என் மலர்
சமையல்
- முஸ்லீம்கள் நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள்.
- சூடான சாதத்துடன் சாப்பிடவும் இந்த ரெசிபி சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - அரை கிலோ
வரமிளகாய் - 18
வெங்காயம் - 2
பட்டை - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வாக்கி, பின் மட்டனை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.
அடுத்து அதில் பட்டை, ஏலக்காய், இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு பொடி, சீரகப் பொடி மற்றும் மட்டன் மசாலா சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் குக்கரை மூடி 2 விசில் போட வேண்டும்.
வரமிளகாயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மிளகாய் விழுதுடன் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து, அதனை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து பிரட்டி, பச்சை வாசனை நீங்கி, மட்டனுடன் மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், காஷ்மீரி மட்டன் குருமா ரெடி!!!
- சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
- சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
சாமை - அரை கப்
பயத்தம் பருப்பு - அரை கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கேரட், பீன்ஸ் - 1/4 கப்
இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 100 மில்லி
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க
பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை,
கடுகு - சிறிதளவு
செய்முறை:
சாமை அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
பயத்தம் பருப்பை வறுத்து கொர கொரப்பாக பொடித்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிய பின், அரை லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அதில் பயத்தம் பருப்பு, சாமை, மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். பிரஷர் குறைந்தும், மூடியைத் திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி உடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் சேர்த்து, உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான சாமை காய்கறி கஞ்சி தயார்.
- குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இந்த ரெசிபி செய்ய செலவோ குறைவு. சுவையோ அதிகம்.
தேவையான பொருட்கள்:
பேக்கிங் கொக்கோ பவுடர் - ¼ கப்
சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1½ கப்
வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்
துருவிய சாக்லேட் - தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை கொட்டி கலக்கவும்.
பின்பு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும்.
இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும்.
கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும்.
பின்னர் அதை கப்களில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.
நன்றாகக் குளிர்ந்ததும் துருவிய சாக்லேட் மேலே தூவி பரிமாறவும்.
சூப்பரான சாக்லேட் புட்டிங் ரெடி.
- வேப்பம் பூ அவ்வளவு கசப்பாக இருக்காது.
- இந்த ரசம் குடிப்பதால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துவிடும்.
தேவையான பொருட்கள்
வேப்பம் பூ - 2 மேஜைக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 6 பல்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பில்லை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
புளியை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். புளியை நன்றாக சாறு வரும் வரையில் நன்றாக கரைத்து ரசம் தயாரிக்கும் பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நல்ல பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளி கரைசலில் வெட்டிய தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கையால் நன்றாக பிசைந்துவிடவும்.
தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் மற்றும் வேப்பம் பூ போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும்.
இறுதியாக ரச கலவையை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதியில் நல்ல நுரையாக எழும்பி வரும்போது சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும்.
இப்போது மருத்துவ குணம் நிறைந்த வேப்பம் பூ ரசம் ரெடி.
இந்த சுவையான மணமான ரசத்தை சுட சுட சாதத்தில் போட்டு அப்பளம் அல்லது வற்றல் வைத்து சாப்பிடலாம்.
அல்லது சூப் போன்றும் குடிக்கலாம்.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
- 15 நிமிடத்தில் சூப்பரான சுவையான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
சீஸ் துருவல் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
ஓரிகானோ - அரை டீஸ்பூன்
சோள மாவு - 3 டீஸ்பூன்
பிரெட் தூள் - 2 டீஸ்பூன் + தேவையான அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
மிக்சியில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள், தனி மிளகாய் தூள், சில்லி பிளேக்ஸ், ஓரிகானோ, பிரெட் தூள் 2 டீஸ்பூன், வெண்ணெய், சோயா சாஸ் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கி கொத்தமல்லியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
பிரெட் தூளை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.
சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து உருண்டையாக உருட்டி மெல்லிய பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவில் அதில் உருண்டையை வைத்து மெலிதாக பூரி போல் தட்டவும். பின்னர் அதன் நடுவில் சிறிதளவு சீஸை வைத்து நன்றாக மூடி சதுரமான வடிவில் செய்யவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த பைட்ஸை சோள மாவு கரைசலில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
இப்போது சூப்பரான சிக்கன் சீஸ் பைட்ஸ் ரெடி.
- இந்த ரெசிபி கர்நாடகாவின் பாரம்பரிய உணவாகும்.
- இந்த ஸ்நாக்ஸ் கொழுப்பு குறைந்த உடலுக்கு ஆரோக்கியமான உணவு.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1 கப்
தண்ணீர் - 1/2 லிட்டர் + 3 கப்
பச்சை மிளகாய் - 15 (மிளகாயின் காரத்தன்மைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும்)
இஞ்சி - விரல் அளவு 1 துண்டு
தேங்காய் துருவல் - 1 கப்
தேங்காய் துண்டுகள்(பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
வெந்தயம் இலைகள் - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
* வெந்தயம் இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* துவரம் பருப்பை நன்றாக கழுவி 5 மணிநேரம் ஊற வைக்கவும். 5-6 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி விடவும்
* மிக்சிஜாரில் ப.மிளகாய், இஞ்சி, ஊற வைத்த துவரம் பருப்பில் ஒரு கைக்கரண்டி அளவு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
* பிறகு மறுபடியும் ஒரு கைக்கரண்டி துவரம் பருப்பை போட்டு கொர கொரப்பாக அரைத்து அதையும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த முறையில் ஊற வைத்த துவரம் பருப்பு முழுவதையும் அரைத்து கொள்ளவும்.
* அரைத்த மாவில் தேங்காய் துருவல், நறுக்கிய தேங்காய் துண்டுகள், வெந்தயம் இலைகள், உப்பு, சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
* ஒரு இட்லி பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதன் மேல் வைக்க வேண்டும்.
* இப்பொழுது பருப்பு கலவையை கொஞ்சம் எடுத்து கைகளால் நீள் வட்ட வடிவில் பந்து மாதிரி உருட்டி இட்லி தட்டில் வைக்க வேண்டும். இவ்வாறு மாவை அனைத்தையும் செய்ய வேண்டும்.
* இட்லி பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக வைத்து எடுத்து ஒரு தட்டிற்கு மாற்றி பரிமாறவும்.
* இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, கார சட்னி சூப்பராக இருக்கும்.
* வெந்தயம் இலைகளுக்கு பதிலாக கேரட் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கலாம்.
- ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
- இந்த ரெசிபியை செய்ய 20 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
கிரீன் ஆப்பிள் - 2
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - அரை கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சிவப்பு கலர் பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை
ஆப்பிளை விதை நீக்கி விட்டு நீளமான வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும். வெட்டிய ஆப்பிளை ஈரம் இல்லாமல் நன்றாக துணியால் துடைத்து கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
சர்க்கரை நன்றாக கரைந்து பாகு பதம் வரும் போது சிறிது பாகை எடுத்து தண்ணீரில் ஊற்றினால் பாகு கரையால் கையால் உருட்டும் பதத்திற்கு வரும். அந்த சமயத்தில் சிவப்பு கலர் பவுடர் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
அடுத்து ஒவ்வொரு ஆப்பிள் வில்லைகளாக சர்க்கரை பாகில் முக்கி எடுத்து பட்டர் பேப்பரில் வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
இதை 2 மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.
இப்போது சூப்பரான ஆப்பிள் மிட்டாய் ரெடி.
இதே போல் உங்களுக்கு விருப்பமான பழங்களில் செய்யலாம்.
- வத்த குழம்பு என்றதுமே அனைவரது வாயிலும் எச்சில் ஊறும்.
- ஐயர் வீட்டு வத்த குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சுண்டக்காய் - 1 கப்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
புளி - 75 கிராம் (சாறு எடுத்துக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் - 10
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
அதே வாணலியை வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து, அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஐயர் வீட்டு வத்த குழம்பு ரெடி!!!
- பரோட்டா பிரியர்கள் மத்தியில் ரோட்டுக்கடை கிளி பரோட்டா படு ஃபேமஸ்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
சால்னாவுடன் சிக்கன் அல்லது மட்டன் தொக்கை வைத்து அதன் மேல் பரோட்டாவை பிரித்து போட்டு வாழை இலையால் மூடி 15 நிமிடம் அடுப்பு தவாவில் வேக வைத்து எடுத்தால் பூ போல் பிரியும் வாழை இலை பரோட்டா தயார். இதன் வாசனையே பசியை வரவழைத்து நம்மை சாப்பிட தூண்டும். இதை வீட்டிலேயும் செய்யலாம். செய்முறையை இந்த பதிவில் பகிர்கிறோம்.
தேவையான பொருட்கள்
வெஜிடபிள் சால்னா - 2 கப்
பரோட்டா - 2
வாழை இலை - 1
நறுக்கிய வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
வாழை இலையை அடுப்பில் காட்டி இரு பக்கமும் லேசாக சூடுப்படுத்தி எடுத்து கொள்ளவும்.
பின்பு இலையை பிரித்து வைத்து அதன் மேல் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னா ஊற்றவும்.
இப்போது அதில் நறுக்கிய வெங்காயத்தை தூவவும்.
பின்பு அதன் மேல் மீண்டும் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னாவை ஊற்றவும்.
இறுதியாக அதன் மேல் சிறிதளவு கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை தூவி வாழை இலையை பக்குவமாய் மடித்து நூல் அல்லது வாழை நாரை வைத்து வாழை இலையை கட்டி எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மேல் கட்டி வைத்துள்ள வாழை இலை பரோட்டாவை வைக்கவும்.
இப்போது கடாயில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
இப்போது வாழை இலையை திருப்பி போட்டு மீண்டும் சிறிதளவு தண்ணீர் தெளித்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.
சூப்பரான வாழை இலை கிளி பரோட்டா தயார்.
- ரசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
- இன்று வாழை இலை ரசம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிறிய பிஞ்சி வாழை இலை - 1
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 8 பல்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, பெருங்காயம், வெந்தயம் - தாளிக்க
செய்முறை
வாழை இலையை நன்றாக கழுவிய பின்னர் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை துண்டுகளாக வெட்டிகெள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இளம் வாழை இலை, பூண்டு, மிளகு , சீரகம், தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். மசாலா நன்கு வதங்கியதும் அதில் புளிக்கரைசல் ,உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூடான சுவையான ஆரோக்கியமான வாழை இலை ரசம் ரெடி.
இதனை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது சூப் போன்றும் குடிக்கலாம்.காய்ச்சல், சளி உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும்.
- இந்த ஸ்நாக்ஸ் செய்ய 20 நிமிடங்களே போதுமானது.
- இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா கொரகொரப்பாக பொடித்தது - 1 டீஸ்பூன்
சீரகத்தூள், கரம் மசாலா தூள், சிக்கன் டிக்கா மசாலா -தலா அரை டீஸ்பூன்
முட்டை - 1 (பாதி)
பிரெட் - 2 ஸ்லைஸ்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 3 பெரியது
சோளா மாவு - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சி ஜாரில் சிக்கனை போட்டு அதனுடன், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, உப்பு, தனி மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், சிக்கன் டிக்கா மசாலா, கொரகொரப்பாக பொடித்த தனியா, பாதி முட்டை, பிரெட் துண்டுகள், எலுமிச்சை சாறு, சோயா சாஸ் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த மசாலா திக்கான பதத்தில் இருக்கும். கட்டியாக இருக்க வேண்டும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு 1 1/2 இஞ்ச் அளவில் தடிமனாக வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்(படத்தில் உள்ளபடி). வெட்டிய உருளைக்கிழங்கின் நடுவில் பாதி அளவு வெட்டவும். இரண்டாக வெட்டி விடக்கூடாது. பாதிஅளவு மட்டுமே வெட்ட வேண்டும்.
உருளைக்கிழங்கின் மேல் சோளா மாவை போட்டு நன்றாக பிரட்டி விடவும்.
இப்போது அரைத்த மசாலவை சிறிது எடுத்து உருளைக்கிழங்கில் நடுவில் வைக்கவும். ஒரங்களில் வெளியில் வரக்கூடாது. இவ்வாறு அனைத்து உருளைக்கிழங்கிலும் வைக்கவும்.
அடுத்து கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த உருளைக்கிழங்கை போட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
இப்போது சூப்பரான சிக்கன் ஸ்டப்ஃடு உருளைக்கிழங்கு ரெடி.
- தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
- கேழ்வரகில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 3 ஸ்பூன்,
தண்ணீர் - 4 கப்,
கேரட் - 1
பசலை கீரை - அரை கப்
பச்சை பட்டாணி - கால் கப்
காலிஃப்ளவர் - சிறிதளவு
துருவிய கோஸ் - கால் கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
சோயா பீன்ஸ் - கால் கப்
பீன்ஸ் - கால் கப்
எலுமிச்சை பழம் - பாதி
உப்பு - தேவைக்கு
மிளகு தூள் - தேவைக்கு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை
* கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கேழ்வரகு மாவை போட்டு வறுத்து கொள்ளவும்.
* பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காலிஃப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து வைக்கவும்.
* கேழ்வரகு மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நெய், பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, காலிஃப்ளவர், சோயா பீன்ஸ், துருவிய கோஸ், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் 12 நிமிடம் கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து கொதிக்கவிடவும்.
* கரைத்த வைத்த கேழ்வரகு கரைசலை ஊற்றி(கட்டி விழக்கூடாது) நன்றாக கலக்கி விடவும். அதை 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து 1 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
* இப்போது சூப்பரான கேழ்வரகு - காய்கறி சூப் ரெடி.
* விருப்பான எல்லா காய்கறிகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.






