search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை - வெடி வெடித்து, கேக் வெட்டி கொண்டாடிய மந்திரி ரோஜா
    X

    சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை - வெடி வெடித்து, கேக் வெட்டி கொண்டாடிய மந்திரி ரோஜா

    • முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • இதை ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா வெடி வெடித்து கொண்டாடினார்.

    அமராவதி:

    ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக மாநில குற்றப் புலனாய்வு துறை (சி.ஐ.டி) கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதன்பின் நேற்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. வரும் 22-ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட உள்ளார்.

    ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு கோர்ட்டில் தள்ளுபடி ஆனதால் அவர் சிறை செல்வது உறுதியானது.

    இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா கொண்டாடியுள்ளார்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ரோஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    Next Story
    ×