search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    முருங்கைக் கீரை ரசம்
    X

    முருங்கைக் கீரை ரசம்

    • முருங்கைக் கீரை ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
    • சூப் பிடிக்காதவர்கள் இப்படி ரசம் போன்று செய்து அருந்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    முருங்கைக் கீரை (ஆய்ந்தது) - கால் கப்,

    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,

    தக்காளி - ஒன்று,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

    உப்பு - தேவைக்கேற்ப.

    அரைத்துக்கொள்ள:

    வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - ஒன்று,

    பூண்டு - 2 பல்,

    கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்,

    தனியா - ஒரு டீஸ்பூன்.

    தாளிக்க:

    கடுகு - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய் - சிறிதளவு,

    காய்ந்த மிளகாய் - ஒன்று,

    கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு.

    செய்முறை:

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையுடன் அரை கப் நீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

    அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்த பின்னர் அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் முருங்கைக் கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும் (தண்ணீர் அளவு போதவில்லை என்றால், சேர்த்துக்கொள்ளலாம்).

    இறக்கும்போது எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கவும்.

    சூப்பரான முருங்கைக் கீரை ரசம் ரெடி.

    Next Story
    ×