search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    நார்ச்சத்து நிறைந்த பேபி கார்ன் சூப்
    X

    நார்ச்சத்து நிறைந்த பேபி கார்ன் சூப்

    • பேபி கார்னில் கலோரிகள் குறைவாக உள்ளது.
    • பேபி கார்னில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    பேபி கார்ன் - 6

    இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்

    பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்

    முட்டைக்கோஸ் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்

    குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்

    காளான் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 5 கப்

    எண்ணெய் - தேவைக்கு

    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

    பின்பு அதில் பேபி கார்ன், குடைமிளகாய், காளான், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும்.

    பின்னர் அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி கலந்து நன்றாகக் கொதித்தவுடன் தீயைக் குறைக்கவும்.

    சோளமாவை 1 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைக்கவும்.

    அதை பேபி கார்ன் கலவையில் ஊற்றி, சூப் நன்றாகக் கொதித்து கெட்டியாகும் வரை கிளறவும்.

    பின்னர் அதில் முட்டைக்கோஸைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

    இப்போது சூடான பேபி கார்ன் சூப் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×