search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளை பாதிக்கும் செல்போன் ரேடியேஷன்
    X

    குழந்தைகளை பாதிக்கும் செல்போன் ரேடியேஷன்

    • நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் செய்யும்.
    • ரேடியேஷன்களால் ஏற்படும் ஆபத்து குழந்தைகளுக்கு மிகவும் அதிகம்.

    செல்போன் போன்களில் இருந்து வெளியேறும் எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஆபத்தானதுதான். ஆனால் இந்த ரேடியேஷன்களால் ஏற்படும் ஆபத்து குழந்தைகளுக்கு மிகவும் அதிகம். இதை தவிர்த்து, போன் திரைகளில் இருந்து வைலட் கதிர்கள், பேட்டரி வெடிக்கக்கூடும் என்ற ஆபத்து, ஆகிய அனைத்துமே குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை அதிகரித்துள்ளது.

    நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் செய்யும். எனவே பெற்றோர்கள் பெரும்பாலான நேரம் போனில் செலவழிக்கும் போது குழந்தைகளும் அதையே தான் பின்பற்றும். ஆனால் போன்களில் இருந்து வெளியேறும் எலக்ட்ரோமேக்னடிக் ஃபீல்ட் என்பது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அவர்களுடைய உடல் அமைப்பு மற்றும் உடல் உறுப்புகளில் கூட பாதிப்புகளை உண்டாக்கும். இதன் பெயர் மைக்ரோவேவ் ரேடியேஷன் என்று கூறப்படுகிறது.

    குழந்தைகள் பிறந்து சில மாதங்கள் வரை முன்னுச்சி என்று கூறப்படும் குழந்தைகளின் தலையின் மேற்பகுதி மூடாமல் திறந்த படிதான் இருக்கும். குழந்தை வளர வளர தான் அந்த பகுதி மூடும். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் மண்டை ஓட்டுப் பகுதி மிகவும் மெலிதாக இருக்கும். இதனால் குழந்தைகளின் மூளை பெரியவர்களை விட எளிதாக ரேடியேஷனை உறிஞ்சும் ஆபத்து இருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு முதல் தீவிரமான வளர்ச்சி குறைபாடுகள் வரை ஏற்படும்.

    நீல நிற ஒளி

    எலக்டிரானிக் சாதனங்களில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி எவ்வாறு ஒரு நபரை பாதிக்கிறது என்பதைப் பற்றி புதிதாகக் கூற எதுவுமே இல்லை. ஆனால் இது பெரியவர்களை மட்டுமல்ல குழந்தைகளையும் பாதிக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. நல்ல தூக்கம், கண்கள் ஆரோக்கியம், நடத்தை, ஆற்றல் ஆகியவற்றுக்கு இரவுநேரத்தில் அனைத்து சாதனங்களையும் ஸ்விச் ஆஃப் செய்து வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. பெரியவர்களை பாதிப்பதை விட இந்த செல்போன்களில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி குழந்தைகளை 45% அதிகமாக பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது அவர்களின் உடலில் ஒரு விதமான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது.

    வெடிக்கும் ஆபத்து

    சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசிக் கொண்டிருப்பது அல்லது நீண்ட நேரம் மொபைல் பயன்பாடு என்ற பல்வேறு காரணங்களால் செல்போன் பேட்டரிகள் வெடிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு பேட்டரிகள் செயலிழந்து போவது, அல்லது தவறான சார்ஜர்களை பயன்படுத்துவது அல்லது சார்ஜ் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய மின்சார கோளாறு ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே பல முறை செல்போன் வெடித்து அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். எனவே செல்போன் பேட்டரிகள் ஆரோக்கியமாக இருப் பதை உறுதி செய்வது மிகவும் அவசியம். அதுமட்டு மில்லாமல் குழந்தைகளின் அருகில் எப்பொழுதும் செல்போன் சார்ஜ் செய்யக்கூடாது.

    Next Story
    ×