என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர். சிவனைத் துதித்து சதயம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
    ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம:
    சிவாய பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
    பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம:
    சிவாய தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

    பொருள்: பரமேஸ்வரா! உம்முடைய வேலைக்காரனான என்னிடம் கருணை காட்டும். இதயத்தில் பாவனை செய்யும் அளவுக்கு அருள்புரிபவரும், நெருப்பைக் கண்ணாக உடையவரும், தேவர்களும் வணங்கித் தொழும் திருவடியை உடையவரும், தன்னுடைய திருவடியைச் சரணடையும் பக்தர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பவருமான சிவபெருமானே
    நமஸ்காரம்.
    புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
    அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம:
     சிவாய ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
    ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம:
    சிவாய விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

    பொருள்: அளவிடமுடியாத தெய்வீக மகிமை பொருந்தியவரும், தன்னைச் சரணடைந்த பக்தர்களைக் காப்பதில் நாட்டமுற்றவரும், தன்னிடத்திலேயே ஒளிரும் அளவில்லாத ஆத்மானுபவத்தை உடையவரும், மார்க்கண்டேயருக்குத் தன் அன்பைக் காட்டியவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
    காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர். சிவனைத் துதித்து திருவோணம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
    விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம:
    சிவாய சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
    இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம:
    சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

    பொருள்: சுவர்க்கத்துக்குத் தலைவரும், விஷ்ணுவால் போற்றப்பட்டவரும், ஒழுக்கமுள்ள பக்தர்களின் இதயக்குகையில் சஞ்சரிப்பவரும், தானே பிரம்மம் எனும் அனுபவத்தில் எப்போதும் மகிழ்ச்சி உள்ளவரும், புலன்களை அடக்கியவரும், பக்தர்களது துயரத்தைத் துடைப்பவரும், உலகத்தை ஜெயிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
    புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
    கர்மபாச நாச நீலகண்டதே நம:
    சிவாய சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
    நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம:
    சிவாய குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

    பொருள்: கர்மாவாகிற கயிற்றை அழிக்கிற நீலகண்டரும், சுகத்தைக் கொடுப்பவரும், சிறந்த திருநீற்றை கழுத்தில் தரித்தவரும், தன்னுடையது எனும் எண்ணம் நீங்கப்பெற்ற மகரிஷிகளை அருகில் கொண்டவரும், விஷ்ணுவால் வணங்கப்பட்டவருமான சிவபெருமானே
    காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர். சிவனைத் துதித்து பூராடம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
    அந்ரி பாணயே சிவம் கராயதே நம:
    சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
    பங்க பீஷிதா பயங்கராயதே நம:
    சிவாய பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

    பொருள்: மங்களத்தைச் செய்பவரும், துயரமெனும் சமுத்திரத்தை கடக்கவைப்பதில் மிகச் சிறந்த படைவீரன் போன்றவரும், சம்சாரக் கடலுக்கு பயந்தவர்களின் அச்சத்தைப் போக்கடிப்பவரும், தாமரைக் கண்ணரும், சுகத்தை அருள்பவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.
    புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும்.
    திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம:
    சிவாய தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
    ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம:
    சிவாய ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

    பொருள்: முக்கண்ணரும், எளியவர்களிடத்தில் கருணையுடையவரும், தட்ச ப்ரஜாபதியின் யாகத்தை நாசம் செய்தவரும், சந்திரன், சூரியன், அக்னி மூவரையும் கண்களாய் உடையவரும், வணங்கிய பக்தர்களை தாமதமில்லாமல் காப்பவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.
    புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
    ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம:
    சிவாய அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
    தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம:
    சிவாய கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

    பொருள்: பக்தர்கள் கோருவதைக் கொடுப்பவரும், யாகம் இயற்றுபவர்களைக் காப்பவரும், ரிஷபக் கொடியோனும், வெள்ளியைத் தோற்கடிக்கும் பேரொளி மிக்க உடலை உடையவரும், வீட்டில் உண்டாகும் துயரங்களை எல்லாம் அடியோடு தொலைப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
    விநாயகர் சதுர்த்தியான நாளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த 108 போற்றியை சொல்லி விநாயகரை வழிபாடு செய்தால் காரியத்தடைகள் அகலும். துன்பம் பறந்தோடும்.
    ஸ்ரீவிநாயகர் 108 போற்றிகள்
    ஓம் விநாயகனே போற்றி
    ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
    ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
    ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
    ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
    ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
    ஓம் ஆனை முகத்தோனே போற்றி
    ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
    ஓம் ஆதி மூலமே போற்றி
    ஓம் ஆனந்த உருவே போற்றி
    ஓம் இமவான் சந்ததியே போற்றி
    ஓம் இடரைக் களைவோனே போற்றி
    ஓம் ஈசன் மகனே போற்றி
    ஓம் ஈகை உருவே போற்றி
    ஓம் உண்மை வடிவே போற்றி
    ஓம் உலக நாயகனே போற்றி
    ஓம் ஊறும் களிப்பே போற்றி
    ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
    ஓம் எளியவனே போற்றி
    ஓம் எந்தையே போற்றி
    ஓம் எங்குமிருப்பவனே போற்றி
    ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
    ஓம் ஏழை பங்காளனே போற்றி
    ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
    ஓம் ஐயனே போற்றி
    ஓம் ஐங்கரனே போற்றி
    ஓம் ஒப்பிலாதவனே போற்றி
    ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
    ஓம் ஒளிமய உருவே போற்றி
    ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
    ஓம் கணேசனே போற்றி
    ஓம் கணநாயகனே போற்றி
    ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
    ஓம் கலியுக நாதனே போற்றி
    ஓம் கற்பகத்தருவே போற்றி
    ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
    ஓம் கிருபாநிதியே போற்றி
    ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
    ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
    ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
    ஓம் குணநிதியே போற்றி
    ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
    ஓம் கூவிட வருவோய் போற்றி
    ஓம் கூத்தன் மகனே போற்றி
    ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
    ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
    ஓம் கோனே போற்றி
    ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
    ஓம் சடுதியில் வருபவனே போற்றி
    ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
    ஓம் சங்கடஹரனே போற்றி
    ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
    ஓம் சிறிய கண்ணோனே போற்றி
    ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
    ஓம் சுருதிப் பொருளே போற்றி
    ஓம் சுந்தரவடிவே போற்றி
    ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
    ஓம் ஞான முதல்வனே போற்றி
    ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
    ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
    ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
    ஓம் துயர் துடைப்பவனே போற்றி
    ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
    ஓம் தேவாதி தேவனே போற்றி
    ஓம் தொந்தி விநாயகனே போற்றி
    ஓம் தொழுவோ நாயகனே போற்றி
    ஓம் தோணியே போற்றி
    ஓம் தோன்றலே போற்றி
    ஓம் நம்பியே போற்றி
    ஓம் நாதனே போற்றி
    ஓம் நீறணிந்தவனே போற்றி
    ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
    ஓம் பழத்தை வென்றவனே போற்றி
    ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
    ஓம் பரம்பொருளே போற்றி
    ஓம் பரிபூரணனே போற்றி
    ஓம் பிரணவமே போற்றி
    ஓம் பிரம்மசாரியே போற்றி
    ஓம் பிள்ளையாரே போற்றி
    ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
    ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
    ஓம் புதுமை வடிவே போற்றி
    ஓம் புண்ணியனே போற்றி
    ஓம் பெரியவனே போற்றி
    ஓம் பெரிய உடலோனே போற்றி
    ஓம் பேரருளாளனே போற்றி
    ஓம் பேதம் அறுப்போனே போற்றி
    ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
    ஓம் மகிமையளிப்பவனே போற்றி
    ஓம் மகாகணபதியே போற்றி
    ஓம் மகேசுவரனே போற்றி
    ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
    ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
    ஓம் முறக்காதோனே போற்றி
    ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
    ஓம் முக்கணன் மகனே போற்றி
    ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
    ஓம் மூத்தோனே போற்றி
    ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
    ஓம் வல்லப கணபதியே போற்றி
    ஓம் வரம்தரு நாயகனே போற்றி
    ஓம் விக்னேஸ்வரனே போற்றி
    ஓம் வியாஸன் சேவகனே போற்றி
    ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
    ஓம் வெற்றியளிப்பவனே போற்றி 
    அனுஷம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
    மங்களப் ரதாயகோ துரங்கதே நம:
    சிவாய கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
    ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம:
    சிவாய அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

    பொருள்: மங்களத்தைச் செய்பவரும், ரிஷப வாகனத்தை உடையவரும், அலைமோதும் கங்கையை தலையில் தரித்தவரும், போரில் சத்ருக்களை ஒழிப்பவரும், மன்மதனுக்குப் பகையானவரும், கையில் மானை உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
    சிவனைத் துதித்து விசாகம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா. இத்துதியைப் பாடி, சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும்.
    பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவா
    ய தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
    மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம:
    சிவாய ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

    பொருள்: உமாதேவியின் மனத்துக்கு உகந்த சரீரத்தை உடையவரே, என்னைக் காப்பாற்றும். வெள்ளியங்கிரியில் இருப்பரே, ஈசனே, எனக்கு வரம் அருளும். மஹரிஷிகளின் மனைவியரை மோகிக்கச் செய்தவரும், உம்மிடம் வேண்டியதைக் கொடுப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
    சிவனைத் துதித்து ஸ்வாதி நட்சத்திரக்காரர் உய்வடைய மகான், ஆதிசங்கரர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
    ஸர்வ ஜீவரக்ஷணைக சீலினே நம:
    சிவாய பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
    துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம:
    சிவாய சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

    பொருள்: எல்லாப் பிராணிகளையும் காப்பாற்றுவதில் கருத்துள்ளவரும், பார்வதி தேவிக்குப் பிரியமானவரும், பக்தர்களை அரவணைத்துக் காப்பவரும், தவறான செயல்களில் ஈடுபடும் அரக்கர் சைன்யத்தை அழிப்பவரும், சந்திரனை முடியில் உடைய வரும், கபாலத்தைக் கையில் உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
    புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
    ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம:
    சிவாய மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
    ஏகபில்வ தானதோபி தோஷிணே நம:
    சிவாய நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

    பொருள்: குறைந்த அளவே பக்தி செய்யும் பக்தர்களையும் வளர்ப்பவரும், குயில் மாதிரி பேச்சு உடையவரும், ஒரு வில்வதளத்தை அர்ப்பணித்தாலேயே மகிழ்ச்சி அடைபவரும், பல பிறவிகளில் செய்த பாபங்களை எரிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

    ×