என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    மாலையில் காபி, டீயுடன் குடிக்க அருமையாக இருக்கும் இந்த கொண்டைக்கடலை வடை. இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சென்னா (கொண்டைக்கடலை) - ஒரு கப்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    மிளகு - கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 3,
    புதினா - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

    நன்றாக ஊறியதும் அதனுடன் தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, மிளகு, புதினா, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும் (தேவைப்பட்டால் 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்க்கவும்).

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்... கொண்டைக்கடலை வடை தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. பச்சை பட்டாணியில் வடை செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    பச்சைப் பட்டாணி (உரித்தது) - ஒரு கப் (காய்ந்த பட்டாணி எனில் ஒன்றரை கப்),
    கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 4,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :  

    வெங்காயம், ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணியுடன் (காய்ந்த பட்டாணியில் செய்வதாக இருந்தால் 8 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சைப் பட்டாணி என்றால், ஊற வைக்க வேண்டாம்) தோல் சீவிய இஞ்சி, சோம்பு, சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் கடலை மாவு, உப்பு, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, புதினா, சூடான எண்ணெய் 1 டீஸ்பூ சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெய் ஊற்றி மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான பச்சை பட்டாணி வடை ரெடி.

    குறிப்பு - இந்த வடைக்கு மாவு அரைக்கும் போது கொரகொரப்பாக அரைத்தால் தான் மொறுமொறு என்று சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சோலே பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சென்னா - ஒரு கப்
    பன்னீர் - 3/4 கப்
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    பூண்டு - 3 பல்
    இஞ்சி - சிறு துண்டு
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு
    பிரியாணி இலை - ஒன்று
    சீரகம் - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    வெண்ணெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி



    செய்முறை :

    சென்னாவை வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை சிறிது வெண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும்.

    அதே பாத்திரத்தில் இன்னும் சிறிது வெண்ணெய் விட்டு பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மசாலா வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

    இத்துடன் வேக வைத்த சென்னா, சென்னா வேக வைத்த நீர் தேவையான அளவு ஊற்றி மசாலா வாசனை போனும் வரை கொதிக்க விடவும்.

    இத்துடன் வறுத்த பன்னீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    கடைசியாக எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

    சுவையான சோலே பன்னீர் கிரேவி தயார்

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் வாழும் நாடோடிகள் மற்றும் பழங்குடியினரின் முக்கிய உணவாகும். இன்று மூங்கில் அரிசிப் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மூங்கில் அரிசி - 100 கிராம்
    வெல்லம் - 100 கிராம்
    தேங்காய்ப்பால் - 1 லிட்டர் (நன்கு முற்றிய தேங்காய்களாக இருக்க வேண்டும்)
    ஏலக்காய் - 2
    நெய் - 1 டீஸ்பூன்
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு.



    செய்முறை :

    மூங்கில் அரிசியை நன்கு கழுவி, ஊறவைக்க வேண்டும்.

    நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.

    தேங்காயில் 3 முறை பால் எடுத்து கடைசியாக எடுத்த தேங்காய்ப்பாலுடன் அரிசியை சேர்த்து வேகவைக்கவும்.

    அரிசி பாதி வெந்ததும் மீதமுள்ள தேங்காய்ப்பாலையும் சேர்த்து, மூங்கில் அரிசி முழுமையாக வேகும் வரை கொதிக்க விடவும்.

    இத்துடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து ருசிபார்த்து வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாசிப்பருப்பில் பாயாசம் வச்சு சாப்பிட்டு இருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா… சூப்பரான சுவையுடன் மொறுமொறுனு பிரமாதமா இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாசிப்பருப்பு - 1/2 கப்
    பெரிய வெங்காயம் - 1 1/2
    பச்சைமிளகாய் - 2
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    இஞ்சி - சிறிய துண்டு
    தனியா - 1 டீஸ்பூன்
    உப்பு - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

    பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

    அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.

    இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

    சுவையான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பச்சை பட்டாணியில் கீர் என பலர் வியப்பது தெரிகிறது. இன்று இந்த பச்சை பட்டாணியில் சுவையான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சைப்பட்டாணி - 1 கப்,
    பச்சைப்பட்டாணி வேக வைக்க தண்ணீர் - 1 கப்,
    உப்பு - கொஞ்சம்,  
    பால் - அரை கப்.

    கீர் தயார் செய்ய

    பால் - 2 கப்,
    சர்க்கரை - ¾கப் ,
    பிஸ்தா - தேவையான அளவு,
    பாதாம் - தேவையான அளவு,
    குங்குமப்பூ - சிறிதளவு,
    ஏலக்காய் தூள் - கொஞ்சம்



    செய்முறை

    வேக வைத்த பட்டாணியை ஆறவைத்து பின் அதனை கொஞ்சம் பால் விட்டு நல்ல கூழாக அரைத்து கொள்ளவும்.

    பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் நெய் விட்டு மசித்த பட்டாணி கூழை போட்டு நன்கு கிளறவும்.

    இந்த கலவை கட்டியானவுடன் 2 கப் பாலில் முதலில் ½கப் பால் விட்டு கிளறவும்.

    பின் கொஞ்ச நேரம் கழித்து ½ கப் பால் விட்டு கிளறவும்.

    நன்கு கொதித்தபின் சர்க்கரை போட்டு கிளறவும்.

    பின் மீதமுள்ள பாலை விட்டு கிளறவும். நன்கு கொதித்து முட்டை விடும் சமயத்தில் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் ஏலக்காய் தூள், குங்குமப்பூ போட்டு கிளறி பரிமாறவும்.

    பசுமையான பச்சை பட்டாணி கீர் செய்து பிரிட்ஜில் வைத்தும் குளிர்ச்சியான நிலையிலும் பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் பாஸ்தா என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் சேர்த்து எளிய முறையில் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்தா - 150 கிராம்
    வெங்காயம் - 1
    பூண்டு - 6 பற்கள்
    மொசரெல்லா சீஸ் - ¼ கப் (Mozzarella cheese)
    கோதுமை / மைதா - 2 மேஜைக்கரண்டி
    பால் - 1 கப்
    காய்ந்த துளசி - 1 தேக்கரண்டி
    காளான் - 200 கிராம்
    காய்ந்த ஆர்கனோ - 1 தேக்கரண்டி
    நல்ல மிளகு தூள் - தேவையான அளவு
    பட்டர் - 2 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    காளானை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பெரிய பாத்திரத்தில் நீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் பாஸ்தாவை போட்டு வேக வைக்கவும். 10 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி பாஸ்தாவை தனியே வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பட்டரை போட்டு சூடானதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

    கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    தீயை குறைத்து விட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும். சீஸ், நல்ல மிளகு தூள், காய்ந்த துளசி, காய்ந்த ஆர்கனோ மற்றும் உப்பு சேர்க்கவும்.

    கடைசியாக வேக வைத்த பாஸ்தா சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    காளான் பாஸ்தா ரெசிபி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்ச்சல், சளி உள்ளவர்கள் புதினா ரசம் செய்து குடித்தால் உடலுக்கு தொம்பு கிடைக்கும். இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புதினா - ஒரு கப்,
    மிளகு - ஒரு டீஸ்பூன்,
    தனியா - ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    புளி - எலுமிச்சை அளவு,
    பெருங்காயம் - சிறிதளவு,
    கடுகு, நெய் - தலா அரை டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வாணலியில் நெய் விட்டு புதினாவை லேசாக வதக்கவும்.

    மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பை ஊற வைக்கவும்.

    புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    ஊற வைத்த பொருட்களுடன் புதினாவை சேர்த்து நைஸாக அரைக்கவும்.

    புளித் தண்ணீர் கொதித்ததும், அரைத்த புதினா கலவையை சேர்த்து, ஒரு கொதி வந்ததும், தண்ணீர், உப்பு சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும்.

    நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், தோசை, நாண், சப்பாத்தி, சாம்பார் சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் மிளகு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - 250 கிராம்
    பூண்டு - 4 பல்
    வெங்காயம் - 1
    குடை மிளகாய் - பாதி
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப
    காய்ந்த மிளகாய் - 2
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்,

    கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காய்ந்த மிளகாயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பூண்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் முக்கால் பாகம் வதங்கினால் போதுமானது.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் காளான், உப்பு சேர்த்து வதக்கவும். தண்ணீர் ஊற்றத்தேவையில்லை. இதிலேயே தண்ணீர் இருக்கும்.

    காளான் வெந்தவுடன் அதில் மிளகு தூள், கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் போட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான காளான் மிளகு மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்த ரசம் மீந்து விட்டால் மாலையில் அதில் பருப்பு வடை செய்து சேர்த்து ரசம் வடையாக சாப்பிடலாம். இன்று இந்த ரசம் வடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கடலை பருப்பு - ¾ கப்
    வெங்காயம் - 1
    சிவப்பு மிளகாய் - 3
    சீரகம் - ¾ தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கொத்தமல்லி இலை - 3 மேஜைக்கரண்டி
    பெருங்காயம் - ⅛ தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    ரசம் செய்ய தேவையான பொருட்கள்

    புளி - 1 தேக்கரண்டி
    தக்காளி - 1
    மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன்
    பெருங்காயம் - ⅛ தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    சிவப்பு மிளகாய் - 3
    கொத்தமல்லி / தனியா - 1 டீஸ்பூன்
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - ½ தேக்கரண்டி
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடுகு - ½ தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சில



    செய்முறை

    வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கலாம்.

    மிக்சியில், சிகப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு மற்றும் சீரகத்தை பொடித்துக்கொள்ளவும்.

    கடலைப்பருப்பிலிருந்து தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து கலக்கவும்.

    சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டிய உருண்டைகளை, லேசாக தட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.

    ரசத்திற்கு தேவையான புளியை வெந்நீரில் ஊறவைத்து ஒரு கப் தண்ணீரில் புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்.

    மிளகாய், மிளகு, சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில், புளி கரைசலை, 3 கப் தண்ணீர், மஞ்சள், உப்பு, தக்காளி, பெருங்காயம், ரசப்பொடி மற்றும் சில கறிவேப்பிலை சேர்த்து, கலந்து அடுப்பில் வைத்து, ரசம் கொதிவந்தவுடன், வடைடைகளை சேர்த்து, உடனடியாக அடுப்பை அணைத்து, மூடி வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சிவப்பு மிளகாய், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து 15 நிமிடங்கள் குறைந்தபட்சம் ஊறியபின் பரிமாறவும்.

    அருமையான ரசம் பருப்பு வடை ரெடி.

    குறிப்பு :

    காலையில் செய்த ரசத்திலும் இதை செய்யலாம்.
    ரசம் அல்லது வடை, இரண்டில் ஒன்று சூடாக இருக்க வேண்டும். இரண்டுமே சூடாக இருந்தால் வடை கரைந்துவிடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு செய்து கொடுக்க தக்காளி - புதினா சாதம் அருமையாக இருக்கும். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    உப்பு - தேவையான அளவு.

    அரைக்க:

    புதினா - ஒரு கைப்பிடி,
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி,
    பச்சை மிளகாய் - 4,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பூண்டு - 4 பல்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

    தனியே அரைக்க:

    தக்காளி - 3.

    தாளிக்க:

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பட்டை - ஒரு துண்டு.



    செய்முறை:

    அரிசியை உப்பு சேர்த்து உதிராக வேக வைத்த கொள்ளவும்.

    புதினா, கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    தக்காளியைத் தனியே அரைத்து வடிகட்டுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை போட்டு தாளித்த பின்னர், புதினா-கொத்தமல்லி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள்.

    பிறகு, தக்காளி சாறு, சிறிது உப்பு சேர்த்து, தக்காளி சாறு சற்று பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும்.

    ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறிப் பரிமாறுங்கள்.

    சூப்பரான தக்காளி, புதினா சாதம் ரெடி.

    குறிப்பு: சற்றுப் புளிப்புச் சுவை விரும்புபவர்கள், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த பொரி உப்புமாவை காலை உணவாகவோ, மாலையில் சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம். எளிதில் செய்யக்கூடிய இந்த பொரி உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    பொரி - 2 கப்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    கேரட் - 3 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
    மஞ்சள் - ¼ டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    கடுகு - ½ தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
    வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பொரியை நன்கு அலசி ஒரு வடிகட்டியில் தண்ணீரை முற்றிலுமாக வடியும்படி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கறிவேப்பிலை சேர்த்து, வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.

    கடைசியாக தண்ணீர் இல்லாமல் வடிந்த பொரியை சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி, இறக்கவும்.

    எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்..

    சூப்பரான எளிதில் செய்யக்கூடிய பொரி உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×