என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும்.
    இன்றைய சூழலில் பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனை வெள்ளைப்படுதல் ஆகும். பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும். 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களே இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.

    பெண்கள் பிறப்புறுப்பில் அமிலத்தன்மை கொண்ட நிறமற்ற லேசான பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவம் இயற்கையாக சுரந்து கிருமித் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை, காரத்தன்மையாக மாறும். அதனால் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என அந்த திரவம் வெளிப்படும். சிலருக்கு பிறப்புறுப்பில் அரிப்பும், துர்நாற்றமும் கூட ஏற்படலாம். இவை ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால் இந்த பிரச்சனை ஏற்படலாம். மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும். சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.

    மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம். பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது. நீண்ட நாட்களாக கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

    சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

    உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.

    தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம். அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.

    வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டாலும் கூட வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை மருத்துவபரிசோதனை மூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதே பல சிக்கல்களை தடுக்கும்.
    கேரளாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் பக்கவாத நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
    ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளவில் ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். அத்துடன் உலகளவில் இறப்பை ஏற்படுத்தும் இரண்டாவது பெரிய நோய் பாதிப்பாக பக்கவாதம் விளங்குகிறது. நோய்களால் மரணமடையும் 10 பெண்களில் 6 பேர் பக்கவாத பாதிப்புக்குள்ளாகி இறக்கிறார்கள். உடலின் ஒரு பக்கத்தில் உணர்வின்மை, பலவீனம், பார்வை திறனில் குறைபாடு, பேச்சில் தடுமாற்றம், உடல் ஒருங்கிணைப்பை இழப்பது போன்றவை பக்கவாத பாதிப்பின் வெளிப்பாடாகும்.

    மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதாலோ, ரத்த நாளங்கள் சிதைவடைவதாலோ பக்கவாதம் ஏற்படலாம். இதனால் மூளை செல்கள் இறக்கக்கூடும். ஆண்களை விட பெண்கள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் அதிகமாக இருப்பதும், வயது அதிகரிப்பதற்கு ஏற்ப பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதும் பாதகமான அம்சங்களாக இருக்கின்றன. அதிலும் மாதவிடாய் சுழற்சி முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் பக்கவாத பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைந்து போவது அதற்கான காரணமாக அமைந்திருக்கிறது.

    பக்கவாத பாதிப்பு விஷயத்தில் ஆண், பெண் இருவரிடையேயும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. கரோனரி தமனி நோய், இதய செயலிழப்பு போன்றவை ஆண்களுக்கு பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கின்றன. பெரும்பாலும் இதய நோய்கள் பெண்களுக்கு பக்கவாத பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கேரளாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் பக்கவாத நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

    பக்கவாதத்தால் பாதிக்கப்படும் பெண்கள், ஆண்களுடன் ஒப்பிடுகையில் காலதாமதமாகவே மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண் நோயாளிகளை பொறுத்தவரை அக்கறையாக கவனித்துக்கொள்ளும் பராமரிப்பாளர் இல்லாமல் போவது பாதிப்பை அதிகப்படுத்திவிடுகிறது.
    மாதவிடாய் நாட்களில் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் அசவுகரியத்தை அது போக்கினாலும், அதில் கலந்திருக்கும் சில ரசாயனங்கள் பெண்களின் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
    மாதவிடாய் நாட்களில் பெரும்பாலான பெண்கள் நாப்கின் பயன்படுத்துகிறார்கள். அந்த நாட்களில் ஏற்படும் அசவுகரியத்தை அது போக்கினாலும், அதில் கலந்திருக்கும் சில ரசாயனங்கள் பெண்களின் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் தான் ரசாயன கலப்பில்லாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத நாப்கின்களை தயாரிப்பது, அவற்றை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு பெருகிக்கொண்டிருக்கிறது.

    ‘‘நாப்கின்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானவைதான் என்றாலும் மாதவிடாய் உதிரப்போக்கை உறிஞ்சக்கூடிய டையாக்சின் மற்றும் பாலிமர் போன்ற சில வேதிப்பொருட்கள் அதில் இடம்பெற்றிருப்பது பிறப்பு உறுப்பில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கக்கூடும். அத்துடன் டையாக்சின் உடலில் சேர்ந்தால் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படலாம். அதனால்தான் 3-4 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்றிவிட வேண்டும்’’ என்கிறார், மகப்பேறு மருத்துவர் அருணா கல்ரா.

    மாதவிடாய்

    டையாக்சின் என்பது நாப்கின்களை பிளீச்சிங் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ரசாயனமாகும். இது பலவிதமான நோய் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதுபோல் நாப்கின்களில் வாசனைக்காக செயற்கை நறுமண பொருட்களை சேர்க்கிறார்கள். அதுவும் ஆபத்தானது. நாப்கின்களை முறையாக பயன்படுத்தாவிட்டால் கருத்தரிப்பதில் சிக்கல், ஹார்மோன் பிறழ்ச்சி, உறுப்பு பகுதியில் ஒவ்வாமை, இடுப்பு பகுதியில் அழற்சி, தைராய்டு குறைபாடு போன்ற பாதிப்புகளும் உருவாகக்கூடும்.

    நாப்கின் தயாரிப்பில் பருத்தி பயன்படுத்தப்பட்டாலும் அதனை விளைவிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவது கூட பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் பருத்தியை பளிச்சென்ற வெண்மை நிறத்திற்கு மாற்றுவதற்கும் டையாக்சினை பயன்படுத்துகிறார்கள். டையாக்சின் அதிகம் கலப்பது, பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் ரசாயனம் குறைந்த நாப்கின்கள் புழக்கத்திற்கு வர தொடங்கியுள்ளன. ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் சராசரியாக 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் நாப்கின்களை பயன்படுத்துகிறார். அப்படியென்றால் டையாக்சின் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும் நாப்கின் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யூகித்துக்கொள்ளலாம். ரசாயன கலப்பில்லாத நாப்கின்களை பயன்படுத்துவதே உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
    முறையான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம் உடலை எந்த விதமான நோயிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
    மார்பக கட்டிகள் அனைத்தும் புற்றுநோயாக இருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் மார்பகத்தில் கட்டி தென்பட்டால் உடனடியாக புற்று்நோய் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.

    மார்பகப் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் மனம் தளரக்கூடாது. மற்ற பல நோய்களைப் போல மார்பக புற்று நோயைக் குணப்படுத்த முடியும். ஆனால் அதற்கு தொடர் சிகிச்சை மிகவும் அவசியம். எந்த ஒரு வியாதியையும் குணப்படுத்த சிகிச்சை மட்டும் போதாது. அதிலும் மார்பக புற்று நோயில் இருந்து மீள அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை அவசியம்.

    இந்த நோயிலிருந்து நான் மீண்டு வருவேன் என்று சம்பந்தப்பட்ட பெண் உறுதியாக நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை மட்டுமே அந்தப் பெண்ணை நோயிலிருந்து முழுமையாக காப்பாற்றும் சக்தி பெற்றது.

    மார்பக புற்று நோயால் பாதிப்படைந்த பெண்களை சமூகம் ஒதுக்கி வைத்தல் கூடாது. சமூகத்தின் தவறான நடவடிக்கைகளாலும், பேச்சுக்களாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மன உளைச்சலும், விரக்தியும் அடைய வாய்ப்புள்ளது. அதனால் சமூகம் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் நடந்து கொள்வது இன்றியமையாதது.

    மார்பக புற்று நோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்

    1. வைட்டமின் டி & ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

    மார்பக புற்றுநோய்

    2. நார்ச்சத்து நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், பீன்ஸ் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

    3. பழங்களில் பெர்ரிஸ் மற்றும் பீச் உகந்தது.

    4. பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் சாப்பிட ஏற்றது. இது மார்பக புற்று நோயைக் குணப்படுத்த உதவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    5. வைட்டமின் டி சத்து நிறைந்த முட்டை, மீன் போன்றவற்றை சாப்பிடலாம். மாலை வெயிலில் சிறிது நேரம் நடப்பதன் மூலம் இயற்கையாகவே வைட்டமின் டி-யைப் பெற இயலும்.

    6. கிரின் டி புற்று நோய்க்கு எதிராக செயல்பட உதவுகிறது என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து மார்பக புற்று நோயிலிருந்து மீண்டு வர உதவுகிறது.

    7. மஞ்சள் ஒரு மகத்துவமான குணம் கொண்ட மருந்து பொருள். நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை இயற்கையிலேயே மஞ்சளில் உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது, மார்பக புற்று செல்கள் வராமல் கட்டுப்படுத்தப்படுகின்றது.

    8. சீரான உடல் எடையோடு இருப்பது நல்லது. தினம் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். போதிய உடல் உழைப்பு உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    முறையான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம் உடலை எந்த விதமான நோயிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பெண்ணும் தன் உடலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    உலகெங்கிலும், பல தம்பதிகள் ஒரு குழந்தைக்காக முயற்சிக்கும்போது பல தடைகளை எதிர்கொள்கின்றனர். இது பலருக்கு மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது.
    ஆரோக்கியமான உணவு கருவுறுதலுக்கு நல்ல பலனை கொடுக்கும். எண்ணெய் அதிகமுள்ள துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படுகிறது, இது நீரிழிவு, உடல் பருமன், இதயம் தொடர்பான நோய்கள், பி.சி.ஓ.டி போன்ற பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது.

    ஆல்கஹால், மற்றும் புகைபிடித்தல் பழக்கம் ஆகியவை அதிகப்படியான கருவுறாமைக்கு காரணமாக இருக்கலாம். நமது உணவுச் உற்பத்தியில் இரசாயனங்கள் சேர்ப்பது மனித மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். உங்கள் உணவில் உங்கள் புரதத்தை அதிகரிக்கவும், கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கவும். தாவர புரதம், பால் பொருட்கள், அயன் , வைட்டமின் பி 12, , ஃபோலேட், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளை மலட்டுத்தன்மையுள்ள தம்பதியினருக்கு உணவாக பரிந்துரைக்கலாம்.

    ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்காது. விந்தணுக்கள் உங்கள் உடலுக்குள் 5 நாட்கள் வரை வாழவேண்டும். இறுக்கமான ஆடைகளை அணிவது, சூடான குளியல் தொட்டியில் அதிக நேரத்தை செலவிடுவது போன்ற பழக்கம் விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும். உங்கள் செல்போன் பழக்கத்தையும் கொஞ்சம் குறையுங்கள் . உடலுறவுக்குப் பிறகு சில நிமிடங்கள் படுக்கையில் இருங்கள் – நீங்கள் 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருந்தால், கருப்பைக்குள் விந்து சென்று விடும்.

    உங்கள் மாதவிடாய் சுழற்சி வழக்கமானதாக இருந்தால் – ஒவ்வொரு 28-30 நாட்களுக்கும் – சுழற்சியின் 8-9 நாள் முதல் சுழற்சியின் 18 ஆம் நாள் வரை முயற்சி செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு நல்ல கர்ப்ப வீதத்தைப் பெற ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடலுறவு கொள்வது போதுமானது.குழந்தையின்மைக்கு இன்னொரு முக்கிய காரணம், இப்போது பெரும்பாலானோர் தாமதமாக 30,35 வயதுக்கு மேல் திருமணம் செய்வதும் ஒரு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    பிரசவத்துக்கு பிறகு மார்பகங்கள் தளரத்தான் செய்யும். உடல் எடை அதிகரித்த பின், வயதாக வயதாக மார்பகங்கள் (Sagging Breast) தளர்வடையும். மார்பகங்கள் தளர்வடையாமல் இருக்க சில வழிகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
    மார்பகங்கள் தளர்வடைய நிறைய காரணங்கள் உள்ளன. வயதாக, வயதாக மார்பகங்களை தாங்கும் தசைகள் பலவீனமாகும். பிரசவத்துக்கு பின் குழந்தைகளுக்கான மார்பகங்களில் பால் சுரக்கும். அப்போது மார்பகங்கள் பெரிதாகின்றன. குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் தருவதை நிறுத்திய பிறகு, பால் சுரப்பது நிற்கும். இப்போதும் மார்பகங்கள் தளர்வடையும். உடல் எடையை குறைக்க முயற்சித்தால் மார்பகங்களை ஓரளவுக்கு தளர்வடையாமல் தடுக்கலாம். கர்ப்பமான பின் மார்பகங்களின் அளவு பெரிசாகும் பிரசவத்துக்கு பின் பால் ஊட்டுவதை நிறுத்திய பின் மார்பகங்களின் அளவில் மாற்றம் நடக்கும். இதனால் சருமத்தில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன.

    உடல் எடையை குறைக்க திட்டமிட்டால் மாதம் 2-3 கிலோ என மெதுவாக, நிதானமாக பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கலாம். ஒரே மாதத்தில் அதிக ஒர்க் அவுட் செய்து 5 அல்லது 5 + கிலோக்கு மேல் குறைக்க முயற்சி செய்தால் மார்பகங்கள் தளர்ந்துவிடும். சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு, விரைவில் மார்பகங்கள் தளரும். புற்றுநோய் வரும் வாய்ப்புகளும் அதிகம். அதிக உடல் எடை இருந்தால் அதைக் குறைக்க பாருங்கள். அதிக குண்டாக இருந்தால், பெரிய மார்பகங்களாக மாறி கொண்டே வரும். தளர்வதும் விரைவில் ஏற்படும். சரியான அளவில் பிராவை அணிவது நல்லது. இரவில் தூங்கும்போது மட்டும் பிராவை தவிர்க்கலாம்.
    தாய்மார்களின் மார்பகங்கள் தளராமல் இருக்க இயற்கை வழிகள்…

    புஜங்காசனா

    புஜங்கா என்றால் கோப்ரா (பாம்பு). பாம்பு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அதுபோல பார்ப்பதற்கு தெரியும் இந்த ஆசனத்தின் செயல்முறை.

    குப்புறப் படுத்துக்கொள்ளுங்கள். கால்கள் சரியாக நீட்டி இருக்கட்டும். கைகள் பக்கவாட்டில் இருக்க வேண்டும். உங்களது கைகளை தோள்பட்டைக்கு அருகில் கொண்டு வாருங்கள். அப்படியே மெதுவாக மூச்சு இழுத்தபடி தலை, தோள்பட்டை, மார்பகங்கள், நெஞ்சு, வயிறு பகுதியை தூக்குங்கள். இடுப்பு, தொடை, கால்கள் தரையிலே பதிந்திருக்க வேண்டும். 10 நொடி மூச்சை ஹோல்ட் செய்த பின் பிறகு மெதுவாக மூச்சைவிட்டபடி முன்னே இருந்த அதே நிலையில் கீழே படுத்துக் கொள்ளுங்கள்.
    இதுபோல 3 முறை செய்யுங்கள்.

    இந்த ஆசனம் தளர்ந்த மார்பகங்களை டைட்டாகும். குறைந்தது 3-4 மாதங்கள் வரை சரியாக செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

    ஐஸ் மசாஜ்

    ஐஸ் மசாஜ் செய்தால் தளர்ந்த தசைகள் மீண்டும் டைட்டாக உதவும். 2 ஐஸ் கட்டிகளை துணியில் வைத்து, கட்டி, ஒரு மார்பகத்துக்கு ஒரு நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள். அதற்கு மேல் செய்தால், மறுத்துபோகிவிடும். எனவே ஒரு நிமிடம் போதும். சர்குலர் மோஷனாக மசாஜ் செய்ய வேண்டும்.
    உலர்ந்த, சாஃப்டான துணியால் துடைத்து விட்டு, சரியான அளவில் இருக்கும் பிராவை அணிந்து கொள்ளுங்கள். பின்னே சாய்ந்த சேர் அல்லது தலையணை வைத்தோ 30 நிமிடங்களுக்கு சாய்ந்து கொள்ளுங்கள். இதுபோல தினமும் 2 முறை செய்யுங்கள். 3 மாதம் கழித்து உங்களுக்கு மாற்றம் தெரியும்.

    ஆலிவ் எண்ணெய்

    உள்ளங்கையில் தேவையான ஆலிவ் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். நன்றாக உள்ளங்கையை தேய்த்துக் கொள்ளுங்கள். இப்போது கீழிருந்து மேலாக 15 நிமிடங்கள் வரை மிதமாக மசாஜ் செய்யுங்கள். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். செல்களை ரிப்பேர் செய்யும். வாரத்துக்கு நான்கு முறை இந்த மசாஜை செய்யலாம்.
    ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், அவகேடோ எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.

    வெள்ளை முட்டை மாஸ்க்

    ஒரு வெள்ளை முட்டையில், வெங்காய ஜூஸ் கலந்து அதை மார்பகங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் இருமுறை செய்து வரலாம்.

    நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை...

    அதிகமான டயட்டில் இருக்கவே கூடாது.
    உணவை சாப்பிடாமல் தவிர்க்க கூடாது.
    நேரம் கிடைக்கும் நீச்சல் அடிக்கலாம்.
    ஜாக்கிங், ரன்னிங் போன்றவை செய்ய வேண்டாம்.
    வாக்கிங் சென்றால் சரியான டைட்டான பிராவை அணிந்து கொள்ளுங்கள்.
    எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காருங்கள்.
    கூன்போட்டு நடக்க வேண்டாம்.
    ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுங்கள்.
    பிராவை சரியான அளவில் அணிவது மிக மிக முக்கியம்.
    கர்ப்பகாலத்தில் விரிவடையும் வயிற்று தசை பகுதிகள் சுருங்காமல் இருப்பது கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிவிடுகிறது. அதிகப்படியான கொழுப்பை குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்!
    பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் வயிறு பெரிதாகிவிடுகிறது. வயிற்றை சுற்றிலும் கொழுப்பு படிவதே அதற்கு காரணம். இது ‘பேபி கொழுப்பு’ என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பகாலத்தில் விரிவடையும் வயிற்று தசை பகுதிகள் சுருங்காமல் இருப்பது கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிவிடுகிறது. அதிகப்படியான கொழுப்பை குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்!

    தூக்கம்: 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை 16 ஆண்டுகளாக கண்காணித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களின் உடல் எடை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தூக்கம் உள்ளுறுப்புகளில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளுடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்துள்ளது. உடல் பருமன், கொழுப்பு பிரச்சினையை தவிர்ப்பதற்கு 7 மணி நேர தூக்கம் அவசியமானது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    புரோபயாடிக் பயன்பாடு: புரோபயாடிக்குகள் நல்ல பாக்டீரியாக்களை கொண்டவை. அவை செரிமான மண்டலம் சீராக செயல்படு வதற்கு உதவும். அத்துடன் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த பாக்டீரியாக்கள் சமநிலையுடன் உடல் எடையை ஒழுங்குபடுத்தவும், வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்கவும் உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. லாக்டோ பேசில்லஸ் பெர்மென்டம், லாக்டோபேசில்லஸ் அமைலோவோரஸ், லாக்டோபேசில்லஸ் கேஸ்ஸரி போன்ற லாக்டோபேசில்லஸ் குடும்பத்தை சேர்ந்த பாக்டீரியாக்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து கட்டுக்கோப்பான உடல்வாகுவை கட்டமைக்க உதவும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    எடை தூக்கும் பயிற்சி: இந்த பயிற்சியை மேற்கொள்வது தசைகளை வலுவாக்குவதற்கு வழிவகுக்கும். அதற்காக கடினமான எடைகளை தூக்கி பயிற்சி மேற்கொள்ள வேண்டியதில்லை. கைக்கு அடக்கமான உபகரணங்களை கொண்டே பயிற்சிகளை தொடரலாம். ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்வதும் பொருத் தமானது. இவை உள்ளுறுப்புகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கட்டுப்படுத்துவதற்கும் உதவும்.

    வெள்ளை சர்க்கரை: இது உடல் உறுப்புகளுக்கு கெடுதல் விளைவிக்கக்கூடியது. உடலில் சர்க்கரை அதிகமாக சேர்ந்தால் இதய நோய்கள், நீரிழிவு, உடல் பருமன், கல்லீரல் நோய்கள் ஏற்படலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் சர்க்கரையின் அளவை பாதியாக குறைத்துக்கொள்ள வேண்டும்.
    பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. கர்ப்ப கால முதுகுவலியைத் தவிர்க்க சில எளிய வழிகள் உள்ளன.
    பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி,  முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம். மேலும், கர்ப்ப காலத்தின்போது Relaxin என்ற ஹார்மோன் சுரப்பதாலும் முதுகு இடுப்பு தசைகள் மற்றும் ஜவ்வுகள் வலுவிழந்து வலி உண்டாகிறது. வயிறு பெரிதாக ஆக, கீழ் முதுகின் எலும்பு முன்னோக்கி வளைகிறது.

    இதனால் முதுகு எலும்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அதிக அழுத்தத்தின் காரணமாகவே முதுகுவலி வருகிறது. கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம்.

    * பின்னோக்கிச் சாய்ந்து நிற்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான பொசிஷன்.

    * உட்காரும்போது முதுகுக்கு சப்போர்ட் இருக்கும்படிப் பார்த்து உட்காருங்கள்

    *  உட்கார்ந்து இருக்கும்போது டவலை நான்காக மடித்து முதுகுக்கு பின் வைத்து உட்காருவதன்மூலம் முதுகுக்கு ஏற்படும் அழுத்தத்தை பெருமளவு குறைக்கலாம்.

    * தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.

    * பளுவான பொருட்களை உங்கள் உடலோடு அணைத்தபடி பிடித்துத் தூக்குங்கள்.

    * முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள்.

    * முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும்.

    * கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு என்கிற பெயரில் ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது நடப்பது முக்கியம்.
    கர்ப்ப காலத்தில் குழந்தையின் எலும்புகள் வளர்ச்சி அடைய கால்சியம் சத்து தேவைப்படுகின்றது. அது மட்டுமல்லாது, குழந்தையின் இருதயம், நரம்புகள், மற்றும் தசைகள் நல்ல கட்டமைப்பை பெற கால்சியம் உதவுகின்றது.
    கர்ப்ப காலத்தில் அவரவர் வயதிற்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளும் கால்சியம் அளவும் மாறும். இதனால், தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் ஆரோக்கியத்தோடு இருக்கலாம்.

    19 முதல் 50 வயது வரை இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த அளவை அவர்கள் குழந்தை பிறந்த பின்னரும் தொடர வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில், தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு கால்சியம் கிடைக்கும். ஆக இந்தக் காரணத்தால் கால்சியம் சத்து எடுத்துக் கொள்ளுதல் கட்டாயப்படுத்தப்படுகின்றது.

    நிறைய மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவை என்பதற்காக பல வகை வகையான மாத்திரைகளை உண்ண பரிந்துரைப்பார்கள். ஆனால் அவை நிச்சயம் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது, தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் சில ஒவ்வாமையை காலப் போக்கில் ஏற்படுத்தி விடும். ஆனால், இயற்கையாகவே உங்கள் உணவில் ஒரு சில முக்கிய பொருட்களை சேர்த்துக் கொள்ளும் போது, உங்கள் உடலுக்குத் தேவையான கால்சியம் கர்ப்ப காலத்தில் உங்களுக்கு கிடைத்து விடும். அந்த வகையில், உங்களுக்காக, கர்ப்ப காலத்தில் கால்சியம் அளவை அதிகரிக்க நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுகள், பின் வருமாறு.

    தினமும் சுமார் 400 மில்லி கிராம் தயிர்.
    சுமார் 400 மில்லி கிராம் அளவு பழ வகைகள்.
    300 மில்லி கிராம் கொழுப்பு நீக்கப்பட்ட பால்
    200 மில்லி கிராம் சாத்துக்குடி பழச்சாறு
    200 மில்லி கிராம் சால்மன் மீன் அல்லது கால்சியம் நிறைந்துள்ள மீன் வகைகள்
    100 கிராம் சர்க்கரை பூசணிக்காய்

    இவை மட்டுமல்லாது, உங்கள் உணவில் தினமும் கீரை, ப்ராக்கோலி, முளை கட்டிய பயிர் வகைகள் என்று ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை பசும் பாலை அருந்துவது நல்லது. கடைகளில் கிடைக்கும் பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில், அதிகம் கொழுப்பு நிறைந்த பாலையும் தவிர்ப்பது நல்லது. பருப்பு கீரை, வெந்தயக் கீரை, சுறா மீன், போன்ற உணவு வகைகளை உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.இவை உங்களது உடலின் தினசரி கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்யும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு கொழுப்பு சத்தை விட, அதிக கால்சியம் சத்துக்களே தேவை. மேலும் இது உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. அதனால் உடலில்
    அதிக கொழுப்பு சேரும் வாய்ப்பை குறைகின்றது. கர்ப்ப காலத்தில் போதுமான அளவு கால்சியம் சத்தை எடுத்துக் கொள்வதால் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

    கர்ப்பிணி பெண்கள் தேவையான அளவு கால்சியம் சத்தை எடுத்துக் கொள்வதால் உயர் இரத்த அழுத்த நோய் வராமல் காத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி பெண்களுக்கும், பிரசவ காலத்தில் தங்களது எலும்புகள் வலுவோடு இருக்க உதவும். இதனால் பிரசவ நேரத்தில் ஏற்படும் வலியையும் தாங்கிக் கொள்ளும் பலம் அவர்களுக்கு கிடைகின்றது.

    கால்சியம் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்லாது, குழந்தையின் இருதயம், நரம்புகள் மற்றும் எலும்புகள் முழுமையாக வளர்ச்சி பெறவும் உதவுகின்றது.
    இதனால், குழந்தையின் இருதயம் ஆரோக்கியமாக செயல்படுகின்றது. அதனால், கால்சியம் உங்கள் உணவில் கட்டாயம் தினசரி உணவில் இருக்க
    வேண்டும்.

    பிரசவத்திற்குப் பின் உங்கள் உடல் எடையைக் குறைக்க ஓமம் நீரைப் பயன்படுத்துவது ஒரு ஆரோக்கியமான முறையாகும். மேலும் பெண்கள் பிரசவத்திற்கு பின் ஓமம் நீர் குடித்தால் என்வென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    குழந்தைப் பேறு பெற்ற பெண்களுக்கும் ஒரு பொதுவான பிரச்சனை உள்ளது. அது உடல் எடை அதிகரிப்பது தான். குழந்தை பிறந்த பிறகும் ஒரு பெண் தான் அழகாகவும் நல்ல உடல்வாகோடும் தோன்ற வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. எனினும் அதிக பெண்கள் தங்களது உடலின் அழகிய மற்றும் ஒல்லியான உடல் தோற்றத்தைப் பிரசவத்திற்குப் பின் இழந்து விடுகிறார்கள். இது இயல்பே என்றாலும், பலர் அத்தகைய உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானமாக இருப்பார்கள். பிரசவத்திற்குப் பின் உங்கள் உடல் எடையைக் குறைக்க ஓமம் நீரைப் பயன்படுத்துவது ஒரு ஆரோக்கியமான முறையாகும். சத்தான உணவோடும், போதிய உடற்பயிற்சியோடும் நீங்கள் இந்த ஓமம் நீரைத் தினமும் பருகி வந்தால் உங்கள் உடல் எடை நிச்சயம் குறையும்.

    பிரசவத்திற்குப் பின் பெண்கள் ஓமம் நீரைப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இதனால் உங்கள் குழந்தைக்குப் போதுமான தாய்ப்பால் கொடுக்க முடியும். ஓமம் இயற்கையான வழியில் தாய்ப்பால் சுரப்பதற்கு உதவுகிறது.

    ஓமம் நீர் உங்கள் உடல் வலியைக் குறைக்க உதவும். குழந்தைப் பேறு பெற்ற பெண்கள் அதிக பட்சமான உடல் வலியாலும், மூட்டு வலியாலும் அவதிப்பட  நேரிடும்.எத்தனையோ மருந்து மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத வலி கூட ஓமம் நீருக்கு அடங்குகிறது என்பது மிகையல்ல.ஆக இந்த ஓமம் நீரைப் பருகி வந்தால் உங்கள் உடல் வலி மற்றும் மூட்டு வலி குறையும்.

    ஓமம் நீர் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் விரைவில் முழுத் தெம்பைப் பெறும்.கூடுதலாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதால் சளி, சுரம் போன்ற எந்த உபாதைகளும் தாய் மற்றும் சேய்க்கு வராது தடுக்கப்படுகின்றன.நீங்கள் தொற்று வியாதிகளிலிருந்து தப்பிக்க ஓமம் நீர் அருந்துவது ஒரு எளிய மட்டும் சிறந்த வழி!

    பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு வாய்வுப் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. ஆக இந்த ஓமம் நீரைப் பருகும் போது அத்தகைய வாய்வுப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வழி வகை செய்யும். ஏன் பெண்களுக்கு மட்டும் அல்ல, குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்ப்புத் தொல்லைகளும் இந்நீரால் நிவர்த்தி செய்யப்படுகிறது.

    பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பின் மலச் சிக்கல் அல்லது பேதி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்.இத்தகைய உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்க இந்த ஓமம் நீர் பெரிதும் உதவுகிறது.இவ்வகை  உடல்நிலை சீர்க் கேடுகளை நீங்கள் மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இந்த ஓமம் நீரைத் தினமும் பருகியே சரி செய்து விடலாம். இதை விட ஒரு நல்ல வீட்டு வைத்தியம் வேறு எதுவும் இருக்க முடியாது.

    பல பெண்களுக்குச் சீரற்ற மாதவிடாய் தொந்தரவு இருக்கிறது. குறிப்பாகப் பிரசவத்திற்குப் பின் பல பெண்களுக்கு மாதவிடாய் சரியாக ஏற்படுவதில்லை.இதற்காக அவர்கள் பல மாத்திரைகளை உண்டு பல்வேறு பக்க விளைவுகளுக்கு ஆளாகின்றனர்.அவர்கள் அனைவரும் இந்த ஓமம் நீரின் அருமை பெருமைகளைச் சற்று கூர்ந்து நோக்க வேண்டும்.சீரான மாதவிடாய் ஏற்பட  இந்த ஓமம் நீர்ப் பெரிதும் உதவுகிறது. இந்த ஓமம் நீரைத் தொடர்ந்து பருகி வர அனைத்து மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.

    சரியாகச் செரிமானம் ஆகாததால்,ஒரு சிலருக்குக் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சீராகச் செயல் படாமல் போக வாய்ப்புள்ளது.அந்த சமயத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சீராகச் செயல் பட வழி வகை செய்ய, இந்த ஓமம் நீர்ப் பெரிதும் உதவுகிறது. ஆக நீங்கள் இந்த நீரைத் தினமும் பருகி வரும் போது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் பூரணமாகக் குணமாகும்.
    நீங்கள் தொடர்ந்து உங்களது மாதவிலக்கு தொடங்கும் நாளைக் குறிப்பிட்டு வந்து, உங்களுக்கான சுழற்சி எத்தனை நாளுக்கானது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.
    எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது? எப்படி கரு உருவாகும்? அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

    பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.

    ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.

    இந்த 28 நாளில் முதல் 4  5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.

    இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம்.

    இந்த கருமுட்டை 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.

    சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள், தொடர்ந்து உங்களது மாதவிலக்கு வரும் தேதியை காலண்டரில் குறித்து வரலாம்.

    உதாரணத்துக்கு, உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி 30 நாட்கள் என்றால், 16-ம் நாள் கருமுட்டை வெளிவரும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதால் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை எந்த நாளிலோ ஒரு நாள் கருமுட்டை வெளிவரலாம் என யூகித்துக் கொள்ளலாம். இந்த நாட்களில் உடலுறவு வைத்துக்கொண்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.

    11-16ம் நாள் வரை என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், 11,12,13 நாட்கள் ஓரளவுக்கு கருத்தரிக்க வாய்ப்பு இருக்கும். 14,15,16 நாட்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கும்.

    இன்னும் துல்லியமாக தெரிய வேண்டும் என்றால், நீங்கள் தொடர்ந்து உங்களது மாதவிலக்கு தொடங்கும் நாளைக் குறிப்பிட்டு வந்து, உங்களுக்கான சுழற்சி எத்தனை நாளுக்கானது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    இப்படி கணக்கிடுவது மிகவும் சுலபம்தான். ஆனால், உங்களால் இப்படி கணக்கிட முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.

    உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் (Play Store), பீடியட் டிராக்கர் (Period tracker, ovoluting period) என்று போட்டு தேடினால், நிறைய ஆப்கள் வரும். அதில் ஒன்று தேர்ந்தெடுத்து உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

    உங்களுக்கு மாதவிலக்கு வரும் நாட்களை அதில் குறித்து வைத்தால் மட்டும் போதும். இதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.

    அந்த காலண்டரிலே உங்களுக்கான ஓவல்யூஷன் நாள் (கருமுட்டை வெளிவரும் நாள்) அதில் காண்பிக்கும். எந்த நாளில் கருத்தரிக்க அதிக வாய்ப்புகள், எந்த நாளில் கருத்தரிக்க குறைவான வாய்ப்புகள் என்று காண்பிக்கும்.

    அப்போது நீங்கள் உடலுறவு மேற்கொண்டால் கரு உருவாக வாய்ப்புகள் அதிகம்.
    கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் இந்த ஒரே அரிசி தருகிறது. கருப்பையை பலமாக்குவதோடு சுகப்பிரசவத்திற்கும் வழிவகுக்கிறது.
    ‘பெண்களுக்கான அரிசி’ என்று பூங்கார் அரிசியைச் சொல்லலாம். காரணம், பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கச் செய்வதில் பூங்காருக்கே முதலிடம்.

    கர்ப்பிணிகள், ஆறு மாதங்களுக்குப் பின், பூங்கார் அரிசி கஞ்சியைக் குடித்தால், சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். இது தவிர, குறைந்த அளவிலான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் தயாமின் அதிகமாக இந்த அரிசியில் உள்ளது.

    குழந்தைப் பேறுக்கு உதவும். முக்கியமாக, பாலுாட்டும் தாய், இந்த அரிசியை சாப்பிட்டால், இதில் உள்ள சத்துக்கள், தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கும் கிடைக்கும்.
    எந்த வகையான பாரம்பரிய அரிசியாக இருந்தாலும், இரண்டு முறை கழுவிய பின், எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி ஊறிய தண்ணீரிலேயே வேக வைக்கலாம். இது இன்னும், சுவையைக் கூட்டிக் கொடுக்கும்.

    பூங்கார் அரிசியை வேக வைத்து, சாதமாக சாப்பிடலாம் அல்லது அரிசியை ஊற வைத்து, நிழலில் உலர்த்தி ஒன்றிரண்டாக அரைத்து மாவாக்கி, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து, புட்டு செய்யலாம். நைசாக மாவாக அரைத்து, இடியாப்பம், பால் கொழுக்கட்டை செய்யலாம்.ருசியான கஞ்சியாகவும் வைக்கலாம்.
    பட்டை, சோம்பு, ஒரு ஆழாக்கு பூங்கார் அரிசிக்கு, ஏழு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, அதனுடன் சிறிதளவு பாசிப்பயிறு, தேவையான அளவு மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். பின், அதனுடன் சிறிதளவு வெங்காயத்தை ஒன்றிரண்டாக மிக்சியில் அரைத்து சேர்த்து, குக்கரில் வேக வைக்க வேண்டும். சோம்பு, ஏலக்காயை தனியாக தாளித்து, வேக வைத்த கஞ்சியுடன் சேர்க்கலாம்.

    இந்தக் கஞ்சியுடன், தேங்காய் பாலை சேர்த்து, கர்ப்பிணிகளும் பருகலாம். மூன்று ஆழாக்கு பூங்கார் அரிசி, ஒரு ஆழாக்கு கருப்பு உளுந்து, சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து, மாவாக ஆட்ட வேண்டும்.

    இதில் இட்லி, தோசை செய்து, தேங்காய் அல்லது புதினா சட்னியுடன் சாப்பிடலாம். இந்த அரிசியை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். குறிப்பாக, நோயுற்றவர்களும் கூட, இந்த அரிசி உணவை எடுத்துக் கொள்ளலாம். காலையில், இட்லி, தோசை, இடியாப்பம், கஞ்சி, புட்டு உள்ளிட்ட வற்றையும்; சாதமாக மதிய வேளையிலும்;
    இரவில், இட்லி, தோசை, இடியாப்பமாக செய்து சாப்பிடலாம். எந்த ஒரு பக்க விளைவையும் தராத அரிசி இது.

    இன்றைய சூழலில் கருத்தரிப்பு மையங்கள் பெருகிவிட்டன. ஆனால் அந்த காலத்தில் பெண்கள் பூப்பெய்த காலத்திலிருந்து பிரசவித்த காலம் வரை உடல் உறுதியுடன் இருக்க தினமும் உணவில் பூங்கார் அரிசியை உண்டு வந்தார்கள். அந்தளவுக்கு பெண் நலனை காக்கும் பொக்கிஷமாக இந்த அரிசி பயன்பட்டு வந்தது. எல்லா காலச்சூழ்நிலையிலும் வறண்ட நிலத்தில் விளையக்கூடிய நெல்லாக இருக்கும் பூங்கார் அரிசி பல வளமான சத்துக்களை பெண்களுக்கு வழங்கி வருகிறது.

    கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் இந்த ஒரே அரிசி தருகிறது. கருப்பையை பலமாக்குவதோடு சுகப்பிரசவத்திற்கும் வழிவகுக்கிறது. பிரசவித்த காலத்தில் ஆறு மாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரப்பதோடு குழந்தைக்கும் அத்தனை சத்துக்கள் கிடைக்கும்.
    ×