என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் செய்யும்.
    • ரேடியேஷன்களால் ஏற்படும் ஆபத்து குழந்தைகளுக்கு மிகவும் அதிகம்.

    செல்போன் போன்களில் இருந்து வெளியேறும் எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஆபத்தானதுதான். ஆனால் இந்த ரேடியேஷன்களால் ஏற்படும் ஆபத்து குழந்தைகளுக்கு மிகவும் அதிகம். இதை தவிர்த்து, போன் திரைகளில் இருந்து வைலட் கதிர்கள், பேட்டரி வெடிக்கக்கூடும் என்ற ஆபத்து, ஆகிய அனைத்துமே குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை அதிகரித்துள்ளது.

    நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் செய்யும். எனவே பெற்றோர்கள் பெரும்பாலான நேரம் போனில் செலவழிக்கும் போது குழந்தைகளும் அதையே தான் பின்பற்றும். ஆனால் போன்களில் இருந்து வெளியேறும் எலக்ட்ரோமேக்னடிக் ஃபீல்ட் என்பது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அவர்களுடைய உடல் அமைப்பு மற்றும் உடல் உறுப்புகளில் கூட பாதிப்புகளை உண்டாக்கும். இதன் பெயர் மைக்ரோவேவ் ரேடியேஷன் என்று கூறப்படுகிறது.

    குழந்தைகள் பிறந்து சில மாதங்கள் வரை முன்னுச்சி என்று கூறப்படும் குழந்தைகளின் தலையின் மேற்பகுதி மூடாமல் திறந்த படிதான் இருக்கும். குழந்தை வளர வளர தான் அந்த பகுதி மூடும். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் மண்டை ஓட்டுப் பகுதி மிகவும் மெலிதாக இருக்கும். இதனால் குழந்தைகளின் மூளை பெரியவர்களை விட எளிதாக ரேடியேஷனை உறிஞ்சும் ஆபத்து இருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு முதல் தீவிரமான வளர்ச்சி குறைபாடுகள் வரை ஏற்படும்.

    நீல நிற ஒளி

    எலக்டிரானிக் சாதனங்களில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி எவ்வாறு ஒரு நபரை பாதிக்கிறது என்பதைப் பற்றி புதிதாகக் கூற எதுவுமே இல்லை. ஆனால் இது பெரியவர்களை மட்டுமல்ல குழந்தைகளையும் பாதிக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. நல்ல தூக்கம், கண்கள் ஆரோக்கியம், நடத்தை, ஆற்றல் ஆகியவற்றுக்கு இரவுநேரத்தில் அனைத்து சாதனங்களையும் ஸ்விச் ஆஃப் செய்து வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. பெரியவர்களை பாதிப்பதை விட இந்த செல்போன்களில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி குழந்தைகளை 45% அதிகமாக பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது அவர்களின் உடலில் ஒரு விதமான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது.

    வெடிக்கும் ஆபத்து

    சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசிக் கொண்டிருப்பது அல்லது நீண்ட நேரம் மொபைல் பயன்பாடு என்ற பல்வேறு காரணங்களால் செல்போன் பேட்டரிகள் வெடிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு பேட்டரிகள் செயலிழந்து போவது, அல்லது தவறான சார்ஜர்களை பயன்படுத்துவது அல்லது சார்ஜ் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய மின்சார கோளாறு ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே பல முறை செல்போன் வெடித்து அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். எனவே செல்போன் பேட்டரிகள் ஆரோக்கியமாக இருப் பதை உறுதி செய்வது மிகவும் அவசியம். அதுமட்டு மில்லாமல் குழந்தைகளின் அருகில் எப்பொழுதும் செல்போன் சார்ஜ் செய்யக்கூடாது.

    • சுயமரியாதை தன்னம்பிக்கை அளிக்கும்.
    • பெற்றோர்கள் குழந்தைகளை மதிக்க வேண்டும்.

    மதித்தல் என்றால் என்ன? ஒரு மனிதருக்கோ ஒரு பொருளுக்கோ மதிப்பு கொடுப்பதை மதித்தல் என்கிறோம். நாம் ஒருவரை மதிக்கும் போது அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம். மதித்தல் என்பது நற்பண்புகளில் முக்கியமான ஒன்று. மகிழ்ச்சி மற்றும் மன நிறைவான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவது மதித்தல் என்ற நற்பண்பு ஆகும். நாம் மற்றவரை மதிக்கும் போது நாமும் மதிக்கப் படுகின்றோம். யார் ஒருவர் மற்றவர்களை மதிக்கின்றார்களோ அவர்கள் ஒழுக்கமானவர்கள், பணிவானவர்கள் மற்றும் பிறரை கௌரவ படுத்துபவர். அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்பவர்கள். இப்படி பட்டவர்கள் சமுதாயத்தில் மதிக்கப் படுகின்றனர்.

    மதித்தல் என்ற நற்பண்பின் வகைகள் மற்றும் அப்பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிகள் பற்றி காண்போம்.

    தன்னை மதித்தல் அல்லது சுயமரியாதை

    நம்மை நாமே மதித்துக் கொள்வது மற்றும் மற்றவர் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று வரையறுப்பது சுய மரியாதை ஆகும். சுயமரியாதை தான் நாம் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அடிப்படையாக இருக்கும். சுயமரியாதை தன்னம்பிக்கை அளிக்கும். புகழ் மற்றும் கௌரவத்தை கொடுக்கும். சுயமரியாதை இல்லாவிட்டால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். நம் ஒப்புதல் இல்லாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும். நாம் அதன் படி செயல் பட வேண்டி வரும்; நம் இயற்கைக்கு மாறாக செயல் பட நேரிடும்.

    தனி நபர் மற்றும் சமுதாயத்திற்கான மதிப்பு

    மற்றவர்களை மதிப்பது என்பது மற்றவர் மீது அன்பு செலுத்துவது, அக்கறை மற்றும் மரியாதை கொடுப்பதாகும். மற்றவர்களை மதிப்பது என்பது அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதாகும். ஒரு தனி நபரை நீங்கள் மதிக்கும் போது உங்கள் மனம் எல்லோரையும் மதிக்கத் துவங்கிவிடும். குழந்தைகள் பெற்றோர் மற்றும் பெரியவர்களை மதிக்கிறார்கள்; மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்கிறார்கள்; எனவே சமுதாயத்தில் சிறியவர்களுக்கு பெரியவர்களை மதிக்க கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். மேலும் சமுதாயத்தின் விதி முறைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

    பலகீனமானவர்களை மதித்தல்

    அனைவரையும் மதிப்பது தான் கல்வி அறிவு பெற்ற சமுதாயத்தின் அடையாளமாகும். குழந்தைகள், முதியவர்கள், உடல் மற்றும் மனநலம் குன்றியவர்கள் போன்ற பலகீனமான மக்கள் உட்பட அனைவரையும் மதிப்பது அந்த சமுதாயத்தின் முதிர்ச்சியை காட்டுகிறது.

    இயற்கையை மதிப்பது

    இயற்கையை மதிப்பது என்பது நம்மை சுற்றி உள்ள இயற்கை வளங்களை மதிப்பதாகும். மக்கள் இயற்கை வளங்களை நீண்ட காலம் பயனளிக்கும் வகையில் கவனமாக கையாள வேண்டும்.அவை இந்த மொத்த சமுதாயத்திற்கும் பயன்பட வேண்டும் .

    மதித்தல் பண்பின் இன்றியமையாமை மற்றும் நன்மைகள்

    அனைவருக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெரியவர்களை மதிப்பதை மட்டும் தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். சமுதாயத் தகுதி வயது ஆகியவற்றை பார்க்காமல் அனைவரையும் சமமாக மதிக்க கற்றுத் தருவது இல்லை. அனைவருடன் சமமாக பழக சிறு வயது முதல் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால் அவர்கள் மற்றவர்களோடு பழகுவதில் எந்த சிக்கலும் இருக்காது

    மற்றவரை மதிக்கும் நற்பண்பை வளர்த்துக் கொண்டால் அன்றாடும் மற்றவர்களோடு பழகவைத்து மகிழ்ச்சியாக இருக்கும். மனநிறைவோடு வாழலாம். மற்றவர்களை மதிக்கும்போது அது மன நிறைவை ஏற்படுத்துவதோடு நம்முடைய குறைகளை சொல்லி அதற்கான தீர்வுகளை பெறுவதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், ஒரு இனிமையான சூழல் உருவாகுவதற்கும், நம்முடைய வாழ்க்கை பாதை சரியான திசையில் செல்வதற்கும், வழி வகிக்கிறது. இப்படி பல நன்மைகளை உருவாக்கும் மதித்தல் என்ற நற்பண்பை நாம் வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது என்பது தெரிய வருகிறது.

    இந்த மதித்தல் என்ற நற்பண்பை வளர்ப்பது எப்படி?

    குழந்தைகள் தவறு செய்யும் போது அல்லது இயற்கைக்கு மாறாக நடந்து கொள்ளும் போது பெற்றோர்கள் அவர்களை கண்டிக்க கூடாது; தடுக்கவும் கூடாது. அதற்கு மாறாக அவர்களிடம் இப்படி கேட்க வேண்டும் "இதே காரியத்தை உனக்கு யாராவது செய்தால் நீ எப்படி உணர்வாய்"? "மற்றவர்கள் இடத்தில் இருந்தும் யோசிக்க கற்றுக்கொள்". இந்த அணுகுமுறை குழந்தைகளே தாங்கள் செய்வதை சரியா தவறா என்பதை யோசிக்கும் அறிவை வளர்க்கும். இதனால் அவர்களே தங்களை மதித்துக் கொள்ளும் உணர்வை உண்டாக்கும். பெற்றோர்களின் பழக்க வழக்கங்களை பார்த்து குழந்தைகள் பல பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.

    மதித்தல் என்ற நற்பண்பை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டுமானால் முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை மதிக்க வேண்டும். அவர்கள் செய்யும் சிறு உதவிக்கு நன்றி சொல்வது, நல்ல செயல் செய்யும் போது பாராட்டுவது, அவர்களுக்கு பெற்றோர்கள் சிறு தவறு இழைத்து விட்டால் மன்னிப்பு கேட்பது இப்படி குழந்தைகளோடு பழகும் பொது இயல்பாக அவர்களும் மதித்தல் என்ற நற்பண்பை கற்றுக் கொள்வார்கள். மற்றவர்களோடு இனிமையாக பழகும் கலையை வளர்த்துக் கொள்வார்கள். மேலே சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டு குழந்தைகளின் மனதில் மதித்தல் என்ற நற்பண்பை சிறு வயது முதலே வளர்க்கத் தொடங்குங்கள். அவர்களின் வாழ்வை வளமாக்குங்கள்.

    • சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
    • மனமாற்றத்துக்கு சிறு வார்த்தையே தூண்டுதலாக இருக்கும்.

    நம் செயல்பாடுகளுக்கும், சிந்தனைக்கும், மனமாற்றத்துக்கும் சிறு வார்த்தையே தூண்டுதலாக இருக்கும். எப்போதும், எந்தச் சூழலிலும் நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் முக்கியமானவை. 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்ற பொன்மொழிக்கு ஏற்ப, நல்லதாக நாம் கூறும் சிறு வார்த்தை, மிகப்பெரிய எதிர்மறை செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது.

    குறிப்பாக குழந்தைகளிடம் பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகம், அவர்களின் மனநிலையை எளிதில் மாற்றக்கூடியவை. ஏதேனும் ஒரு சிறு முயற்சியில் ஈடுபடும் பலரும், 'நான் நினைக்கும் காரியம் எப்போதும் நிகழாது; அவற்றுக்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்தாலும் நினைத்தபடி நடக்காது' என்று கூறுவதுண்டு.

    இவர்கள் எளிதில் எதிர்மறை மனநிலைக்கு வந்து விடுவார்கள். அப்படியானவர்களைச் சுற்றி எப்போதும் நேர்மறையான வார்த்தைப் பயன்பாடு தொடர்ந்து இருக்க வேண்டும். குழந்தைகள் இருக்கும் வீடுகளிலும், நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

    நமது வார்த்தைகளைக் கேட்டு குழந்தைகள் வளர்கிறார்கள். கேட்கும் அனைத்து வார்த்தைகளும், அவர்களின் மனதில் எளிதில் பதிந்துவிடும். பின்னர், அவையே அவர்களின் இளமை காலத்தையும் வழி நடத்தும். ஆகையால், நல்லதைப் பேசுவோம், நல்வாழ்வு வாழ்வோம்.

    • சுயமாக மருந்து-மாத்திரைகள் வாங்கி சாப்பிடக் கூடாது.
    • இந்த நோய் பாதித்தவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
    • இருமினாலோ, தும்மினாலோ இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவி விடும்.

    தமிழகத்தில் 'இன்புளூயன்சா' காய்ச்சல் பரவல் மக்களை கதிகலங்க வைத்துள்ளது.

    கொரோனா தொற்று போன்று 1918-ம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய நோயாக 'இன்புளூயன்சா' எனப்படும் புளூ காய்ச்சல் இருந்தது. அந்த காலகட்டத்தில் இந்த நோய்க்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர்.

    பின்னர், மருத்துவ நிபுணர்கள் தடுப்பூசியை கண்டு பிடித்து இந்த கொள்ளை நோயின் வீரியத்தை கட்டுப்படுத்தினர். இதையடுத்து 'இன்புளுயன்சா' நோய் குணப்படுத்தக்கூடிய சாதாரண வகை காய்ச்சல் போன்று மாறியது. கோடை வெயில் காலம் முடிவடைந்து பருவமழை தொடங்கும் காலகட்டத்தில் இந்த 'இன்புளூயன்சா' வைரஸ் தொற்று பரவுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகள் கொரோனா நோய் தொற்றில் இருந்து தப்பிக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவு வகைகளை உண்ணுதல் என பொதுமக்கள் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்ததால் 'இன்புளூயன்சா' காய்ச்சல் கட்டுக்குள் இருந்தது.

    தற்போது கொரோனாவின் கொட்டம் தடுப்பூசிகள் மூலம் அடக்கப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் கொரோனா நோய் பற்றிய அச்சம் முற்றிலும் விலகி விட்டது. இதனால் முககவசம், சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை பெரும்பாலான மக்கள் கைவிட்டுவிட்டனர்.

    இந்தநிலையில் தற்போது 'இன்புளூயன்சா' காய்ச்சல் வேகமாக பரவி மக்களை கதி கலங்க வைத்துள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த வகை காய்ச்சல் மட்டுமின்றி டெங்கு, டைபாய்டு போன்ற வைரஸ் காய்ச்சலும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சல் பாதித்தவர்கள் அதிகம் பேர் பரிசோதனைக்காக வருகிறார்கள். காய்ச்சலால் குழந்தைகள், முதியோர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    சென்னை எழும்பூர் அரசு நலக்குழந்தைகள் நல மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவும், உள்நோயாளிகள் பிரிவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் உள்ள 560 படுக்கைகளும் நிரம்பி உள்ளன. 'இன்புளூயன்சா', டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளை அரசு டாக்டர்களும், நர்சுகளும் சிறப்பாக கவனிப்பதால் விரைவில் குணமடைந்து வருகின்றனர்.

    தற்போது பலவிதமான காய்ச்சல் பரவுவதற்கான காரணங்கள் குறித்தும், இதில் இருந்து குழந்தைகள் குணமடைவதற்கான வழிமுறைகள் குறித்தும் மாநில குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.சீனிவாசன் 'தினத்தந்தி' நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    குளிர்ந்த காலநிலை வைரஸ் உருவாகுவதற்கு உகந்ததாக இருக்கிறது. அந்த வகையில் பருவமழை காரணமாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்கள் வைரஸ் காய்ச்சல் தாக்குதல் அதிகம் இருக்கும். இந்த காலகட்டத்தில் பரவும் காய்ச்சலை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. அதே நேரத்தில் அலட்சியமாகவும் இருந்து விடக்கூடாது.

    உடலின் வெப்ப நிலை 102 டிகிரி மேல் தொடர்ந்து இருந்தால் டாக்டரிடம் சென்று உடல் பரிசோதனை செய்வது மிக அவசியம். ரத்த பரிசோதனை மூலம் எந்த வகையான காய்ச்சல் தாக்கியிருக்கிறது? என்பதை அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். டாக்டர்களின் அறிவுரையின்றி மருந்தகங்களில் சுயமாக மருந்து-மாத்திரைகள் வாங்கி சாப்பிடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும்.

    காய்ச்சல் பாதிப்பால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெறுவதற்கு அதிகம் பேர் வருகிறார்கள். அதே போன்று சிகிச்சை மூலம் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவோர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 'இன்புளூயன்சா' காய்ச்சல், தொற்று நோய் என்றாலும் டாக்டர்களின் அறிவுரையின்படி மருந்து, மாத்திரைகளை எடுத்து கொண்டாலே விரைவில் குணமடைந்து விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் எழிலரசி கூறியதாவது:-

    'இன்புளூயன்சா' வைரஸ் காய்ச்சலை பொறுத்தவரை ஏ, பி, பேரா-இன்புளூயன்சா, எச்1.என்1., போன்ற பல வகைகளில் பரவுகிறது. இவற்றில் எச்1.என்.1 வைரஸ்சின் பாதிப்பு தான் மிகக்குறைவான வகையில் இருந்து வருகிறது.

    இதேபோல் குழந்தைகளின் நுரையீரலை தாக்கும் வைரஸ் (ஆர்.எஸ்.வி.) காய்ச்சல், சாதாரண வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா போன்றவை பருவநிலை மாற்றம் காரணமாக பரவி வருகிறது. கடந்த 2017-2018-ம் ஆண்டுகளில் இந்த எச்1.என்1 வைரஸ்சின் பாதிப்புதான் பெரிய வகையில் இருந்தது.

    எனவே தற்போதைய சூழலில் இன்புளூயன்சா மற்றும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பை முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தொண்டை வலி, வறட்டு இருமல், மூக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளுடன் ஏற்படும் காய்ச்சலுக்கு டாக்டரை உடனடியாக அணுக வேண்டும்.

    கொரோனாவுக்கு கொடுக்கப்படும் அறிவுரைகள்தான் 'இன்புளூயன்சா' காய்ச்சலுக்கும் வழங்கப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். முககவசம் அணிவது அவசியம். அதேபோல் பெரியவர்களுக்கு காய்ச்சல் வரும்போது தனிமைபடுத்தி கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் 'இன்புளூயன்சா' நோயால் நேற்று முன்தினம் வரையில் 465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரசு ஆஸ்பத்திரிகளில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோர்களுக்கு ரத்த பரிசோதனை மூலம் 'இன்புளூயன்சா' அறிகுறி இருக்கிறதா? என்பது கண்டறியப்பட்டு வருகிறது.

    தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவது வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

    தற்போது தமிழகத்தில் 3 நாட்களில் குணமடைய கூடிய சாதாரண வகை காய்ச்சலில்தான் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தண்ணீரை காய்ச்சி குடிப்பது நல்லது

    ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அடுத்தடுத்து மற்றவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தற்போது பரவும் வைரஸ் காய்ச்சல் உடல்நிலையை சோர்வடைய செய்து மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    எனவே காய்ச்சல் பாதிக்காமல் தப்பிப்பதற்காக டாக்டர்கள் வழங்கும் பரிந்துரைகள் வருமாறு:-

    * குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். சூடான உணவையே உண்ண வேண்டும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    * 'இன்புளூயன்சா' போன்ற வைரஸ் காய்ச்சல் உள்ளவர்கள் இருமினாலோ, தும்மினாலோ இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவி விடும். எனவே இந்த நோய் பாதித்தவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். மற்றவர்களும் அணிந்தால் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

    * நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து உள்ள பானங்களை அதிகம் அருந்தலாம்.

    * காய்ச்சல் உள்ள குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள். எனவே அவர்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை என ஒரு நாளைக்கு 10 முறை கொஞ்சம், கொஞ்சமாக உணவை ஊட்டிவிடலாம்.

    * 'இன்புளூயன்சா' காய்ச்சலை தடுப்பதற்கு தடுப்பூசி உள்ளது. இந்த தடுப்பூசியை குழந்தைகள் போட்டுக்கொள்ளலாம்.

    • பெற்றோர்கள் குழந்தையிடம் திறந்த மனதுடன் இருப்பார்கள்.
    • குழந்தைகளுக்கு அதிக சுதந்திரத்தை கொடுப்பார்கள்.

    இந்த வகையான பெற்றோர்கள் குழந்தையிடம் திறந்த மனதுடன் இருப்பார்கள். ஒரு நண்பனைப் போல பழகுவார்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை சுமுகமாக தீர்ப்பதற்கான வழிகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பார்கள். அது மட்டுமல்லாது இந்த வகையை சார்ந்த பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கடுமைகளை காட்ட விரும்பமாட்டார்கள்.

    பெரும்பாலும் இந்த வகை பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு சட்டதிட்டங்களில் நம்பிக்கையில்லை. குழந்தைகளுக்கு அதிக சுதந்திரத்தையும் கொடுப்பார்கள். அவர்களை நன்றாக கவனித்தும் கொள்வார்கள். குழந்தைகளுக்கு சுதந்திரத்தை அளிக்கும் பெற்றோர்கள் குழந்தையிடம் திறந்த மனதுடன் இருப்பார்கள். ஒரு நண்பனைப் போல பழகுவார்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை சுமுகமாக தீர்ப்பதற்கான வழிகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பார்கள்.

    அது மட்டுமல்லாது இந்த வகையை சார்ந்த பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கடுமைகளை காட்ட விரும்பமாட்டார்கள். பெரும்பாலும் இந்த வகை பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு சட்டதிட்டங்களில் நம்பிக்கையில்லை. குழந்தைகளுக்கு அதிக சுதந்திரத்தையும் கொடுப்பார்கள். அவர்களை நன்றாக கவனித்தும் கொள்வார்கள்.

    • கீழ்கண்ட முறைகளை தவறாமல் கடைபிடித்தால் குடற்புழுக்கள் 100 சதவிகிதம் அழிந்துவிடும்.
    • கீழ்கண்ட முறைகளை தவறாமல் கடைபிடித்தால் குடற்புழுக்கள் 100 சதவிகிதம் அழிந்துவிடும்.

    குழந்தைகளை பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சனை குடற்புழுத் தொல்லை. அசுத்தமான இடங்களிலும், மண் தரையிலும், தண்ணீரிலும் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, குழந்தைகளும் பெரியவர்களும் காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது, சமையலுக்கு முன் காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறுவது போன்ற சுகாதாரமற்ற பழக்கங்களே குடற்புழு ஏற்படுவதற்குக் காரணமாகின்றன.

    பூச்சிகள் இருந்தால், சரியாக சாப்பிடாமல் மெலிந்து, நிறம் வெளிறி காணப்படுவார்கள். சிலருக்கு வறட்டு இருமல், இளைப்பு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சாலையோர உணவகங்களில் கைகளால் நேரடியாக உணவு பரிமாறப்படுவதால் அமீபியாசிஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. இந்தத் தொற்று ஏற்பட்டவர்கள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் வயிற்று வலியால் அவதிப்படுவார்கள். அடிக்கடி மலம் கழிக்க வேண்டியது போல உணர்வார்கள்.

    குடற்புழுத் தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு சருமத்தில் வெள்ளைத்திட்டுகள் தோன்றி அரிப்பு ஏற்படும். சில புழுக்கள் ஆசன வாயில் முட்டை இடுகின்றன. இதனால், அந்த இடத்தில் இரவில் அதிக அரிப்பு ஏற்படும்.

    அறியாமல் சொறிந்து கொண்டு, அதே கைகளை குழந்தைகள் வாயில் வைக்கும்போது, பூச்சிகள் மீண்டும் உடலுக்குள் செல்வது ஒரு தொடர் சுழற்சியாகவே நடைபெறும். கொக்கிப்புழு நாளொன்றுக்கு 0.2 மி.லி. ரத்தத்தை உறிஞ்சிவிடும். இதனால் இந்தப் புழு தாக்கியுள்ள நபருக்கு வயிற்றுப் பிரச்னைகளோடு ரத்தசோகை நோயும் ஏற்படும்.

    ரத்தசோகை, சோர்வு, வெளிறிய முகம் போன்ற அறிகுறிகள் தோன்றும் போது பெரியவர்களும் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். குடற்புழுவை ஒழிக்கப் பெரியவர்களுக்கு மாத்திரைகளும், குழந்தைகளுக்குத் திரவ மருந்தும் கொடுக்கப்படுகிறது.

    பலவகைப் புழுக்கள் இருப்பதால், மேற்கூறிய அறிகுறிகள் இருப்பவர்கள் எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை மலப்பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத்துவர் கூறுவது போல குடற்புழு நீக்கம் செய்து கொள்ள வேண்டும். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை உள்ளுக்குள் மருந்து கொடுக்க வேண்டும்.

    மற்றவர்களைக் காட்டிலும், அதிகமாக ரோட்டோர கடைகளில் சாப்பிடுபவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் குடற்புழு நீக்கம் செய்து கொள்வது மிகமிக அவசியம். அவரவர் வயதுக்கேற்றபடியும், நோய் அறிகுறிகளுக்கு ஏற்றவாறும் மருந்துகளும் அளவும் மாறுபடும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மாறாக தாங்களாகவே மருந்துக் கடைகளில் கிடைக்கும் De-worming மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. மேற்கூறிய முறைகளை தவறாமல் கடைபிடித்தால் குடற்புழுக்கள் 100 சதவிகிதம் அழிந்துவிடும். புழுக்கள் அழியும்போது தானாகவே சருமத்தில் ஏற்பட்ட வெள்ளைத் தழும்புகள், தடிப்புகள் போன்றவையும் மறைந்துவிடும்.

    2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை உள்ளுக்கு மருந்து கொடுக்க வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக ரோட்டோர கடைகளில் சாப்பிடுபவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் குடற்புழு நீக்கம் செய்து கொள்வது மிகமிக அவசியம்.

    • குழந்தைக்கு ஆரோக்கியமான உணவை கொடுக்க வேண்டும்.
    • குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு பெரிய சவாலானது.

    குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    0-4 மாதம் வரை

    தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில், தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்.

    இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

    4-6 மாதம் வரை

    நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில், கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.

    அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒருடேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

    6-8 மாதம் வரை

    இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதே, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகிவற்றை கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.

    8-10 மாதம் வரை

    இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    10-12 மாதம்

    இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். அளவாக இருக்க வேண்டும். உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால்பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.

    • முதல் மொழியை நன்றாகக் கற்ற பின்னர் 2-வது மொழியை சொல்லிக்கொடுங்கள்.
    • பொது இடங்களில் தாய் மொழியில் பேசக் கூச்சப்படாதீர்கள்.

    தங்கள் குழந்தைகள் பல மொழிகளிலும் புலமை பெற்று பன்முகத் திறமையாளராக விளங்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் ஆசைப்படுகிறார்கள். இதற்கு, பிறமொழிகளை கற்றுக்கொள்ள குழந்தை களுக்கு எந்த வயது சிறந்தது, எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமானதாகும். குழந்தையின் மூளை வளர்ச்சி அவர்களின் பத்து வயதுக்குள் 80 சதவிகிதம் முழுமை பெற்றுவிடும்.

    எனவே, அந்த வயதில் அவர்களின் கற்றல் திறனும் வேகமாக இருக்கும். குழந்தைகளால் அவர்களின் 7 வயதுக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசவும், மூன்று மொழிகளை எழுதவும் கற்றுக்கொள்ள முடியும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது கேட்டல், உணர்தல், பேசுதல் முதலிய செயல்களே முதன்மை வகிக்கின்றன. தாய்மொழி அல்லாத பிற மொழிகளைப் பேசும் சமூகத்தில் வளரும் குழந்தைகளால், அந்த மொழியை எளிமையாகப் புரிந்து கொண்டு நாளடைவில் பேசவும் முடியும். இது இயல்பாகவே அவர்களுக்கு புதிய மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் வளர்க்கும்.

    ஒரே வார்த்தையைத் தனக்கு அறிமுகமான பல மொழிகளில் எப்படிப் பேசுகிறார்கள் என்று, தொடர்ந்து கவனிப்பதன் மூலம் பன்மொழி சொல்லாடலில் குழந்தைகளின் ஆர்வம் அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு குழந்தைக்கு வீட்டில் பேசும் தாய்மொழி தமிழாகவும், அந்த வீட்டின் பணிப்பெண் பேசுவது தெலுங்கு மொழியாகவும், சுற்றி இருக்கும் அக்கம் பக்கத்தினர் பேசுவது மலையாளம், இந்தி போன்ற பிற மொழி யாகவும் இருக்கும்பட்சத்தில், அந்தக் குழந்தை தொடர்ந்து பல மொழிகளின் ஓசையைக் கேட்கும் வாய்ப்புகள் உள்ளதால் மொழித்திறன் வளர்ச்சிக்கு மேம்படும்.

    குழந்தைகைள சிறுவயதிலே அவர்களைப் பயிற்சி வகுப்புகளில் சேர்க்காமல், வீட்டில் வைத்தே முதலில் சிறு சிறு பயிற்சிகள் வழங்கலாம். ஒரு மொழியில் புது வார்த்தையைச் சொல்லி 'இது என்ன மொழி என்று கண்டுபிடி?' என்றோ, ஒரே வார்த்தையை பல மொழிகளில் எப்படிச் சொல்வார்கள் எனக் குழந்தைகளிடம் கேட்டு, அவர்களுக்கு புது மொழி வார்த்தைகளை அறிமுகப்படுத்தவோ செய்யலாம்.

    முதல் மொழியை நன்றாகக் கற்ற பின்னர் 2-வது மொழியை சொல்லிக்கொடுங்கள். அதேசமயம் பொது இடங்களில் தாய் மொழியில் பேசக் கூச்சப்படாதீர்கள். தாய் மொழியில் பேசுவதைப் பெருமையாக நினைத்துக் கற்றுக் கொடுங்கள். தாய்மொழியில் குறும்பாடல்கள், கதைகள் சொல்ல பயிற்சி அளிக்கலாம். குழந்தைகளிடம் பேசுவதற்கு பிரத்தியேகமாக நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் டி.வி., அலைபேசி, வானொலி போன்ற உபகரணங்களால் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் குழந்தையின் பேசும் திறன் மேம்படும்.

    • எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்யக் கூடாது.
    • தினமும் ஒரு மணி நேரப் பயிற்சி தேவை.

    தவழும் பருவத்திலும், நடை பயிலும் பருவத்திலும் குழந்தைகள் இயல்பாகவே, கை-கால்களை அசைத்தபடி, அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக நகர்ந்து கொண்டிருப்பார்கள். அதனால் அந்த பருவத்தில், உடற்பயிற்சிகள் தேவைப்படாது. அதற்கான அவசியமும் இருக்காது. ஆனால் 5 வயது தொடங்கி 17 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு உடற்பயிற்சி அவசியம்.

    பள்ளியில் உடற்பயிற்சி நேரத்தில், தங்களை அங்குள்ள விளையாட்டுக்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு வந்த பிறகும்கூட, ஏதாவது உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.

    இவர்களுக்குத் தினமும் ஒரு மணி நேரப் பயிற்சி தேவை. வாரத்துக்கு இப்படி 3-4 முறை உடற்பயிற்சியில் ஈடுபட்டால் போதுமானது.

    உடற்பயிற்சிக்கு என சிறப்பு நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. தொலைக்காட்சி, செல்பேசி, கணினி, வீடியோ விளையாட்டுக்கள் ஆகியவற்றில் செலவிடும் நேரத்தைக் குறைப்பதினால், விளையாடுவதற்கான நேரம் கிடைத்துவிடும். வீட்டு வளர்ப்புப் பிராணிகளோடு நடத்தல், ஓடுதல், குதித்தல், இசைக்கு ஏற்ப ஆடுதல், பூப்பந்து, கால்பந்து, டென்னிஸ், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றைத் தன் நண்பர்களுடன் சேர்ந்து விருப்பத்துடனும், மகிழ்ச்சியுடனும் செய்தாலே போதும்.

    எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் அவர்களது உடல்நிலை, உடல்தகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    உடலிலும், மனதிலும் பாதிப்பு உள்ள குழந்தைகளை உரிய சிகிச்சையுடன், மருத்துவரின் ஆலோசனை பெறாமல் உடற்பயிற்சி செய்யவும், விளையாடவும் அனுமதிக்கக் கூடாது. முறையான உணவு, முறையான உடற்பயிற்சி, முறையான உறக்கம் இந்த மூன்றும் சரிவர நிறைந்திருக்கும் குழந்தைகளின் வாழ்க்கை நிச்சயம் ஒளிவீசும்.

    • ஒருசில உணவுப்பொருட்கள் குழந்தைகளை குஷிப்படுத்தலாம்.
    • சோர்வாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்கலாம்.

    பெரியவர்களை போல குழந்தைகளுக்கும் மனச்சோர்வு ஏற்படும். அத்தகைய மனச்சோர்வை ஒருசில உணவுப்பொருட்களை உட்கொண்டே குறைத்து, குழந்தைகளை குஷிப்படுத்தலாம். அதுபற்றி பார்க்கலாம்.

    1. சாக்லேட் மனச்சோர்வு குறைய சாக்லேட் ஒரு சிறந்த உணவு. ஏனெனில் கோக்கோவில் அதிகமாக ஆன்டி-டிப்ரசன் பொருள் உள்ளது. சாக்லேட் சாப்பிடும்போது மனதிற்கு ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் இதில் வைட்டமின்-பி இருப்பதால் மூளையை ஆரோக்கியமாகவும் வைக்கும்.

    2. பாதாம் பருப்பு இதில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. உடலில் மக்னீசியமானது குறைவாக இருந்தால் நரம்புகளில் கோளாறு ஏற்பட்டு, இதனால் மனச்சோர்வு வரும். மேலும் காராமணி, பசலைக் கீரை மற்றும் உருளைக் கிழங்கிலும் மக்னீசியம் அதிகமாக உள்ளது.

    3. கடல் உணவு கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்பதால் உடலானது 'ரிலாக்ஸ்' ஆக இருப்பதோடு, புத்துணர்ச்சியும் பெறும். மேலும் இவற்றை உண்பதால் மனதில் தோன்றும் தேவையில்லாத குழப்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் நீங்கி, மனச்சோர்வும் கட்டுப்படும்.

    4. பால் குழப்பமான மனநிலையில் இருக்கும் குழந்தைகளின் உணவில் பால் அல்லது பால் சம்பந்தமான பொருளான தயிரை அதிகம் சேர்க்கலாம். ஏனெனில் பாலில் அதிகமாக ஒமேகா-3 இருப்பதால், இது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். தேவையில்லாத எண்ணங்களால் ஏற்படும் மனச்சோர்வும் அகலும்.

    • குழந்தைகளுக்கு மூக்கில் ‘நீர்க்கோப்பு சதை' வளர்வதுண்டு.
    • குழந்தைகள் மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருப்பார்கள்.

    மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு.

    நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை அதிகமாக காணப்படும். இதை ஆங்கிலத்தில் 'எபிஸ்டேக்சிஸ்' என்று அழைக்கிறார்கள். சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டு உள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி.

    வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்.

    மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. வெளிப்பக்கம் தெரிகிற மூக்கின் இரு பக்கங்களிலும் துவாரங்கள் உள்ளன. இந்த புறநாசி துவாரத்தில் விரல் விட்டால் குகை மாதிரி உள்ளே போகிறதல்லவா? அந்தப் பகுதிக்கு 'மூக்குப் பெட்டகம்' என்று பெயர். இதன் ஆரம்ப பகுதியில், முகத்தின் பல பகுதிகளிலிருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன. இப்பகுதிக்கு 'லிட்டில்ஸ் ஏரியா ' என்று பெயர். இது ஒரு தொட்டாற்சிணுங்கி பகுதி. இது லேசாக சீண்டப்பட்டால்கூட, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டிவிடும்.

    இதை 'சில்லுமூக்கு' என்றும் பொதுவாக சொல்வார்கள். மூக்கிலிருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீத காரணம் இந்த பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும்.

    குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பல்பம், பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்து குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்தக் கசிவு ஏற்படும். சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கிலிருந்து ரத்தம் வடியும். அல்லது மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கை பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் ரத்தம் வரலாம்.

    குழந்தைகளுக்கு மூக்கில் 'நீர்க்கோப்பு சதை' வளர்வதுண்டு. தவிர, மூக்கும் தொண்டையும் இணைகிற பகுதியில் 'அண்ணச்சதை' வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக்கொள்ளும். அடைப்பை விலக்க குழந்தைகள் அடிக்கடி மூக்கை குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு, மூக்கிலிருந்து ரத்தம் வரும். படிக்கிற இடம், வேலை செய்கிற இடம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நிலவுகிற தட்பவெப்பம் காரணமாகவும் மூக்கிலிருந்து ரத்தம் வடியலாம். மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும் ஆகாது; மிகுந்த வெப்பமும் ஆகாது.

    • காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனிமைப்படுத்தி கவனிக்க வேண்டும்.
    • வைரசின் தாக்கத்தை பொறுத்து மருந்துகள் கொடுக்க வேண்டும்.

    உலகையே உலுக்கிய கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தற்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறோம். கொரோனாவை தொடர்ந்தும் சில பெயர்களில், பரிணாமங்களில் வைரஸ் காய்ச்சல்கள் வந்தன. ஆனால் அவையாவும் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

    இந்தநிலையில், குழந்தைகளை குறி வைத்து தாக்கும் புதிய வைரஸ் காய்ச்சல் மக்கள் மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு புதுவித காய்ச்சல் பரவி வருகிறது.

    மதுரையை சுற்றி உள்ள மாவட்டங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து செல்கிறது. இதற்கு காரணம் என்ன, எவ்வாறு தடுக்கலாம்? என்பது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியின் குழந்தைகள் நலப்பிரிவு துறை தலைவர் பாலசங்கர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் பன்றிக்காய்ச்சல் வைரஸ் எனப்படும் 'இன்புளுவென்சா' வைரஸ் தான்.

    பன்றிகாய்ச்சல் வைரசில் எச்1என்1, எச்2என்2 என பல வகை இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. இது பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் வருகிறது.

    பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு அதிகமாக வருகிறது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    கொரோனா வைரஸ் பரவி வந்த காலத்தில் மக்களும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இருந்தனர். ஆனால், தற்போது அதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. எல்லா இடங்களுக்கும் செல்கின்றனர். கொரோனா பரவி விடக்கூடாது என்பதற்காக சமூக இடைவெளியை கடைபிடித்தோம், அடிக்கடி கை கழுவினோம், முக கவசம் அணிந்தோம். ஆனால், தற்போது எல்லாவற்றையும் மறந்து விட்டதால் இப்போது இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.

    பள்ளிகளில் ஒரு குழந்தைக்கு வந்தால் அந்த குழந்தையிடம் இருந்து அடுத்தடுத்து குழந்தைகளுக்கு எளிதாக பரவி விடுகிறது. இதனை கட்டுப்படுத்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனிமைப்படுத்தி கவனிக்க வேண்டும்.

    அதிக காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் டாக்டர்களின் பரிந்துரையின்படி, காய்ச்சல்- இருமலுக்கும் மருந்து கொடுக்கலாம். மேலும், சுடு தண்ணீர் அதிக அளவு கொடுக்க வேண்டும். காலையிலும், மாலையிலும் தேன் கொடுக்கலாம். வைரசின் தாக்கத்தை பொறுத்து மருந்துகள் கொடுக்க வேண்டும்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த காலங்களில் காய்ச்சல் பரிசோதனைக்கு தினமும் 300 பேர் வருவார்கள். ஆனால், கடந்த சில தினங்களாக தினமும் 100 முதல் 150 பேர் வரை கூடுதலாக புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் அதிக காய்ச்சல் பாதிப்பு் உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர். சளி அதிகமாகவும், மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தால் அந்த குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    குறிப்பாக, 1 வயதுக்கும் குறைவான பச்சிளம்குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவர்களை கூடுதலாக கவனிக்க வேண்டும். அதுபோன்ற குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    வரும் நாட்களில் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் முக கவசம் அணிந்து சென்றால், நோய் தொற்று பரவுவதில் இருந்து தப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×