search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் - உண்ணாவிரத போராட்டம் அறிவித்த தெலுங்கு தேசம் கட்சி
    X

    சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் - உண்ணாவிரத போராட்டம் அறிவித்த தெலுங்கு தேசம் கட்சி

    • உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அக்கட்சி தலைவர் வலியுறுத்தல்.
    • தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    ஆந்திராவில், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்து இருக்கிறது.

    தெலுங்கு தேசம் கட்சியின் அச்ச நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். முன்னதாக சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திரா முழுக்க தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.

    மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக ஆந்திர மாநிலம் உய்யூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 7 மண்டலங்களில் வரும் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×