என் மலர்
பீகார்
- பிரான்பூர் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் ஆயுதங்களுடன் தாக்கியது.
- போலீஸ் வளாகத்தில் இருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர்.
ராஞ்சி:
பீகாரில் 40 வயதான பிரமோத் குமார் சிங் என்பவர் மது பாட்டில்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லபபட்ட அவர் காவல் நிலையத்தில் இறந்து கிடந்தார்.
இதைத்தொடர்ந்து பிரான்பூர் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் ஆயுதங்களுடன் தாக்கியது. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசரையும் அடித்து உதைத்தனர். போலீஸ் வளாகத்தில் இருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர். கும்பல் தாக்கியதில் 9 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பீகாரில் பா.ஜ.க. உடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்துக் கொண்டார்.
- பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்.
இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் முதல் மந்திரி நிதிஷ்குமார் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் அடுத்த ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்பு பா.ஜ.க. அல்லாத கூட்டணிக்கு கிடைக்குமானால், பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததற்கு காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என தெரிவித்தார்.
- லாலு பிரசாத் யாதவ் பாஸ்போர்ட்டு, கோர்ட்டு வசம் உள்ளது.
- சிறுநீரக சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூர் செல்லவேண்டியுள்ளது.
ராஞ்சி :
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஸ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டு, கோர்ட்டு வசம் உள்ளது.
இந்நிலையில், சிறுநீரக சிகிச்சைக்காக தான் சிங்கப்பூர் செல்லவேண்டியுள்ளது. சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அதற்காக வருகிற 24-ந்தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தனது பாஸ்போர்ட்டை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று லாலு பிரசாத் சார்பில் ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை நேற்று ஏற்ற கோர்ட்டு, இதுதொடர்பாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. பின்னர் விசாரணையை நாளை மறுதினத்துக்கு ஒத்திவைத்தது.
தனது பாஸ்போர்ட்டை விடுவிக்க கோரி லாலு பிரசாத் யாதவ் கோர்ட்டை அணுகியிருப்பது இது 2-வது முறையாகும்.
இதற்கு முன்பு லாலுவின் கோரிக்கையின் பேரில், அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக விடுவிப்பதற்கு சி.பி.ஐ. கோர்ட்டு கடந்த ஜூன் 14-ந்தேதி உத்தரவிட்டது.
- கல்லூரி மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, டோனி புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
- இதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் கூறினார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகம் உள்ளது. அதனுடன் இணைந்த 3 கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் ஆன்லைன் மூலம் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் சில மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் பிரதமர் நரேந்திர மோடி, நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி, பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களும் அதை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, பல்கலைக்கழக பதிவாளர் முஷ்டாக் அகமது கூறுகையில், மாணவர்கள்தான் தங்களது புகைப்படம் மற்றும் இதர தகவல்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும். அவற்றை பரிசீலித்து, பல்கலைக்கழகம் ஆன்லைனில் அனுமதி சீட்டை வெளியிடும். சில குறும்புக்கார மாணவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்டோரின் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கும் பதிவு செய்யப்படலாம் என தெரிவித்தார்.
- படகு மூழ்கியதும் அதில் பயணித்தவர்களில் நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரையேறினர்.
- மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பாட்னா:
பீகார் மாநிலம் தானாபூர் அருகே சுமார் 55 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, கங்கை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று காலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படகு மூழ்கத் தொடங்கியதும், படகில் இருந்தவர்களில் நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரையேறினர். நீச்சல் தெரியாதவர்கள் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 பேரை காணவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 படகுகளில் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
- மணிப்பூரில் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 60 ஆகும்.
- தற்போது 5 எம்.எல்,ஏக்கள் பா.ஜ.கவில் சேர்ந்து உள்ளதால் சட்டசபையில் ஆளும் பா.ஜனதா கட்சி உறுப்பினர்களின் பலம் 37-ஆக உயர்ந்து உள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதாதளம், லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.
முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவி ஏற்றார். அவர் பா.ஜனதா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந்த நிலையில் நிதிஷ் குமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மணிப்பூரில் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த 5 எம்.எல்.ஏக்களை பா.ஜனதா தன் பக்கம் இழுத்துள்ளது. இக்கட்சியில் மொத்தம் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் ஜாய்கிஷன் சிங், நுதிர் சங் துர்சனதே, அசத் உதின், தங்ஜாம் அருண் குமார், கவுதே ஆகிய 5 பேர் பா.ஜனதாவில் இணையப் போவதாக அறிவித்து உள்ளனர்.
டெல்லிக்கு சென்ற அவர்களை மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன்சிங் உற்சாகமாக வரவேற்றார். மீதமுள்ள ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவும் விரைவில் அக்கட்சியை விட்டு விலகி பா.ஜ.க.வில் சேருவார் என கூறப்படுகிறது,
மணிப்பூரில் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 60 ஆகும். தற்போது 5 எம்.எல்,ஏக்கள் பா.ஜ.கவில் சேர்ந்து உள்ளதால் சட்டசபையில் ஆளும் பா.ஜனதா கட்சி உறுப்பினர்களின் பலம் 37-ஆக உயர்ந்து உள்ளது.
பா.ஜனதாவின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய தலைவர் ரஞ்சன்சிங் கூறியதாவது:-
டெல்லி, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா என்ன செய்ததோ அதைதான் மணிப்பூரிலும் செய்து உள்ளது.
எங்கள் எம்..எல்.ஏ.க்களை பேரம் பேசி விலைக்கு வாங்கி உள்ளனர். 2023-ம் ஆண்டு தேசிய அளவில் எங்கள் கட்சி மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் வரும் திங்கள் கிழமை டெல்லி செல்கிறார்.
- டெல்லி பயணத்தில் காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
பாட்னா:
பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் நாளை மறுதினம் டெல்லி செல்கிறார். இந்த டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார்.
வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் நிதிஷ்குமார் சந்திக்க உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.
பீகாரில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு நிதிஷ்குமார் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரத்திலேயே மந்திரி பதவியை கார்த்திகேய சிங் ராஜினாமா செய்தார்.
- கார்த்திகேய சிங்கின் ராஜினாமாவை அம்மாநில கவர்னர் ஏற்றுக் கொண்டார்.
பாட்னா:
பீகாரில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தனது அமைச்சரவையை சமீபத்தில் விரிவாக்கம் செய்தார். அப்போது ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி மேலவை உறுப்பினர் கார்த்திகேய சிங் சட்டத்துறை மந்திரியாக பொறுப்பேற்றார்.
நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம் நடந்த அன்று 2014-ம் ஆண்டில் நடந்த கடத்தல் வழக்கில் கார்த்திகேய சிங் டானாபூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். ஆனால் அவர் அன்று நீதிமன்றத்துக்கு சென்று சரணடையாமல் பாட்னாவில் மந்திரியாக பதவியேற்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த விவகாரத்தில் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்தது. மேலும், கார்த்திகேய சிங்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என நிதிஷ்குமாரை பா.ஜ.க. வலியுறுத்தியது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார், இதைப்பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை என தெரிவித்தார்.
ஆனாலும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இந்த சர்ச்சைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல் மந்திரி நிதிஷ்குமாரையும், துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவையும் வலியுறுத்தியது. இதற்கிடையே, கைது வாரண்டை எதிர்கொண்டுள்ள கார்த்திகேய சிங்கின் இலாகா மாற்றப்பட்டது. அவருக்கு கரும்பு தொழில்துறை ஒதுக்கப்பட்டது. அவரிடம் இருந்த சட்டத்துறை முதலில் கரும்பு தொழில் துறை அமைச்சகத்தை கவனித்த வந்த ஷமீம் அகமதுவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், பீகார் முன்னாள் சட்டத்துறை மந்திரி கார்த்திகேய சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரங்களில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கார்த்திகேய சிங்கின் ராஜினாமாவை அம்மாநில கவர்னர் ஏற்றுக் கொண்டார்.
- ரூ.4 கோடிக்கும் அதிகமான ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
- இயந்திரங்கள் மூலம் பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் சஞ்சய் குமார் ராய் மற்றும் அவருக்கு கீழ் பணி புரியும் இரண்டு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. பாட்னா மற்றும் கிஷன்கஞ்ச் பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையின் போது கட்டுக்கட்டாக லஞ்சப்பணம் சிக்கியது.
பணம் எண்ணும் இயந்திரங்கள் உதவியுடன் அவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எண்ணி பார்த்தபோது மொத்தமாக 4 கோடிக்கும் அதிகமாக பணம் இருந்தது தெரிய வந்தது. மேலும் பல ஆவணங்கள் மற்றும் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

அந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாட்னா லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுஜித் சாகர் தெரிவித்துள்ளார். அரசு உயர் அதிகாரிகள் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நிதிஷ்குமார் அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- பாஜகவைச் சேர்ந்த சபாநாயகர் விஜய் குமார் சின்கா, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
பாட்னா:
பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்தார். முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் அவர் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியானார்.
இந்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பீகார் சட்டசபை இன்று காலை கூடியது. ஆனால் பீகார் சபாநாயகர் விஜய் குமார் சின்கா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதாவை சேர்ந்த அவர் பதவி விலகியதோடு அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார். இதன் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது தாமதமானது.
இந்நிலையில், பிற்பகல் மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது, முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தது. அதன்பின்னர் நம்பிக்கை தீர்மானம் மீது முதல்வர் நிதிஷ்குமார் உரையாற்றி, உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து நம்பிக்கை தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், நிதிஷ் குமார் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
- போராட்டக்காரர்கள் கலைக்க தடியடி நடத்திய போலீசார்.
- மாவட்ட நிர்வாக அதிகாரி மீது விசாரணை நடத்த துணை முதல்வர் உத்தரவு.
பீகார் தலைநகர் பாட்னாவில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பத்திருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதுடன், தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். அப்போது போராட்டக்காரர் ஒருவர் மீது மாவட்ட நிர்வாக கூடுதல் அதிகாரி லத்தியால் கொடூரமாக தாக்கினார். இதுகுறித்த வீடியோ சமூக வளைதலங்களில் பரவியது.
தரையில் உருண்டு புரளும் அந்த போராட்டக்காரர் தனது தலையில் தேசிய கொடியை சுற்றியிருப்பது குறித்து புகைப்படங்களும் பகிரப்பட்டன. இதையடுத்து தாக்குதல் நடத்திய அதிகாரி மீது விசாரணை நடத்த குழு ஒன்றை நியமித்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர். மாவட்ட நிர்வாக கூடுதல் அதிகாரி போராட்டக்காரர்கள் மீது ஏன் தடியடி நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- புகார்தாரர் தனது பெயரில் வழங்கப்பட்ட பான் எண்ணுக்கு எதிராக நோட்டீஸைப் பெற்றுள்ளார் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
- இந்த வழக்கு குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகாரில் தினக்கூலி செய்யும் ஒருவருக்கு 37.5 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கி செலுத்துமாறு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ககாரியா மாவட்டத்தில் உள்ள மகௌனா கிராமத்தில் வசிக்கும் கிரிஷ் யாதவ். தினக்கூலியான இவர் ஒரு நாளைக்கு சுமார் ரூ.500 சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு ரூ.37.5 லட்சம் வருமான வரி செலுத்துமாறு கிடைத்த நோட்டீஸை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, இதுகுறித்து கிரிஷ் யாதவ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார்.
இந்நிலையில், கிரிஷ் பகிர்ந்துகொண்ட தகவலின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், முதல்கட்ட விசாரணையில் இது ஒரு மோசடி வழக்காகத் தெரிவதாகவும் அலவுலி காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி புரேந்திர குமார் கூறினார்.
புகார்தாரர் தனது பெயரில் வழங்கப்பட்ட பான் எண்ணுக்கு எதிராக நோட்டீஸைப் பெற்றுள்ளார் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
"டெல்லியில் தான் சிறிய வேலைகளைச் செய்து வந்தேன். அதைக் கொண்டு ஒரு முறை பான் கார்டைப் பெற முயற்சித்தேன் என்று கிரிஷ் கூறியுள்ளார்.
மேலும், அந்த நோட்டீசில், கிரிஷ் ராஜஸ்தானைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிலைக்கு ஒருபோதும் சென்றதில்லை என்று கிரிஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






