என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த வெஜிடபிள் புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த புலாவ் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 2 கப்
தனியாப் பொடி - 2 டீஸ்பூன்
கரம் மசாலாபொடி - 1 டீஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
தனி மிளகாய்ப் பொடி- தேவைகேற்ப
உப்பு- தேவைகேற்ப
கேரட் - 100 கிராம்
குடைமிளகாய் - சிறியது 1
வெங்காயம் - 2
பீன்ஸ் - 100 கிராம்
உரித்த பட்டாணி - 1/2 கப்
தக்காளி - 3
காலிபிளவர் - பாதி
கொத்தமல்லி - சிறிதளவு.
அரிசியுடன் தாளிக்க :
ஏலக்காய் - 6
பட்டை - 4
கிராம்பு- 6
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :
* கொத்தமல்லி, காலிபிளவர், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், குடைமிளகாய், கேரடை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
* பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்து கொள்ளவும்.
* குக்கரில் வெண்ணெயை போட்டு லேசாக உருகியதும் சோம்பு, ஏலக்காய் பட்டை கிராம்பு போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த அரிசியைப் போட்டு, வாசனைவரும் வரை லேசாக வறுக்கவும். 1 : 2 என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயைக் குறைத்து வைக்க வேண்டும். அரிசியை உதிரியாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதற்குள் காரட் பீன்ஸை குக்கரில் ஆவியில் வைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதால் காய்கறிகளின் சத்து வீணாகாமல், குழையாமல், நிறம் மாறாமல் இருக்கும்.
* .வெங்காயம் வதங்கிய பிறகு, குடமிளகாய், பட்டாணி, காலிபிளவர் போட்டு நன்கு வதக்கவும். நிறம் மாறாமல், மிருதுவாக ஆன பின் கேரட், பீன்ஸ் போட்டு, பொடி வகைகளையும் போட்டு வதக்கவும். காய்கறி கலவையை அதிகமா வதக்க கூடாது.
* கடைசியில் தக்காளி சேர்த்து வதக்கி, உப்புப் போட்டு பின் கீழே இறக்கி வைக்கவும்.
* ஒரு அகன்ற பாத்திரத்தில் தயாராக இருக்கும் சாதத்தையும், காய்கறிகளையும் போட்டு கலக்கவும்.
* நன்கு கலந்த பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
* சூப்பரான வெஜிடபிள் புலாவ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

ஐயங்கார் ஸ்டைல் உணவுகளின் சுவையே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இங்கு ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 10
கத்திரிக்காய் - 1
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு…
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 5
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
* வெண்டைக்காய், கத்தரிக்காயை சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாதும் ‘வறுத்து அரைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும்.
* சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த, பின் இறுதியில் அதனை குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெடி!!!

வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இப்போது வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வான்கோழி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மசாலாவிற்கு...
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்து, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்த்து, 15 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் கிளறி, உப்பு, மல்லித் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள் என அனைத்து மசாலா பொடியையும் தூவி கிளற வேண்டும்.
* மசாலா வாசனை போனவுடன் அதில் வேக வைத்துள்ள வான்கோழியை நீருடன் ஊற்றி கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.
* குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கடைசியாக இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், வான்கோழி குழம்பு ரெடி!!!

கத்தரிக்காய் வைத்து தொக்கு, புலாவ், குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான புளிப்பான கத்தரிக்கய் கார குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் - 6
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உளுந்து - 1/4 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
புளி கரைசல் - 1/2 கப்

செய்முறை :
* கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும்.
* மசாலா தூள்கள் வாசம் போக கொதித்து, கத்திரிக்காய் வெந்ததும், புளி கரைசல் சேர்த்து கிளறி, ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.
* இதில் தூள் வகைகள் சேர்க்கும் போது கொஞ்சம் தயிர் (2 டீஸ்பூன்) சேர்த்தால் வித்தியாசமான டேஸ்ட் கிடைக்கும்.
* கத்தரிக்காய் கார குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கத்திரிக்காய் - 6
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உளுந்து - 1/4 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
புளி கரைசல் - 1/2 கப்

செய்முறை :
* கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும்.
* மசாலா தூள்கள் வாசம் போக கொதித்து, கத்திரிக்காய் வெந்ததும், புளி கரைசல் சேர்த்து கிளறி, ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.
* இதில் தூள் வகைகள் சேர்க்கும் போது கொஞ்சம் தயிர் (2 டீஸ்பூன்) சேர்த்தால் வித்தியாசமான டேஸ்ட் கிடைக்கும்.
* கத்தரிக்காய் கார குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாதம், தயிர் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல். இன்று இந்த வறுவல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 200 கிராம்
வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 அல்லது 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு

செய்முறை :
* மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உருளைக் கிழங்கைப் போட்டு சற்று வதக்கவும்.
* அதன் பின் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி விடவும்.
* அனைத்து சேர்த்து வரும் போது கடைசியில் மிளகுத்தூளைத் தூவி, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.
* அடுப்பை சிறு தீயில் வைத்து, உருளைக்கிழங்கை அடிக்கடி திருப்பி விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அல்லது கிழங்கு பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
* சூப்பரான சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 200 கிராம்
வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 அல்லது 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு

செய்முறை :
* மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உருளைக் கிழங்கைப் போட்டு சற்று வதக்கவும்.
* அதன் பின் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி விடவும்.
* அனைத்து சேர்த்து வரும் போது கடைசியில் மிளகுத்தூளைத் தூவி, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.
* அடுப்பை சிறு தீயில் வைத்து, உருளைக்கிழங்கை அடிக்கடி திருப்பி விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அல்லது கிழங்கு பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
* சூப்பரான சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சாப்பிட சூப்பரான ஸ்நாக்ஸ் சோயா - உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோயா - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 1,
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடை மிளகாய் - 1,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

செய்முறை :
* சோயாவை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
* கேரட், வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அடுத்து ஊறவைத்த சோயாவை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் காய்கறிகளை போட்டு உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதனுடன் பொடித்த சோயா சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்து வைத்த சோயா மாவை வடை போல் தட்டி தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.
* சோயா - உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
* இதனை தக்காளி சாஸு டன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோயா - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 1,
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடை மிளகாய் - 1,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

செய்முறை :
* சோயாவை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
* கேரட், வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அடுத்து ஊறவைத்த சோயாவை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் காய்கறிகளை போட்டு உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதனுடன் பொடித்த சோயா சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்து வைத்த சோயா மாவை வடை போல் தட்டி தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.
* சோயா - உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
* இதனை தக்காளி சாஸு டன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது சைடிஷ் இறால் பெப்பர் மசாலா. இன்று இந்த இறால் பெப்பர் மசாலாவை கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 250 கிராம்,
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
உடைத்த மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் பால் - 1 கப்,
தேங்காய் பால் - 1 கப்,
கோகம் புளி - 2 சின்ன துண்டுகள்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கறிவேப்பிலை - 1 கொத்து.

செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெயை ஊற்றி இஞ்சி, பூண்டு போட்டு நன்கு வதக்கி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இத்துடன் தக்காளியை சேர்த்து மசிய வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் மசாலாத்தூள்கள் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
* பின்பு தேங்காய் பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும், இறால், கோகம் புளி போட்டு வேகவிடவும்.
* தேங்காய் பால் நன்கு வற்றியதும், உடைத்த மிளகு, சிறிது எண்ணெய் சேர்த்து இறக்கவும்.
* கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இறால் - 250 கிராம்,
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
உடைத்த மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் பால் - 1 கப்,
தேங்காய் பால் - 1 கப்,
கோகம் புளி - 2 சின்ன துண்டுகள்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கறிவேப்பிலை - 1 கொத்து.

செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெயை ஊற்றி இஞ்சி, பூண்டு போட்டு நன்கு வதக்கி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இத்துடன் தக்காளியை சேர்த்து மசிய வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் மசாலாத்தூள்கள் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
* பின்பு தேங்காய் பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும், இறால், கோகம் புளி போட்டு வேகவிடவும்.
* தேங்காய் பால் நன்கு வற்றியதும், உடைத்த மிளகு, சிறிது எண்ணெய் சேர்த்து இறக்கவும்.
* கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, பூரி, பிரியாணி, புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரான ஃபிஷ் பெப்பர் மசாலாவை கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெய் மீன் - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 20,
பூண்டு - 5 பல்,
பச்சைமிளகாய் - 3,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
முதல் தேங்காய்ப்பால் - 1 கப்,
கோகம் புளி - 2 துண்டுகள்,
உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு.

செய்முறை :
* மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* மிக்சியில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், மிளகு, தனியாத்தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீன், அரைத்த விழுதை சேர்த்து நன்றாக பிரட்டவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, கோகம் புளியை போட்டு அடுப்பில் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
* கிரேவி திக்காக வரும்வரை கொதிக்கவிட்டு, தேங்காய்ப்பால், கறிவேப்பிலையும் சேர்த்து சிம்மில் வேக விடவும்.
* நன்கு கொதித்து மீன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.
* சூப்பரான சைடிஷ் ஃபிஷ் பெப்பர் மசாலா ரெடி.
* எந்த மீனிலும் இந்த மசாலாவை செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நெய் மீன் - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 20,
பூண்டு - 5 பல்,
பச்சைமிளகாய் - 3,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
முதல் தேங்காய்ப்பால் - 1 கப்,
கோகம் புளி - 2 துண்டுகள்,
உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு.

செய்முறை :
* மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* மிக்சியில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், மிளகு, தனியாத்தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீன், அரைத்த விழுதை சேர்த்து நன்றாக பிரட்டவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, கோகம் புளியை போட்டு அடுப்பில் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
* கிரேவி திக்காக வரும்வரை கொதிக்கவிட்டு, தேங்காய்ப்பால், கறிவேப்பிலையும் சேர்த்து சிம்மில் வேக விடவும்.
* நன்கு கொதித்து மீன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.
* சூப்பரான சைடிஷ் ஃபிஷ் பெப்பர் மசாலா ரெடி.
* எந்த மீனிலும் இந்த மசாலாவை செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட விரும்பினால் சிக்கன் - முட்டை பொடிமாஸ் செய்யலாம். இந்த பொடிமாஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சோம்பு
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1/ 4டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கரம்மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
முட்டை - 2
கொத்தமல்லி - சிறிதளவு
சிக்கனை வேக வைக்க :
சிக்கன் - அரை கிலோ
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :
* தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதில் நிறைய நீர் விட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
* சிக்கன் நன்றாக வெந்ததும் தண்ணீரில் இருந்து தனியாக எடுத்து ஆறவைத்து உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள். மிளகாய்த்தூள், உப்பு, 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள், சிக்கன் ஸ்டாக் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் சிக்கன் பொடிமாஸை சேர்த்து டிரையாக உதிரியாக வரும் வரை வதக்கவும்.
* இப்போது அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றி சிக்கனுடன் சேர்த்து நன்றாக கலந்து கிளறி விடவும்.
* சிக்கன் உதிரியாக பொடிமாஸ் போல் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான சிக்கன் பொடிமாஸ் ரெடி.

புலாவ், பிரியாணிக்கு குடை மிளகாயில் பன்னீரை ஸ்டஃப்டு செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று பன்னீர் ஸ்டஃப்டு குடைமிளகாய் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
குடைமிளகாய் - 6
ஸ்வீட்கார்ன் - 1 கப்,
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2,
பன்னீர் - அரை கப்,
மாங்காய் - சிறியது 1
மஞ்சள்தூள், இஞ்சி விழுது, மிளகு, சீரகத்தூள் - தலா ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ், தக்காளி சாஸ் - தலா 2 தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு

செய்முறை :
* ஸ்வீட்கார்னை வேக வைத்து கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* கொத்தமல்லி, வெங்காயம், மாங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பன்னீரை துருவிக் கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நற்காக வதங்கியதும் இதில் வேகவைத்த ஸ்வீட்கார்ன், மாங்காய், மசித்த உருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
* இதை அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லித் தழை தூவி கலந்து வைக்கவும்.
* குடைமிளகாயின் மேல் பகுதியை வெட்டி எடுத்து விடவும். உள்ளிருக்கும் விதைகளை சுரண்டி எடுத்து விட்டு, ஒவ்வொரு மிளகாயிலும் தயாரித்து வைத்திருக்கும் கலவையை நிரப்பவும்.
* கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து கலவையாக்கி மிளகாய்களின் மேல் பகுதியை மூடவும்.
* தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு ஸ்டஃப்டு குடைமிளகாய்களைப் பரவலாக வைத்து மூடி, 15 நிமிடம் வேக விடவும்.
* ஆறியதும் இரண்டாக வெட்டி சாஸ் அல்லது மல்லி சட்னியை மேலே ஊற்றி சாப்பிடவும்.
* சூப்பரான ஸ்டஃப்டு குடைமிளகாய் ரெடி.

சப்பாத்தி, பூரி, நாண், தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த தக்காளி - சின்ன வெங்காய தொக்கு. இந்த தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பழுத்த தக்காளி - அரை கிலோ,
சின்ன வெங்காயம் - 150 கிராம்,
மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 8 பல்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
கடுகு - அரை டீஸ்பூன்,
சோம்பு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - கால் கப்.

செய்முறை :
* தக்காளியை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு தாளித்த பின் பூண்டு சேர்த்து நன்றாகப் பொரிந்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.
* வெங்காய விழுதை மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
* அடுத்து அதில் தக்காளி சாறை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதனுடன் உப்பு, மிளகாய்தூள், தனியாதூள், கறிவேப்பிலை சேர்த்து தொக்கு நன்றாக சுருங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான தக்காளி - சின்ன வெங்காய தொக்கு ரெடி.
* சப்பாத்திக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பழுத்த தக்காளி - அரை கிலோ,
சின்ன வெங்காயம் - 150 கிராம்,
மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 8 பல்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
கடுகு - அரை டீஸ்பூன்,
சோம்பு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - கால் கப்.

செய்முறை :
* தக்காளியை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு தாளித்த பின் பூண்டு சேர்த்து நன்றாகப் பொரிந்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.
* வெங்காய விழுதை மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
* அடுத்து அதில் தக்காளி சாறை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதனுடன் உப்பு, மிளகாய்தூள், தனியாதூள், கறிவேப்பிலை சேர்த்து தொக்கு நன்றாக சுருங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான தக்காளி - சின்ன வெங்காய தொக்கு ரெடி.
* சப்பாத்திக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலை நேரத்தில் காபி, டீயுடன் சூடாக சாப்பிட பட்டாணி மசாலா வடை சூப்பராக இருக்கும். இதை செய்வதும் மிகவும் சுலபம். இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காய்ந்த பட்டாணிப் பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - அரை கப்
சோம்பு - அரை டேபிள்ஸ்பூன்
கோஸ் - அரை கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை :
* இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பட்டாணி மற்றும் கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சோம்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, மீதியுள்ள சோம்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
* அடி கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மிதமான தீயில் வைத்து வாழை இலையில் எண்ணெய் தடவி மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* சூப்பரான பட்டாணி - கோஸ் மசாலா வடை ரெடி.
* சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.