என் மலர்tooltip icon

    சமையல்

    10 நிமிடத்தில் செய்யலாம் முட்டை மிளகு பொடிமாஸ்
    X

    10 நிமிடத்தில் செய்யலாம் முட்டை மிளகு பொடிமாஸ்

    • சப்பாத்தி, நாண், தோசையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 4

    வெங்காயம் - 1 பெரியது

    தக்காளி - 2 சிறியது

    இஞ்சி பூண்டு விழுது இடித்தது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

    தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி

    மிளகு தூள் - 3 1/2 தேக்கரண்டி

    கடுகு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி - 1 கைப்பிடி

    உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கினால் போதும்.

    அடுத்து அதில் இடித்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும், மஞ்சள் தூள், 3 தேக்கரண்டி மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை வெந்து உதிரியாக வரும் போது அரை தேக்கரண்டி மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான முட்டை மிளகு பொடிமாஸ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×