என் மலர்
சமையல்
- வீட்டில் வடித்த சாதம் வைத்தும் சூப் தயாரிக்கலாம்.
- இந்த சூப்பை செய்வதும் மிகவும் எளிது.
தேவையான பொருட்கள் :
சாதம் வடித்த தண்ணீர், காய்கறி வேக வைத்த தண்ணீர் - தலா ஒரு கப்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.
செய்முறை:
சாதம் வடித்த தண்ணீர் கிடைக்கா விட்டால் சாதத்துடன் தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
அதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம்.
- இந்த சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
- குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும். மாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.
சப்பாத்திக்குத் தேவையான அளவில் மாவுகளை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் செய்து சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பில் போட்டு இருபக்கமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான மசாலா சப்பாத்தி ரெடி.
- முட்டையை வைத்து பல்வேறு வகையான ஆம்லெட்டுகளை செய்யலாம்.
- இன்று உருளைக்கிழங்கு சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 5
உருளைக்கிழங்கு - 2
மிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் தடவி உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போல வேகவிடவும்.
நன்கு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.
சூப்பரான உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி.
- இந்த ரெசிபியை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்கலாம்.
- இந்த ரெசிபியை செய்வதற்கு 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள் :
சப்பாத்தி - 5,
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - சிட்டிகை,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
சப்பாத்திகளின் நடுவே வதக்கிய கலவையை வைத்து பாய் போல சுருட்டவும்.
தோசைக்கல்லை காய வைத்து சுருட்டிய சப்பாத்திகளை வைத்து இருபுறமும் டோஸ்ட் செய்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான சப்பாத்தி ரோல் ரெடி.
- மாம்பழம், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடியது.
- ஊறுகாய், அல்வா, பர்பி, சாக்லெட் என்று ஏராளமான உணவுகளை மாம்பழத்தில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மாம்பழத்தை பொரிப்பதற்கு:
மாம்பழம் (விருப்பமான ரகம்) - 1
மைதா - ¼ கப்
சோள மாவு - ¼ கப்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
மசாலா தயாரிப்பதற்கு:
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
முந்திரி - 10
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
இதர பொருட்கள்:
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா மற்றும் சீரகப்பொடி தலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
கசூரி மேத்தி - சிறிதளவு
பிரஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், மைதா, சோளமாவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கட்டியில்லாமல், தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இதில், நறுக்கி வைத்துள்ள மாம்பழத் துண்டுகளைப் போட்டு, புரட்டிக் கொள்ள வேண்டும்.
அடுப்பில், வாணலியை வைத்து எண்ணெய்யை சூடாக்க வேண்டும். அதில் மாம்பழத் துண்டுகளைப் போட்டு, மேற்புறம் மட்டும் பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும்.
இந்த மேல்மாவில் விரும்பினால், முட்டையின் வெள்ளைக் கருவையும் கலந்துகொள்ளலாம்.
பின்னர் அடுப்பில், மற்றொரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு வெண்ணெய் போட்டு, உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, முந்திரி, உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சூடு ஆறியதும், சிறிதளவு தண்ணீர் விட்டு, பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் மீண்டும், வாணலியை வைத்து, அதில் வெண்ணெய் போட்டு, உருகியதும், காஷ்மீர் மிளகாய்த் தூள் கலந்து 30 விநாடிகள் வதக்க வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா மற்றும் சீரகத்தூள், தேவையான உப்பு கலந்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.
5 நிமிடம் கழித்து, மசாலாவின் ஓரத்தில் வெண்ணெய் பிரிந்து வரும்.
அந்த சமயத்தில், பொரித்த மாம்பழத் துண்டுகளை அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
பின்பு அதில் கசூரி மேத்தி, பிரஷ் கிரீம் கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
இப்போது சுவையான 'மேங்கோ பட்டர் மசாலா' ரெடி.
- வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது.
- ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு உதவும். ரத்தச்சோகை வராமல் காக்கும்.
தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் - ஒரு கப்,
கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் கலவை - அரை கப்,
கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்,
சர்க்கரை - சிட்டிகை,
வறுத்த வேர்க்கடலை, முந்திரி - சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை:
கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலுடன் தண்ணீர் சேர்த்து கழுவி ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் காய்கறிகள் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.
பிறகு அவல், உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி மூடி சிறிது நேரம் வேக விடவும்.
நன்கு வெந்த பிறகு எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.
மேலே வேர்க்கடலை, முந்திரி சேர்த்து சூடாக பரிமாறவும்.
- காலையில் மீந்து போன இட்லியில் போண்டா செய்யலாம்.
- குழந்தைகளுக்கு இந்த போண்டா மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருள்கள் :
இட்லி - 3
கடலைமாவு - 2 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - சிறிது
தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
இட்லிகளை உதிர்த்து வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
மீதமுள்ள எல்லா உருண்டைகளையும் இதே முறையில் பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான இட்லி போண்டா ரெடி.
- வாயு தொல்லை இருப்பவர்கள் இந்த துவையல் சாப்பிடலாம்.
- இந்த துவையலை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 4,
மாங்காய் இஞ்சி - 50 கிராம்,
கொத்துமல்லித் தழை - கைப்பிடி,
பச்சை மிளகாய் - 2,
புளி - சிறு அளவு,
துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
மாங்காய் இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும்.
நெல்லிக்காயையும் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி, நெல்லிக்காயுடன் மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட், தோசையின் மேலே தடவி சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு: இந்தத் துவையலை சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஒரு துளி நெய்விட்டுக் கலந்தால், சுவையான 'மாங்காய் இஞ்சி - நெல்லிக்காய் சாதம்' தயார்.
- இந்த ரெசிபி சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.
- சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கீமா - 1 கிலோ (நன்கு நீரில் அலசிக் கொள்ளவும்)
வெண்ணெய் - 1 கப்
தயிர் - 500 கிராம்
இஞ்சி பேஸ்ட் - 3 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 2
கிராம்பு - 5-7
பட்டை - 1 இன்ச்
கருப்பு ஏலக்காய் - 2
பச்சை ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 6-7
பிரியாணி இலை - 2
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கீமாவை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் வெண்ணெயை சேர்த்து நன்கு பிரட்டி, மற்றொரு அடுப்பில் உள்ள வாணலியில் போட்டு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு கீமாவை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து கீமா தயிரை முற்றிலும் உறிஞ்சியதும், அடுப்பில் இருந்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பட்டர் கீமா மசாலா ரெடி!!!
- உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் உணவில் பச்சைப்பயறை சேர்த்து கொள்ளலாம்.
- பச்சைப் பயறினை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
தேவையான பொருட்கள் :
பச்சைப் பயறு - ஒரு கப்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 3 ,
தோல் சீவிய இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
சின்னவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பச்சைப் பயறுடன் கடலைப் பருப்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் களைந்து தண்ணீரை வடிகட்டி மிக்சியில் நைசாக அரைத்து எடுக்கவும்.
வெங்காயத்துடன் மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
பச்சைப் பயறு மாவுடன் அரைத்த விழுது, அரிசி மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
தோசைக் கல்லை காய வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பெசரெட் ரெடி.
- குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- தள்ளுவண்டி கடையில் சாப்பிட்ட அதே சுவையில் இன்று சிக்கன் பக்கோடா செய்யலாம்
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
முட்டை - 1
சோள மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
கடலை மாவு - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
ஊற வைப்பதற்கு :
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு பிரட்டி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சிக்கன் பக்கோடா ரெடி!!!
- கம்பில் உள்ள நார்ச்சத்து வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் நீக்கும்.
- கம்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது
தேவையான பொருட்கள்
கம்பு - 1 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
* கம்பை நன்றாக கழுவி 1 கப் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் 4 அல்லது 5 முறை சுற்றி எடுக்கவும். உடைத்த ரவைபோல ஆகிவிடும்.
* உடைத்த கம்பை மீதமுள்ள 1 1/2 கப் தண்ணீரையும் சேர்த்து, உப்பு போட்டு குக்கரில் 5 விசில்கள் விட்டு எடுக்கவும்.
* குக்கர் சூடு ஆறிய பின்னர் வெளியில் எடுக்கவும். அரிசி வேகவைப்பதைவிட சற்று அதிக நேரம் வேகவிட வேண்டும்.
* கம்பு சாதம் தயார்!






