என் மலர்
சமையல்
- 30 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்யலாம்.
- சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு - 100 கிராம்
தக்காளி - 4 நறுக்கியது
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 1
தட்டிய இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிதளவு
கடுகு - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* கருவாட்டை இரண்டு மூன்று முறை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்தது வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமானதும், இதில் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பச்சை வாசனை போனதும், இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
* மசாலாவில் பச்சை வாசனை போனதும் இதில் கருவாடை போட்டு கிளறவும்.
* சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
* கிரேவி திக்கான பதம் வந்ததும் இறுதியாக சிறிது கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்.
* இப்போது சூப்பரான நெத்திலி கருவாடு தொக்கு ரெடி.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
- விருந்தினர் வந்தால் இந்த ரெசிபி செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
பிரெட் - 6 துண்டுகள்
உருளைக்கிழங்கு - கால் கிலோ
பன்னீர் - 100 கிராம்
துருவிய சீஸ் - விருப்பத்ற்கேற்ப
ப.மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சில்லி ப்ளோக்ஸ் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
ஆரிகானோ - 1 தேக்கரண்டி
சோள மாவு - கால் கப்
பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
சோள மாவில் 1 தேக்கரண்டி சில்லி ப்ளோக்ஸ், சிறிதளவு உப்பு, ஆரிகானோ, சிறிதளவு தண்ணீர் சேர்த்து திக்கான பதத்தில் கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் மஞ்சள் தூள், சில்லி ப்ளோக்ஸ் 1 தேக்கரண்டி, தனியா தூள், மிளகுதூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து ஒன்றாக கலந்து வரும் போது துருவிய சீஸை சேர்த்து வதக்கவும்.
மசாலா எல்லாம் ஒன்று சேர்ந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
பிரெட்டில் மேல் இந்த மசாலாவை தடவவும்.
பின்னர் மசாலா தடவிய பிரெட்டை நீளமான துண்டுகளாக வெட்டவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வெட்டிய பிரெட் துண்டுகளை சோள மாவு கலவையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ஆலு பிரெட் பிங்கர்ஸ் ரெடி.
- குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
- இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
அரிசி - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 4,
பூண்டு - 4 பல்,
பச்சைமிளகாய் - 4,
பட்டை - 2 துண்டு,
கிராம்பு - 2,
முந்திரி - 20
சீரகம் - அரை டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாகவும், பூண்டு - பச்சைமிளகாயைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, முந்திரி போட்டு தாளித்த பின்னர் பூண்டு - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர், தக்காளி சாறை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து, எண்ணெய் பிரியும்வரை கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
இப்போது சூப்பரான தக்காளி பிரியாணி ரெடி.
- இந்த சட்னி சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் உட்கொள்வது நல்லது.
- வாழைத்தண்டு சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு (நறுக்கியது) - ஒரு கப்
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தேங்காய்த்துருவல் - 10 டீஸ்பூன்
புளி - தேவையான அளவு
உளுந்து - 3 டீஸ்பூன்
தனியா(மல்லி) - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை :
வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
வெறும் வாணலியில் உளுந்து, தனியா (மல்லி), சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் வெள்ளை எள்ளை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து ஆறவிடவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வாழைத்தண்டு சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்கவும்.
வாழைத்தண்டு ஆறியதும், ஏற்கெனவே வதக்கிய வற்றுடன் சேர்த்து, தேங்காய்த் துருவல், உப்பு, புளி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான சத்தான வாழைத்தண்டு சட்னி ரெடி.
- பழைய சாதத்தில் எத்தனையோ உணவு வகைகளை செய்யலாம்.
- இன்று மீந்த போன பழைய சாதத்தில் வத்தல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 5,
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - 1/4 டேபிள் ஸ்பூன்,
உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
முதல் நாள் மீந்த சாதத்தை தண்ணீர் ஊற்றி எடுத்து வைத்து, அடுத்த நாள் அதை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் இருந்தால் மாவு புளித்து விடும்.
வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
காய்ந்த மிளகாய் வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக (சில்லி பிளேக்ஸ்) பொடித்துக் கொள்ளுங்கள்.
அதே ஜாரில் வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து தனியாக வைக்கவும்.
கடைசியாக பிழிந்து வைத்த சாதத்தை ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து அதை ஒரு அகலமான கிண்ணத்தில் ஊற்றவும்.
இப்போது அதனுடன் அரைத்து வெங்காய விழுது, சில்லி பிளேக்ஸ், சீரகம், பெருங்காயம், உப்பு அனைத்தையும் சேர்த்து மாவை தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
இப்பொழுது நல்ல வெயிலில் ஒரு பேப்பர் போட்டு அதன் மேல் பிளாஸ்டிக் கவரை விரித்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மாவை நன்றாக ஒரு முறை அடித்து விட்டு ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை ஊட்டுவது போல் சிறிது சிறிதாக அந்த பிளாஸ்டிக் கவர் மீது ஊற்றி தேய்த்து விடுங்கள். இதே போல அனைத்து மாவையும் ஊற்றி ஒரு நாள் முழுவதும் வெயிலில் வைத்து விடுங்கள்.
இப்போது இருக்கும் வெயிலுக்கு காலை ஊற்றி வைத்தால் மாலையே நன்றாக காய்ந்து விடும். அதை கவரில் இருந்து அப்படியே எடுத்து மறுபுறம் திருப்பிப் போட்டு அடுத்தநாள் இதே போல் வெயிலில் காய வைத்து எடுத்து விட்டால் போதும் அருமையான பழைய சாத வத்தல் தயார்.
இதை வீட்டின் நிழலிலும் காய வைக்கலாம். மேற்கொண்டு ஒன்று இரண்டு நாட்கள் ஆகும் அவ்வளவு தான்.
நன்றாக காய்ந்த வத்தலை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும் போது எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம்.
- இந்த சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- இந்த சட்னி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 2,
புதினா - அரை கைப்பிடி,
வர மிளகாய் - 5,
புளி - ஒரு சிறு நெல்லி அளவு,
இஞ்சி - ஒரு சிறு துண்டு,
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
கடுகு, கறிவேப்பிலை
செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
புதினா இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சியை தோல் உரித்து கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும் அதில் புளி மற்றும் இஞ்சி சேர்த்து வறுக்கவும்.
அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி சேர்த்த பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும்.
அடுத்து புதினா இலைகளைச் சேர்த்து சுருள வதங்கியதும், அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.
இந்த பொருட்களெல்லாம் நன்கு ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு நைஸாக அரைக்க வேண்டும்.
ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டுதாளித்து சட்னியில் கொட்டி இறக்கினால் தக்காளி புதினா சட்னி தயார்.
இதனுடன் சூடான இட்லி, தோசை வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
- டீ கடையில் வெங்காய போண்டா சாப்பிட்டு இருப்பீங்க.
- இன்று வீட்டிலேயே இந்த போண்டா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மைதா மாவு - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் சோம்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய போண்டா ரெடி.
- ஓட்ஸில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக உள்ளது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகும்.
தேவையான பொருள்கள் :
ஓட்ஸ் - 3 கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தயிர் - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* பச்சை மிளகாய் மற்றும் சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வறுத்த ஓட்ஸை போட்டு அதனுடன் சிறிது வெந்நீர், தயிர், அரிசி மாவு, சோள மாவு, அரைத்த பச்சை மிளகாய் கலவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* கடைசியாக அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இதில் கரைத்த மாவை மெல்லியதாக தோசை போல ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான, ஆரோக்கியமான ஓட்ஸ் தோசை தயார்.
* இதை அனைத்து விதமான சட்னியுடனோ, வெறும் தோசையாகவோ சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ்.
- இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரெட் - 5 துண்டு,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 4,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை,
காய்கறி - கால் கப்.
செய்முறை :
ஒரு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
சீரகத்தை கொரகொரப்பாக பொடித்துகொள்ளவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் பிரெட் துண்டுகளை பிய்த்து பிய்த்து போட்டு அதனுடன் பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கடலை மாவு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்துஅதில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பக்கோடா மாவு பதம் வந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பக்கோடா மாவை எடுத்து போட்டு எல்லா பக்கமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.
ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த பிரெட் பக்கோடா எண்ணெய் குடிக்காது.
சாதாரண வெங்காய பக்கோடாவை விட கூடுதல் சுவையுடன் நிச்சயம் இருக்கும்.
சட்டென ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த பிரட் பக்கோடா டொமேட்டோ சாஸ் உடன் தொட்டு கொண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
மாலையில் டீயுடன் சாப்பிடலாம் வயிறு நிறைவாக இருக்கும்.
- ரூமாலி ரொட்டி மெல்லிய கைகுட்டை போன்று இருக்கும்.
- இந்த ரொட்டி தந்தூரி வகைகளுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 2 கப்
கோதுமை மாவு - 1 1/2 கப்
பால் பவுடர் - கால் கப்
உப்பு - சிறிதளவு
சர்க்கரை பவுடர் - 3 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு, பால் பவுடர், உப்பு, சர்க்கரை பவுடர், 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளுங்கள். இந்த மாவு பூரி மாவுக்கு பிசைவது போல் அதிக கெட்டியாக இல்லாமல், கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ள வேண்டும். அதை நேரம் மாவை நன்றாக அடித்து பிசைய, இடி உரலில் இருக்கும் அந்த குழவியை வைத்து ஐந்து நிமிடம் இந்த மாவின் மீது அழுத்தி அடித்தால் போதும் மாவு மிருதுவாகி விடும். இல்லையென்றால் மாவை பரோட்டா மாவு பிசைவதை போல் அதிக சிரமப்பட்டு பிசைய வேண்டியிருக்கும்.
பிசைந்த மாவை இரண்டு மணி நேரம் வரை அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி இதை சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் வைத்து நல்ல மெலிதான ரொட்டியாக திரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது திரட்டிய பிறகு நாம் கையில் வைத்து பார்த்தால் கை தெரிய வேண்டும். மெல்லிய துணி பதத்திற்கு இந்த மாவை தேய்க்க வேண்டும்.
இந்த ரொட்டி சுட இரும்பு கடாய் அல்லது இண்டாலி கடாய் இரண்டில் ஏதாவது ஒன்றை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள். அடுத்தாக அடுப்பை பற்ற வைத்து வெறும் கடாயை வைத்து ஒரு முறை நன்றாக சூடுபடுத்திய பிறகு, கடாயை அடுப்பில் திருப்பி போட்டு விடுங்கள். அதாவது கடாயின் அடிப்புறம் மேலே இருப்பது போல் இருக்க வேண்டும். இப்போது ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது சூடான கடாயின் மேல் உப்பு தண்ணீரை தெளித்த பிறகு நீங்கள் தேய்த்து வைத்திருக்கும் ரொட்டியை அதன் மேல் போட்டு விடுங்கள். ரொட்டியை போட்ட பிறகு டிஷ்யூ பேப்பர் வைத்து லேசாக மேலே ஒட்டி எடுங்கள். அல்லது காட்டன் துணி இருந்தாலும் வைத்து ஒட்டி எடுங்கள். ரொட்டி லேசாக உப்பி வரும்.
ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு ரொட்டியை எடுத்து மறுபடியும் இன்னொரு முறை திருப்பி போடுங்கள். அதன் பிறகும் இதே போல் துணி வைத்து மேலே லேசாக அழுத்தி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ரூமாலி ரொட்டி நாம் வீட்டிலே செய்து விட்டோம்.
- சிக்கன், மட்டனில் கபாப் செய்து இருப்பீங்க.
- இன்று காய்கறியில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - அரை கிலோ
பச்சை பட்டாணி - 50 கிராம்
கேரட் - 1,
பீன்ஸ் - 10,
காலிஃப்ளவர் - கொஞ்சம்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, வெண்ணெய் - தேவைக்கு
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
கேரட், பீன்ஸ், காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும். கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் போட்டு வதக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் ஆறவைத்து அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இத்துடன் மிளகாய் தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு கலந்து மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கிரில் கம்பியில் வெண்ணெய் தடவி கொலுக்கட்டை போல் மாவை கம்பியில் பிடித்து வைக்கவும். இதனை பார்பிக்யூ சார்க்கோல் கிரில் அடுப்பில் வைத்து 20 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.
அவ்வப்போது உணவுகள் மீது வெண்ணெய் தடவி விட்டால் சட்டென கருகாது. வெந்ததும் மெதுவாக கம்பியில் இருந்து உருவி, சாஸ், உடன் பரிமாறவும். பார்பிக்பூ அடுப்பு இல்லாதவர்கள் தோசைக்கல்லில் போட்டும் எடுக்கலாம்.
இப்போது சூப்பரான வெஜிடபிள் சீக் கபாப் ரெடி.
இதில் எந்த காய்கறிகளை வேண்டுமானலும் சேர்த்து செய்யலாம்.
- சேமியாவில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று சேமியாவில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
சேமியா - 2 கப்
தண்ணீர் - 6 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
நெய் - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
முந்திரி - 20
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
காய்ந்த மிளகாய் - 4
தனியளா - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - 2 டீஸ்பூன்
பட்டை - ஒன்று
இலவங்கம் - 2
ஏலக்காய் - 2
செய்முறை:
சேமியாவுடன் பாசிப்பருப்பை வெறும் கடாயில் தனித்தனியாக போட்டு வாசனை வரும் வரை வறுத்து தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 4 விசிலிற்கு வேக விடவும்.
காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை லேசாக வறுத்து பொடித்து கொள்ளவும்.
கடாயை அப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மீதமுள்ள மசாலா பொருட்களை சேர்த்து தாளித்து முந்திரி சேர்த்து இறக்கவும்.
வேகவைத்த சேமியாவில் உப்பு மற்றும் திரித்த பொடியைச் சேர்த்துக் கிளறவும்.
தாளித்த பொருட்களை சேமியாவில் கொட்டி கிளறி சட்னியுடன் பரிமாறவும்.
இப்போது சேமியா மசாலா பொங்கல் ரெடி.






