என் மலர்
நீங்கள் தேடியது "TDP Protest"
- ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீசார் கைது செய்தனர்
- திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் தெலுங்குதேசம் கட்சியினர் போராட்டம்
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் ஆந்திராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டன.
மாநிலம் முழுவதும் உள்ள அவரது கட்சி முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் கோதாவரி மாவட்டம் பொடலடாவில் இருந்து தனது தந்தையை சந்திக்க காரில் புறப்பட்டார்.
அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திராவில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி லட்சுமி புரத்தில் சாலையில் டயர் மரக்கட்டைகளை போட்டு தீ வைத்துக் கொளுத்தினர். மேலும் மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான குப்பம் நகரில் ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அமராவதி, விஜயவாடா உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தீ வைப்பு, கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன.
இதனால் பெரும் பதட்டம் நிலவியது. இதனை கட்டுக்குள் கொண்டுவர மாநிலம் முழுவதும் அதிரடிபடை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தெலுங்கு தேசம் கட்சியினரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்தனர்.
தொடர் போராட்டத்தால் ஆந்திராவில் கடும் பதட்டம் நிலவியது.
- என்ன வழக்கில் கைது செய்தீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை.
- சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வேன். தொண்டர்கள் பதட்டம் அடைய வேண்டாம்.
திருப்பதி:
ஆந்திராவில் கைதான முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அரசியல் பழிவாங்கும் நோக்கில் அவர்கள் வேண்டுமென்றே என்னைக் கைது செய்து உள்ளனர்.
என்ன வழக்கில் கைது செய்தீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை. என் மீது முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யாமல் கைது செய்து உள்ளனர். நள்ளிரவில் என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன. நான் எங்காவது ஓடி விடுவேனா.
முன்னாள் முதலமைச்சருக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா?. என்னை கைது செய்வதன் மூலம் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர்.
சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வேன். தொண்டர்கள் பதட்டம் அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.
- ரெயில் போக்குவரத்து சேவை மட்டும் தொடர்ந்து நடைபெற்றதால், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருப்பதி:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.
மேலும் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.
மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ரெயில் போக்குவரத்து சேவை மட்டும் தொடர்ந்து நடைபெற்றதால், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆந்திர எல்லைகளில் நிறுத்தப்பட்ட பஸ்களில் இருந்து பயணிகள் இறங்கி தங்கள் ஊருக்கு பல கிலோ மீட்டர் நடந்தே கடும் சிரமத்துடன் சென்றனர்.
ஆந்திராவில் முழு கடையடைப்பு காரணமாக ஆந்திர, மாநில எல்லையான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளில் வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக திருப்பதி, காளஹஸ்தி, உள்பட ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 160 பஸ்கள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதேபோல திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன.
தனியார் பஸ்கள் மட்டும் தமிழக ஆந்திர எல்லை வரை இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் தென் மாவட்டங்களில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் வேலூர் வழியாக செல்கின்றனர். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதால் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் திருப்பதி செல்ல வேலூர் வந்த பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ரெயில் மூலம் திருப்பதி செல்வதா அல்லது வீட்டுக்கு திரும்பி செல்வதா என குழப்பத்தில் தவித்தனர்.
- சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து பல்வேறு இடங்களில் அவருடைய தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- காஞ்சிபுரத்தில் இருந்து ஏராளமானோர் விடுமுறைக்காக திருப்பதி செல்வது வழக்கம்.
காஞ்சிபுரம்:
ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வர் ஆன சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். கைது கண்டித்து பல்வேறு இடங்களில் அவருடைய தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து ஏராளமானோர் விடுமுறைக்காக திருப்பதி செல்வது வழக்கம். அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் திருப்பதி, நகரி, புத்தூர், ரேணிகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படும். தற்போது பதட்டமான சூழ்நிலை காணப்படுவதால் காஞ்சிபுரம் மண்டலம் சென்னை மண்டலம் பேருந்துகள் திருத்தணி வரை மட்டுமே செல்லும் எனவும் ஆந்திர எல்லைப் பகுதிகளுக்கு செல்லாது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
- வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.
- திருப்பதியில் இருந்து தமிழகத்துக்கு 12 மணிக்கு பிறகு பஸ்கள் ஓட தொடங்கின.
திருப்பதி:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.
மேலும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.
மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
ஆந்திராவில் முழு கடையடைப்பு காரணமாக ஆந்திர, மாநில எல்லையான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளில் இன்று காலை வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டன.
தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக திருப்பதி, காளஹஸ்தி, உள்பட ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 160 பஸ்கள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதேபோல திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன.
ஆந்திராவில் மதியம் 12 மணிக்குமேல் இயல்பு நிலை திரும்பியது. இதனையடுத்து வேலூர்-திருப்பதி பஸ் போக்குவரத்து 6 மணி நேரத்துக்கு பிறகு தொடங்கியது.
இதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ஆந்திர பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
திருப்பதியில் இருந்து தமிழகத்துக்கு 12 மணிக்கு பிறகு பஸ்கள் ஓட தொடங்கின. இதனால் தவித்த பக்தர்கள் நிம்மதி பெருமூச்சுடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.f
- காலையில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
- ஆந்திர மாநிலத்தில் பஸ்களை இயக்க அனுமதி கிடைத்ததை தொடர்ந்து பஸ்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன.
சென்னை:
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக-ஆந்திர மாநிலத்திற்கு இடையே பஸ் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரு மாநில பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. காலை 10 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்து சீரானது.
அதைத் தொடர்ந்து தமிழக-ஆந்திரா அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆந்திர மாநிலத்தில் பஸ்களை இயக்க அனுமதி கிடைத்ததை தொடர்ந்து பஸ்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன.






