என் மலர்
ஆந்திர பிரதேசம்
- ரோவரில் உள்ள ‘லிப்ஸ்' எனப்படும் ‘ஸ்பெக்ட்ரோஸ்கோப்’ கருவி, நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது.
- தற்போதைய நிலையில் அதன் பேட்டரியில் முழு சார்ஜ் இருக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு 'எல்.வி.எம்.3 எம்.4' ராக்கெட் மூலம் 'சந்திரயான்-3' விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து கடந்த மாதம் 23-ந்தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த 'விக்ரம் லேண்டர்' 40 நாட்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அடுத்த 2 மணி நேரத்திற்கு பிறகு 'விக்ரம் லேண்டரில்' இருந்து 'பிரக்யான் ரோவர்' வெளியே வந்தது. இதனை 'லேண்டர்' ஒரு குழந்தையைப் போல் கண்காணித்து வந்தது. ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.
ரோவரில் உள்ள 'லிப்ஸ்' எனப்படும் 'ஸ்பெக்ட்ரோஸ்கோப்' கருவி, நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. தொடர்ந்து, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேற்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.
தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் கடந்த வாரம் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் 'பிரக்யான் ரோவர்' உறக்க நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இதனைத்தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் நிலவில் முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூரியன் உதிக்க இருக்கிறது. அப்போது மீண்டும் உறக்க நிலையில் இருக்கும் ரோவரில் உள்ள பேட்டரி உதவியுடன் தட்டி எழுப்பி மீண்டும் ஆய்வுப்பணியில் ஈடுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் லேண்டரையும் உறக்கத்தில் இருந்து எழுப்பி, ஆய்வுப்பணியில் ஈடுபடுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.
தற்போதைய நிலையில் அதன் பேட்டரியில் முழு சார்ஜ் இருக்கிறது. அதில் உள்ள சோலார் பேனல் வருகிற 22-ந் தேதி நிலவில் அந்த இடத்தில் மீண்டும் சூரியன் உதயமாகும்போது சூரிய சக்தியை பெறும். ரோவர் அடுத்தக்கட்டப் பணிகளுக்கு மீண்டும் 'சுவிட்ச் ஆன்' ஆகி மீண்டும் ஆய்வுப்பணியில் ஈடுபடும் என்று நம்புகிறோம். அதுவரையிலும் நிலவுக்கான இந்தியாவின் தூதராக அது அங்கேயே நிலைகொண்டிருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
- சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.
- தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக முன்னால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. போலீஸ்சார் கைது செய்தனர்.
பின்னர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடுவை ஆஜர் படுத்தினர். கோர்ட்டில் இருதரப்பு வாதங்கள் முடிந்த பிறகு சந்திரபாபு நாயுடுவை வரும் 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜ மகேந்திரபவரத்தில் உள்ள ஜெயிலில் நள்ளிரவு அடைத்தனர். ஜெயிலில் அவருக்கு 7691 கைதி எண் வழங்கப்பட்டது.
ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும் வீட்டு உணவு வழங்கவும் நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.
இந்த பந்திற்கு ஜனசேனா, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் லோக் சத்தா கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தெலுங்கு தேசம் கட்சி பந்த் அறிவிக்கப்பட்டதால் ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் பந்த் காரணமாக மாநிலத்தில் 50 சதவீதத்திற்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. வாகனங்களின் டிரைவர்கள் சிலர் காயம் அடைந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர்.
விஜயவாடா, கர்னூல், கடப்பா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆந்திராவில் பதட்டம் நிலைவியது.
ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து வழக்கம் போல ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆந்திர எல்லையில் இருந்து முக்கிய பஸ் நிறுத்தங்களில் அந்த மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் திருப்பதி இடையே இன்று வழக்கம் போல பஸ்கள் இயக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர்.
பந்த் காரணமாக ஆந்திராவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பந்தால் பக்தர்கள் அவதி அடையக் கூடாது என்பதற்காக திருப்பதிக்கு மட்டும் பந்த் இல்லை என விலக்கு அளித்துள்ளனர். திருப்பதியில் கடைகள் ஓட்டல்கள் டீக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.
பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு சென்று வந்தனர்.
- முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- இதை ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா வெடி வெடித்து கொண்டாடினார்.
அமராவதி:
ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மாநில குற்றப் புலனாய்வு துறை (சி.ஐ.டி) கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதன்பின் நேற்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. வரும் 22-ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட உள்ளார்.
ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு கோர்ட்டில் தள்ளுபடி ஆனதால் அவர் சிறை செல்வது உறுதியானது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா கொண்டாடியுள்ளார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ரோஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
- சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு.
- சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் கோரி வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்து செல்லப்படுகிறார். வரும் 22ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.
தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் கோரி வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜாமின் மனு மீது விஜயவாடா லஞ்ச ஒழிப்ப குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சந்திரபாபு நாயுடுவுக்கு சிறையை உறுதி செய்தது விஜயவாடா லஞ்ச ஒழிப்பு குற்றப்பிரிவு நீதிமன்றம்.
மனு தள்ளுபடி செய்ததன் மூலம் சந்திரபாபு நாயுடுவுக்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
- நீதிமன்றத்தில் இன்று நாள் முழுவதும் வாதங்கள் நடைபெற்றன.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை திறன் மேம்பாட்டு கழகம் ஊழல் வழக்கில் சிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை வரை விசாரணை நீடித்த நிலையில், 3.15 மணிக்கு கஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன்பிறகு நாள் முழுவதும் வாதங்கள் நடைபெற்றன. இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்து செல்லப்படுகிறார். வரும் 22ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.
- மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
- தீர்ப்புக்காக காத்திருக்கும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்களால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை திறன் மேம்பாட்டு கழகம் ஊழல் வழக்கில் சிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை வரை விசாரணை நீடித்த நிலையில், 3.15 மணிக்கு கஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு வழக்கில் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்பட உள்ள நிலையில் விஜயவாடாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனால், அங்கு அதிகளவில் துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தூரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.
தீர்ப்புக்காக காத்திருக்கும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்களால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- சந்திரபாபு நாயுடு நேற்று காலை சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்
- போலீசார் அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை திறன் மேம்பாட்டு கழகம் ஊழல் வழக்கில் சிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது கைது நடவடிக்கையை எதிர்த்து தெலுங்குதேசம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை வரை விசாரணை நீடித்த நிலையில், 3.15 மணிக்கு கஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு மனைவி நாரா புவனேஸ்வரி ஏற்கனவே நீதிமன்றத்தில் தயாராக இருப்பதாகவும், வழக்கறிஞர்களும் தயாராக இருப்பதாகவும் தெலுங்குதேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் பட்டாபி ராம் கொம்மரெட்டி தெரிவித்துள்ளார். இவர்கள் ஜாமின் மனு தாக்கல் செய்து, உடனடியாக விசாரணைக்கு ஏற்கும்படி வலியுறுத்த வாய்ப்புள்ளது.
- சந்திரபாபு நாயுடுவை சந்திக்கச் சென்ற பவன் கல்யாணை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- பவன் கல்யாண் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமராவதி:
ஆந்திர முதல் மந்திரியாக இருந்தபோது வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது.
இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு கடைகள், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, சந்திரபாபு கைது செய்யப்பட்டதற்கு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுக்கு ஜனசேனா கட்சி துணை நிற்கும். அவரது கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்றார்.
சந்திரபாபு நாயுடுவை சந்திக்கச் சென்ற ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர காவல்துறை நடவடிக்கையால் ஆவேசம் அடைந்த பவன் கல்யாண் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்.டி.ஆர். மாவட்டத்தில் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க தங்களுடன் ஒத்துழைக்குமாறு காவல்துறை அதிகாரிகள் அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து பவன் கல்யாணை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
- உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அக்கட்சி தலைவர் வலியுறுத்தல்.
- தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்து இருக்கிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் அச்ச நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். முன்னதாக சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திரா முழுக்க தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.
மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஆந்திர மாநிலம் உய்யூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 7 மண்டலங்களில் வரும் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.
- வரும் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.
மேலும் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது. மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன.
மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் உய்யூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 7 மண்டலங்களில் வரும் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விஜயவாடாவில் நீதிமன்றத்திற்கு சந்திரபாபு நாயுடு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு தொண்டர்கள் பலர் குவிந்துள்ளனர்.
- வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.
- திருப்பதியில் இருந்து தமிழகத்துக்கு 12 மணிக்கு பிறகு பஸ்கள் ஓட தொடங்கின.
திருப்பதி:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.
மேலும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.
மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
ஆந்திராவில் முழு கடையடைப்பு காரணமாக ஆந்திர, மாநில எல்லையான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளில் இன்று காலை வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டன.
தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக திருப்பதி, காளஹஸ்தி, உள்பட ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 160 பஸ்கள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதேபோல திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன.
ஆந்திராவில் மதியம் 12 மணிக்குமேல் இயல்பு நிலை திரும்பியது. இதனையடுத்து வேலூர்-திருப்பதி பஸ் போக்குவரத்து 6 மணி நேரத்துக்கு பிறகு தொடங்கியது.
இதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ஆந்திர பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
திருப்பதியில் இருந்து தமிழகத்துக்கு 12 மணிக்கு பிறகு பஸ்கள் ஓட தொடங்கின. இதனால் தவித்த பக்தர்கள் நிம்மதி பெருமூச்சுடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.f
- வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.
- ரெயில் போக்குவரத்து சேவை மட்டும் தொடர்ந்து நடைபெற்றதால், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருப்பதி:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.
மேலும் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.
மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ரெயில் போக்குவரத்து சேவை மட்டும் தொடர்ந்து நடைபெற்றதால், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆந்திர எல்லைகளில் நிறுத்தப்பட்ட பஸ்களில் இருந்து பயணிகள் இறங்கி தங்கள் ஊருக்கு பல கிலோ மீட்டர் நடந்தே கடும் சிரமத்துடன் சென்றனர்.
ஆந்திராவில் முழு கடையடைப்பு காரணமாக ஆந்திர, மாநில எல்லையான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளில் வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக திருப்பதி, காளஹஸ்தி, உள்பட ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 160 பஸ்கள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதேபோல திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன.
தனியார் பஸ்கள் மட்டும் தமிழக ஆந்திர எல்லை வரை இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் தென் மாவட்டங்களில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் வேலூர் வழியாக செல்கின்றனர். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதால் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் திருப்பதி செல்ல வேலூர் வந்த பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ரெயில் மூலம் திருப்பதி செல்வதா அல்லது வீட்டுக்கு திரும்பி செல்வதா என குழப்பத்தில் தவித்தனர்.






