search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்: கர்நாடக ஸ்டைல் காரசாரமான பருப்பு உருண்டை
    X

    ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்: கர்நாடக ஸ்டைல் காரசாரமான பருப்பு உருண்டை

    • இந்த ரெசிபி கர்நாடகாவின் பாரம்பரிய உணவாகும்.
    • இந்த ஸ்நாக்ஸ் கொழுப்பு குறைந்த உடலுக்கு ஆரோக்கியமான உணவு.

    தேவையான பொருட்கள்

    துவரம் பருப்பு - 1 கப்

    தண்ணீர் - 1/2 லிட்டர் + 3 கப்

    பச்சை மிளகாய் - 15 (மிளகாயின் காரத்தன்மைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும்)

    இஞ்சி - விரல் அளவு 1 துண்டு

    தேங்காய் துருவல் - 1 கப்

    தேங்காய் துண்டுகள்(பொடியாக நறுக்கியது) - 1/2 கப்

    வெந்தயம் இலைகள் - 2 கப்

    உப்பு - தேவைக்கேற்ப

    சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    * வெந்தயம் இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * துவரம் பருப்பை நன்றாக கழுவி 5 மணிநேரம் ஊற வைக்கவும். 5-6 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி விடவும்

    * மிக்சிஜாரில் ப.மிளகாய், இஞ்சி, ஊற வைத்த துவரம் பருப்பில் ஒரு கைக்கரண்டி அளவு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

    * பிறகு மறுபடியும் ஒரு கைக்கரண்டி துவரம் பருப்பை போட்டு கொர கொரப்பாக அரைத்து அதையும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த முறையில் ஊற வைத்த துவரம் பருப்பு முழுவதையும் அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த மாவில் தேங்காய் துருவல், நறுக்கிய தேங்காய் துண்டுகள், வெந்தயம் இலைகள், உப்பு, சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

    * ஒரு இட்லி பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதன் மேல் வைக்க வேண்டும்.

    * இப்பொழுது பருப்பு கலவையை கொஞ்சம் எடுத்து கைகளால் நீள் வட்ட வடிவில் பந்து மாதிரி உருட்டி இட்லி தட்டில் வைக்க வேண்டும். இவ்வாறு மாவை அனைத்தையும் செய்ய வேண்டும்.

    * இட்லி பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக வைத்து எடுத்து ஒரு தட்டிற்கு மாற்றி பரிமாறவும்.

    * இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, கார சட்னி சூப்பராக இருக்கும்.

    * வெந்தயம் இலைகளுக்கு பதிலாக கேரட் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கலாம்.

    Next Story
    ×