என் மலர்tooltip icon

    சமையல்

    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த தோசையை சாப்பிடலாம்.
    • காலையில் குறைந்த நேரத்தில் சத்தான டிபன் செய்ய நினைப்பவர்கள் இதை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை ரவை - கால் கிலோ

    அரிசி மாவு - கால் கப்

    சின்ன வெங்காயம் - 10

    சீரகம் - அரை டீஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    காய்ந்த மிளகாய் - 5

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கோதுமை ரவையை நன்றாக கழுவி கொள்ளவும்.

    ஒரு மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும்.

    அடுத்து அதில் கழுவிய கோதுமை ரவையை போட்டு சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, பொடியாக நறுக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 15 நிமிடம் ஊற விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான டிபன் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வாரம் இருமுறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
    • இதய நோய் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

    தேவையான பொருட்கள் :

    கோவக்காய் - 1 கப்

    தக்காளி - 3

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    சீரகம் - சிறிதளவு

    மிளகாய்த்தூள் - சிறிதளவு

    உப்பு - சுவைக்கேற்ப

    கரம் மசாலா தூள் - சிறிதளவு

    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    முந்திரி பருப்பு - 6 ( தண்ணீரில் ஊற வைக்கவும்)

    மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

    தேங்காய் - 1 பத்தை

    செய்முறை :

    * கோவக்காயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து சிறிதளவு உப்பு போட்டு கோவக்காயை வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

    * வடிகட்டிய அதே சுடுதண்ணீரில் தக்காளியை போட்டு வேக வைத்து தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    * தேங்காய், ஊற வைத்த முந்திரி பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வேக வைத்த கோவக்காயை போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

    * அதே கடாயில் சிறிதளவு சீரகம் போட்டு பொரிந்ததும் அரைத்த தக்காளி சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி பச்சை வாசனை போகுமாறு 3 நிமிடங்கள் கிளறி கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் வறுத்த கோவக்காயை தக்காளியில் போட்டு தனியா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விடவும்.

    * அடுத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, கரம் மசாலா தூள் போட்டு சப்ஜி திக்கான பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

    * சூப்பரான கோவக்காய் சப்ஜி ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
    • பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - 100 கிராம்

    அரிசி மாவு - ஒரு மேசைகரண்டி

    ரவை - ஒரு தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    துருவிய பீட்ரூட் - 3 மேசைகரண்டி

    ப.மிளகாய் - ஒன்று

    கொத்தும்மல்லி - சிறிதளவு

    உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, ரவை, வெங்காயம், துருவிய பீட்ரூட், ப.மிளகாய், கொத்தும்மல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்துஎடுத்து பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான கேழ்வரகு பீட்ரூட் தோசை ரெடி.

    * இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல் மற்றும் இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாம்பழத்தில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மாம்பழ சாம்பார் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    தித்திப்பும் புளிப்புமான சிறிய மாம்பழங்கள் - 2,

    துவரம்பருப்பு - 3 கரண்டி,

    அரிசி மாவு - அரை டீஸ்பூன்,

    புளி - சிறு எலுமிச்சை அளவு,

    பச்சை மிளகாய் - ஒன்று,

    சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

    கடுகு - கால் டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - ஒன்று,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    துவரம்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊற வைத்த பின் வேக வைத்து மசித்து கொள்ளவும்..

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    கடாயில் 2 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய மாம்பழம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக விடவும்.

    பழத்துண்டுகள் வெந்ததும் புளியைக் கரைத்து விட்டு, கொதித்ததும் சாம்பார் பொடி சேர்க்கவும்.

    பச்சை வாசனை போனதும் வேக வைத்த பருப்பு சேர்த்து, அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.

    கடைசியாக கொத்தமல்லியைபோட்டு, சாம்பாரை கீழே இறக்கவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ சாம்பார் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முளைகட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • உடல் ஆரோக்கியத்திற்கு இந்த பரோட்டா மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை - ஒரு கப்

    கோதுமை மாவு - கால் கிலோ

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * முதலில் தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும்.

    * முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    * கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

    * மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும்.

    * தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.

    * இப்போது சத்தான சுவையான முளைகட்டிய தானிய ஸ்டப்ஃடு பரோட்டா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வெரைட்டி ரைஸ் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்,

    தேங்காய் - அரை மூடி

    வெங்காயம் - 2,

    பச்சை மிளகாய் - 2,

    இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்,

    பட்டை - 3,

    லவங்கம் - 5,

    ஏலக்காய் - 3,

    பிரியாணி இலை - 2,

    கறிமசால் பொடி - கால் டீஸ்பூன்,

    முந்திரி - 50 கிராம்,

    நெய் - 100 கிராம்,

    புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    தேங்காயை அரைத்து 4 கப் பால் எடுத்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி ஊறவைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றிச் சூடேறியவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

    பின்பு பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், புதினா சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால், கறி மசால் பொடி, உப்பு சேர்த்துக் கொதி வரும் வரை காத்திருக்கவும்.

    கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

    பின்னர் மீதம் உள்ள நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.

    கமகம வாசனைக்குக் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

    இதனுடன் பெப்பர் சிக்கன் அல்லது மட்டன் குழம்பு சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வாரத்தில் 2 முறையாவது கம்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    • சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

    தேவையான பொருட்கள்:

    கம்பு - ஒரு கப்,

    வெங்காயம் - 3,

    பச்சை மிளகாய் - 6,

    கடுகு - அரை ஸ்பூன்,

    உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன்,

    கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்,

    உப்பு - ஒன்றரை ஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு கொத்து,

    கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து,

    எண்ணெய் - 6 ஸ்பூன்.

    செய்முறை:

    * கம்பை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்க வேண்டும். பிறகு அதை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் சூடானதும் சலித்து வைத்த கம்பு மாவை சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    * மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு கப் கம்பிற்கு இரண்டு கப் தண்ணீர் என தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    * தண்ணீர் நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்துள்ள கம்பு, உப்பு சேர்த்து கலந்து விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.

    * கம்பு வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு இறக்கி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான கம்பு உப்புமா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இதை சூப் போன்றும் குடிக்கலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மட்டன் எலும்புடன் - அரை கிலோ

    மட்டன் கொழுப்பு - 100 கிராம்

    பச்சை மிளகாய் - 4

    கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்

    தக்காளி - 1

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - 2 கொத்து

    மசாலா அரைக்க :

    மரசெக்கு கடலை எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

    சின்ன வெங்காயம் - 8

    பூண்டு பற்கள் - 8

    சீரகம், மிளகு - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை

    * மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    * தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * ப.மிளகாயை விழுதாக அம்மிகல்லில் நசுக்கி கொள்ளவும்.

    * ஒரு பிரஷர் குக்கரில் மட்டன், மட்டன் கொழுப்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மூடியை மூடி 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.

    * பின்னர் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

    * ஒரு அகலமான வாணலியில் மரசெக்கு கடலை எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    * பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . சிறிதளவு உப்பு , மிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    * கடைசியாக வேக வைத்த மட்டனை நீருடன் முழுவதுமாக சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

    * இப்போது சூப்பரான மட்டன் ரசம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை ரவை உகந்தது.
    • டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவை உணவுகளை எடுத்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    வரமிளகாய் - 2

    இஞ்சி - சிறிது

    தேங்காய் துருவல் - அரை கப்

    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - சிறிது

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    * இஞ்சியை தட்டி வைத்து கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, வரமிளகாய், தட்டி வைத்த இஞ்சியை போட்டு தாளித்த பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, ஒரு முறை கிளற வேண்டும்.

    * அடுத்து அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

    * வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    * தண்ணீர் கொதித்ததும், அதில் வறுத்த கோதுமை ரவை, தேங்காய் துருவல் சேர்த்து, நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    * பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.

    * இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!!

    * இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை வெஜிடபிள் நூடுல்ஸ் செய்து கொடுங்கள்.
    • முட்டை நூடுல்ஸில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    நூடுல்ஸ் சமைக்க

    ஹக்கா நூடுல்ஸ் - 300 கிராம்

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    தண்ணீர்

    உப்பு - 1/2 தேக்கரண்டி

    முட்டை நூடுல்ஸ் செய்ய

    வெங்காயம் - 1

    குடைமிளகாய் - 1/2

    நறுக்கிய பூண்டு - 1 மேசைக்கரண்டி

    நறுக்கிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி

    வெங்காயத்தாள்

    கேரட் - 1

    முட்டைகோஸ் - 1 கப்

    வினிகர் - 2 தேக்கரண்டி

    சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி

    சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    முட்டை - 4

    மிளகு - 1 டீஸ்பூன்

    செய்முறை

    * வெங்காயம், வெங்காயத்தாள், குடைமிளகாய், முட்டைகோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் தேவையான அளவு உப்பு, நூடுல்ஸை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு வேகவைக்கவும்.

    * ஐந்து நிமிடத்திற்கு பிறகு நூடுல்ஸை வடிகட்டி, நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க எண்ணெய் ஊற்றி பரப்பி விடவும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்

    * வெங்காயம் பொன்னிறமானவுடன் இதில் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் , பாதி வெங்காயத்தாள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * காய்கறிகளை நன்கு வதக்கிய பின்பு இதன் நடுவில் முட்டையை உடைத்து ஊற்றி காய்கறிகளுடன் கலக்கவும்.

    * முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்ததும் இந்த கலவையில் வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்.

    * கடைசியாக மீதி உள்ள வெங்காயத்தாளை நூடுல்ஸ் மேல் தூவி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான முட்டை வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கோடை காலத்தில் இளநீர் குடிப்பது உடலுக்கு நல்லது.
    • இளநீர் உடல் சூட்டை தணிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பொடியாக நறுக்கிய வழுகல் தேங்காய், இளநீர் - தலா 100 கிராம் (வழுகலுடன் சேர்ந்த இளநீராக இருக்க வேண்டும்),

    திக்கான பால் - 200 கிராம்,

    நாட்டு சர்க்கரை - 4 டீஸ்பூன்.

    செய்முறை:

    பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.

    வழுகல் தேங்காயுடன் இளநீர், நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து, பால் ஊற்றி மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து, ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்'லென்று கொடுக்கவும்.

    இப்போது சூப்பரான இளநீர் பால் ஜூஸ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு சத்தான பானங்களை வீட்டிலேயே செய்துகொடுக்கலாம்.
    • இந்த மில்க் ஷேக் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.

    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 2

    பேரீச்சம் பழம் - 10

    பாதாம் - 20

    பிஸ்தா - சிறிதளவு

    முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர்

    சர்க்கரை - 2 தேக்கரண்டி

    வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)

    ஐஸ் கட்டிகள்

    குங்குமப்பூ - அலங்கரிக்க

    செய்முறை

    * வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * பேரீச்சம் பழத்தை விதை நீக்கி எடுத்துக்கொள்ளவும்.

    * பாதாமை ஊறவைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும்.

    * பிஸ்தா, 8 பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், பேரீச்சம் பழம், பாதாம் - 12, சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், ஐஸ் கட்டி, பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

    * கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    * பனானா பேரீச்சம் பழ மில்க் ஷேக் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×