சத்து நிறைந்த கேழ்வரகு பீட்ரூட் தோசை

தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.
சத்து நிறைந்த கேழ்வரகு பீட்ரூட் தோசை
Published on

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு - 100 கிராம்

அரிசி மாவு - ஒரு மேசைகரண்டி

ரவை - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - 1

துருவிய பீட்ரூட் - 3 மேசைகரண்டி

ப.மிளகாய் - ஒன்று

கொத்தும்மல்லி - சிறிதளவு

உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, ரவை, வெங்காயம், துருவிய பீட்ரூட், ப.மிளகாய், கொத்தும்மல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

* அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்துஎடுத்து பரிமாறவும்.

* இப்போது சூப்பரான கேழ்வரகு பீட்ரூட் தோசை ரெடி.

* இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல் மற்றும் இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com