என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கு விருப்பமான சோயா லாலிபாப்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான சோயா லாலிபாப்

    குழந்தைகளுக்கு சோயாவை இவ்வாறு லாலிபாப் போன்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த லாலிபாப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோயா - 1/2 கப்,
    உருளைக்கிழங்கு - 1,
    பட்டாணி - ஒரு கைப்பிடி,
    வெங்காயம் - 1,
    கேரட் - 1,
    குடை மிளகாய் - 1,
    உப்பு - தேவைக்கேற்ப,
    மிளகுத் தூள்  - 1/2 டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவைக்கு,
    லாலிபாப் போல் செய்ய குச்சிகள் - 6.



    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

    * சோயாவை கொதிக்கும் நீரில் 15 நிமிடம் போட்டு நன்றாக ஊறியதும் பிழிந்து எடுத்து மிக்சியில் போட்டு பூப்போல உதிர்த்து கொள்ளவும்.

    * வெங்காயம், குடை மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    * ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் பட்டாணி, குடை மிளகாய், கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * காய்கறிகள் அனைத்தும் வதங்கியதும் நன்கு உதிர்த்த சோயா உப்பு சேர்த்து கலந்து விடவும்.

    * நன்கு ஆறியவுடன் சோயா மசாலாவுடன் உருளைக்கிழங்கு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    * பொரித்து எடுத்த உருண்டைகளின் நடுவில் குச்சியில் குத்தி லாலிபாப் போல் செய்யவும்.

    * சோயா லாலிபாப் ரெடி.

    * இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×