என் மலர்

  சமையல்

  ஹோட்டலில் வாங்க வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம் ரூமாலி ரொட்டி...
  X

  ஹோட்டலில் வாங்க வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம் ரூமாலி ரொட்டி...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூமாலி ரொட்டி மெல்லிய கைகுட்டை போன்று இருக்கும்.
  • இந்த ரொட்டி தந்தூரி வகைகளுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

  தேவையான பொருட்கள்

  மைதா மாவு - 2 கப்

  கோதுமை மாவு - 1 1/2 கப்

  பால் பவுடர் - கால் கப்

  உப்பு - சிறிதளவு

  சர்க்கரை பவுடர் - 3 டீஸ்பூன்

  எண்ணெய் - தேவையான அளவு

  செய்முறை :

  ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு, பால் பவுடர், உப்பு, சர்க்கரை பவுடர், 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளுங்கள். இந்த மாவு பூரி மாவுக்கு பிசைவது போல் அதிக கெட்டியாக இல்லாமல், கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ள வேண்டும். அதை நேரம் மாவை நன்றாக அடித்து பிசைய, இடி உரலில் இருக்கும் அந்த குழவியை வைத்து ஐந்து நிமிடம் இந்த மாவின் மீது அழுத்தி அடித்தால் போதும் மாவு மிருதுவாகி விடும். இல்லையென்றால் மாவை பரோட்டா மாவு பிசைவதை போல் அதிக சிரமப்பட்டு பிசைய வேண்டியிருக்கும்.

  பிசைந்த மாவை இரண்டு மணி நேரம் வரை அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி இதை சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் வைத்து நல்ல மெலிதான ரொட்டியாக திரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது திரட்டிய பிறகு நாம் கையில் வைத்து பார்த்தால் கை தெரிய வேண்டும். மெல்லிய துணி பதத்திற்கு இந்த மாவை தேய்க்க வேண்டும்.

  இந்த ரொட்டி சுட இரும்பு கடாய் அல்லது இண்டாலி கடாய் இரண்டில் ஏதாவது ஒன்றை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள். அடுத்தாக அடுப்பை பற்ற வைத்து வெறும் கடாயை வைத்து ஒரு முறை நன்றாக சூடுபடுத்திய பிறகு, கடாயை அடுப்பில் திருப்பி போட்டு விடுங்கள். அதாவது கடாயின் அடிப்புறம் மேலே இருப்பது போல் இருக்க வேண்டும். இப்போது ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது சூடான கடாயின் மேல் உப்பு தண்ணீரை தெளித்த பிறகு நீங்கள் தேய்த்து வைத்திருக்கும் ரொட்டியை அதன் மேல் போட்டு விடுங்கள். ரொட்டியை போட்ட பிறகு டிஷ்யூ பேப்பர் வைத்து லேசாக மேலே ஒட்டி எடுங்கள். அல்லது காட்டன் துணி இருந்தாலும் வைத்து ஒட்டி எடுங்கள். ரொட்டி லேசாக உப்பி வரும்.

  ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு ரொட்டியை எடுத்து மறுபடியும் இன்னொரு முறை திருப்பி போடுங்கள். அதன் பிறகும் இதே போல் துணி வைத்து மேலே லேசாக அழுத்தி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ரூமாலி ரொட்டி நாம் வீட்டிலே செய்து விட்டோம்.

  Next Story
  ×