என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரியாணியுடன் சாப்பிட கோங்கூரா சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று கோங்கூரா சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
புளிச்சக்கீரை / கோங்குரா - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1+1
பச்சை மிளகாய் - 6
இஞ்சி பூண்டு நறுக்கியது - தலா 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் குவியலாக
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு.

செய்முறை :
* கீரையை நன்றாக மண் போக அலசிக் கொள்ளவும். பின்பு இலையை மட்டும் உபயோகிக்கவும்.
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் சுத்தம் செய்த கீரை, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இது வெண்டைக்காய் மாதிரியே கொஞ்சம் கொழ கொழன்னு வரும். கீரை நல்ல புளிப்பாக இருக்கும். நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
* அடுத்து சிக்கனை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.
* மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சிக்கன் சுவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும்.
* அரை கப் தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி வேக விடவும்.
* சிக்கன் வெந்த பின்பு தயார் செய்த கோங்குரா விழுதை சேர்த்து ஒரு சேர கலந்து விடவும். நன்றாக கொதித்து சிக்கனும் கீரை விழுதாக சேர்ந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
* கீரையே புளிக்கும், தயிரோ தக்காளியோ சேர்க்க தேவையில்லை. இதற்கு காரம்,உப்பு சிறிது அதிகமாகத் தேவைப்படும்.
* சுவையான ஆந்திரா கோங்கூரா சிக்கன் ரெடி.
* இது சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரியாணியுடன் கூட பரிமாறலாம். பருப்பு சோற்றுடன் சூப்பர்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

கேரள கடலை கறி சாதம், சப்பாத்தி, ஆப்பம், புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும். இன்று இந்த கேரளா ஸ்டைல் கடலை கறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கருப்பு கொண்டைக்கடலை - 150 கிராம்
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிள்காய் -1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - அரைதேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.

செய்முறை :
* கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
* ஊறவைத்த கடலையை குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு போட்டு மூடி 10 விசில் விட்டு, வேக வைத்து எடுக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். அத்துடன் மல்லிப்பொடி, சீரகப்பொடி, பெருஞ்சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து லேசாக வறுத்து ஆற வைக்கவும்.
* வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கி கூழ் பதம் வந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவைக்கு தண்ணீர்(கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீர்) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* நன்கு கொதிவரவும், வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து உப்பு சரிபார்க்கவும்.
* அடுப்பை மிதமான தீயில் வைத்து குழம்பு கெட்டித்தனமை தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து திக்கான பதம் வந்ததும் இறக்கவும்.
* சுவையான சத்தான கேரள கடலை கறி ரெடி.
* வெறும் சாதம், சப்பாத்தி, ஆப்பம், புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும்.

சப்பாத்தி, பூரி, நாண், சாதத்திற்கு தொட்டு கொள்ள இந்த ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா சூப்பராக இருக்கும். இன்று இந்த குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு…
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 8
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன்
புதினா - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 3 1/2 கப்

செய்முறை :
* புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கிய பின்னர், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்து-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 8 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா ரெடி.

பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்றான சூப்பரான காஷ்மீர் பிரியாணி செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
சிறிய சதுரமாக நறுக்கிய பழத்துண்டுகள் (அன்னாசி, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவை - டின்னில் கிடைக்கும்) - அரை கப்,
வெங்காயம் - 2,
உலர் திராட்சை, பேரீச்சை (விதை நீக்கி, நறுக்கியது), உலர் பூசணி விதை, டூட்டி ஃப்ரூட்டி, செர்ரிப்பழம், திராட்சைப்பழம் (விதையற்றது) - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்,
குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
கிராம்பு - 2,
துருவிய பன்னீர் - 2 டேபிள்ஸ்பூன்,
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
காய்ச்சி ஆறவைத்த பால் - சிறிதளவு,
பொடியாக நறுக்கிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து, அளவான உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெயை போட்டு சூடாக்கி வெங்காயத்தை போட்டு சிவக்க வறுத்து வைக்கவும்.
* வாணலியில் நெய்விட்டு சூடானதும் சீரகம் தாளித்த பின் கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்...
* அடுத்து அதில் உலர் திராட்சை, பேரீச்சை, உலர் பூசணி விதை, டூட்டி ஃப்ரூட்டி, செர்ரிப்பழம், திராட்சைப்பழம், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
* அடுத்து சாதம், ஏலக்காய்த்தூள், கிராம்பு சேர்த்து மேலும் கிளறவும்.
* இதனுடன் பன்னீர் துருவல், பழத்துண்டுகள் சேர்த்துக் கிளறவும்.
* பிறகு ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, குங்குமப்பூவைச் சிறிது பாலில் கரைத்து ஊற்றி, வதக்கிய வெங்காயத்தை மேலே சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
* சூப்பரான காஷ்மீர் பிரியாணி ரெடி.

முட்டையில் ஆம்லெட், போண்டா, செய்து இருப்பீங்க. ஆனால் இன்று ஆனால் முட்டையைக் வைத்து பக்கோடா செய்து, அந்த பக்கோடாவை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பக்கோடாவிற்கு...
முட்டை - 4
உருளைக்கிழங்கு - 2
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
குழம்பிற்கு...
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, நன்கு ஸ்பூன் கொண்டு கிளறி விட வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெயில் 1 டேபிள் ஸ்பூன் முட்டைக் கலவையை ஊற்றி பக்கோடா போன்று, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் பக்கோடாக்களாக போட்டுக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காய பேஸ்ட் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி பச்சை வாசனை போனவுடன் அரைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரைட்டி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
* இறுதியில் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களைப் போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியை தூவி இறக்கி பரிமாறவும்.
* சுவையான முட்டை பக்கோடா குழம்பு ரெடி.

பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு அவல் உருளைக்கிழங்கை சேர்த்து கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அவல் - ஒரு கப்,
உருளைக்கிழங்கு - 2,
பச்சை பட்டாணி - சிறிதளவு
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
* உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
* பச்சை பட்டாணி வேக வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நநறுக்கி வைக்கவும்.
* 2 கைப்பிடி அவலை தனியாக எடுத்து வைத்து, மீதமுள்ள அவலை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற விடவும்.
* ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அவல், மசித்த உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், பச்சை பட்டாணி, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்யவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கட்லெட்டுகளை கரைத்த சோளமாவில் தோய்த்து, அவலில் புரட்டி தோசைக்கல்லில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
* சூப்பரான அவல் - உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அவல் - ஒரு கப்,
உருளைக்கிழங்கு - 2,
பச்சை பட்டாணி - சிறிதளவு
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
* உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
* பச்சை பட்டாணி வேக வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நநறுக்கி வைக்கவும்.
* 2 கைப்பிடி அவலை தனியாக எடுத்து வைத்து, மீதமுள்ள அவலை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற விடவும்.
* ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அவல், மசித்த உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், பச்சை பட்டாணி, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்யவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கட்லெட்டுகளை கரைத்த சோளமாவில் தோய்த்து, அவலில் புரட்டி தோசைக்கல்லில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
* சூப்பரான அவல் - உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சோயாவை இவ்வாறு லாலிபாப் போன்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த லாலிபாப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோயா - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 1,
பட்டாணி - ஒரு கைப்பிடி,
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடை மிளகாய் - 1,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு,
லாலிபாப் போல் செய்ய குச்சிகள் - 6.

செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
* சோயாவை கொதிக்கும் நீரில் 15 நிமிடம் போட்டு நன்றாக ஊறியதும் பிழிந்து எடுத்து மிக்சியில் போட்டு பூப்போல உதிர்த்து கொள்ளவும்.
* வெங்காயம், குடை மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் பட்டாணி, குடை மிளகாய், கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
* காய்கறிகள் அனைத்தும் வதங்கியதும் நன்கு உதிர்த்த சோயா உப்பு சேர்த்து கலந்து விடவும்.
* நன்கு ஆறியவுடன் சோயா மசாலாவுடன் உருளைக்கிழங்கு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
* பொரித்து எடுத்த உருண்டைகளின் நடுவில் குச்சியில் குத்தி லாலிபாப் போல் செய்யவும்.
* சோயா லாலிபாப் ரெடி.
* இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோயா - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 1,
பட்டாணி - ஒரு கைப்பிடி,
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடை மிளகாய் - 1,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு,
லாலிபாப் போல் செய்ய குச்சிகள் - 6.

செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
* சோயாவை கொதிக்கும் நீரில் 15 நிமிடம் போட்டு நன்றாக ஊறியதும் பிழிந்து எடுத்து மிக்சியில் போட்டு பூப்போல உதிர்த்து கொள்ளவும்.
* வெங்காயம், குடை மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் பட்டாணி, குடை மிளகாய், கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
* காய்கறிகள் அனைத்தும் வதங்கியதும் நன்கு உதிர்த்த சோயா உப்பு சேர்த்து கலந்து விடவும்.
* நன்கு ஆறியவுடன் சோயா மசாலாவுடன் உருளைக்கிழங்கு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
* பொரித்து எடுத்த உருண்டைகளின் நடுவில் குச்சியில் குத்தி லாலிபாப் போல் செய்யவும்.
* சோயா லாலிபாப் ரெடி.
* இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சேமியா - வெஜிடபிள் கட்லெட் செய்து கொடுக்கலாம். இந்த டிபனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மாலை நேர டிபனுக்கு ஏற்றது `சேமியா வெஜ் கட்லெட்'. செய்து பாருங்கள், வித்யாசமான சுவையுடன் ரசித்துச் சாப்பிடுவீர்கள்.
தேவையான பொருட்கள் :
சேமியா - ஒரு கப்
உருளைக் கிழங்கு - 2
கேரட் - 1
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறுதுண்டு
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
மக்காச்சோள மாவு - 1/2 கப்
கறி மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பிரெட் தூள் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :
* சேமியாவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* சிறிது தண்ணீரில் சோளமாவை போட்டு கரைத்து கொள்ளவும்.
* சேமியாவை 3 கப் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவிட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
* உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும்.

* நன்கு வதங்கியதும் துருவிய காரட், பட்டாணி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
* அத்துடன் மசித்த உருளைக் கிழங்கு, சேமியா, கறிமசாலா தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* மசாலா சிறிது வதங்கியதும் அதை விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்து கொள்ளவும்.
* கரைத்து வைத்துள்ள மக்காச்சோள மாவில் கட்லெட்டை நனைத்து பிரெட் தூளில் புரட்டி வைத்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொரித்து சூடாக சாஸ் உடன் பரிமாறுவார்கள்.
* சூப்பரான சேமியா - வெஜிடபிள் கட்லெட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மிகவும் எளிதில் செய்யகூடியது இந்த சுறா புட்டு. இந்த சுறா புட்டை நாளை (ஞாயிற்றுகிழமை) செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள் :
சுறா மீன் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சுறா மீனை சுத்தம் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் வேக வைக்கவும். வெந்ததும் அதை ஆறவைத்து நன்றாக ஆறியதும் சுறா மீனின் தோலை நீக்கி நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும் பொடியாக பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
* பின்னர், இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அடுப்பின் தீயை குறைத்து அதில், உதிர்த்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
* மீன் நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.
* கடைசியாக உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
* நாக்கை சுண்டி இழுக்கும் சுறா புட்டு ரெடி!

சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள இந்த தேங்காய்ப்பால் இறால் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - அரை கிலோ
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
புளிச்சாறு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
அரைக்க :
துருவிய தேங்காய் - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 5
வெங்காயம் - 1
கறிவேப்பிலை சிறிது
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிக்க :
பெருஞ்சீரகம், கடுகு, பட்டை, கறிவேப்பிலை.

செய்முறை :
* இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆற வைக்கவும்,
* வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் அதை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கடுகு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த மசாலா, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* குழம்பு பதம் வந்தவுடன் அதில் சுத்தம் செய்த இறால்களை சேர்த்து 10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான தேங்காய்ப்பால் இறால் குழம்பு ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இறால் - அரை கிலோ
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
புளிச்சாறு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
அரைக்க :
துருவிய தேங்காய் - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 5
வெங்காயம் - 1
கறிவேப்பிலை சிறிது
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிக்க :
பெருஞ்சீரகம், கடுகு, பட்டை, கறிவேப்பிலை.

செய்முறை :
* இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆற வைக்கவும்,
* வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் அதை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கடுகு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த மசாலா, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* குழம்பு பதம் வந்தவுடன் அதில் சுத்தம் செய்த இறால்களை சேர்த்து 10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான தேங்காய்ப்பால் இறால் குழம்பு ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, பூரி, நாண் புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது சைடிஷ் சிக்கன் நெய். இதை எப்படி சிக்கன் ரோஸ்ட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ ( தோல் நீக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 3
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
அரைத்த தக்காளி - 1 கப்
நெய் - 7 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி, பின் கொத்தமல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* நெய்யானது பிரிய ஆரம்பித்தால், அதில் சிக்கன் துண்டுகள், உப்பு, கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லி தழையை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கனானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி, அதில் மீதமுள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!!
* இந்த சிக்கன் நெய் ரோஸ்ட் சாப்பிட்டால் உடல் எடை நன்றாக அதிகரிக்கும். எனவே உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் சிக்கன் நெய் ரோஸ்ட் அடிக்கடி சாப்பிடலாம்.

காலையில் வேலைக்கு அவரசமாக கிளம்பும் போது, மதியம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அருமையான ரெசிபியை செய்ய வேண்டுமானால், புதினா புலாவ் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1
உருளைக்கிழங்கு - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - 1/2 இன்ச்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
புதினா - 1 கட்டு
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 1

செய்முறை :
* வெங்காயம், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* மிக்ஸியில் புதினா, தேங்காய், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அதில் உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் அரிசியை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், புதினா புலாவ் ரெடி!!!