search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கும் வாழைத்தண்டு சட்னி
    X

    இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கும் வாழைத்தண்டு சட்னி

    • இந்த சட்னி சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் உட்கொள்வது நல்லது.
    • வாழைத்தண்டு சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வாழைத்தண்டு (நறுக்கியது) - ஒரு கப்

    பூண்டு - 4 பல்

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    தேங்காய்த்துருவல் - 10 டீஸ்பூன்

    புளி - தேவையான அளவு

    உளுந்து - 3 டீஸ்பூன்

    தனியா(மல்லி) - ஒரு டீஸ்பூன்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    வெள்ளை எள் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு.

    செய்முறை :

    வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெறும் வாணலியில் உளுந்து, தனியா (மல்லி), சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் வெள்ளை எள்ளை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து ஆறவிடவும்.

    வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வாழைத்தண்டு சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்கவும்.

    வாழைத்தண்டு ஆறியதும், ஏற்கெனவே வதக்கிய வற்றுடன் சேர்த்து, தேங்காய்த் துருவல், உப்பு, புளி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான வாழைத்தண்டு சட்னி ரெடி.

    Next Story
    ×