என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    பெண்களின் முகத்தில் லேசான குறைபாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். மூக்கு குத்துவதிலும் பெண்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.
    ‘பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி’ என்பது அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது. பெண்களின் முகத்தில் லேசான குறைபாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். நெற்றிக்கு பொட்டு, கண்களுக்கு மை, உதடுகளுக்கு லிப்ஸ்டிக்.. போன்று முகத்தில் ஒவ்வொரு உறுப்பையும் அழகு செய்யும் பெண்கள் அந்த வரிசையில் மூக்குக்கு மூக்குத்தி சூடிக்கொள்கிறார்கள்.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரம்பரிய திருமண ஆபரணங்களில் குறிப்பிடத்தக்கதாக மூக்குத்தி இருக்கிறது. மூக்குத்தியின் வரலாறு மிகவும் பழமையானது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேதங்களிலும் மூக்குத்திக்கு சிறப்பிடம் தரப்பட்டிருக்கிறது. இடது பக்கம் மூக்கு குத்தினால் அந்த பெண்களுக்கு மாதவிலக்கு கால வலியும், பிரசவ வலியும் குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    பெற்றோர், தாய்மாமன், கணவர் ஆகியோரிடமிருந்து மட்டுமே பெண்கள் மூக்குத்தி வாங்க வேண்டும் என்ற நிபந்தனை முன்காலத்தில் இருந்தது. வேறுயாரிடமாவது இருந்து மூக்குத்தியை பெற்றால் அது குற்றமாகவும் கருதப்பட்டது.

    மூக்கு குத்துவதிலும் பெண்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அனுபவம் வாய்ந்தவர்களிடமே மூக்கு குத்தவேண்டும். நாடி நரம்புகள் பாதிக்காத அளவுக்கு குத்துவது அவசியம். டாக்டர்களும் மூக்கு குத்திவிடுவதுண்டு. பியூட்டி பார்லர்களில் சென்று ‘ஷூட்’ செய்யும் பெண்கள், முதலிலே அவர்களுக்கு அதில் இருக்கும் அனுபவத்தைபற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.

    தங்கத்திலான மூக்குத்தியே சிறந்தது. வேறு உலோகங்களில் செய்யப்பட்ட மூக்குத்திகள் பெரும்பாலானவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். மூக்குத்தி அணிந்ததும் அந்த பகுதியில் ஏதாவது அலர்ஜி ஏற்பட்டால் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

    மூக்கு குத்தியதும் பெரும்பாலானவர்கள் அவ்வப்போது அந்த பகுதியை தொட்டுப்பார்ப்பார்கள். தொடுவது தவறு. தொட்டால் அந்த காயம் ஆற தாமதமாகும். காயம் முழுவதும் ஆறுவதற்கு முன்பு மூக்குத்தியை கழற்றக்கூடாது. கழற்றினால் அந்த துவாரம் விரைந்து மூடிவிடும்.

    மூக்குத்தி அணிபவர்கள் குளித்துவிட்டு தலை துவட்டும்போதும், கூந்தலை சீவும்போதும் கவனம் கொள்ளவேண்டும். துணியோ, முடியோ மூக்குத்தியில் சிக்கிக்கொள்ளும். அது வலி நிறைந்த அவஸ்தையாகிவிடும். மூக்குத்தி அணிந்த காயம் ஆறும்வரை மல்லாந்து படுத்து தூங்கவேண்டும். இல்லாவிட்டால் தலையணை விரிப்பு போன்றவைகளில் மூக்குத்தி பட்டு வலிதோன்றும்.

    மூக்குத்தி பற்றி நினைக்கும்போது பிரபல பின்னணி பாடகி உஷா உதூப் நினைவுக்கு வருவார். அவர் மேடை நிகழ்ச்சிகளில் பாடும்போது பெரிய மூக்குத்தி அணிந்திருப்பார். “நான் மூக்குத்தி அணிந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. என் மகள் அஞ்சலி வயிற்றில் இருக்கும்போது நானே ஆசைப்பட்டு குத்திக்கொண்டேன். எனது குடும்பத்தில் நான் மட்டும் மூக்கு குத்தியிருக்கிறேன். தமிழ்நாட்டில் பிரபலமான 8 கற்களை கொண்ட முக்கோண வடிவிலான ‘போஸரி’ மூக்குத்தியும் வைர மூக்குத்தியும் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்கிறார்.
    நெல்லிக்காய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர் கால்களை வலிமையடையச் செய்து, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்டும். இப்போது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
    நெல்லிக்காய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர் கால்களை வலிமையடையச் செய்து, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்டும். அதற்கு நெல்லிக்காயைக் கொண்டு ஒருசில ஹேர் பேக்குகளைப் போட வேண்டும். சரி, இப்போது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

    3 நெல்லிக்காயை துண்டுகளாக்கி சாறு எடுத்து, அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 1 முறை முடிக்கு ஹேர் பேக் போட்டு வந்தால், முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

    நெல்லிக்காயை துண்டுகளாக்கி, அதனை சூரிய வெளிச்சத்தில் உலர வைத்து, பின் அதனை பொடி செய்து, மற்ற பொருட்களுடன் சேர்த்து வாரம் ஒரு முறை ஹேர் பேக் போட்டால், முடி நன்கு வளரும்.

    நெல்லிக்காயை சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலர வைத்து, பின் 1/2 கப் தேங்காய் எண்ணெயில் போட்டு, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடி சேர்த்து குறைவான தீயில், எண்ணெய் ப்ரௌன் நிறத்தில் மாறும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பின் அதனை குளிர வைத்து, காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றினால், நெல்லிக்காய் எண்ணெய் ரெடி!!!

    வாரம் ஒருமுறை நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். அதிலும் இதனை இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் அலச வேண்டும்.

    தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்க நினைப்போர் இந்த ஹேர்பேக்கினை நிச்சயம் ட்ரை செய்யவும்.

    தேவையானவை:

    நெல்லிக்காய்– 3
    வெந்தயம்- 1 ஸ்பூன்
    தயிர்- கால் கல்

    செய்முறை:

    நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து இதனை வெயிலில் போட்டு நன்கு காயவைக்கவும்.  மேலும் வெந்தயத்தினை தயிரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வு கட்டுக்குள் வரும்.
    பெண்கள் அணியும் உடைகளில் சேலைகளுக்கு எப்பொழுதுமே ஒரு தனி மதிப்பு உண்டு. சேலைகளில் புதுவரவானது வந்து கொண்டேதான் இருக்கின்றது.
    பெண்கள் அணியும் உடைகளில் சேலைகளுக்கு எப்பொழுதுமே ஒரு தனி மதிப்பு உண்டு. சேலைகளில் புதுவரவானது வந்து கொண்டேதான் இருக்கின்றது. அதுவும், பண்டிகைக் காலம் என்றால் புது வரவுக்கு கேட்கவே வேண்டாம்.

    முந்தானை இல்லாமல் உடல் முழுவதும் பூ டிசைன்களுடன் வரும் க்ரஷ் ஷிஃபான் சேலைகள் மிகவும் மென்மையான வண்ணங்களில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் வந்துள்ளன. இளமஞ்சள், இளம் பச்சை, இளஞ்சிவப்பு, இளநீலம் என அதன் வண்ணமும் அதில் வந்திருக்கும் டிசைனும் க்ரஷ் சேலைகளில் பார்க்கும் பொழுது மென்மையான பூக்கள் நிறைந்த தோட்டத்தில் உலவுவது போன்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன.

    பல்லுவில் வித்தியாசமான டிஜிட்டல் டிசைன்களுடன் வழவழப்புத் தன்மையுடன் பளபளப்பாக வந்திருக்கும் புது வரவே ஷேட்டின் ஷில்க் சேலைகளாகும். இவற்றின் விலை ஆயிரம் ரூபாய்க்குள் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

    ஆறு இன்ச் பார்டர் முதல் பனிரெண்டு இன்ச் பார்டர்வரை பட்டுச் சேலைக்கே சவால் விடும் அழகுடன் வந்திருப்பவை கோரா மஸ்லின் சேலைகள் என்று சொல்லலாம். அழகான உடல் வண்ணத்திற்கு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பார்டரும், பல்லுவும் இருக்க அதில் வேறு நிறத்தில் பார்டரின் கீழே பைப்பிங் பார்டர் வருவது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது. இந்தச் சேலைகளில் வரும் அனைத்து டிசைன்களுமே அற்புதமாக உள்ளன.

    எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடன் வந்திருக்கும் லினன் சேலைகள் முந்தியில் குஞ்சம் வைத்து வந்திருப்பவை. உடலில் சின்ன எம்பிராய்டரி டிசைன், பார்டரில் மட்டும் எம்பிராய்டரி டிசைன், ஜரிகை பார்டர் எனப் பலவிதமாக மனம் மயக்கும்படி வந்துள்ளன. சில்வர் லைன் பார்டர், வொர்லி எம்பிராய்டரி, பல்லு முழுவதும் எம்பிராய்டரி, மிரர் வேலைப்பாடு என்று அட்டகாசமாய் வந்திருக்கும் இந்தச் சேலைகளின் விலை ஆயிரத்து ஐநூறுக்குள்தான் என்றால் ஆச்சரியத்தில் நம் புருவத்தை உயர்த்தாமல் இருக்க முடியாது. வொர்லி பிரிண்ட் கேள்விப்பட்டிருப்போம். அதை அப்படியே எம்பிராய்டரியில் கொண்டு வந்திருப்பது ஒரு புது முயற்சியாக உள்ளது.

    புடவை முழுவதும் ஒரே வண்ணத்திலிருக்க புடவையின் மேல்புறம் சிறிய பார்டர், கீழ்புறம் பெரிய பார்டர், பல்லு முழுவதும் டிசைன் மட்டுமல்லாமல் உடல் முழுவதும் ஜரிகை வேலைப்பாடுகளுடன் வரும் செமி ஆர்ட் பனாரஸ் சேலைகளானது பட்டுப் புடவைகளுடன் போட்டி போடுவதோடு ஆயிரம் ரூபாயில் இவ்வளவு அழகான சேலைகளா? என்று வியக்க வைக்கின்றது. அடர் சிவப்பு, அடர் பச்சை, அடர் நீலம், வாடாமல்லி மற்றும் மஜந்தா என்று இதன் வண்ணங்களுக்கேற்ப வரும் பார்டரும், பல்லுவும் நம்மை சுண்டி இழுக்கின்றன. இதுபோன்ற சேலைகளில் சுடிதார், லாங்கவுன் போன்றவை தைத்துக் கொள்வதற்கு ஏற்றாற்போல் இதன் டிசைன்கள் உள்ளன. இதுபோன்ற சேலைகள் பரிசளிக்க ஏற்றதாகவும் உள்ளன. சில்வர் ஜரிகை மட்டுமல்லாமல் கோல்டன் ஜரிகையுடன் கான்ட்ராஸ்ட் பல்லு மற்றும் பிளவுஸ்களுடன் மிகவும் அற்புதமாக வந்துள்ளன.

    பிளெயின் சேலைகளுக்கு டிஜிட்டல் பிரிண்டட் பிளவுஸ்கள். அத்துடன் காதுக்கு, கழுத்துக்கு அணிந்துகொள்ள மேட்சிங்கான பீட்ஸ்களில் செய்யப்பட்ட நகைகள் ஷேட்டின் துணியில் ஷைனிங்குடன் வரும் இவ்வகைச் சேலைகளின் விலையோ வெறும் ஐந்நூறு ரூபாய் மட்டுமே.

    இக்கத் மற்றும் வொர்லி பிரிண்ட்டுகளுடன் வரும் பேப்பர் சில்க் புடவைகளை ட்ரை கிளீன் செய்ய வேண்டிய அவசியமில்லை. டபுள் ஷேட், சிங்கிள் ஷேட்களுடன் எடை குறைவாக வரும் இவ்வகை சேலைகளை நாம் அணிந்தால் நம்மையும் எடை குறைவானவராகக் காட்டுமோ? என்று எண்ணத் தோன்றுகின்றது.

    அலுவலகப் பயன்பாடு மற்றும் தினசரி உடுத்துவதற்கும் நேர்த்தியாக இருப்பவை என்றால் அவை செமிகாதி சில்க் சேலைகளாகும். இவற்றில் ஏராளமான டிசைன்கள் உள்ளன. செமி காதி காட்டன் சேலைகளிலும் கோபுரங்கள், கட்டங்கள் என அசத்தலான டிசைன்கள் நம்மை மயக்கும் விதமாக உள்ளன. இவற்றின் விலையோ ஐநூறு ரூபாய்க்குள் என்றால் நம்பவே முடியவில்லை.

    சனா சில்க் சேலைகளுக்கு ப்ரோகேட் பிளவுஸ்கள் மற்றும் அதற்கு ஏற்றாற் போல் அசத்தலான நகைகளும் அத்துடன் இணைந்து விற்பனைக்கு வந்துள்ளன. பிளெயின் வண்ண சேலைக்கு கான்ட்ராஸ்ட் பைப்பிங் பார்டர் மற்றும் கான்ட்ராஸ்ட் நிறத்திலேயே இரண்டு விதமான வேலைப்பாடுகளுடன் வரும் பிளவுஸ்கள் என்று கலக்கலாக வந்திருக்கின்றன சனா சில்க் சேலைகள். டபுள் பிளவுஸ்களில் அதிக வேலைப்பாடு, சிம்பிள் வேலைப்பாடு என இரண்டு விதமாகக் கிடைக்கும் இவ்வகைச் சேலைகளின் விலையும் வேறுபடுகின்றது.

    சேலைத் துணியிலேயே, க்ளட்ச்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. ஆமாம், இதுபோன்ற சேலைகள் இப்பொழுது புதுவரவாக வந்துள்ளன. இனிமேல், கைப்பைகளை துணிகளுக்கு ஏற்றாற்போல் தேடி அலைந்து வாங்க வேண்டிய அவசியமில்லை.

    செட்டிநாடு காட்டன் புடவைகளிலும் பிளையின் வித் பார்டர், கட்டங்கள் வித் பார்டர், ஜரி பார்டர், நூல் பார்டர் என அனைத்து வயதினரும், அணிவதற்கு ஏற்றாற்போல் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டு புதுவரவாக வந்துள்ளன. புட்டாக்கள், ப்ளாக் பிரிண்ட்டுகள், ஸ்கிரீன் பிரிண்ட்டுகள் என சிங்கிள் ஷேட் மற்றும் டபுள் ஷேடுகளில் அழகாக வந்திருக்கின்றன.

    கைகளால் செய்யப்படும் ப்ளாக் பிரிண்ட்டுகளில் பெரிய பெரிய வண்ணத்துப் பூச்சி, பூக்கள் என்று அருமையான வண்ணத் தோட்டமாக வந்திருக்கின்றன. மல் மல் காட்டன் சேலைகள். இதில் ஸ்கிரீன் பிரிண்ட்டுகளும் உள்ளன. பாம்பாம்கள் ஓரத்தில் இணைக்கப்பட்டு வரும் இந்தச் சேலைகள் மிகவும் மென்மையாக அணிவதற்கு ஏற்றதாக உள்ளன. தனித்துவமான டிசைன்களுடன் வரும் இவ்வகைச் சேலைகள் அலுவலகப் பயன்பாடு மற்றும் பிரயாணங்களில் அணிவதற்கு மிகவும் பொருத்தமாகவும் வசதியாகவும் உள்ளன.
    இப்பொழுது பெண்களிடையே பெரிதும் பிரபலமாகி வருவது சில்வர் நிற ஜரிகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் பட்டுச்சேலைகளாகும். இதுபோன்று சில்வர் நிறத்தில் வரும் ஜரிகைகள் சேலைக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.
    பட்டுச் சேலைகளில் எப்பொழுதும் தங்கநிற ஜரிகைகளில் அருமையான பார்டர்களும், அட்டகாசமான பல்லுவும் இருப்பதைப் பார்க்க முடியும். இப்பொழுது பெண்களிடையே பெரிதும் பிரபலமாகி வருவது சில்வர் நிற ஜரிகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் பட்டுச்சேலைகளாகும். இதுபோன்று சில்வர் நிறத்தில் வரும் ஜரிகைகள் சேலைக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.

    * பிளையின் நிற மருதாணிப் பச்சையில் சில்வர் நிற ஜரிகையுடன் ஒருபுறம் மட்டும் பார்டர் இருக்க, பல்லு முழுவதும் சில்வர் நிற ஜரிகையால் நெய்யப்பட்டிருப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. சில்வர் நிற ஜரிகைகளுக்கு ஏற்றார் போல் உடல் நிறத்தை சேலையில் தேர்ந்தெடுத்து நெய்கிறார்கள் என்றே சொல்லலாம். இதுபோல் உடல் பிளையின் வண்ணத்தில் இருக்க பார்டரும், பல்லுவும் சில்வர் ஜரிகையுடன் இருப்பது மிடுக்கான தோற்றத்தைத் தருகின்றது.

    * உடல் முழுவதும் ருத்திராட்ச டிசைனானது சில்வர் ஜரிகையால் நெய்யப்பட்டு, பல்லுவும் உடல் வண்ணத்திலேயே சில்வர் ஜரிகையால் நெய்யப்பட்டிருக்கும். இந்தச் சேலைகளுக்கு உதாரணமாக உடல் வண்ணம் பச்சை நிறத்தில் இருந்தால் அதற்கு மாறுபட்ட வண்ணமான மஜந்தா நிறத்தில் பைப்பிங் பார்டருடன் இருப்பது அணிந்து கொள்பவருக்கு நேர்த்தியான தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். பிளவுசானது பைப்பிங் பார்டர் நிறத்திலேயே புடவையுடன் இணைக்கப் பட்டிருக்கின்றது.

    * பிங்கிஷ் ஆரஞ்சு நிறச் சேலைக்கு பீச் சில்வர் டிஷ்யுவுடன் மீனாகாரி வேலைப்பாடு செய்யப்பட்டு வரும் சேலையின் அழகை என்னவென்று வர்ணிப்பது. இது போன்ற சேலைகள் அணிவதற்கு இலகுவாகவும், நிற பேதமில்லாமல் உடுத்துவதற்கு ஏற்றதாகவும் இருக்கின்றது.

    * சேலையின் மேற்புறம் சில்வர் ஜரிகையுடன் பெரிய பார்டரும், கீழ்புறம் தங்கநிற ஜரிகை பார்டர். அதன் கீழே மேல்புறம் இருப்பதைப் போன்ற பெரிய சில்வர் ஜரிகை பார்டருடன் உடல் முழுவதும் குறுக்குவாட்டில் கோடுகள் சில்வர் ஜரிகையால் டிசைன் செய்யப்பட்ட சேலைகள் வித்தியாசமாகவும், புது வரவாகவும் உள்ளன. எளிமையான விழா மட்டுமல்லாமல் எந்த விழாவிற்கு நீங்கள் இந்தச் சேலையைக் கட்டிக்கொண்டு சென்றாலும் சபையின் நாயகியாக நீங்கள் இருப்பீர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

    * தங்கநிற ஜரிகையில் வைர ஊசியுடன் பட்டுச்சேலைகளைப் பார்த்திருக்கிறோம். அதேபோல் சில்வர் நிற ஜரிகையில் வைரஊசியுடன் நெய்யப்படும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். சாம்பல் நிற உடல் பகுதியில் சில்வர் ஜரிகை வைரஊசி டிசைன் அதற்கு காண்ட்ராஸ்டாக வாடாமல்லி, மஜந்தா, அடர்த்தியான இலைப்பச்சை அல்லது அடர்த்தியான நீலநிற கையகல பிளையின் பார்டர் கற்பனை செய்து பாருங்கள். பல்லுவும் பார்டர் நிறத்தில் டெம்பிள் பார்டராக இருந்தால் அதன் அழகைப்பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்.

    * அடர்த்தியான நீலம், பச்சை, மஜந்தா போன்ற உடல் பகுதி இருக்கும் சேலைகளின் நடுவில் ஆங்காங்கே சில்வர்நிற ஜரிகையில் மாங்காய் மற்றும் புட்டாக்களை டிசைன் செய்திருக்கிறார்கள். அதன் பார்டர் மற்றும் பல்லுவிற்கு வெளிர் சந்தன நிறத்தில் சில்வர் ஜரிகை கோடுகளுடன் மெல்லிய பைப்பிங் பார்டர்களுடன் வரும் சேலைகள் அனைத்துவித விழாக்களுக்கும் உடுத்திக் கொள்ள ஏற்றதாக உள்ளது.

    * சில்வர் ஜரிகைகளுடன் பார்டரே இல்லாமல் வரும் பட்டுப்புடகைகளும் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் அணிந்தாலும் மிக அழகிய தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். இளமஞ்சள், இளஞ்சிவப்பு, இளம்பச்சை போன்ற வண்ணங்களில் சில்வர் ஜரிகையில் மீனாகாரி பூ வேலைப்பாடுகளுடன் இடையில் சில்வர்ஜரி புட்டாக்களும் வந்திருப்பது அட்டகாசமாக உள்ளது. பல்லவின் காண்ட்ராஸ்ட் நிறமானது பூக்களின் நடுவில் வருவதுபோல் வடிவமைத்திருப்பது சேலைக்கு மேலும் அழகைக் கூட்டுகின்றது என்றே சொல்லலாம்.

    * உடல்பகுதி, பல்லு என அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்க சிறிய கான்ட்ராஸ்ட் பைப்பிங் பார்டரானது சேலையின் அழகை மேலும் கூட்டுகின்றது எனலாம். பைப்பிங் பார்டரின் மேலே சேலையின் கீழ்ப்புறம் மட்டும் யானை, குதிரை, மான், அன்னப்பறவை மற்றும் மயில் போன்றவை சில்வர் ஜரிகையில் நெய்திருப்பது பாரம்பரிய டிசைனை சேலையில் எதிர்பார்ப்பவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். பல்லுவிலும் பாரம்பரிய டிசைன்களையோ அல்லது புட்டாக்களையோ சில்வர் ஜரிகையில் டிசைன் செய்திருப்பது மிகவும் அசத்தலாக உள்ளது. கான்ட்ராஸ்ட் பைப்பிங் பார்டர் நிறத்திலேயே பிளையின் பிளவுஸ்கள் இந்தச் சேலைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
    இந்த காலத்து டிரெண்டிங் உடை எது?, எங்கு வாங்கலாம் போன்ற பேஷன் உடைகள் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும், ஒருசில செயலிகள் வழங்குகின்றன. அப்படி இளைஞர்-இளம்பெண்களின் பேஷன் தாகத்தை தீர்க்கக்கூடிய செயலிகளை பார்க்கலாம்.
    பேஷன் சம்பந்தமான தகவல்களும், ஆலோசனைகளும் இப்போது அப்ளிகேஷன்களிலேயே கிடைக்கிறது. உங்களுக்கு எந்த மாதிரியான உடைகள் சிறப்பாக இருக்கும்?, எந்த நிறத்திலான உடை பொருந்தும், இந்த காலத்து டிரெண்டிங் உடை எது?, எங்கு வாங்கலாம் போன்ற பேஷன் உடைகள் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும், ஒருசில செயலிகள் வழங்குகின்றன. அப்படி இளைஞர்-இளம்பெண்களின் பேஷன் தாகத்தை  தீர்க்கக்கூடிய செயலிகளை பார்க்கலாம்.

    பேஷன் குளோசெட் (Fashion closet)

    இந்த செயலியை ஓபன் செய்து, தனித்தனியாக தலைப்புகளில் சேமிக்கப்பட்டுள்ள உடைகளில் பிடித்தவற்றை தேர்வுசெய்து, அதன் பின்புல நிறத்தை மாற்றி மேட்சிங் பார்க்கலாம். பேஸ்புக், டுவிட்டர், இ-மெயில் என தோழிகளுடன் பகிர்ந்து கருத்துக் கேட்கும் வசதியும் உள்ளது.

    வார்டுரோப் அசிஸ்டெண்ட் (wardrobe assistant)

    திறமையான பேஷன் டிசைனரை, நம்முடன் வைத்திருக்கும் உணர்வை இந்த செயலி அளிக்கிறது. ஏனெனில், இது உங்கள் ஆடைகளை வகைப்படுத்துவதோடு மட்டு மல்லாமல், காலநிலைக்கு ஏற்ற உடை எது என்று தினமும் தெரிவிக்கும். மேலும் உலகளவிலான டிரெண்டிங் ஆடைகள் மற்றும் டிசைனர்களின் அப்டேட்டுகளையும் அறியலாம். இதில் ஆடைகளை நல்ல விலைக்கு விற்கும் வசதியும் உள்ளது. அதாவது, நீங்கள் ஓரிருமுறை பயன்படுத்திய அல்லது வாங்கியபின் அளவு, நிறம் போன்றவை பொருந் தாததால் மீண்டும் விற்க நினைக்கும் ஆடைகளை, இந்த ‘ஆப்’பின் வாடிக்கை யாளர்களிடையே விற்கலாம். நீங்களும் அதுபோல் மற்றவர்களிடமிருந்து வாங்கலாம்.

    ஷிசிமோ(Chicisimo)

    நாளைக்கு கல்லூரியில்/ அலுவலகத்தில் முக்கியமான நிகழ்ச்சி. டிரெண்டியான உடையை எப்படி கண்டுபிடிப்பது? எங்கு வாங்குவது என குழப்பமா? விடுங்கள் கவலையை! பெண்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப், இதை பயன்படுத்தும் லட்சக்கணக்கான பெண்களிடமிருந்து உங்களுக்கு பல்வேறு பேஷன் ஐடியாக்களை பெற்றுத் தரும். நீங்களும் உங்கள் ஆடை பரிந்துரைகள் மற்றும் ஆல்பங்களை மற்ற பெண்களுடன் பகிர்ந்து, கருத்து பெறலாம்!

    ஸ்மார்ட் குளோசட்(Smart Closet)

    ஆடைகளை மேட்ச் செய்து பார்ப்பது மட்டு மல்லாமல், கல்ச்சுரல்ஸ், செமினார், அவுட்டிங் என எந்தெந்த ஆடையை எப்போது அணியலாம் என்று இந்த ‘ஆப்’பில் உள்ள பிரத்யேகக் கேலண்டரில் குறித்துவைத்துக்கொள்ளலாம்; நண்பர்களுக்கும் பகிரலாம்.

    பாலிவோர்(Polyvore)

    இந்த ஆப், ஆடைகளுக்கான ஒரு சமூக வலைத்தளம்போல செயல்படுகிறது. அதாவது இதில் உங்கள் ஆடைகளுக்கான பரிந்துரைகள் கிடைக்கப்பெறுவதோடு, சந்தையில் உள்ள டிரெண்டிங் ஆடைகளை பார்க்கலாம், வாங்கலாம் மற்றும் பிறரின் கருத்துகளையும் பெறலாம். மேலும், இதில் உள்ள ஆயிரக்கணக்கான பிராண்டட் மற்றும் டிசைனர் ஆடைகளில் உங்களுக்கு பிடித்தவற்றை தேர்வு செய்து, பிறகு வாங்குவதற்கென அந்த புகைப்படங்களை சேமித்துவைக்கலாம்.
    எப்பொழுதுமே இந்திய-மேற்கத்திய இணைவுடன் வரும் ஆடைகள் குறிப்பாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு நல்ல வரவேற்பையும் பெறுகின்றன. இவ்வகை குர்திகளை வேலைக்கு செல்லும் பெண்களும், கல்லூரிக்கு செல்லும் பெண்களும் பெரிதும் விரும்பி அணிகிறார்கள்.
    எப்பொழுதுமே இந்திய-மேற்கத்திய இணைவுடன் வரும் ஆடைகள் குறிப்பாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு நல்ல வரவேற்பையும் பெறுகின்றன. எம்பிராய்டரி ட்யூனிக்ஸ் என்பது தனித்துவமான மேற்கத்திய அமைப்புடன் விதவிதமான இந்திய எம்பிராய்டரி டிசைன்களை ஆடைகளில் கொண்டுவரும் அதாவது, சுருக்கமாக சொல்வதென்றால் எம்பிராய்டரி செய்யப்பட்ட குர்த்திகள், டாப்புகள் என்றும் சொல்லலாம். இவ்வகை குர்திகளை வேலைக்கு செல்லும் பெண்களும், கல்லூரிக்கு செல்லும் பெண்களும் பெரிதும் விரும்பி அணிகிறார்கள்.

    பழமையான இந்திய கலைகளில் ஒன்றான இந்த எம்பிராய்டரி வேலைப்படானது இந்தியாவின் பல பகுதிகளிலும் அங்கு வாழும் மக்களால் அவர்களின் தனிச்சிறப்புகளோடு செய்யப்பட்டு வருகிறது. எம்பிராய்டரி செய்வதற்கென்றே தனியாக இருக்கும் விதவிதமான நூல்களை, டிசைனுக்கு ஏற்றாற்போல் துணிகளில் உபயோகித்து தத்ரூபமான உருவங்களை கண்ணை கவரும் விதத்தில் கொண்டு வருவது என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும்.

    எம்பிராய்டரி ட்யூனிக் மேலாடைகள் (டாப்ஸ்)

    எம்பிராய்டரியானது பொதுவாக டாப்புகளில் கழுத்திற்கு அருகிலிருந்து மெல்லியதாகவோ அல்லது பெரிய பேட்ச் வேலை போல் மார்பு முழுவதும் மறைப்பது போலவோ பரவியிருக்கும். சில குர்த்திகளில் கழுத்திற்கு மட்டும் எம்பிராய்டரி செய்யப்பட்டு இருக்கும். இன்னும் சில குர்த்திகளில் முக்கால் கைகளில் கை முடியும் இடங்கள் மற்றும் ஹெம் லைன்களிலும் இரண்டு விரல் அகலத்திற்கு செய்யப்பட்டிருக்கும். எம்பிராய்டரி டிசைன்கள் கம்பீரமான தோற்றத்தை தருவதாக இருக்கும். அதிக முறையான (பார்மல்) அல்லது ஆடம்பரமான ஆடைகளிலும் கூட முழுத்துணியிலும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.

    சிக்கன்காரி, காந்த்தா, பூல்காரி, ஜர்தோசி, ராஜஸ்தானி பேட்ச் வேலைப்பாடு, கஷிதாகாரி, ஆரி, கோட்டா, கசூத்தி, கட்ச் அல்லது அரிபாரத், சிந்தி தையல், கஷ்மீரி, முகேஷ், பிச்வாய், பிப்லி, ராபரி சிக்வின், குரோஷா மற்றும் தோடா என பலவகையான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் துணிகளில் செய்யப்படுகின்றன.

    எளிமையான எம்பிராய்டரி முதல் மிகவும் கடினமான எம்பிராய்டரிகளுடன் குர்த்திகளும், டாப்புகளும் கிடைக்கின்றன. தினசரி அணிந்து கொள்ளக்கூடிய ட்யூனிக்குகள், பார்ட்டி மற்றும் விழாக்களுக்கு அணிந்து கொள்ளக்கூடிய ட்யூனிக்குகள் என அவற்றில் செய்யப்பட்டிருக்கும் எம்பிராயிடரி வேலைப்பாட்டை பொறுத்து வகைப்படுத்தி கொள்ளலாம்.

    எம்பிராய்டரி வகைகள்

    * ரேஷம் எம்பிராய்டரி, சீஸா வேலைப்பாடு, மணி வேலைப்பாடு, லேஸ் டிசைன்கள் மற்றும் வெல்வட் பேட்ச் வேலைப்பாடுகளும் ட்யூனிக்குகளில் செய்யப்படுகின்றன.

    * பிராந்திய எம்பிராய்டரி பாங்குகளான ஆரி, பூட்டி, கசூத்தி, கஷின்டா மற்றும் பூல்காரி எம்பிராய்டரிகளால் பெரும்பாலும் ட்யூனிக்குகள் அலங்கரிக்கப்படுகின்றன.

    * இதுபோன்ற மிக நுண்ணிய மற்றும் சிக்கலான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் ட்யூனிக் டாப்புகளுக்கு கூடுதல் அழகை தருகின்றன.

    * டிசைனர் அல்லது பார்ட்டிக்கு அணியக்கூடிய ட்யூனிக்குகளில் ஒரு தனிப்பட்ட மாதிரியை உருவாக்க வேறுபட்ட நுட்பங்களை இணைத்தும் எம்பிராய்டரி செய்யப்படுகின்றது. இவ்வாறு செய்யப்படும் வேலைப்பாடுகள் தனித்துவத்துடனும், கண்களை கொள்ளை கொள்வதாகவும் இருக்கின்றன.

    * பட்டு நூல்களினால் செய்யப்படும் பூ வேலைப்பாடுகளின் உள்ளே அல்லது சீஸாக்களை கொண்டு செய்யப்படும் பேட்ச் பார்டர் மாதிரிகளுக்கு சீக்வின்ஸ் எம்பிராய்டரியை பயன்படுத்துகிறார்கள்.

    * பலவிதமான துணிகளில் எம்பிராய்டரி செய்யப்பட்ட டியூனிக்குகள் இருந்தாலும் பொதுவாகவே நீடித்து உழைக்கக்கூடிய துணிகளிலேயே இதுபோன்ற வேலைப்பாடுகளை செய்கிறார்கள். காட்டன், பலவகையான பட்டு, ஜியார்ஜெட், ஷேட்டின் மற்றும் கிரேப் வகை துணிகளில் எம்பிராய்டரி செய்யப்பட் டியூனிக்குகளை பரவலாக பார்க்க முடியும். மிகவும் மெல்லிய துணிகளில் பெரும்பாலும் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்யப்படுவதில்லை.

    * காட்டன் மற்றும் ஆர்ட் சில்க் துணிகளில் தயாரிக்கப்படும் எம்பிராய்டர்ட் ட்யூனிக்குகள் தினசரி அணிவதற்கும், ஜியார்ஜெட், கிரேப், டியூபியன் சில்க் மற்றும் டஸ்சர் சில்க் துணிகளில் தயாரிக்கப்படும் எம்பிராய்டர்டு ட்யூனிக்குகள் பார்ட்டிகள் மற்றும் வெளியில் அணிந்து செல்வதற்கும் ஏற்றவையாகும்.
    ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும். பெண்கள் ஆடையை தேர்ந்தெடுக்கும் போது ஆடையின் நிறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    ஆரோக்கியம், தோரணை மற்றும் சுயமரியாதை ஆகியனவற்றிற்கு தகுந்த ஆடைகள் தேவைப்படுகிறது. சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்பவரை விட வரவு செலவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர் பொதுவாக மிகுந்த மகிழ்வோடு, திருப்திகரமாகவும் வாழ்வார். நமது ஆசை மற்றும் தேவைகள், எல்லைகள் அற்றவை என்பது உண்மை.

    ஒப்பிடுகையில் நமது தேவைகள் மிகவும் குறைவே. குடும்ப வாழ்வில் தேவைகளை ஒழுங்காக்குவது இன்றியமையாதது மற்றும் முக்கியமானது. ஒருவரது ஆளுமை வளர்ச்சிக்கு, அனைத்து தேவைகளையும் நிறைவாக்குவது என்பது விரும்பத்தக்கதல்ல. விருப்பங்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றிக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும்.

    ஆடைக்கான துணியை தேர்ந்தெடுக்கும் போது குழந்தையின் வயதை மனதில் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு, மென்மையான வெளிர் நிறத்தில் அழகான, கச்சிதமான அச்சுக்கள் உள்ள துணியை தேர்ந்தெடுக்கலாம். பின் குழந்தைப் பருவ நிலையை அடையும் போது, ஆண் குழந்தைகள் நீலம், சாம்பல் நிறத்துடன் கூடிய நீலம் மற்றும் பிரவுன் போன்ற ஆண்மை தன்மை வாய்ந்த நிறங்களை விரும்புவர்.

    பிங்க், பச்சை மற்றும் சிவப்பு போன்ற பெண்மைத்தன்மை வாய்ந்த நிறங்களை உடைய உடைகளை பெண் குழந்தைகள் விரும்பி அணிவர். சில மென்மையான துணிகளை வளரிளம் பெண்களுக்கு தேர்வு செய்யலாம். வளரிளம் ஆண்களுக்கு சற்று கடினமான துணிகள் உகந்தவை. உடையின் ஸ்டைலும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப மாறுகின்றன. கிலைன் உடைகள் சிறு குழந்தைகளுக்கு பொருத்தமானவை. அதிக அளவு சுருக்கங்களுடன் கூடிய பிராக்குகள் போன்ற உடைகள் பெண் குழந்தைகளுக்கு உகந்தவை.

    இது போன்றே சிறிய வயதினருக்கு பலவகை காலர்கள் பொருத்தமாக இருக்கும், உதாரணத்திற்கு, குழந்தைக்கான காலர் வளரிளம் பருவத்தினருக்கு பொருத்தமானதாக இருக்காது. ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது. உதாரணத்திற்கு சின்தெடிக்குகள், பட்டு மற்றும் கம்பளி ஆகியன குளிர் காலத்திற்கு ஏற்றவை, ஏனெனில், அவை வெப்பத்தை கடத்தாதவை. பருத்தி மற்றும் சின்தெடிக் இணைத்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆகியன வெயில் காலத்திற்கு ஏற்றவை.

    ஏனெனில், அவை உறிஞ்சும் தன்மையுடன், வெப்பம் கடத்தும் தன்மையும், கொண்டவை. குளிர் மற்றும் வெம்மையான நிறங்கள் உள்ளன. குளிர் நிறங்கள் என்பவை குளுமையுடன் தொடர்புடையன. உதாரணத்திற்கு நீலம், பச்சை, வெள்ளை முதலானவை வெம்மையான நிறங்கள் வெப்பத்தை கடத்தாது. மேலும் வெம்மை நிறங்கள் வெப்பத்துடன் தொடர்புடையது. உதாரணத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள். ஆகவே, வெம்மை நிறங்கள் குளிர்காலத்திற்கும், குளுமையான நிறங்கள் வெயில் காலத்திற்கும் ஏற்றவை.
    முட்டிக்காலிற்கு கொஞ்சம் கீழே இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் நீண்ட டிஷர்டானது ‘ஒன் ட்ரெஸ்’ என்று கல்லூரி மாணவிகளால் பெரிதும் விரும்பி அணியக்கூடிய பிரபலமான ஆடையாக உள்ளது.
    பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட கச்சிதமான பேன்ட்டுகளுக்கு பிளெயின் நிறத்தில் வாசகங்கள் பொரிக்கப்பட்ட கச்சிதமான முழுக்கைச் சட்டைகளுடன் வரும் ஆடைகளை சிறு பெண் பிள்ளைகளிலிருந்து நடுத்தரப் பெண்கள் வரை விரும்பி அணியக்கூடிய வகையில் வடிவமைத்து விற்பனைக்கு வந்திருப்பது அருமையான மாடல் என்றே சொல்லலாம்.

    * இன்னும் சிலவற்றில் பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பேன்ட்டுகளுக்கு அதே பூக்கள் பிரிண்ட்டானது கைகளில் மட்டும் இருப்பதுபோல் வடிவமைக்கப் பட்டிருக்கும் முழுக்கைக்சட்டைகள் சூப்பரோ சூப்பர் என்று சொல்லலாம். இது போன்ற ஆடைகள் பனியன் துணிகளில் மென்மையாக இருப்பதால் வீட்டில் அணிந்து கொள்ள வசதியாக இருக்கின்றது.

    * முட்டிக்காலிற்கு கொஞ்சம் கீழே இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் நீண்ட டிஷர்டானது ‘ஒன் ட்ரெஸ்’ என்று கல்லூரி மாணவிகளால் பெரிதும் விரும்பி அணியக்கூடிய பிரபலமான ஆடையாக உள்ளது.

    * காட்டன் கேப்ரி மற்றும் ஷார்ட்ஸ்சுடன் அரைக்கை டிஷர்ட் அணிந்து கொள்வதும் வசதியாக அணிந்து கொள்ளக்கூடிய ஆடையாகவே இருக்கின்றது.

    * டிராக் பேன்ட்டுகளில் பிரிண்ட்டுகள் செய்யப்பட்டு வருவது நடுத்தர வயதுப் பெண்களும் விரும்பி அணியக்கூடிய ஆடையாகவே உள்ளது. அதேபோல் ஆஃகானி பேன்ட்களிலும் பிளெயின் நிறம் மட்டுமல்லாது பிரிண்டட் டிசைன்கள் வருவதும் புது வரவாக உள்ளது.

    * பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட கனுக்காள் உயரமுடைய ஹாரம் பேன்ட்டுகளுக்கு நீண்ட குர்த்தி அல்லது ஷார்ட் குர்த்தி கைகளில்லாமல் அணிவதும் இப்பொழுது பிரபலமாக உள்ளது.

    * காட்டன் மற்றும் ரேயான் துணிகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பளாஸோ பேண்டுகளுடன் காலர் வைத்த ஷார்ட் டாப்பை வீட்டிலிருக்கும் பொழுது டக்இன் செய்யாமலும் வெளியில் செல்லும் பொழுது டக்இன் செய்து கொண்டும் செல்லலாம். வீட்டில் அணிந்து கொள்ளக்கூடிய வசதியான ஆடைகளின் அணி வகுப்பில் இந்த ஆடையானது முதல் இடத்தைப் பிடிக்கும் என்றே சொல்லலாம்.

    * அதேபோல் ஜிப்ஸி எலாஸ்டிக் யோகா பேன்ட்டுகளும் பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் ஒன்றாக உள்ளது. இவ்வகை பேன்ட்டுகள் மிகவும் தொள தொளப்பாக இருப்பதால் இவற்றை அணிந்து கொண்டே யோகா செய்வது மிகவும் வசதியாகவே உள்ளது என்றே சொல்லலாம். இவ்வகை பேன்ட்டுகளுடன் கச்சிதமான ஷார்ட் டிசர்ட்டுகளை அணிந்து கொள்வதைப் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

    * கார்கோ பேன்ட்டுகளுக்கு தொள தொளப்பான சட்டைகளை அணிந்து கொள்வதும் வசதியான உடையாகவே உள்ளது.

    * சஸ்பென்டர் ( இடுப்பிலிருந்து தோள்பட்டை வரை இனைக்கப்பட்டிருக்கும் பட்டைகள்) பேன்ட்டுகளுக்கு ரவுண்டு நெக் டிஷர்ட் அணிந்து கொள்வது பொருத்தமாகவும் , பேஷனாகவும் உள்ளது.

    * பிரிண்டட் பைஜாமாக்களுக்கு பிரிண்டட் டாப் அணிவதும், பிளெயின் டாப் அணிவதும் பிரபலமாகி வருகின்றது.

    * காட்டன் லாங் ஃப்ராக்குகளும் வீட்டில் அணிந்து கொள்ள வசதியான உடையாகவே கருதப்படுகின்றது.

    * பெக்டு பேன்ட்டுகளுக்கு முக்கால் கை வைத்த பனியன்களை அணிந்து கொள்ளலாம்.

    * பேகி பேன்ட்டுகளுக்கு பிளெயின் ஸ்லீவ்லெஸ் டிஷர்ட்டுகளை அணியலாம்.

    * ஜம்ப்ஷூட்ஸ்களும் வீட்டில் அணிந்து கொள்ளக் கூடிய வசதியான உடையாகவே உள்ளது.

    * லாங் அண்டு வொய்ட் ஸ்கர்ட்டுகளுக்கு க்ராப் டாப்புகளை அணிந்து கொள்ளலாம்.

    * பெண்களுடன் ஆண்களும் ஓரே டிசைன் மற்றும் வண்ணங்களுடன் அணிந்து கொள்ள ஜோடியாக டிஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    * ஸ்ட்ராப்புகளுடன் கூடிய ஸ்லீவ்லெஸ் டாப்பிற்கு அதே டிசைனில் இருக்கும் ஷார்ட்ஸ்கள் குழந்தைகள் முதல் குமரிவரை விரும்பி அணியக்கூடிய ஆடையாக உள்ளது.

    * ஒரே டிசைனில் முழுக்கால் சட்டை மற்றும் அரைக்கால் சட்டை, காலர் வைத்த முழுக்கை சட்டை, ஸ்ட்ராப் இணைக்கப்பட்ட ஸ்லீவ்லெஸ் டாப் என செட்டாக வரும் ஆடைகளை நம் வசதிக்கேற்பவும், விருப்பத்திற்கேற்பவும் எப்படி வேண்டுமானாலும் மேட்ச் செய்து அணிந்து கொள்ளலாம். இது போன்ற ஆடைகள் பார்பதற்கும் புதுமையாகவும் அதே நேரத்தில் அணிந்து கொள்ள வசதியாகவும் இருக்கின்றது.

    * கெளன்களிலும் எத்தனையோ விதமான மாடல்கள் வந்துவிட்டன. அவை பெண்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் விரும்பி அணியப்படும் ஆடைகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.
    ரோஸ் கோல்டு நகைகள் அணிவதைப் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம். இந்த நகைகளை நேவி, வெள்ளை, கருப்பு, பழுப்பு மற்றும் கிரீம் போன்ற நடுநிலை வண்ணங்களுடன் கூடிய ஆடைகளுடன் அணியும் பொழுது அவை மிகச்சிறப்பான தோற்றத்தைத் தருகின்றன.
    ரோஸ் கோல்டு என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் தங்கமாகும். 24 காரட் மஞ்சள் நிறத்தங்கம், தாமிரம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் கலவையே இந்த இளஞ்சிவப்பு (ரோஸ் கோல்டு) தங்கமாகும்.

    ரோஸ் கோல்டு நகைகள் அணிவதைப் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம். இந்த நகைகளை நேவி, வெள்ளை, கருப்பு, பழுப்பு மற்றும் கிரீம் போன்ற நடுநிலை வண்ணங்களுடன் கூடிய ஆடைகளுடன் அணியும் பொழுது அவை மிகச்சிறப்பான தோற்றத்தைத் தருகின்றன.

    ரோஸ் கோல்டு தங்க நகைகளில் கல் பதித்த மோதிரங்கள் பார்ப்பவர்களை மயக்கும் விதத்தில் பல டிசைன்கள் மற்றும் மாடல்களில் வந்துள்ளன. ரோஸ் கோல்டு மோதிரத்தில் வைரக்கற்கள் பதித்தவற்றை நிச்சயதார்த்த மோதிரங்களாகப் பரிசளிப்பது பிரபலமாகி வருகின்றது.

    * காதணிகள் என்று எடுத்துக்கொண்டால் தொங்கல் மாடல்களில் எண்ணற்ற டிசைன்கள் நவீன தோற்றத்தில் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவையாக இருக்கின்றன. இரத்தச் சிவப்புக் கற்களும், வெண்மை நிறக் கற்களும் பதித்த பாலி மாடல் காதணிகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. முழுவதும் வெண்மை நிறக் கற்கள் பதித்த ஜிக் ஜாக் மாடல், ஓவல் வடிவத்தில் கீழே கற்கள் தொங்குவது போன்ற மாடல், காதணியில் வைரக்கல் பதித்து அதிலிருந்து தொங்கும் செயினிலும் வைரக்கற்கள் பதித்து அதன் முடிவில் ஐந்து வட்ட வடிவக் கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கும் மாடல், கம்மல் பாலி மாடலில் சிறிய வெண்மை நிறக் கற்கள் பதித்திருக்க கீழே தொங்கலானது இலை வடிவில் வெண்மை நிறக் கற்கள் பதித்த மாடல் என எண்ணற்ற மாடல்கள் உள்ளன.

    * கம்மல் மாடல்களிலும் அதேபோல் ஏராளமான டிசைன்கள் உள்ளன. இதய வடிவில் நடுவில் பெரிய கருமை நிறக்கல் பதித்து அதன் பார்டராக வெண்மை நிறக் கற்கள் பதித்திருப்பது கருப்பு இதயமாக ஜொலிக்கின்றது. அதேபோல் ஆங்கில ‘ஜெ’ வடிவத்தில் இடையில் சிறிய வெண்மை நிறக்கற்களால் வடிவமைக்கப்பட்ட மூன்று மலர்கள், அரைக்காது வடிவில் காதின் நடுவே ஏழு கற்கள் பதித் கம்மல், மூன்று இதயங்கள் இணைவது போன்ற கம்மல் பூக்கம்மல் எனக் கம்மல்களில் ஏகப்பட்ட மாடல்கள் உள்ளன. இந்த ரோஸ் கோல்டினால் செய்யப்படும் கம்மல் வகைக் காதணிகள் புதுமையும், பழமையும் கலந்தவையாக இருப்பதால் எந்த வயதுப் பெண்களும் அணிய ஏற்றவையாக உள்ளன.

    * மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல் மட்டுமல்லாது அனைத்து விரல்களுக்கும் சேர்ந்தாற்போல் அணியும் மோதிரங்கள் ரோஸ் கோல்டில் மிகச்சிறப்பாகவும், நவீனமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மெல்லிய கம்பியில் மேற்புறம் முத்துக்கள் பதித்தவை, கற்கள் பதித்தவை, டை வடிவத்தில் கற்கள் பதித்தவை, பிளையின் ரிங், பிளையின் பட்டை வடிவ மோதிரத்தின் மேற்பகுதியில் ஒரே பெரிய கல் அல்லது சிறிய கற்கள் பதித்தது போன்று இருப்பவையும் அழகாக உள்ளன. மோதிரத்தின் மேற்புறத்தில் மலர் மலர்ந்திருப்பது போன்று வடிவமைத்திருக்கும் மாடல் நிஜ மலருக்கு சவால் விடும் விதத்தில் உள்ளது.

    * இவை மட்டுமல்லாது கிளையிலிருக்கும் இலை, அலை வடிவம், மிஸ்டிக், புறாவின் கால் வடிவம், முகடு மற்றும் சமவெளி வடிவம், ரிப்பன் லூப், லூப்பி லூப் வடிவம் என மிக வித்தியாசமாகவும், நவீன டிசைனிலும் ரோஸ் கோல்டு மோதிரங்களை வடிவமைத்திருக்கிறார்கள். ஓரிகமி இதய வடிவ மோதிரங்கள் பார்ப்பவர்களை கட்டாயம் வாங்கத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

    * கழுத்தாணிகள் என்று எடுத்துக்கொண்டால் மெல்லிய செயின்களில் சிறிய கற்கள் பதித்த டாலர்கள், அதே டிசைனில் காதணிகள் பார்க்கவே அழகாக உள்ளன. குட்டையான அடுக்குச் செயின்கள், ஒவ்வொரு செயினின் நடுவிலும் சிறிய டாலர்கள், இதய வடிவ பென்டன்டுடன் இருக்கும் செயின், குயின்ஸ் நெக்லஸ், குந்தன் நெக்லஸ், போக்லி சோக்கர், கியூபிக் ஜிர்கோனியா நெக்லஸ், சாம்ப்பேன் லாங் நெக்லஸ், இராசிக்கற்கள் பதித்த, நெக்லஸ்கள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சங்க்கி செயின் நெக்லஸ் என ஏராளமான டிசைன்களில் ரோஸ் கோல்டு கழுத்தணிகள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    * பழமை மற்றும் புதுமையைக் கலந்து வைரக் கற்கள் பதித்து செய்யப்பட்ட பென்டன்ட்டுகள் இல்லாத நெக்லஸ்கள் அருமையோ அருமை.

    * ரோஸ் கோல்டினால் செய்யப்பட்ட பிளையின் மற்றும் கற்கள் பதித்த பிரேஸ்லெட்டுகளிலும் ஏராளமான டிசைன்களும், மாடல்களும் உள்ளன.

    * ரோஸ் கோல்டு நகைகளை குறிப்பாக இரவு விழாக்களுக்கு அணிந்து சென்றால் அனைவரின் கவனமும் நம் மீதுதான் இருக்கும். இவ்வளவு அழகாகவும், நவீனமாகவும் செய்யப்படும் ரோஸ் கோல்டானது அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் கிடைப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
    நீளமான(லாங்) குர்த்திகளை ஜீன்ஸ், ஸ்ட்ரெய்ட் பேண்ட், பளாஸோ, டைட்ஸ், டோத்தி பேன்ட் என எவற்றுடனும் மேட்ச் செய்து அணிந்து கொள்ள முடியும்.
    நீளமான(லாங்) குர்த்திகளை ஜீன்ஸ், ஸ்ட்ரெய்ட் பேண்ட், பளாஸோ, டைட்ஸ், டோத்தி பேன்ட் என எவற்றுடனும் மேட்ச் செய்து அணிந்து கொள்ள முடியும் இதுபோன்ற லாங் குர்த்திகளின் மேல் எத்னிக் ஜாக்கெட்டுகளை அணியும் பொழுது அவை அழகுக்கு அழகு சேர்க்கின்றன என்றே சொல்லலாம்.

    லாங் ஸ்கர்ட்டுகளுடன் லாங் குர்த்திகளை அணியும் பொழுது அவை நவீன தோற்றத்தைத் தருகின்றன. விருந்துகள், பகல் நேரப் பயணங்கள் போன்றவற்றிற்கு அணிய ஏற்ற ஆடையாக இது உள்ளது. இவை மஷ்ரு, காட்டன், சில்க், ரேயான், விஸ்கோஸ், பாலியஸ்டர், க்ரேப் மற்றும் ஜ்யார்ஜெட் போன்ற பல வகையான துணிகளில் தயாரிக்கப்படுகின்றன.

    பாகிஸ்தானிய குர்த்தி என்பது நீண்ட நேரான குர்த்தியின் மற்றொரு பதிப்பாகும். இவை பாரம்பரிய பிரிண்டுகளுடன் எத்னிக் தோற்றத்தைக் கொண்டிருப்பதால் ஜீன்ஸ், ஜெகிங்ஸ், லெகிங்ஸ், ஸ்ட்ரெய்ட் பேன்ட்ஸ், ஸ்கர்ட்ஸ் மற்றும் பளாஸோக்களுடன் அணிய ஏற்றவையாக உள்ளன. பாகிஸ்தான் குர்த்தியுடன் ஆக்ஸிடைஸ்டு நகைகள் பெரிய அளவில் இருப்பதைத் தெர்ந்தெடுத்து அணியும் பொழுது எத்னிக் தோற்றத்தை அப்படியே வெளிக்கொணருகின்றது.

    உடலின் முன்புறம் வங்கி போன்று குட்டையாகவும் பின்புறம் வால் போன்று நீண்டும் இருக்கும். குர்த்திகள் ‘டெய்ல்’ குர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஸ்டாக்கிங்ஸ், லெகிங்ஸ், ஜீன்ஸ் மற்றும் ஜெகிங்ஸ்களுடன் அணியும் பொழுது கவர்ச்சியான தோற்றத்தைத் தருகின்றது. இவ்வகைக் குர்த்திக்களை அதற்கேற்றார் போன்ற காலணிகள் மற்றும் நகைகளுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் அணியலாம். ஸ்லிங் பேக் அல்லது க்ளட்ச்கள் இவ்வகை குர்த்திகளுடன் எடுத்துச் செல்ல ஏற்றவை.

    ஆங்கில எழுத்தான ‘எ’ வடிவில் இருக்கும் குர்த்திகள் இளம் பெண்களிடையே பெரிய அளவில் பெற்றிருப்பவை என்று சொல்லலாம். இந்தக் குர்த்தியானது இடுப்பிலிருந்து விரிவடைந்து முழங்கால் அல்லது கணுக்கால் வரை நீண்டிருக்கின்றது. இவற்றை திருவிழாக்கள் மட்டுமல்லாது சாதாரணமாகவும் அணியலாம். டோத்தி பேண்டுகள், ஜெக்கிங்ஸ், ஜீன்ஸ், பாட்டியாலா, கேப்ரி மற்றும் சுடிதார்களுடன் அணியலாம். பம்ப்ஸ், கோலாபுரி, செருப்புகள் அல்லது ஷுக்களை இந்த குர்த்திகளுடன் அணியலாம். இவை ‘எ’ லைன் குர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.

    அழகான மற்றும் நேர்த்தியான பாரம்பரியக் கலவை என்று அனார்கலி வகைக் குர்த்திகளைச் சொல்லலாம். இவ்வகைக் குர்த்தியானது எவ்வகை உடல் வாகு உடையவர்களுக்கும் பொருந்தக் கூடியது. அலுவலகம், கல்லூரி, விழாக்கள் என அனைத்து சந்தர்ப்பங்களிலும் குறிப்பாக திருமணங்கள் வரவேற்புகளிலும் அணியப்படுகின்றன. சைட்ஸ்லிட், ஃப்ரன்ட் ஸ்லிட், அடுக்கு (லேயர்டு) எனப் பல மாடல்களில் அனார்கலி குர்த்திகள் வடிவமைக்கப்படுகின்றன. அனார்கலி அணியும் பொழுது உயர்ந்த குதிகால் செருப்பு அணிந்தால் அது அந்த ஆடையின் அழகை உயர்த்திக் காட்டுகின்றது.

    லாங் ஸ்ட்ரெய்ட் குர்த்திகளை தினசரி அணியும் உடையாகவும், பிரயாணங்கள், சிறு விழாக்கள் போன்றவற்றிற்கும் அணிகிறார்கள். இது மேலிருந்து கீழ் வரை ஒரே நேராக இருக்கின்றது.

    நவீனப் போக்குடன் சமகால வடிவமைப்புடன் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவையாக இருப்பவை டோத்தி குர்த்திகளாகும். இந்த குர்த்திகள் ஒரு அசாதாரணமான ட்ரேப் பாணியுடன் அணிய வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டைலான தோற்றமுடைய இவை உடலின் மேல் பகுதியை அனைத்தும் இடுப்பிலிருந்து தொள தொளப்பாகவும் இருக்கின்றது. இந்த குர்த்தியை தனித்து முழு ஆடையாகவோ அல்லது ஸ்டாக்கிங்ஸ், லெகிங்ஸ் மற்றும் டைட்ஸ்களுடனும் அணியலாம்.

    அந்தக்கால இசைக் கலைஞர்களின் ஆடை வடிவமைப்பிலேயே வந்திருப்பவைதான் அங்க்ரகா குர்த்திகளாகும். டேங்கில் காதணிகள், பெரிய ஜீம்காக்கள், தங்க மற்றும் வைர நகைகள், ஆக்ஸடைஸ்டு நகைகளுடன் அணியும் பொழுது இந்த குர்த்தியின் அழகானது மேலும் மேம்படும். சிஃபான், ஜியார்ஜெட், நெட், காட்டன், சந்தேரி மற்றும் பட்டுத் துணிகளில் அங்க்ரகா குர்த்தியானது தயாரிக்கப்படுவதால் அனைத்து கால நிலைகளிலும் இதை அணிந்து கொள்ள முடியும்.

    இந்திய மற்றும் மேற்கத்திய பாணிகளின் இணைவுடன் ஷர்ட் மற்றும் குர்த்தி இரண்டும் சேர்ந்த கலவையாக வந்திருப்பவை ஷர்ட் குர்த்தி. இவை எளிமையாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. டெனிக், காட்டன், ஜியார்ஜெட், க்ரேப், விஸ்கோஸ், ரேயான் மற்றும் பாலியஸ்டர் துணிகளில் தயாரிக்கப்படுகின்றன. இவை கணுக்கால் வரை, முட்டி வரை அல்லது குட்டையானவை எனப்பல்வேறு நீளங்களில் கிடைக்கின்றன.

    குர்த்திகளின் மேல் குட்டை ஜாக்கெட்டுகள் அணிவதும் இன்றைய இளம் பெண்களிடையே பிரபலமாகி வருகின்றது. குர்த்திகளில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் நிறத்திற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் மேல் ஜாக்கெட்டுகளை அணிவது ஃபேஷனாகி வருகின்றது. குர்த்தி பிளெயின் நிறத்தில் இருந்தால் மேலே அணியும் ஜாக்கெட் பிரிண்ட்டுகளுடனும், குர்த்தியில் பிரிண்ட்டுகள் இருந்தால் மேலே அணியும் ஜாக்கெட்டானது பிளெயினாக இருப்பது போன்றும் வித்தியாசமான கழுத்து மாடல்களுடன் வடிவமைத்திருக்கிறார்கள்.

    இரண்டு மூன்று லேயர்களாக துணிகளை வைத்து தைக்கப்படும் குர்த்திகள் ஓவர்லே குர்த்திகளாகும். உட்புறம் பிரிண்ட் செய்யப்பட்ட துணி இருந்தால் மேல்புறம் பிளெயின் நிறத்துணி வைத்தும், உட்புறம் பிளெயின் நிறத்துணி இருந்தால் மேற்புறம் டிசைன் செய்யப்பட்ட துணி வைத்தும் இவ்வகைக் குர்த்திகளை வடிவமைக்கிறார்கள்.

    முன்புறம் மட்டும் ஸ்லிட் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் குர்த்திகள் நம்முடைய தோற்றத்திற்கு கவர்ச்சியைத் தருகின்றன. இரு பக்கவாட்டிலும் ஸ்லிட் இருக்கும் குர்த்திகள் நாம் அணிவதற்கு வசதியானவையாக உள்ளன. இன்னும் சில குர்த்திகளில் முன்புறத்தில் மட்டுமல்லாமல் இரு பக்கவாட்டிலும் ஸ்லிட் இருப்பது போன்று வடிவமைத்திருப்பது பார்க்க வித்தியாசமாக உள்ளது. இவ்வகை குர்த்திக்களை நீண்ட ஸ்கர்ட்டுகளுடன் அணியும் பொழுது அவை லெஹங்கா வை ஞாபகப்படுத்தும் விதமாக உள்ளன.
    நம்மில் பெரும்பாலானவர்களுக்கு காசுமாலையை தவிர பிற மாலைகளை பற்றி அவ்வளவாக தெரிவதில்லை. சரி, என்னென்ன மாலைகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம் வாங்க...
    நகைகளில், தங்கத்தினால் செய்த மாலைகளுக்கு எப்பொழுதுமே ஒரு தனி மதிப்பு உண்டு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு காசுமாலையை தவிர பிற மாலைகளை பற்றி அவ்வளவாக தெரிவதில்லை. சரி, என்னென்ன மாலைகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம் வாங்க...

    மல்லிகை அரும்பு மாலை: தங்க செயினில் தங்க குண்டுகள் கோர்க்கப்பட்டு, ஒவ்வொரு குண்டிலிருந்தும் ஒரு மல்லிகை மொட்டானது நீட்டிக் கொண்டிருக்க, குண்டையும் மல்லிகை அரும்பையும் இணைக்கும் இடத்தில் பெரும்பாலும் சிறிய சிவப்பு கல்லானது பதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடியும். இந்த கல்லின் நிறத்தால் மல்லிகை அரும்பானது மேலும் அழகாக இருக்கின்றது. சில மாலைகளில் நீண்ட பட்டை செயினிலிருந்து அரும்புகள் மெல்லியதாகவோ, ஊசி போன்றோ அல்லது குண்டாகவோ இருப்பதுபோல் வடிவமைத்திருப்பது கண்களுக்கு விருந்தாக இருக்கின்றது. இதுபோன்ற அரும்பு மாலைகளில் பெரிய டாலர்கள் வைத்தும் வருகின்றன. மல்லிகை அரும்பு மாலைகளானது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், தென்னிந்திய பெண்களால் குறிப்பாக கேரள பெண்களால் விரும்பி அணியப்படும் நகையாகும். சாதாரண கற்கள் பதிக்காத முல்லை மொட்டு மாலைகளும் அணிந்தால் ஒரு மிரட்சியான அழகை தருகின்றன.

    மாங்கா மாலை: பாரம்பரிய நகை வகைகளில் மாங்கா மாலையும் இடம்பெறும். பிளெயின் மாங்கா மாலை, கற்கள் பதித்த மாங்கா மாலை, ஒவ்வொரு மாங்காயின் மேலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருப்பது, மாங்கா மாலையில் பெரிய பதக்கங்கள் வைத்தது போல் வருவது, சிவப்பு மற்றும் பச்சைக்கல் பதித்த மாங்கா மாலை, முழுவதும் சிவப்பு கல் பதித்த மாங்கா மாலை, முழுவதும் வெள்ளை கற்கள் பதித்து செய்த மாங்கா மாலை என்று மிக நீளமாக சொல்லிக்கொண்டே போகலாம்.

    நீண்ட மாங்காய், தட்டை மாங்காய், சிறிய மாங்காய் என்று மாங்காய் மாலைகளில் செய்யப்பட்டிருக்கும் நுணுக்கமான வேலைப்பாடுகளை பார்க்கும் போது அதை செய்தவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. மாங்காய் மாலைகளின் முடிவில் இரண்டு மயில்கள் ஒன்றோடொன்று ஒட்டியிருப்பது போல் இருக்க அதன் நடுவிலிருந்து தொங்கும் அகலமான பென்டேன்டுகளின் கீழே தொங்கும் தங்க குண்டுகள் மாங்கா மாலைக்கு கூடுதல் அழகை தருகின்றன.

    கற்கள் பதித்த பூவேலை பாட்டுடன் இருக்கும் பட்டை செயினில் பிளெயின் தங்கத்தினால் செய்யப்பட்ட மாங்காய்கள் இருப்பது போல் செய்யப்பட்டிருப்பவை வித்தியாசமாகவும், அதே சமயம் அழகாகவும் இருக்கின்றன. மாங்காய் மாலைகள் குட்டையாக இருப்பதும் பார்வைக்கு அழகாகவே இருக்கின்றன. ஆன்டிக் பினிஷில் செய்யப்படும் மாங்கா மாலைகள் அழகோ அழகு. மாங்காய்களின் மேல் பச்சைக்கற்கள் பதித்து வருவது அசலான மாங்காய்களை ஞாபகப்படுத்துகின்றன.

    காசு மாலை: பழைய கால நகையாக மட்டுமல்லாமல் இன்றும் அனைவராலும் விரும்பி அணியப்படும் நகை என்றால் அது காசுமாலையாகத்தான் இருக்கும். பிளெயின் காசு மாலைக்கு கற்கள் பதித்த தாமரை பென்டன்ட், காசு மாலையின் இடையில் கற்கள் பதித்த முகப்பு, பிளெயின் தங்க காசுமாலை, ஒவ்வொரு காசிற்கும் இடையே தனியாக வண்ண ஒற்றை மணிகள் (பீட்ஸ்) இருப்பது போன்ற மாலை, கற்கள் பதித்த வரிசையை அடுத்து தங்க குண்டுகள் வரிசை, அதை தொடர்ந்து காசு மாலை வரிசை, அதற்கு பெரிய லட்சுமி டாலரின் கீழே தங்க சலங்கைகள் தொங்குவது, தங்க காசுகளின் கீழே முல்லை மொட்டுகள் நீட்டி கொண்டிருப்பது, காசுகளில் சாமி உருவம் இல்லாமல் பூ டிசைனுடன் இருப்பது, நான்கைந்து காசுகள் ஒன்றன் கீழ் ஒன்றாக இணைந்திருக்க அதிலிருந்து தங்க குண்டுகளுடன் சரங்கள் தொங்குவது போன்ற மாலைகள் அனைத்துமே தனித்துவமான பாணிகளில் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    நீண்ட பெரிய காசு மாலையின் மேலே மற்றொரு வரிசையாக சிறிய காசுகள் இணைக்கப்பட்டு இருப்பது பார்ப்பதற்கு பெரிய இரண்டு காசுகளின் மேலே ஒரு சிறிய காசு என்று அழகாக வரிசைப்படுத்தப்பட்டு அதற்கு கற்கள் பதித்து செய்யப்பட்ட ஒரு பெரிய டாலரானது மிரட்டும் அழகுடன் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.

    காசு மாலைகள் குறைந்த பவுனிலும் மிகவும் பார்வையாக கிடைக்கின்றன. ராமர், லட்சுமணர் மற்றும் சீதையுடன் இருப்பது போன்ற காசுகளால் செய்யப்பட்ட மாலையானது சந்திர வடிவ டாலர்கள் வைத்தும், டாலர்கள் இல்லாமலும் கிடைக்கின்றன. ஒவ்வொரு காசிற்கும் இடையில் ஏதாவது வண்ண மணிகள் கோர்க்கப்பட்டு அதற்கு கெம்ப் கற்கள் பதித்த பதக்கங்கள் சற்றே கற்பனை செய்து பாருங்கள். ஒரே காசுமாலையில் இருபுறமும் முகப்புகள் வைத்து வருபவை நவீனமாகவும் அழகாகவும் உள்ளன.

    கருகமணி மாலை: கருப்பு நிற மணிகளுடன் தங்க குண்டுகள் கோர்த்து செய்யப்படும் இந்த மணி மாலைகளை பெரும்பாலும் திருமணம் முடித்த பெண்களே அணிகிறார்கள்.

    இவை மட்டுமல்லாது புலி நக மாலைகள், நாகப்பட மாலை, பாலைக்கா மாலை, தங்க குண்டு மாலை, கொடி மாலை, முத்து மாலைகள், பவள மாலைகள் என மாலைகளில் பல வகைகளும் டிசைன்களும் உள்ளன. அடுக்கடுக்காக கோர்க்கப்பட்டு வரும் மகிழம்பூ மாலையானாது மிகவும் அழகாகவும், நுணுக்கமான வேலைப்பாடுடனும் செய்யப்பட்டு இருக்கின்றன. நாகப்பட மாலை என்பது நாகம் படமெடுப்பது போல் கற்களின் வடிவமானது இருக்க அவற்றை தங்கத்தில் பதித்து செய்யப்பட்டிருப்பதாகும். பாலைக்கா மாலை என்பது சதுரவடிவிலிருக்கும் பச்சை கற்களை தங்கத்தில் பதித்து செய்யப்படுவதாகும்.
    தென்னிந்தியத் திருமணங்களில் வங்கி மற்றும் ஒட்டியாணம் என்பது மணப்பெண்களின் ஆபரணங்களில் தவிர்க்க முடியாத ஒன்று என்று சொல்லலாம்.
    பழமையும் புதுமையும்... வங்கிகள், ஒட்டியாணங்கள்...

    Jewelry, beauty, நகைகள், அழகு



    vanKi ottiyanam

    தென்னிந்தியத் திருமணங்களில் வங்கி மற்றும் ஒட்டியாணம் என்பது மணப்பெண்களின் ஆபரணங்களில் தவிர்க்க முடியாத ஒன்று என்று சொல்லலாம்.

    வங்கிகள்

    நமது பாரம்பரிய நகைகளில் வங்கியும் ஒன்று. பெரிய அளவிலிருந்து சிறிய அளவுகளில் பெண் குழந்தைகள் அணிந்து கொள்வது போல் வங்கிகள் தங்கத்தில் மட்டுமல்லாது ஒரு கிராம் நகைகள் மற்றும் இமிடேஷன் நகைகளிலும் கிடைக்கின்றன.

    அரசர்கள் நாட்டை ஆண்ட காலத்தில் வங்கியானது நாக வடிவில் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதன் பின்னர் அலை வடிவில் வந்த வங்கிகள் இப்பொழுது செயின் வடிவில் கைகளைச் சுற்றி கட்டிக் கொள்வது போல் வந்து விட்டன. செயின் மாடல் வங்கிகளில் அவரவர் கைஅளவுகளுக்கேற்ப வங்கிகளை சரி செய்து அணிந்து கொள்ளலாம்.

    * பிளெயின் தங்க வங்கிகளில் லக்‌ஷ்மி உருவத்துடனும், டெம்பிள் டிசைன்களுடனும் வருபவை திருமணம் மற்றும் பரத நாட்டிய விழாக்களில் அணியப்படுகின்றன.

    * வெண்மை, சிவப்பு, பச்சை நிறக் கற்கள் பதித்து மயில், அன்னம், யானையுடன் இருக்கும் லக்‌ஷ்மி, பூ உருவத்தில் பெரிய கற்கள் பதித்தவை, மாங்காயில் கற்கள் பதித்து அதிலிருந்து தங்கச் சலங்கை தொங்குவது, பூ மற்றும் இலைகளின் மேல் கற்கள் பதித்து வருபவை இரவு நேர விழாக்களுக்கு பட்டுப் புடவை மற்றும் பட்டுப் பாவாடைத் தாவணியுடன் அணியும் பொழுது அதன் அழகை என்னவென்று வர்ணிப்பது.

    * வளையல் மாடலில் ஃபேன்ஸி டிசைன்களில் கற்கள் பதித்து வரும் வங்கிகளை காக்ரா சோளிகள் மற்றும் ஸ்லீவ்லெஸ் சுடிதார்களுடனும் அணியலாம்.

    * ட்ரெண்டியாக வந்திருக்கும் குந்தன் வேலைப்பாட்டு செயின் மாடல் வங்கிகளை லாங் கெளன்களுடனும் அணிந்து கொள்ளலாம். குந்தன் வேலைப்பாட்டில் அதன் கீழே தொங்கும் லோரியல்கள் அணியும் ஆடைக்கு ஏற்றாற் போலும், காண்ட்ராஸ்டாகவும் இருப்பது போலத் தேர்ந்தெடுத்து வங்கிகளை அணிகிறார்கள்.

    * வங்கிகளை ஆர்ம்லெட், ஆர்ம் பேண்ட், ஆரம்ப் பிரெஸ்லேட், பஜுபந்த் என்றும் பல்வேறு விதமாக அழைப்பது போலவே அது சிற்சில வேறுபாடுகளுடன் பல்வேறு மாடல்களில் வருகின்றன.

    * வங்கிகளிலிருந்து செயின்கள் தொங்குவதும், மணிகள், சிறு சலங்கைகள் தொங்குவதும் அழகிற்கு அழகு சேர்க்கின்றன.

    * இனாமல் வேலைப்பாட்டுடன் வரும் வங்கிகளும் வண்ணக் கற்கள் பதித்தது போன்ற தோற்றத்தைத் தந்து நம்மை ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்த வைக்கின்றன.

    ஒட்டியாணம்

    பெண்கள் அணியும் இடை அணிகளே ஒட்டியாணம் அல்லது வட்டாணம் என்று அழைக்கப்படுகின்றது.

    ஒட்டியாணங்களிலும் பட்டையானவை, மெல்லியதானவை செயின் மாடல் எனப் பல வகைகள் உள்ளன. தங்கப் பட்டைகளில் மிகவும் எளிமையான டிசைன்களோடு வந்த ஒட்டியாணங்கள் காலப் போக்கில் பல்வேறு பரிணாமங்களோடு டிசைனர் ஒட்டியாணங்களாக உருமாறிவிட்டன.

    * தங்கப் பட்டைகளில் நடுவில் லஷ்மி உருவம் பெரியதாகவும், அதன் இருபுறமும் லஷ்மி உருவங்கள் சிறியதாகவும், அதன் முடிவில் நம் இடுப்பிற்கு ஏற்றால் போல் சரி செய்து போட்டுக் கொள்ளும் வசதியுடன் இருப்பவை அழகாகவும், பார்வையாகவும் இருக்கின்றன.

    * ஒரே அளவில் லஷ்மி உருவங்கள் இருப்பது போன்ற பட்டை ஒட்டியாணங்களில், மையத்திலிருந்து இரு புறமும் சிறிது தூரம் வரை தங்கச் சலங்கைகள் தொங்குவது போல் இருப்பவற்றை அணியும் பொழுது அவை மிடுக்கான தோற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இவை ஆங்கில ‘வி’ எழுத்து மாடலில் உள்ளன.

    * ஒட்டியாணம் முழுவதும் உள்ள டிசைன்களில் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சைக் கற்கள் பதித்த ஒட்டியாணங்கள் பரத நாட்டியக் கலைஞர்களால் மட்டுமல்லாமல் பாரம்பரிய அலங்காரம் செய்து கொள்ளும் மணப் பெண்களாலும் விரும்பி அணியப் படுகின்றன.

    * கயிறுகளில் கல் பதித்த பதக்கங்கள் மற்றும் பிளெயின் தங்கப் பதக்கங்களைக் கோர்த்து ஒட்டியாணமாக அணிவதும் இப்பொழுது பிரபலமாகி உள்ளது.

    * காட்டேஜ் கோல்டு, முத்து மற்றும் குந்தன், வி வடிவம், இடுப்புப் பட்டைகளானது பெரியதாக இருக்க அதன் மேற்புறம் அன்னம், மயில் போன்ற உருங்களில் சிறிய பலவித வண்ணக் கற்கள் பதித்திருக்க அந்தப் பட்டையிலிருந்து மெல்லிய செயின்கள் ‘யு’ வடிவில் தொங்குவது போல் இருக்கும் ஒட்டியாணங்களின் அழகை என்னவென்று சொல்வது.

    * பட்டைச் செயின்களின் மேற்புறம் முத்துக்கள் பதித்து அவற்றின் கீழே நெருக்கமாக தங்கச் சலங்கைகள் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பவற்றை எல்லாவித ஆடைகளுடனும் அணியலாம். அதேபோல் மெல்லிய செயின்களின் மையத்தில் பெரிய பதக்கம் மட்டும் இருப்பது போன்ற ஒட்டியாணங்களும், இடுப்பின் பக்கவாட்டில் அடுக்கடுக்காக செயின்கள் தொங்குவது போன்ற ஒட்டியாணங்களும் அருமையிலும் அருமை.

    * பெரும்பாலான பெரிய நகைக் கடைகளில் சிறு பெண் குழந்தைகள் அணியும் நகைகளுக்கென்றே தனிப்பிரிவு உள்ளது. அந்த நகைகளில் வங்கிகளும், ஒட்டியாணங்களும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.

    இந்தியக் கலாச்சாரத்தில் பெண்கள் ஒட்டியாணங்களை அணிவது நல்லதாகக் கருதப்படுகின்றது. தூய தங்கத்தில் மட்டுமல்லாமல் வெள்ளியில் தங்கப் பூச்சுடன் வரும் ஒட்டியாணங்கள், ஒரு கிராம் நகை ஒட்டியாணங்கள், இமிடேஷன் ஒட்டியாணங்கள் என அனைத்துமே பார்க்க அற்புதமாக உள்ளன.
    ×