில் இது தொடா்பாக ராகுல் பேசுகையில், இப்போது எனக்கு 52 வயதாகிறது. இதுவரை எனக்கு சொந்த வீடு கிடையாது. எங்கள் குடும்ப வீடு அலகாபாத்தில் உள்ளது. ஆனால், அது கூட எங்களுக்கு சொந்தமானதல்ல. இப்போது வசித்து வரும் வீடு எனக்கு சொந்தமானதல்ல என்று கூறினார்.
ராகுலின் இந்த பேச்சை பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது. இது தொடா்பாக பா.ஜ.க. செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறியதாவது:-
ராகுல் காந்தி தான் பயன்படுத்தும் வீடு, காா் என அனைத்துப் பொருள்களும் தனக்கே சொந்தம் என்ற எண்ணத்துக்கு பழக்கப்பட்டு விட்டாா். அரசு இல்லத்தையே உங்கள் சொந்த வீடாக கருதினால், அனைத்துக்கும் நானே உரிமையாளா் என்ற எண்ணத்தின் உச்சமாகவே கருத முடியும். ராகுல் காந்தி இப்போதுதான் தனது தேச யாத்திரையைத் தொடங்கியுள்ளாா். ஆனால், பாஜகவின் இரு பிரதமா்களும் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்து நாட்டின் நிலவரத்தை அறிந்து கொண்டவா்கள்.
52 வயதுக்குப் பிறகுதான் ராகுல் காந்தி தனது பொறுப்புகள் என்ன என்று யோசிக்கத் தொடங்கியுள்ளாா். அதுவும் காங்கிரஸ் தலைவா் பதவி வகித்து, பின் அதிலிருந்து விலகிய பிறகுதான் இந்த எண்ணம் வந்துள்ளது. அதற்கு முன்பு உங்கள் குடும்பம் என்றால் பொறுப்புகள் எதையும் ஏற்காமல் அதிகாரத்தை அனுபவிப்பது என்றுதான் இருந்து வந்துள்ளது. இப்போதும் கூட காங்கிரஸ் தலைவராக மல்லிகாா்ஜூன காா்கே உள்ளாா். ஆனால், கட்சியினா் அனைவரும் ராகுலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகின்றனா்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 52 வருடமாக இன்னும் எனக்கென்று ஒரு வீடு இல்லை.
- எங்கள் குடும்ப வீடு அலகாபாத்தில் இருக்கிறது.
ராய்ப்பூர் :
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நவராய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நேற்று பேசும்போது தனக்கென்று ஒரு வீடு இல்லை என்று உருக்கமாகக்கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-
1977-ல் நாங்கள் இருந்த (அரசு) வீட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. அது ஒரு வினோதமான சூழ்நிலை. நான் அம்மாவிடம் போய் என்ன நடந்தது என்று கேட்டேன். நாம் இந்த வீட்டை விட்டுப்போகிறோம் என்று அம்மா சொன்னார். அதுவரையில் அந்த வீடு எங்கள் வீடுதான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
எனவே எதற்காக நாம் வீட்டைக் காலி செய்து வெளியேறுகிறோம் என அம்மாவிடம் கேட்டேன். அப்போதுதான் அம்மா முதல்முறையாக இது நம் வீடு அல்ல, அரசு வீடு, நாம் இப்போது இங்கிருந்து போக வேண்டும் என்றார். அடுத்து நாம் எங்கே போவோம் என அம்மாவிடம் கேட்டேன். அம்மாவோ தெரியாது என்றார்.
52 வருடமாக இன்னும் எனக்கென்று ஒரு வீடு இல்லை. எங்கள் குடும்ப வீடு அலகாபாத்தில் இருக்கிறது. அதுவும் இப்போது எங்களுடையது அல்ல. நான் இப்போது துக்ளக் லேனில் 12-ம் எண் வீட்டில் வசித்தாலும், அதுவும் எனது வீடு அல்ல.
இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.






