என் மலர்
சமையல்
- கோதுமை ரவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
- கோதுமை ரவையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 1/4 கப்
வெல்லம் - 1/2 கப்
பால் - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
ஏலக்காய் - 1
செய்முறை
குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதே குக்கரில் கோதுமை ரவையை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
அடுத்து அதில் கப் - 1 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3-4 விசில் மிதமான தீயில் வேக வைக்கவும்.
கோதுமை ரவை மிருதுவாக வெந்தவுடன், வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்து கரைக்கவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் வெந்த கோதுமை ரவையுடன் வடிகட்டி சேர்த்து கலக்கவும். 1/2 கப் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.
குறைந்த தீயில் 5 நிமிடம் பாகு சுண்டும் வரை கொதிக்க விடவும்.
பாலை, மெதுவாக சேர்த்து கலக்கவும்.
ஏலக்காய், வறுத்த முந்திரி சேர்த்து 2 நிமிடம் சூடு செய்யவும்.
அடிபிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும். ஆரிய பிறகு கெட்டியாகும் அதனால் அதற்கு தகுந்தவாறு அடுப்பை அணைக்கவும்.
இப்போது சூப்பரான கோதுமை ரவை பாயாசம் ரெடி.
தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.
பாயசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், சிறிது காய்ச்சிய பால் சேர்த்து சரி செய்து கொள்ளவும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
https://www.maalaimalar.com/cinema- கோடைகாலத்தில் கிடைக்கும் முலாம் பழத்தில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று குளுகுளு முலாம் பழம் கிரனிதா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முலாம் பழம் - 1 (நடுத்தர அளவு)
எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
சர்க்கரை - ½ கப்
ஐஸ் கட்டிகள் - 8
செய்முறை:
முலாம் பழத்தை சுத்தம் செய்து, அதன் மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பதத்தில் காய்ச்சி ஆற வைக்கவும்.
பின்பு நறுக்கிய முலாம் பழம், எலுமிச்சம் பழச்சாறு, சர்க்கரை பாகு ஆகியவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த கலவையை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்றாக மூடி, பிரீசரில் வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து, முள்கரண்டி கொண்டு அதை முழுவதுமாகக் கிளறவும்.
பின்னர் அந்த முலாம் பழக் கலவையை அழகான பவுலில் போட்டு, அதன்மேல் தேன் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சேமியா, ரவையில் உப்புமா மட்டுமல்ல பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
சேமியா - 2 கப்
ரவை - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நெய் - தேவையான அளவு
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
முந்திரி - 10
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை
செய்முறை:
* வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
* அதே வாணலியில் சேமியாவையும், ரவையையும் தனித்தனியாகச் சூடு வரும்படியாக வறுத்துக்கொள்ளவும்.
* பாசிப்பருப்பை நன்றாக கழுவி விட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் குழையாமல் வேக வைக்கவும்.
* ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்த பின் ஒரு பங்கு சேமியா & ரவைக்கு இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு மூடி வைக்கவும்.
* பாசிப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்குத் தண்ணீர் ஊற்றவேண்டாம்.
* தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.
* மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.
* சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
* ரவை போட்டு நன்றாக கிளறிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.
* ருசியான ரவா சேமியா பொங்கல் தயார்.
* இதற்கு சாம்பார் அருமையான இணையாகும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த ரெசிபி நல்லது.
- வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
சாதம் - ஒரு கப்,
கறிவேப்பிலை - ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை - விருப்பத்திற்கேற்ப
மிளகு - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு ,
நெய் - 2 டீஸ்பூன்,
கல் உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
கடுகு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை:
வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை 'சிம்'மில் வைத்து, கருகிவிடாதபடி வறுக்கவும்.
கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும்.
பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும்.
அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நைஸாக பொடி செய்யவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, சாதத்தில் சேர்த்து, வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை - மிளகு பொடியைப் போட்டு கலக்கவும்.
இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும்.
இந்த கறிவேப்பிலை மிளகு பொடியை செய்து வைத்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் சூடான சாதத்தில் போட்டு கலந்து சாப்பிடலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கறிவேப்பிலை சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்தும்.
- இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை - ஒரு கப்,
துவரம்பருப்பு - 3 டீஸ்பூன்,
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
புளி - ஒரு சிறிய உருண்டை,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
நெய் - சிறிதளவு, கடுகு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
புளியில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
இதை அடுப்பில் வைத்து மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
இதனுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் ஓரிரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்.
நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.
இப்போது சூப்பரான கறிவேப்பிலை ரசம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
- குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
காய்கறி மசாலா செய்ய
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1
பீன்ஸ் - 10
பட்டாணி - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 4
பன்னீர் - 100 கிராம்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
ஆம்சூர் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
எண்ணெய் - தேவையான அளவு
சோள மாவு கலவை செய்ய
சோள மாவு - 1 மேசைக்கரண்டி
மைதா - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர்
கார்ன் பிளேக்ஸ்
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
* பன்னீரை துருவிக்கொள்ளவும்.
* பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் பாதி வதங்கியதும் காய்கறிகளைச் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
* காய்கறிகள் வெந்த பிறகு வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
* பின்பு காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள்,கரம் மசாலா தூள், உப்பு, ஆம்சூர் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
* பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து விட்டு, மசித்து கொள்ளவும்.
* அடுத்து அடுப்பை அணைத்து விட்டு துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.
* ஒரு தட்டில் எண்ணெய் தடவி, மசாலாவை பரப்பி ஆறவிட்டு, 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
* கார்ன் பிளேக்ஸை பொடியாக்கி கொள்ளவும்.
* சோள மாவு கலவை செய்ய, சோள மாவு, மைதா, உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து கட்டியின்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்..
* பிரிட்ஜில் வைத்த மசாலாவை எடுத்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டவும்.
* பின்பு அதை சோள மாவு கலவையில் முக்கி கார்ன் பிளக்ஸில் பிரட்டி எடுத்து 5 நிமிடம் பிரீஸரில் வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த நக்கெட்ஸை சூடான எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
* இப்போது சூப்பரான வெஜிடபிள் நக்கெட்ஸ் ரெடி.
* கெட்சப் அல்லது மயோனைஸ் உடன் சூடாக பரிமாறவும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த உணவு.
- இந்த ரெசிபியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
முட்டை வெள்ளை கரு - 4
வெங்காயம் - 1
பூண்டு - 3 பற்கள்
ப.மிளகாய் - 1
பச்சை குடைமிளகாய் - பாதி
சிவப்பு குடைமிளகாய் - பாதி
காளான் - 7
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, வெங்காயத்தாள் - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காளான், குடை மிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிகொள்ளவும்.
* முட்டை வெள்ளை கருவில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும் .
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
* பின்பு நறுக்கிய காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் வதக்கி இறக்கி வைக்கவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து அடித்த வைத்துள்ள முட்டையை ஊற்றி கடாயை மூடவும்.
* பிறகு வேகவைத்த காய்கறிகளை முட்டையின் மீது பரப்பிவிட்டு பின்பு கடாயை மூடி வேகவிடவும்.
* இப்போது முட்டை வெள்ளை கரு வெஜிடபிள் ஆம்லெட் தயார்!
* உங்களுக்கு விருப்பமான காய்கறிகளையும் இதில் சேர்த்து செய்யலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
பிரெட் - 1 துண்டு
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
வால்நட் - 1/2 கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
இட்டாலியன் சீசனிங் - 1 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழத்தின் சாறு
சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
சோளமாவு - 1/4 கப்
மைதா - 1/4 கப்
தண்ணீர்
உப்பு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* பிரெட்டை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரக தூள், இட்டாலியன் சீசனிங், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
* மிக்ஸியில் நறுக்கிய பிரெட் துண்டு, வால்நட், சில்லி பிளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
* ஒரு கிண்ணத்தில் மைதா, சோளமாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
* ஊற வைத்த சிக்கனை மாவில் தோய்த்து பிறகு வால்நட் பிரெட் தூளில் பிரட்டி வைத்து கொள்ளவும். இவ்வாறு அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்து வைக்கவும்.
* கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* சூப்பரான சிக்கன் டென்டெர்ஸ் தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று மாங்காய் வைத்து சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் - ஒரு கப்,
தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,
பச்சை மிளகாய் - 2,
கடுகு - கால் டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி கலந்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- முட்டையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- தோசை, சூடான சாதத்துடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வேகவைத்த முட்டை - 3
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* அடுத்து இதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து தக்காளி சேர்த்து, பாதி வதங்கியதும், இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு, கரம் மசாலா தூள் போட்டு கிளறவும்.
* அடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கடாயை மூடி மிதமான தீயில், 10 நிமிடம் கொதிக்கவிடவும்/
* 10 நிமிடம் கழித்து, இதில் வேகவைத்த முட்டையை துருவி சேர்க்கவும்.
* நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி, குறைந்த தீயில் 3 நிமிடம் வேகவிடவும்.
* இப்போது சுவையான முட்டை கீமா தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வாழைத்தண்டு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
- வாழைத்தண்டு உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும்.
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - 1 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* வாழைத்தண்டில் உள்ள நார் பகுதியை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* நறுக்கிய வாழைத்தண்டை மோரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
* ஒரு குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* வாழைத்தண்டு மென்மையாக வெந்ததும், அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* வேக வைத்துள்ள வாழைத்தண்டை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் அல்லது வாழைத்தண்டு வேக வைத்த நீரை ஊற்றி அரைத்து வடிகட்டிக் கொண்டு, பின் அதை எஞ்சிய வாழைத்தண்டு வேக வைத்துள்ள நீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* பின் அந்த கலவையை அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்கவும். அதே சமயம் மற்றொரு அடுப்பில், வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அடுப்பில் வைத்துள்ள சூப்புடன் சேர்த்துக் கொள்ளவும்.
* பின்பு சீரகப் பொடி, உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சூப்புடன் சேர்த்து கலந்து, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வாழைத்தண்டு சூப் தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சப்பாத்தி, நாண், தோசையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
- சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
முட்டை - 4
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2 சிறியது
இஞ்சி பூண்டு விழுது இடித்தது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 3 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - 1 கைப்பிடி
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கினால் போதும்.
அடுத்து அதில் இடித்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும், மஞ்சள் தூள், 3 தேக்கரண்டி மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை வெந்து உதிரியாக வரும் போது அரை தேக்கரண்டி மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கவும்.
இப்போது சூப்பரான முட்டை மிளகு பொடிமாஸ் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health






