என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    உங்களுடைய பலவகையான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை தரும், சில ஒருவரி மந்திரங்களையும் அந்த மந்திரத்தை எந்த இடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் பட்சத்தில், குறைந்தது 15 நாட்களில் பலனை அடைய முடியும் என்ற ஒரு சூட்சுமத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
    உங்களுடைய பலவகையான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை தரும், சில ஒருவரி மந்திரங்களையும் அந்த மந்திரத்தை எந்த இடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் பட்சத்தில், குறைந்தது 15 நாட்களில் பலனை அடைய முடியும் என்ற ஒரு சூட்சுமத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த மந்திரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் குறிப்பிட்ட எந்த பிரச்சனைக்கு, எந்த மந்திரம் என்று தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. மன அமைதியான வாழ்க்கை தேவை என்றால், ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை 108 முறை, 15 நாட்கள் உச்சரித்து வரவேண்டும். விரைவில் கடன் தீர ‘ஓம் குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை, 15 நாட்கள் உச்சரிக்க வேண்டும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ‘ஓம் வித்யாசரஸ்வதியே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

    மன பயம் நீங்க ‘ஓம் நரசிம்ஹாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வாருங்கள். நம்முடைய குடும்பம் ஒற்றுமையாக, சந்தோஷமாக, வளமாக இருக்க ‘ஓம் உமாமஹேஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். வண்டி, வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் சேர்வதற்கு ‘ஓம் வர லட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

    தீராத துன்பங்கள் தீர்வதற்கும், உடலில் இருக்கும் பிணி நீங்குவதற்கும், ‘ஓம் ஆஞ்சநேயாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். ஆனால் இந்த மந்திரங்களை எந்த இடத்தில் அமர்ந்து, உச்சரித்தால் 15 நாட்களில் பலனை அடையலாம்?
    இந்த மந்திரத்தை காலையில் எழுந்து குளித்து முடித்ததும் திருமணமான தம்பதிகள் ஒன்றாக துதித்து வருவார்களேயானால் பிள்ளை பேறில்லாமல் தவிக்கின்றன தம்பதிகளுக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறுண்டாகும்.
    ஓம் தேவேந்திராணி நமோஸ்துப்யம்
    தேவேந்திர பிரிய பாமினி
    விவாஹா பாக்கியம்
    ஆரோக்கியம் புத்திர லாபம்
    சதேஹிமே பதிம் தேஹி சுதம்
    தேஹி சௌபாக்கியம் தேஹிமே
    சுப்ஹி சௌமாங்கல்யம் சுபம்
    ஞானம் தேஹிமே கர்பரக்ஷகே
    காத்யாயினி மஹாமாயே மஹா
    யோகின்ய திச்வரி நந்தகோப
    சீதம் தேவம் பதிம் மேகுருதே நமஹா

    பெண்களின் கருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற “ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை” அம்மனின் மந்திரம் இது. இந்த மந்திரத்தை காலையில் எழுந்து குளித்து முடித்ததும் திருமணமான தம்பதிகள் ஒன்றாக துதித்து வருவர்களேயானால் பிள்ளை பேறில்லாமல் தவிக்கின்றன தம்பதிகளுக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறுண்டாகும். கருவுற்றிருக்கும் பெண்கள் துதித்து வந்தால் கருச்சிதைவு, கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை நீக்கும். குழந்தை பெற்றெடுக்கும் காலத்தை நெருங்கி வரும் பெண்கள் இம்மந்திரத்தை தினமும் துதித்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
    நந்தி பகவானுக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது பிரதோஷ நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக விலகும். எண்ணங்கள் நிறைவேறும்.
    நெற்றியிற் கண்ணர் நிறையடி போற்றி
    நாற்பெரும் தோளர் நற்றாள் போற்றி
    நீறணி மேனியர் நெடுந்தாள் போற்றி
    தலைமைப் பணியர் தாளிணை போற்றி
    மலர்க்கையிற் கரிகையர் மலரடி போற்றி
    கயிலை மால்வரைக் காவலோய் போற்றி
    பெரிய தேவரெனும் பெயரோய் போற்றி
    வானவர்க் கருளிப்பாடு வழங்கினோய் போற்றி
    திருப்பதி மலையில் ஏறும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லிய படி மலையேறினால் நம் வேண்டுதல்கள் நிச்சயமாக நிறைவேறும்.
    ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
    ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே
    ச்ரத்தயாஸஹ தம் பவந்தம்
    அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம...
    க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ
    த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே"

    பொருள் : பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.
    இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்.
    ஓம் ச்யாமளாயை விக்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வராஹி ப்ரசோதயாத்

    இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும். பொதுவாகவே கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராகி அம்மனை மனதார வழிபட்டாலே போதும். அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும். இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வாராகி அம்மனை வழிபடுவது சிறந்தது.
    சுத்தமான மனதுடன் தீவிர பக்தி, எடுத்த காரியத்தை சரியாக முடிக்கும் வல்லமை, சிறந்த வீரராக விளங்குபவர்கள், ஆஞ்சநேயரின் அம்சமாக பார்க்கப்படுகிறார்கள்.
    சுத்தமான மனதுடன் தீவிர பக்தி, எடுத்த காரியத்தை சரியாக முடிக்கும் வல்லமை, சிறந்த வீரராக விளங்குபவர்கள், ஆஞ்சநேயரின் அம்சமாக பார்க்கப்படுகிறார்கள். அனுமனுக்கு அஷ்டமா சித்தியையும், சிரஞ்சீவி தன்மையையும் சீதாதேவியே வழங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. சுத்தமான மனதுடன் தீவிர பக்தி, எடுத்த காரியத்தை சரியாக முடிக்கும் வல்லமை, சிறந்த வீரராக விளங்குபவர்கள், ஆஞ்சநேயரின் அம்சமாக பார்க்கப்படுகிறார்கள்.

    இவருக்கான காயத்ரி மந்திரம்..

    “ஓம் வாயு புத்ராய வித்மஹே
    ராம பக்தாய தீமஹி
    தந்தோ ஹனுமன் பரசோதயாத்
    உங்கள் வாழ்வில் நன்மைகளை வரவழைக்க, ராகு-கேதுக்களை வழிபாடு செய்வது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ராகு - கேதுக்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    ராகு காயத்ரி:

    நாக த்வஜாய வித்மஹே
    பத்ம ஹஸ்தாய தீமஹி
    தந்நோ ராகு ப்ரசோதயாத்

    கேது காயத்ரி:

    அச்வ த்வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தந்நோ கேது ப்ரசோதயாத்
    மாணவ, மாணவியர்கள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட சுலோகத்தைச் சொல்லிவிட்டுப் படித்தால், படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.
    கலைவாணி வழிபாடு கல்விச் செல்வம் வழங்கும். பூஜை அறையில் சரஸ்வதி படம் வைத்து பாடல் படித்து வழிபடலாம். வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள் சிலர், வினாத்தாளை வாங்கியவுடன் மறந்து விடுவதுண்டு. இதனால் அவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை அமைகின்றது. மாணவ, மாணவியர்கள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட சுலோகத்தைச் சொல்லிவிட்டுப் படித்தால், படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.

    சரஸ்வதி நமோஸ்துப்யம்,

    வரதே காம ரூபிணி

    வித்யாரம்பம் கரிஷ்யாமி,

    ஸித்தர் பவது மே ஸதா!

    இந்த சுலோகம் அல்லது கலை வாணி துதிப்பாடல், சகலகலாவல்லிமாலை போன்றவற்றை படிக்கலாம்.
    வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.
    தீபஜ்யோதி பரம் பிரம்ம
    தீபஜ்யோதிர் ஜனார்த்தன
    தீபோஹரது மே பாபம்
    சந்த்யாதீப நமோஸ்துதே
    சுபம் கரோது கல்யாணம்
    ஆரோக்யம் சுகசம்பதம்
    மம புத்தி ப்ரகாசாய
    தீப ஜ்யோதிர் நமோஸ்துதே
    உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
    சூலினே நமோ நம: கபாலினே நம:
    சிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
    லீலினே விசேஷ முண்ட மாலிநே நம:
    சிவாய சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

    பொருள்: சூலத்தையும் ஓட்டையும் கையில் வைத்திருப்பவரும், தம்மை வணங்கும் ஜீவர்களைக் காப்பவரும், பிரம்மாவின் கபாலத்தை உடையவரும், ஜனங்களின் நன்மைக்காக பல அவதாரங்களை எடுத்து நன்மை செய்பவரும், நிறைய புண்ணியம் செய்தவர்களாலேயே அடையக்கூடிய வருமான சிவபெருமானே நமஸ்காரம்.
    சிவனைத் துதித்து உத்திரட்டாதி நட்சத்திரக்காரர் உய்வடைய மகான் ஆதிசங்கரர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
    அந்த காந்த காய பாப ஹாரிணே நம:
    சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
    ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம:
    சிவாய ஜந்து ஜாத நித்ய ஸௌக்ய காரிணே நம: சிவாய

    பொருள் : காலனுக்குக் காலனானவரும், பாபத்தைப் போக்குபவரும், மாயையை அடக்கியவரும், எப்போதும் உள்ள துயரத்தைத் துடைப்பவரும், பிறந்த ஜீவனுக்கு நித்ய ஸெளக்கியம் எனும் பேரின்பத்தை அளிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
    புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
    புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம:
    சிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
    பக்த ஸங்கடாபஹர யோகினே நம:
    சிவாய யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

    பொருள்: இன்பம், வீடு, தேவலோகத்து அனுபவம் ஆகியவற்றைக் கொடுப்பவரும், தனக்கு அடக்கமான மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தில் சம்பந்தமுள்ளவரும், தன் பக்தர்களின் துயரத்தைப் போக்குவதில் ஆழ்ந்த கவனம் உள்ளவரும், ஸாதுக்களின் மனத் தாமரையில் வசிக்கும் யோகியுமான சிவபெருமானே நமஸ்காரம்.
    ×