என் மலர்
நீங்கள் தேடியது "சந்திரபாபு நாயுடு வழக்கு"
- மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
- தீர்ப்புக்காக காத்திருக்கும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்களால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை திறன் மேம்பாட்டு கழகம் ஊழல் வழக்கில் சிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை வரை விசாரணை நீடித்த நிலையில், 3.15 மணிக்கு கஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு வழக்கில் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்பட உள்ள நிலையில் விஜயவாடாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனால், அங்கு அதிகளவில் துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தூரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.
தீர்ப்புக்காக காத்திருக்கும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்களால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
- நீதிமன்றத்தில் இன்று நாள் முழுவதும் வாதங்கள் நடைபெற்றன.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை திறன் மேம்பாட்டு கழகம் ஊழல் வழக்கில் சிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை வரை விசாரணை நீடித்த நிலையில், 3.15 மணிக்கு கஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன்பிறகு நாள் முழுவதும் வாதங்கள் நடைபெற்றன. இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்து செல்லப்படுகிறார். வரும் 22ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.
- சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு.
- சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் கோரி வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்து செல்லப்படுகிறார். வரும் 22ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.
தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் கோரி வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜாமின் மனு மீது விஜயவாடா லஞ்ச ஒழிப்ப குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சந்திரபாபு நாயுடுவுக்கு சிறையை உறுதி செய்தது விஜயவாடா லஞ்ச ஒழிப்பு குற்றப்பிரிவு நீதிமன்றம்.
மனு தள்ளுபடி செய்ததன் மூலம் சந்திரபாபு நாயுடுவுக்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
- சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டவுடன் அவரது கட்சி நிர்வாகிகள் முக்கிய நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயிலில் அவரது உயிருக்கு மாவோயிஸ்டுகளால் ஆபத்து ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் சந்திரபாபு நாயுடுவை ஜெயிலுக்கு பதிலாக வீட்டு காவலில் வைக்க அனுமதிக்க வேண்டுமென சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சிறப்பு கோட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டவுடன் அவரது கட்சி நிர்வாகிகள் முக்கிய நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
தெலுங்கு தேசம் கட்சியை சார்பில் நேற்று பந்த் நடந்தது. இதனையடுத்து எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேலாக வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். அவர்களை உறவினர்கள் குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.






