என் மலர்tooltip icon

    சமையல்

    • சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • பச்சை பயறு, கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம், புரதம் அதிகம் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - அரை கப்

    பச்சை பயறு - முக்கால் கப்

    இஞ்சி - சிறிய துண்டு

    சீரக தூள்- அரை டீஸ்பூன்

    ப.மிளகாய் - 2

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    தக்காளி - 1

    வெங்காயம் - 1

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கேழ்வரகு, பச்சை பயறை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஊறவைத்த கேழ்வரகு, பச்சை பயறை மிக்சிஜாரில் போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சீரகத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான கேழ்வரகு பச்சை பயறு தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள கார சட்னி அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகள் வேக வைத்த முட்டையை சாப்பி மாட்டார்கள்.
    • முட்டையை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 3

    வெங்காயம் - 1

    பூண்டு - 5 பல்

    காய்ந்த சிவப்பு மிளகாய் - 10

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு கரைத்த தண்ணீர்- தேவையான அளவு

    எலுமிச்சை தண்ணீர்- தேவையான அளவு(எலுமிச்சை சாறில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்தது)

    புளி தண்ணீர்- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விடவும்.

    * பூண்டு, வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வெங்காயம் ஆறியதும் மொறு மொறு என்று இருக்கும்.

    * அடுத்து பூண்டை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு பொரிந்ததும் எடுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பொரித்த பூண்டை நன்றாக கைகளால் பொடித்து போடவும். அடுத்து அதில் வெங்காயம், காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.

    * வேகவைத்த முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் பொரித்த வெங்காயம் பூண்டு கலவையை வைக்கவும்.

    * இதன்மேல் சிறிதளவு எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் போடவும். இவை அனைத்தையும் சில துளிகள் மட்டும் போடவும்.

    * இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    * சூப்பரான பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பேபி கார்னில் கலோரிகள் குறைவாக உள்ளது.
    • பேபி கார்னில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    பேபி கார்ன் - 6

    இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்

    பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்

    முட்டைக்கோஸ் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்

    குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்

    காளான் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 5 கப்

    எண்ணெய் - தேவைக்கு

    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

    பின்பு அதில் பேபி கார்ன், குடைமிளகாய், காளான், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும்.

    பின்னர் அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி கலந்து நன்றாகக் கொதித்தவுடன் தீயைக் குறைக்கவும்.

    சோளமாவை 1 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைக்கவும்.

    அதை பேபி கார்ன் கலவையில் ஊற்றி, சூப் நன்றாகக் கொதித்து கெட்டியாகும் வரை கிளறவும்.

    பின்னர் அதில் முட்டைக்கோஸைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

    இப்போது சூடான பேபி கார்ன் சூப் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கோடையில் உடல் வறட்சியை தவிர்க்க நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
    • வெள்ளரிக்காயில் அதிகமான அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளரிக்காய் - 2

    தக்காளி - 1

    வெங்காயம் - 1 (வேண்டுமென்றால்)

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    சாட் மசாலா - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    கருப்பு உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெள்ளரிக்காயை தோல் சீவி, பின் அதனை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை துருவியது போல் நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் ஒரு பௌலில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, சாட் மசாலா, மிளகு தூள் மற்றும் கருப்பு உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    இப்போது நொடியில் வெள்ளரிக்காய் சாலட் ரெடி!!!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மோரை கோடைக்காலங்களில் தான் அதிகம் பருகுவோம்.
    • இன்று மசாலா மோர் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கெட்டித் தயிர் - 1 கப்

    தண்ணீர் - 1 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மோர் மிளகாய் - 1

    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - அரை டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    அரைப்பதற்கு...

    பச்சை மிளகாய் - பாதி

    கறிவேப்பிலை - 3 இலை

    இஞ்சி - 1/4 இன்ச்

    செய்முறை:

    தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்த பின் மோர் மிளகாயை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து அரைத்து வைத்துள்ளதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று எளிய முறையில் மாம்பழ ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பெரிய மாம்பழம் - 2

    பால் - 1 கோப்பை

    வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை

    ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி

    செய்முறை :

    பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.

    மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.

    குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.

    பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.

    பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • பச்சை மாங்காயை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பச்சை மாம்பழம் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    சர்க்கரை - 1/2 கப்

    புதினா இலைகள் - சிறிதளவு

    சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

    ஐஸ்கட்டி - தேவையான அளவு

    தேவையான பொருட்கள் :

    செய்முறை :

    மாங்காய் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    மிக்சி ஜாரில் நறுக்கிய மாங்காயை போட்டு அதனுடன் இஞ்சி, சர்க்கரை, புதினா, சாட் மசாலா, ஐஸ்கட்டி, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டவும்.

    வடிகட்டிய ஜூஸை ஒரு கண்ணாடி கப்பில் ஊற்றிஅதன் மேல் புதினா, மிளகாய் தூள் தூவி பருகவும்.

    இப்போது சூப்பரான பச்சை மாங்காய் ஜூஸ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சூடான சாதத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • தோசை, சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் இது.

    தேவையான பொருட்கள்:

    முள்ளங்கி (பொடிதாக நறுக்கியது) - 2 கப்

    ஓமம் - ½ டீஸ்பூன்

    பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2

    பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை

    எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஓமத்தைப் போட்டு பொரிய வைக்கவும்.

    பின்பு அதில் பச்சை மிளகாய், பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    இப்போது முள்ளங்கியில் இருந்து சாறு வெளியேற ஆரம்பிக்கும். அது வற்றும் வரை நன்றாக வதக்கவும்.

    முள்ளங்கி முழுவதுமாக வெந்தபின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான முள்ளங்கி சப்ஜி ரெடி.

    • குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸை சுத்தமான முறையில் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா - 1 கப்

    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - 1 டீஸ்பூன்

    வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை

    * ஒரு பாத்திரத்தில் மைதா, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

    * அதில் தண்ணீரை விட்டு மாவை மிருதுவாகப் பிசைந்து குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

    * ஒரு எலுமிச்சம்பழ அளவு மாவை எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக இட்டு கத்தியால் குறுக்கும், நெடுக்கும் கோடிட்டு, சிறு சதுர வில்லைகளாக வெட்டி எடுக்கவும். எல்லா மாவையில் இப்படியே செய்து, வில்லைகளை ஒரு பெரிய தட்டில் தனித்தனியாகப் போட்டு வைக்கவும்.

    * ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வைத்திருக்கும் துக்கடாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    * இப்போது சூப்பரான கார துக்கடா ரெடி

    இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.
    • அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.

    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1 கைப்பிடி

    தேங்காய் - கால் மூடி

    சிவப்பு மிளகாய் - 7

    பூண்டு - 6 பல்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    தேங்காயினை துருவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொள்ளினைப் போட்டு அடுப்பினை இளந்தீயில் வைத்து, நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.

    தேங்காய் துருவல், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

    கொள்ளு துவையல் தயார்.

    கொள்ளு தானியத்தை நம் உணவில் அடுக்கடி சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஏற்படும் தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் தீரும் என சொல்லப்படுகிறது. சாப்பாட்டில் கொள்ளு சேர்ப்பதால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்றும், ஜுரம் அதிகமாக இருக்கும்போது கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் ஜுரம் சரியாகும் என்றும் கூறப்படுகிறது. வாதப் பிரச்சினைகளும், வயிற்று வலியும் குணமாகும். கொள்ளினை உணவில் சேர்ப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • அன்னாசிப்பழத்தில் வைட்டமின் 'சி' சத்து நிறைந்துள்ளது.
    • இன்று இந்த அல்வா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    அன்னாச்சிப் பழத்துண்டுகள் - 1 கப்

    பால் - 1 கப்

    சர்க்கரை - 1 கப்

    ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

    உப்பு - 1 சிட்டிகை

    நெய் - 3/4 கப்

    கேசரிப் பவுடர் - 1/4 தேக்கரண்டி

    தண்ணீர் - 1/4 டம்ளர்

    செய்முறை :

    முதலில் அன்னாசிப்பழத் துண்டுகளை ஆவியில் வேக வைக்கவும்.

    ஆறியபின் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

    தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கம்பிப்பதம் வரும் வரை கிளற வேண்டும்.

    இதில், அரைத்து வைத்துள்ள அன்னாசிப்பழ விழுது, ஒரு சிட்டிகை உப்பு, நெய், ஏலப்பொடி, கேசரிபவுடர், நெய்யில் வறுத்த திராட்டை ஆகியவை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

    அன்னாச்சிப்பழ ஜூஸ் எடுத்து தண்ணீருக்குப் பதில் ஜூஸை ஊற்றி, இதே முறையில் அல்வா தயார் செய்யலாம்.

    இப்போது சூப்பரான அன்னாசி அல்வா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முட்டைகோஸை அளவுக்கு அதிகமாக வேகவைத்தால் அதில் உள்ள சத்துக்கள் வெளியேறிவிடும்..
    • முட்டைகோஸில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல், செரிமான பிரச்சனையை குணப்படுத்தும்.

    தேவையான பொருட்கள் :

    துருவிய முட்டைகோஸ் - ஒரு கப்,

    வடித்த சாதம் - ஒரு கப்,

    கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்,

    பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (ஊற வைக்கவும்),

    மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,

    வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்,

    இஞ்சி (மிகவும் பொடியாக நறுக்கியது) - ஒரு டேபி ள்ஸ்பூன்,

    பட்டை - சிறிய துண்டு,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    தாளிக்க :

    கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    காய்ந்த மிளகாய் - 2,

    எண்ணெய் - சிறிதளவு.

    செய்முறை :

    ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வடித்த சாதம், சூடாக இருக்கும் போதே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்தால் பொல பொலவென்று உதிர்ந்து விடும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்த பின்னர் பட்டை, மிளகு, சீரகத்தூள், கடலை பருப்பு, உப்பு, வேர்க்கடலை போட்டுக் கிளறி, ஊற வைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும்.

    இதில் துருவிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேக விட்டு இறக்கவும்.

    இந்த முட்டைகோஸ் மசாலாவை வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான முட்டைகோஸ் சாதம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×