என் மலர்
சமையல்
- குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும்.
- சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும்.
தேவையான பொருட்கள்
சுறா மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 4
பூண்டு - 20 பல் பெரியது
இஞ்சி - 1 பெரிய துண்டு
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - ½ ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கடுகு - ½ ஸ்பூன்
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.
இப்போது சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும்.
மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும்.
மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும். இதை ஒரு ½ மணி நேரம் அப்படியே மூடி பொட்டு மூடி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிர் உதிராக வந்திருக்கும்.
இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.
- ஆண்மை அதிகரிக்க புதினாவை உணவில் அடிக்கடி சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் ரத்தம் சுத்தமடையும்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 2 கப்
கொத்தமல்லி - 3/4 கப்
பச்சை மிளகாய் - 5
புதினா - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
இஞ்சி- சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, புளி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ப.மிளகாய் என ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.
* வதக்கியவற்றை ஆறவைத்து சிறிது உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த விழுதை தோசை மாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி நல்லெண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்கவும்.
* சத்தான சுவையான புதினா கொத்தமல்லி தோசை ரெடி..
- குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் விங்ஸ் - 7
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - பாதி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
மைதா மாவு - 1/4 கப்
சோள மாவு - 1/4 கப்
முட்டை - 1
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* சிக்கன் விங்ஸ்களை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அந்த சிக்கன் துண்டுகளில் மூன்று பாகம் இருக்கும் அதில் கீழே இருக்கும் சிறிய பகுதியை வெட்டி விடவும், அதன் பின்னர் அதில் இருக்கும் எலும்புகளின் சதையை கத்தியால் மேலே தள்ளி லாலிபாப் போன்ற வடிவத்திற்கு கொண்டு வரவும்.
* ஒரு பாத்திரத்தில், சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, அரை எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
* இதில் தயார் செய்து வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, அவற்றின் அனைத்து பகுதிகளிலும் மசாலா படுமாறு நன்றாக தடவி 30 நிமிடத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
* இன்னொரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, முட்டை, சிறிதளவு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து ஓரளவிற்கு கெட்டியான பதத்தில் கிளறி கொள்ள வேண்டும்.
* ஊற வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை இந்த கலவையில் முக்கி, எண்ணெயில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
* தற்போது சுவையான ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் லாலிபாப் தயார்.
- மாலையில் குழந்தைகளுக்கு இந்த சிற்றுண்டியை செய்து தரலாம்.
- இந்த தோசை சுவையானதும் மட்டுமல்ல சத்தானதும் கூட.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்,
வெல்லம் (பொடித்தது) - 1 கப்,
பச்சரிசி மாவு - கால் கப்,
தேங்காய் (துருவியது) - கால் மூடி,
ஏலக்காய் - 4,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.
பின்னர் கோதுமை மாவு, வெல்ல நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.
வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.
வெல்லத்திற்கு பதில் கருப்பட்டியை சேர்த்தும் செய்யலாம்.
- சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- சிக்கனில் செய்யும் ரெசிபியில் ஒன்று தான் சிக்கன் சால்னா.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
வறுத்து அரைப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பட்டை - 2 இன்ச்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 5
கிராம்பு - 5
தேங்காய் - 1 கப் (துருவியது)
கசகசா - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, சிக்கனையும் சேர்த்து, மசாலா சிக்கனுடன் ஒன்று சேர நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு, தீயை குறைத்து, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, குக்கரை இறக்கி வைக்க வேண்டும்.
பின் குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை ஊற்றி கிளறி, 10 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் சால்னா ரெடி!!!
- முருங்கைக் கீரை ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
- சூப் பிடிக்காதவர்கள் இப்படி ரசம் போன்று செய்து அருந்தலாம்.
தேவையான பொருட்கள் :
முருங்கைக் கீரை (ஆய்ந்தது) - கால் கப்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தக்காளி - ஒன்று,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள:
வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
பூண்டு - 2 பல்,
கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு.
செய்முறை:
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையுடன் அரை கப் நீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்த பின்னர் அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் முருங்கைக் கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும் (தண்ணீர் அளவு போதவில்லை என்றால், சேர்த்துக்கொள்ளலாம்).
இறக்கும்போது எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கவும்.
சூப்பரான முருங்கைக் கீரை ரசம் ரெடி.
- மாலைநேர சிற்றுண்டியாக இந்த ரெசிபியை சாப்பிடலாம்.
- தோசை சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 2 கரண்டி
முட்டை - ஒன்று
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகு, சீரகத்தைப் பொடித்து வைக்கவும்.
முட்டையை உடைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.
தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்க்கவும் (சற்று தடிமனாக இருந்தால் நல்லது; மெல்லியதாக வார்க்க வேண்டாம்). அடித்து வைத்த முட்டையை தோசை மீது (வேகாத தோசை) ஊற்றவும்.
பின்னர் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.
வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டவும்.
கடாயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பாதி வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும்.
கடைசியாக மிளகு - சீரகப் பொடி சேர்த்து வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சூப்பரான கொத்து தோசை ரெடி.
- மிளகை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு வாயு கோளாறுகள் நீங்கும்.
- மிளகை தினந்தோறும் உண்பதால் ஆண்களின் மலட்டு தன்மையை போக்கும்.
தேவையான பொருட்கள் :
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம், கடலைப் பருப்பு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவைக்கு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
தண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்.
தனியா, மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் மிக்சியில் கொட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள பொருட்களை போட்டு வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கொதிக்க தொடங்கி எண்ணெய் பிரிந்து வந்தபிறகு இறக்கி பரிமாறலாம்.
- இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
- இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.
தேவையான பொருட்கள்:
பொரி - 1 1/2 கப்
கட்டி வெல்லம் துருவியது - 1/4 கப் (கோபுரமாக )
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
ஒரு வடசட்டியில் துருவிய வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வெல்லம் கரையும் வரை விடவும். கரைந்தவுடன் அதில் உள்ள தூசிகள் நீக்குவதற்கு வடிகட்டிக் கொள்ளவும். பின் மறுபடியும் வடிகட்டிய வெல்ல பாகை வடசட்டியில் வைத்து மிதமான சூட்டில் நன்றாக காய்ச்சவும்.
உருண்டைப் பதம் வரும் வரை இடை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சில நிமிடங்களில் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் வைத்துக் கொள்ளவும். தண்ணீரில் சிறிதளவு பாகை ஊற்றினால் கரையாமல் இருந்து அதை ஒன்று திரட்டி சிறு உருண்டை செய்ய முடிந்தால் அது தான் உருண்டை பதம்.
உருண்டை பதம் வந்ததும் உடனே தாமதிக்காமல் அடுப்பை அணைத்து அதில் பொரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி சூடு சற்று ஆறியதும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக கைகளை அழுத்தி உருண்டைகள் பிடிக்கவும்.
சுவையான குழந்தைகளுக்கான மாலை நேர நொறுக்குத் தீனி தயார்.
பொரி உருண்டை பிடிக்கும் பொழுது நன்றாக அழுத்திப் பிடிக்கவும். மொறு மொறுவென்று இருக்கும் பொரியை உபயோகிக்கவும் அப்பொழுது தான் சுவை நன்றாக இருக்கும்.
- வெறும் பாலக்கீரை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது.
- கீரையில் முட்டை சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை - 2 கப்
முட்டை -3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 1 கொத்து
பச்சைமிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
செய்முறை :
பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .
வெங்காயம் , தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய் , கறிவேப்பில்லை, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.(உப்பு சேர்க்கும் பொழுது கவனம் தேவை ஏனெனில் ஏற்கனவே கீரைக்கு சேர்த்துள்ளோம் அதை நினைவில் கொள்ளவும்). முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார் .
சுவையான பாலக் முட்டை புர்ஜி தயார் !!!!
- காராபூந்தியை இதுவரை கடைகளில் வாங்கி தான் சாப்பிட்டிருப்போம்.
- இந்த ஸ்நாக்ஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
முந்திரி - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
செய்முறை:
* ஒரு பெரிய பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, நன்கு அடர்த்தியாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
* அவ்வாறு கலக்கும் போது மாவுக் கலவையானது மிகவும் மென்மையாகவும், லேசான அடர்த்தியிலும் இருக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூந்திக் கரண்டியை (சிறுசிறு துளைகள் உள்ள கரண்டி) எடுத்துக் கொண்டு, அந்த கரண்டியை எண்ணெயின் மேற்புறத்தில் வைத்து பிடித்துக் கொண்டு, அந்த கரண்டியில் கடலை மாவுக் கலவையை ஊற்ற வேண்டும்.
* அவ்வாறு ஊற்றும் போது அதிலிருந்து மாவானது, துளைகள் வழியாக எண்ணெயில் விழும், அதனை பொன்னிறமாக பொரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். இதேப் போன்று அனைத்து மாவையும் ஊற்றி, பூந்திகளாக செய்துக் கொள்ளவும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வேர்க்கடவை, முந்திரி, கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு பொரித்து, பூந்தியுடன் சேர்த்து, கிளற வேண்டும்.
* இப்போது சுவையான மொறுமொறு காராபூந்தி ரெடி!!!
- தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காலை உணவு இட்லி.
- இன்று ரவா இட்லி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவா - 1 கப்
நெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
தயிர் - 1/4 கப்
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
தேவையான அளவு - உப்பு
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
முந்திரிப் பருப்பு - 10
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
செய்முறை :
ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு கலவையை தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் ரவை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.
வறுத்த ரவையுடன் தாளித்த கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும்.
அதனுடன் தயிர், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
20 நிமிடங்கள் கழித்து இட்லித் தட்டில் மாவை ஊற்றி 10 முதல் 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.
இப்போது சுவையான ரவா இட்லி தயார்.






