search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் ஆலு பிரெட் கச்சோரி
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் ஆலு பிரெட் கச்சோரி

    • பிரெட் வைத்து சூப்பரான கச்சோரி செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1

    ப.மிளகாய் - 1

    உருளைக்கிழங்கு - 1

    பிரெட் துண்டுகள் - 10

    கேரட் - 1

    குடைமிளகாய் - 1

    வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப்

    கொத்தமல்லி - சிறிதளவு

    சீரகம் - 1 டீஸ்பூன்

    சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கருப்பு உப்பு - கால் டீஸ்பூன்

    ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - அரை டீஸ்பூன்

    சீரகத்தூள்- அரை டீஸ்பூன்

    மைதா மாவு - 1 டீஸ்பூன்

    சோள மாவு - 3 டீஸ்பூன்

    முந்திரி - 10

    பிரெட் தூள் - தேவையான அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையானஅளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கேரட், குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    சோளமாவில் சில்லி பிளேக்ஸ் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து முந்திரியை உடைத்து போட்டு வறுபட்டதும் சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய், வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கருப்பு உப்பு, ஆம்சூர் பவுடர், தனியா தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    மசாலா எல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கி குளிர வைக்கவும்.

    பிரெட் துண்டை பூரி கட்டையால் மெலிதாக தேய்க்கவும்.

    தேய்ந்த பிரெட்டை வட்ட வடிவ கட்டரால் வெட்டவும். இவ்வாறு அனைத்து பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ளவும்.

    ஒரு வட்ட வடிவில் வெட்டிய பிரெட் துண்டில் மசாலாவை நடுவில் வைக்கவும். மற்றொரு பிரெட்டி துண்டில் ஓரங்களில் மைதா பசையை தடவி மசாலா வைத்த பிரெட்டில் மேல் வைத்து மூடி விடவும். ஓரங்களில் நன்றாக அழுத்தி விடவும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.

    செய்து வைத்தவற்றை சோளமாவு கரைசலில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கச்சோரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஆலு பிரெட் கச்சோரி ரெடி.

    Next Story
    ×