என் மலர்
சமையல்
- இப்பொழுதே கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது.
- வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 2 கிலோ
வெள்ளை முழு உளுந்து - 200 கிராம்
பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி
கடுகு - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
வெந்தயப்பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
கறிவேப்பிலை - ஒரு சிறிய கப் அளவு
கரகரப்பாக அரைக்க
மிளகாய் வத்தல் - 10
சீரகம் - 2 மேஜைக்கரண்டி
பூண்டு - 1 பெரியது
செய்முறை
2 கிலோ வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி ஒரு பேப்பரில் பரப்பி நான்கு மணி நேரம் உலர விடவும்.
உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பூண்டை தோலுரித்து வைக்கவும்.
மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு மூன்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பருப்பை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இட்லி பதத்திற்கு அரைக்க தேவை இல்லை. 10 நிமிடம் அரைத்தால் போதும்.
அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், கடுகு, பெருங்காயப்பொடி, மஞ்சள்பொடி, வெந்தயப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
பிறகு கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வெங்காய கலவையை உருட்டாமல் சிறிது சிறிதாக எடுத்து தட்டுகளில் வைத்து வெயிலில் காய வைக்கவும். உருட்டி வைத்தால் வறுக்கும் போது சரியாக வேகாது.
அடுத்த நாள் வடகம் தட்டோடு ஒட்டி இருக்கும். எனவே ஒரு சிறிய மேஜைக்கரண்டி கொண்டு எடுத்து ஒரு பேப்பரில் பரப்பி வெயிலில் காய வைக்கவும்.
இரண்டு நாட்களில் வடகம் நன்கு காய்ந்து விடும்.
பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். தேவையான போது வறுத்து கொள்ளலாம்.
- மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக பயன்படுகிறது.
- சுரைக்காயை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் விரைவில் குணமடையும்.
தேவையான பொருள்கள்
இட்லி அரிசி - 200 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
சுரைக்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
மிளகாய் வத்தல் - 4
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இட்லி அரிசி, பருப்பு வகைகள் இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
சுரைக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி வைக்கவும்.
ஊறிய பிறகு அரிசி, மிளகாய் வத்தல் மற்றும் உப்பு சேர்த்து கிரைண்டரில் ரவை பதத்திற்கு அரைக்கவும்.
பிறகு அதனுடன் பருப்பு வகைகள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சுரைக்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பிறகு அதனுடன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக நல்லெண்ணெய் தடவவும். தோசைக்கல் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி பரப்பவும். சுற்றிலும் நல்லெண்ணெய் ஊற்றவும்.
ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும்.
இப்போது சுவையான அடை ரெடி.
தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சேர்த்து பரிமாறலாம்.
- கோதுமை சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று எளிய முறையில் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை சேமியா - 250 கிராம்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
தக்காளி - ஒன்று ,
பீன்ஸ் - 3,
கேரட் - ஒன்று,
பிரிஞ்சி இலை - ஒன்று,
பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு,
காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்),
உருளைக்கிழங்கு - ஒன்று,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும்.
உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.
பிறகு, கோதுமை சேமியா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சத்தான கோதுமை சேமியா பிரியாணி ரெடி.
- எப்போதும் ஒரே மாதிரி தோசை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.
- வெங்காய பொடி தோசை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப்
இட்லி பொடி - தேவையான அளவு
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக சுடவும்.
பின்னர் அதன் மேல் வெங்காயம், கொத்தமல்லி மற்றும் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
பின்பு தோசையை திருப்பி போட்டு, 1 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறினால், சூப்பரான வெங்காய பொடி தோசை ரெடி!!!
- சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூ
முந்திரி - ஒரு கைப்பிடி
மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
சோம்பு - கால் ஸ்பூன்
கசகசா - கால் ஸ்பூன்
பட்டை, கிராம்பு - சிறிதளவு
ஏலக்காய் - 2
ஜாதிக்காய் - 1
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 4 ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்
பால் - 2 ஸ்பூன்
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
பாதி முந்திரி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், புதினா மல்லித்தழையை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு, அதில் இஞ்சி, பூண்டு விழுது, முந்திரி மிளகு அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தயிர், நெய், எலுமிச்சை சாறு, சோயா சாஸ், தேவையான அளவு உப்பு போட்டு நன்கு பிசைந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதமுள்ள முந்திரியை போட்டு சிவந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் ஊறவைத்த சிக்கன் மசாலா கலவையை போட்டு, மிதமான தீயில் கிளறவும்.
சிக்கனில் உள்ள நீரே போதுமானதும். சிக்கன் நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி தழைதூவி இறக்கவும்.
இப்போது சூப்பரான செட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி.
- கொள்ளுவில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ரெசிபியை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
கொள்ளு - 50 கிராம்,
பச்சரிசி - 100 கிராம்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
நெய் - 2 ஸ்பூன்,
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
இஞ்சி - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.
செய்முறை :
கொள்ளுவை 10 மணி நேரம் ஊறவைக்கவும்
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொள்ளு, அரிசி இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே தளர வேகவிடவும்.
வெந்த கொள்ளு, அரிசியை ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு மசிக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான கொள்ளு காரப் பொங்கல் ரெடி.
- பஜ்ஜியில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
- இன்று தக்காளியில் பஜ்ஜி செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அதிகம் பழுக்காத நாட்டுத் தக்காளி - 5
பொட்டுக்கடலைமாவு - 50 கிராம்,
சோள மாவு - 25 கிராம்,
மைதா மாவு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் விழுது - அரை டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - சிறிதளவு,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
தக்காளியை கனத்த வில்லைகளாக நறுக்கி கொள்ளவும்.
பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மைதா மாவு, உப்பு, சமையல் சோடா, மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளி வில்லைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான தக்காளி பஜ்ஜி ரெடி.
குறிப்பு: தக்காளியில் இருக்கும் நீர் எண்ணெயில் சலசலப்பு உண்டாக்கும் என்பதால், மிதமான தீயில் மெதுவாக பொரித்தெடுக்கவும்.
- பன்னீரில் புரதச்சத்து அதிகம் உள்ளது.
- நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
பன்னீர் - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
மாவிற்கு...
மைதா - 3 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 'ஊற வைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு பௌலில் 'மாவிற்கு' கொடுத்துள்ள பொருட்களை எடுத்து நன்கு கலந்து, பின் சிறிது நீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். மாவானது மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக்கூடாது. இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து பன்னீர் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் 65 தயார்.
குறிப்பு:
* அனைத்து பன்னீர் துண்டுகளையும் ஒரே நேரத்தில் மாவில் போட்டு விட வேண்டாம். இல்லாவிட்டால், பன்னீர் எளிதில் உடைத்துவிடும்.
* உங்களுக்கு மைதா சேர்க்க பிடிக்காவிட்டால், அதற்கு பதிலாக சோள மாவு மற்றும் அரிசி மாவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
- குழந்தைகளுக்கு மேகி நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று மேகி நூடுல்ஸ், முட்டை சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மேகி பாக்கெட் - 1
முட்டை - 2
கேரட் துருவல் - 2 டீஸ்பூன்
குடைமிளகாய் - 1
தக்காளி - 1 (சிறியது)
ப.மிளகாய் - 3
வெங்காயம் - 1 (சிறியது)
உப்பு, எண்ணெய் - சிறிதளவு
மஞ்சள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய் , குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் .
மேகியை கடாயில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் மசாலாவை மட்டும் போட்டு வேக வைத்தால் போதும். தண்ணீர் இறுகும்வரை வேக வேண்டும். தண்ணீர் அதிகமாகிவிட்டால் வடித்துக்கொள்ளுங்கள். மேகி குழையாமல் உதிரியாக இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கேரட் துருவல், குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முட்டை கலவையை நன்கு பரப்பி ஊற்றுங்கள். தீ குறைத்து வைத்து அதன் மேலே வேக வைத்த மேகியை தூவினாற்போல் போடுங்கள். சிறு தீயிலேயே 2 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.
பின் தோசையை மடிப்பது போல் ஒரு புறமாக மடித்துக்கொள்ளுங்கள். திருப்பிப் போடக் கூடாது. மடித்த வாக்கில் அப்படியே தட்டி எடுத்து வைத்து பரிமாறவும்.
அவ்வளவுதான் மேகி நூடுல்ஸ் ஆம்லெட் தயார்.
- இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
ராகி சேமியா - 100 கிராம்,
உருளைக்கிழங்கு - 3,
கேரட் - 1,
வெங்காயம் - 1,
கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கு,
வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 50 கிராம்,
மைதா - 4 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது.
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து தண்ணீராகக் கரைத்துக் கொள்ளவும்.
ராகி சேமியாவை மிக்சியில் ரவை பதத்திற்குப் பொடித்துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய கேரட், வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், சோம்பு, பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டை அளவு எடுத்து விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை மைதா கரைசலில் முக்கி, பொடித்த ராகி சேமியாயில் போட்டு பிரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ராகி சேமியா வெஜிடபிள் கட்லெட் ரெடி.
- இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 150 கிராம்,
அரிசி மாவு - 25 கிராம்,
மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
ஸ்டஃப்பிங் செய்ய:
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசிக்கவும்),
பன்னீர் துண்டுகள் - 50 கிராம்,
தனியா தூள் - ஒரு டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
நறுக்கிய கொத்த மல்லித்தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.
செய்முறை:
ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு கலந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நீர்விட்டு தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்த உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான பன்னீர் - ஆலு ஸ்டஃப்டு போண்டா ரெடி.
- காய்கறிகள், சிக்கன் சேர்த்து செய்யும் சூப் உடலுக்கு நன்மை அளிக்கிறது.
- இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 1
காளான் – 1 கப்
கேரட் – 3
பீன்ஸ் - 3
கோஸ் - சிறிய துண்டு
தனி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு,மிளகு தூள், கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வேகவைத்து கொள்ளவும்.
பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை கொரகொரப்பாக தட்டி வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகள், காளான் சேர்த்து வதக்கவும்.
இதற்கு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி காய்கறிகளை வேக விடவும்.
இப்போது வேக வைத்த சிக்கனை சேர்த்து கொள்வதோடு உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்க வேண்டும்.
காய்கறிகள் மற்றும் சிக்கன் வெந்துள்ளதா? என சரிபார்த்துவிட்டு சிக்கன் வெஜிடபிள் சூப்பை பரிமாறலாம்.






