நடத்தையில் சந்தேகம்- மனைவியை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் போட்ட கணவன்

வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அண்டை வீட்டார் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் ஆய்வு செய்தபோது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
நடத்தையில் சந்தேகம்- மனைவியை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் போட்ட கணவன்
Published on

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த பவன் தாக்கூர் என்பவர் தனது மனைவி சாஹு என்பவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரத்தில் மனைவியைக் கொன்ற பவன் தாக்கூர், உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார். இதனிடையே, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அண்டை வீட்டார் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் ஆய்வு செய்தபோது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் பவன் தாக்கூரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com