என் மலர்tooltip icon

    சமையல்

    • இந்த ரெசிபி இனிப்பு மற்றும் காரசாரமான சுவையில் இருக்கும்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுபலம்.

    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 2 கப்

    ப.மிளகாய் - 2

    பூண்டு - 5 பல்

    வறுத்த வெள்ளை எள் - 1 டீஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    குடைமிளகாய் - 1

    வெங்காயம் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    செஸ்வான் சாஸ் - 2 டீஸ்பூன்

    எள் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - அரை டீஸ்பூன்

    வினிகர் - 1 டீஸ்பூன்

    சர்க்கரை 1 டீஸ்பூன்

    உப்பு - 1/2 + 1/2

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து அதில் சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் கலக்கவும்.

    பிசைந்த மாவை மெலிதாக விரல் வடிவில் உருளையாக தேய்க்கவும். தேய்த்த மாவை 1 இஞ்ச் அளவில் வெட்டிக்கொள்ளவும். மாவு அனைத்தையும் இவ்வாறு செய்ய வேண்டும்.

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் செய்து வைத்ததை போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்கவும், பின்னர் அதனை குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். அப்போது தான் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

    வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை நீளவாக்கில் மெல்லிதாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் எள்ளை போட்டு பொரிந்த பின்னர் பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்.

    அடுத்து வெங்காயம், ப.மிளகாய், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    பின்னர் அரை கப் தண்ணீர் ஊற்றவும். அடுத்து அதில் செஸ்வான் சாஸ், தக்காளி கெட்சப், சோயா சாஸ் , காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள், வினிகர், சர்க்கரை, உப்பு அரை டீஸ்பூன் சேர்த்து கலக்கவும். பச்சை வாசனை போனதும் அதில் வேக வைத்துள்ள ஸ்டிக்கை போட்டு 1 நிமிடம் நன்றாக கிளறவும்.

    இப்போது மசாலா நன்றாக சைஸ் ஸ்டிக்கில் சேர்ந்திருக்கும்.

    கடைசியாக மேலே கொத்தமல்லி தழை, வறுத்த எள் தூவி பரிமாறவும்.

    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • குழந்தைகளுக்கு இது சத்தான ரெசிபி.

    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 2

    வெண்ணெய் - 3 டீஸ்பூன்

    நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்

    பிரெட் துண்டுகள் - தேவைக்கேற்ப

    செய்முறை

    வாழைப்பழத்தை துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் வெண்ணெய் போட்டு உருகியதும் வெட்டிவைத்த வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை போட்டு குழைய வதக்கி இறக்கி ஆற விடவும்.

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விட்டு சப்பாத்தி கட்டையால் மெலிதாக தேய்க்கவும்.

    தேய்த்த பிரெட் நடுவில் வாழைப்பழ மசியலை வைத்து பிரெட்டை உருட்டி ஓரங்களில் நன்றாக ஒட்டி விடவும். அப்போது தான் வாழைப்பழம் வெளியில் வராது.

    இப்போது மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் செய்து வைத்த பிரெட் உருண்டைகளை போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான வாழைப்பழ பிரெட் டோஸ்ட் ரெடி.

    • பிரெட் வைத்து சூப்பரான கச்சோரி செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1

    ப.மிளகாய் - 1

    உருளைக்கிழங்கு - 1

    பிரெட் துண்டுகள் - 10

    கேரட் - 1

    குடைமிளகாய் - 1

    வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப்

    கொத்தமல்லி - சிறிதளவு

    சீரகம் - 1 டீஸ்பூன்

    சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கருப்பு உப்பு - கால் டீஸ்பூன்

    ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - அரை டீஸ்பூன்

    சீரகத்தூள்- அரை டீஸ்பூன்

    மைதா மாவு - 1 டீஸ்பூன்

    சோள மாவு - 3 டீஸ்பூன்

    முந்திரி - 10

    பிரெட் தூள் - தேவையான அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையானஅளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கேரட், குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    சோளமாவில் சில்லி பிளேக்ஸ் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து முந்திரியை உடைத்து போட்டு வறுபட்டதும் சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய், வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கருப்பு உப்பு, ஆம்சூர் பவுடர், தனியா தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    மசாலா எல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கி குளிர வைக்கவும்.

    பிரெட் துண்டை பூரி கட்டையால் மெலிதாக தேய்க்கவும்.

    தேய்ந்த பிரெட்டை வட்ட வடிவ கட்டரால் வெட்டவும். இவ்வாறு அனைத்து பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ளவும்.

    ஒரு வட்ட வடிவில் வெட்டிய பிரெட் துண்டில் மசாலாவை நடுவில் வைக்கவும். மற்றொரு பிரெட்டி துண்டில் ஓரங்களில் மைதா பசையை தடவி மசாலா வைத்த பிரெட்டில் மேல் வைத்து மூடி விடவும். ஓரங்களில் நன்றாக அழுத்தி விடவும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.

    செய்து வைத்தவற்றை சோளமாவு கரைசலில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கச்சோரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஆலு பிரெட் கச்சோரி ரெடி.

    • கொத்தமல்லி, புதினாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு சத்தான லஞ்ச் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி - ஒரு கப்,

    கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கப்,

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 5,

    பட்டை - ஒரு துண்டு,

    கிராம்பு - 2,

    ஏலக்காய் - 1,

    உருளைக்கிழங்கு - 1,

    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மூன்றையும் போட்டு 5 நிமிடம் வதக்கி, ஆற வைத்து, ஆறியதும் மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    இரண்டும் நன்றாக வதங்கியதும் உருளைக்கிழங்கு, அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

    நெய்யில் அரிசியை வறுத்து, குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

    குக்கரை மூடி, மிதமான தீயில் வேக விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கினால்... கமகம கிரீன் பிரியாணி ரெடி!

    • சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    முட்டையை வறுக்க

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் தூள், மிளகாய் தூள் - தலா 1/4 டீஸ்பூன்

    வேகவைத்த முட்டை - 7

    மசாலா செய்ய

    வெங்காயம் - 4

    பச்சை மிளகாய் - 4

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

    சீரக தூள் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி இலை - நறுக்கியது

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    * பிறகு அதில் வேகவைத்த முட்டையை கீறி சேர்த்து 3 நிமிடம் வறுத்து கொள்ளவும்.

    * மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து கலந்து தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.

    * மசாலா வெந்ததும் அதில் கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.

    * பிறகு வறுத்த முட்டைகளை சேர்த்து கலந்து, சிறிது கொத்தமல்லி தூவி இறக்கினால் வெங்காயம் முட்டை மசாலா தயார்.

    • இந்த புட்டிங் செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உடனே செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிவப்பு அவல் - 1 கப்

    நாட்டுச்சர்க்கரை - தேவைக்கேற்ப

    தேங்காய் துருவல் - கால் கப்

    செவ்வாழைப்பழம் - 2

    செய்முறை

    சிவப்பு அவலை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். அவல் நன்றாக குழைய ஊறக்கூடாது.

    ஊறிய அவலை நன்றாக தண்ணீரை பிழிந்து எடுத்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நாட்டுச்சர்க்கரை, தேங்காய் துருவல், செவ்வாழைப்பழத்தை போட்டு நன்றாக பிசைத்து உருண்டைகளாக பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பு அவல் வாழைப்பழ புட்டிங் ரெடி.

    • இந்த ரெசிபி மிகவும் காரமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.
    • குழந்தைகளுக்கு சிக்கன் 65 என்றால் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 3

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

    அரிசி மாவு - 1 டீஸ்பூன்

    முட்டை - 1

    கறிவேப்பிலை - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

    சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பொளலில் சோள மாவு, அரிசி மாவு, முட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை, சோள மாவு கலவையில் சேர்த்து கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் பொரித்து, எடுத்து விட வேண்டும்.

    பின் அந்த எண்ணெயில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இறுதியில் அதனை ஒரு தட்டில் போட்டு, அதன் மேல் பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி ரெடி!!!

    • தினமும் இந்த ஜூஸ் குடித்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும், கொழுப்பும் கரையும்.
    • இந்த ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளரிக்காய் - 1

    எலுமிச்சை - 1

    புதினா - சிறிது

    துருவிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிக்சியில் வெள்ளரிக்காயை போட்டு அரைத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் புதினா, துருவிய இஞ்சியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும்.

    அரைத்த ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.

    இப்படி தினமும் செய்து வரும் போது, 15 நாட்களிலேயே உங்கள் தொப்பையில் ஓர் நல்ல மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். அதிகளவு தொப்பை உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

    • தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.
    • சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் மூளை - 5

    சின்ன வெங்காயம் - 200 கிராம்

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 2 டீஸ்பூன்

    சீரக தூள் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு -தேவையான அளவு

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    * மட்டன் மூளையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் அதில் மட்டன் மூளையை போட்டு அதனுடன் 1/2 டீஸ்பூன், சிறிது உப்பு போட்டு 5 நிமிடம் வேகவிடவும். பிறகு தண்ணீரில் இருந்து எடுத்து, அதில் உள்ள நரம்புகளை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

    * தக்காளி குழைய வதங்கி எண்ணெய் பிரிந்தது வரும் போது அதில் நறுக்கிய மட்டன் மூளையை சேர்த்து கலந்து, அதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

    * பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

    * தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்ததும் இதில் சிறிது அளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் மட்டன் மூளை மிளகு மசாலா தயார்.

    • சிவப்பரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
    • சிவப்பரிசியில் புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    சிவப்பரிசி - 1 கப்

    வெங்காயம் - ஒன்று

    பச்சை மிளகாய் - ஒன்று

    சீரகம் - ஒரு டீஸ்பூன்

    கேரட் - ஒன்று

    தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    சிவப்பரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் போட்டு அரைத்து சிவப்பரிசி மாவு தயார் செய்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாகப் கலந்து அதில் வெந்நீரைச் சிறிது சிறிதாக விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை அரை மணி நேரம் ஈர துணியால் மூடி வைக்கவும். பின்னர் சிறு சிறு உருண்டையாக்கி வட்டமாகத் தட்டி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த ரொட்டியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பரிசி ரொட்டி ரெடி.

    • பேபி கார்னில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ரெசிபியை செய்ய 30 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    பேபி கார்ன் - 1 பாக்கெட்

    பிரஷ் க்ரீம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

    பால் - 1/2 கப்

    பெரிய வெங்காயம் - 1

    சீரகம் - 1 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    வதக்கி அரைப்பதற்கு

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 2

    பூண்டு - 4 பற்கள்

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பேபி கார்னை துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்.

    பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

    அடுத்து அதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிரேவி போன்று வந்ததும், தீயைக் குறைத்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    பின் அதில் பேபி கார்னை நீருடன் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், பேபி கார்ன் மசாலா ரெடி.

    • இந்த ரொட்டியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • வெயிலுக்கு ஏற்ற உணவு இது.

    தேவையான பொருட்கள்

    வெள்ளரிக்காய் - 2

    தேங்காய் - 3/4 கப்

    ரவை - 1 கப்

    கொத்தமல்லி இலை -சிறிதளவு

    பச்சை மிளகாய் - 4

    எண்ணெய் - தேவையான அலைவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெள்ளரிக்காய் மற்றும் தேங்காயை துருவி கொள்ள வேண்டும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிறகு ஒரு பாத்திரத்தில் துருவிய வெள்ளரிக்காய், தேங்காய், ரவை, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.

    பிசைந்த மாவை சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து செய்து வைத்த ரொட்டியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    பத்தே நிமிடத்தில் சுவையான, சூடான, ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரொட்டி தயார்.

    ×