என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    புரட்டாசி மாதத்தில் தினமும் காலையில் இந்த துதியை ஜபம் செய்து பெருமாளை வழிபாடு செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.
    ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம்
    மாமுத்தராத்ய க்ருபயா கருணாபயோதே
    லக்ஷ்மீஞ்சதேஹி விபுலாம் ருணவாரணாய
    ஸ்ரீவெங்கடேச மம தேஹி கராவலம்பம்.
    வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.

    பொதுப் பொருள்:

    அகில உலகத்திற்கும் இறைவனே, வெங்கடாஜலபதியே! தங்களுக்கு நமஸ்காரம். அனைத்து உலகங்களையும் காப்பவரே, உம்மை வணங்குகிறேன். கருணைக் கடலே, உலகியல் மாயையில் மூழ்கித் தவிக்கும் என்னைக் கரை சேர்க்கக் கைகொடுத்து அருள்வாய். நான்பட்ட கடன்களைத் தீர்க்க என் மீது இரக்கம் காட்டுவாய். மகாலட்சுமியின் நாயகனே! எனக்கு எல்லா செல்வ வளங்களையும் அருளி, என் சகல தோஷங்களையும் போக்கி, என்னைக் காக்கும் இறைவனான வெங்கடாஜலபதியே, தங்களை மீண்டும் வணங்குகிறேன்.

    காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.
    பவுர்ணமி தினத்தன்று இந்த ஸ்லோகத்தை எத்தனை முறை துதித்து வந்தாலும் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள், மிகுந்த செல்வம், எதிரிகள் இல்லாத நிலை, மரண பயமின்மை, தெய்வங்களின் அருள் போன்ற பேறுகள் கிடைத்து இறுதியில் மோட்ச நிலையை அடைவார்கள்.
    ஓம் கமலவர்ணனே போற்றி
    ஓம் சித்திரை உருவே போற்றி
    ஓம் பயம் போக்குபவனே போற்றி
    ஓம் கால உருவே போற்றி
    ஓம் அந்தக நண்பனே போற்றி
    ஓம் ஞான உருவே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கணக்கனே போற்றி
    ஓம் தர்மராஜனே போற்றி
    ஓம் தேவலோக வாசனே போற்றி
    ஓம் ஆயுள் காரணனே போற்றி
    ஓம் மேன்மை தருபவனே போற்றி
    ஓம் குழந்தை வடிவினனே போற்றி
    ஓம் குளிகன் உருவினனே போற்றி
    ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி
    ஓம் சித்திரகுப்தனே போற்றி

    பவுர்ணமி தினத்தன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரையான காலத்தில் மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை எத்தனை முறை துதித்து வந்தாலும் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள், அன்பான வாழ்க்கை துணை, நன்மக்கள் செல்வம், மிகுந்த செல்வம், எதிரிகள் இல்லாத நிலை, மரண பயமின்மை, தெய்வங்களின் அருள் போன்ற பேறுகள் கிடைத்து இறுதியில் மோட்ச நிலையை அடைவார்கள்.

    இந்த நன்னாளில் தெய்வங்களுக்கான விரதங்கள் இருப்பதும் இறைவழிபாடு மற்றும் தான தர்மங்கள் செய்வதும் சாலச் சிறந்ததாகும். இந்த பௌர்ணமி தினத்தன்று மேற்கூறிய ஸ்லோகத்தை துதித்து வழிபடுவதாலேயே ஒருவர் அனைத்து நன்மைகளையும் பெற முடியும்.
    செவ்வாய்க்கிழமைகளில் அல்லது தினமும் இந்த மந்திரத்தை மனம் உருகி இந்த 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார் என்பது நிச்சயமான உண்மை.
    இந்த மந்திரத்தை உச்சரித்தால் பல கோடி புண்ணியம் நமக்கு கிடைப்பதோடு, வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்ள் அனைத்தும் விலகி, துயரங்கள் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும். வெறுமனே வாயால் இந்த மந்திரத்தை உச்சரித்தால் மட்டும் போதாது. அந்த முருகப்பெருமானே முழுமையாகச் சரணடைந்து, நம்முடைய ரத்தத்திலும் சதையிலும் முருகப்பெருமானின் நாமம் கலந்து, எல்லாம் அவன்தான் என்ற நம்பிக்கையோடு உச்சரிக்க வேண்டிய மந்திரம் இது. அருணகிரிநாதர் அருளிய முருகப்பெருமானின் மந்திரம் உங்களுக்காக இதோ!

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

    பொருள் - உருவமும் நீ தான், உருவம் இல்லாத அருவமும் நீ தான், இருப்பதும் நீ தான், இல்லாததும் நீ தான், மலரும் நீ தான், மலருக்கு முன் இருக்கும் அரும்பும் நீ தான், ஒளியும் நீ தான், ஒலியும் நீ தான், கருவும் நீ தான், கருவிலிருந்து பிறக்கும் உயிரும் நீ தான், எல்லோருக்கும் குருவும் நீ தான், உன்னையே கெதி என்று உன் பாதங்களில் சரணடைகின்றேன் முருகா! என்பது தான் இதற்கு அர்த்தம்.

    நல்லது கெட்டது, இருப்பது இல்லாதது, என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாமும் அவனே, எல்லா செயல்பாடிற்க்கும் பின்னால் அவன் தான் இருக்கின்றான் என்று, முருகப்பெருமானை சரணடைந்து, என் வாழ்க்கையை நீயே பார்த்துக்கொள் என்று, உங்களுடைய வாழ்க்கையை முருகப்பெருமானிடம் ஒப்படைத்துவிட்டு, அதன் பின்பு அன்றைய தினத்தை தொடங்க ஆரம்பியுங்கள்.

    காலை இறை வழிபாடு செய்யும் போது, முருகப் பெருமானை நினைத்து 6 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். முடிந்தவர்கள் இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்துகொண்டு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உச்சரித்துக் கொண்டே இருந்தால், உங்களை விட பாக்கியசாலி, உங்களை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை.
    இந்த மந்திரத்தை சொல்லும் போது கணவனுக்கு நீண்ட ஆயுள் மட்டுமல்லாமல் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிறையும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
    திருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன் கணவன் தான் முழு முதற் கடவுகளாக இருக்கின்றான். அதுபோல திருமணம் செய்த ஆண் தன் அனைத்து முயற்சியும் தன் மனைவி தன் பிள்ளைகாக தான் எடுக்கிறான் மற்றும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய கடுமையாக உழைப்பவனாக இருக்கிறான்.

    அப்படிபட்ட கணவன் தீர்க்க ஆயுளுடன் இருக்க மனைவியாக இருக்கும் சில பெண்கள் பல விரதங்கள், வேண்டுதல்கள் செய்வதுண்டு. கணவன் நீண்ட காலம் வாழ்வதற்காக மஞ்சள் தாலிக்கயிறு மாற்றும் போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    தன் கணவன் தீர்க்க ஆயுளுடன் இருக்க சித்திரை மாதம் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நாளில் மஞ்சள் கயிறு அணியும் பெண்கள் தங்களின் பழைய தாலி சரடை மாற்றிக் கொள்வது வழக்கம். பழைய சரடை மாற்றி புதுச்சரடு அணிந்து கொள்ளும் போது, சுமங்கலிகள் இங்கு குறிப்பிட்டுள்ள மந்திரத்தை சொல்லிக் கொண்டே கட்டிக் கொண்டால் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான்.

    தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸ்ஹாரித்ரம் தராம்யஹம்
    பர்த்து ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸீ ப்ரீதா பவ ஸர்வதா
    பதி வ்ரதே மஹா பாகே பர்த்துஸ்ச ப்ரியவாதினீ
    அவைதயம் ச ஸெளபாக்யம் தேஹி த்வம் மம ஸுவர்தே
    ஸெளபாக்யம் ஸெளமாங்கல்யம் ச தேஹிமே

    இந்த மந்திரத்தை சொல்லும் போது கணவனுக்கு நீண்ட ஆயுள் மட்டுமல்லாமல் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிறையும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பேறு மற்றும் குழந்தைகளால் நற்பெயரும் கிடைக்கும்.
    நம் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும் பெருமாளுக்கு உகந்த 108 போற்றியை இன்று சொல்லி பெருமாளை வழிபாடு செய்யலாம்.
    ஸ்ரீ நரநாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அத்புத நாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ த்ரிவிக்ரமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லோகநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவண் புருஷோத்தமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ குடமாடு  கூத்தன்  திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பால சயனக் கோலம் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தேவாதி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திரு சாரநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உப்பிலியப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வையம் காத்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வல்வில் ராமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சாரங்கபாணி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோலவில்லி ராமர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அப்பக்குடத்தான் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ புண்டரீகாட்சன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ புருஷோத்தமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பக்த வத்சல பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வீர ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீர் வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி வராக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நிலா துண்ட பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பவள வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பரமபத நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கருணாகர பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பார்த்தசாரதி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ  கோபாலகிருஷ்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய மணவாளர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருநறையூர் நம்பி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாவாய் முகுந்தன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உய்யவந்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீலமேக  பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சவுந்தர ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திரிவிக்ரம நாராயணர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தாமரைக் கண்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ செங்கண் மால் ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தேவநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ காட்கரையப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லெட்சுமண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவாழ் மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ இமையவரப்பர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மாயப்பிரான் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருக்குறளப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பாம்பணையப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அனந்த பத்மநாபர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய நம்பியார் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தோத்தாத்ரி நாதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விஜயாசனர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பூமி பாலகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி நாதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வேங்கட வாணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஸ்ரீனிவாஸன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தெய்வ நாயகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அரவிந்த லோசனர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வடபத்ரசாயி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கூடலழகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கள்ளழகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ காளமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சவுமிய நாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சத்திய மூர்த்தி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரகுநாயகன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோவர்த்தநேசன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பிரகலாதவரதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வெங்கடாஜலபதி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ முக்திநாத் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நைமிசாரண்யம் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நவமோகன கிருஷ்ணா திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரகுநாத் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாராயணா திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மகாவிஷ்ணு திருவடிகளே சரணம்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள சுக்கிர பகவான் காயத்ரி மந்திரத்தை 27 முறை சொல்லி பக்தியுடன் மனமுருக வேண்டி படிப்போர்க்கு வாழ்க்கையில் செல்வ சேர்க்கை பெற்று சிறப்பான வாழ்க்கை அமையும் .
    ஓம் அச்வத்வஜாய வித்மஹே
    தனூர் ஹஸ்தாய தீமஹி
    தன்னோ சுக்ரப்ரசோதயாத்

    என 27 முறை சுக்கிரனுடைய காயத்ரி மந்திரத்தை சொல்லி பக்தியுடன் மனமுருக வேண்டி படிப்போர்க்கு சுக்ர யோகத்தோடு மகாலட்சுமியின் ஆசியும் கிடைத்து வாழ்க்கையில் செல்வ சேர்க்கை பெற்று சிறப்பான வாழ்க்கை அமையும் .
    தினமும் அல்லது தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி திதியில் இந்த பைரவர் 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.
    தினமும் அல்லது தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி திதியில் இந்த பைரவர் 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30 - 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த 108 போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.

     108 போற்றி, பைரவர்,

    ஓம் பைரவனே போற்றி
    ஓம் பயநாசகனே போற்றி
    ஓம் அஷ்டரூபனே போற்றி
    ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
    ஓம் அயன்குருவே போற்றி
    ஓம் அறக்காவலனே போற்றி
    ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    ஓம் அடங்காரின் அழிவே போற்றி
    ஓம் அற்புதனே போற்றி
    ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

    ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    ஓம் ஆலயக்காவலனே போற்றி
    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
    ஓம் உக்ர பைரவனே போற்றி
    ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
    ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
    ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
    ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

    ஓம் எல்லை தேவனே போற்றி
    ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
    ஓம் கபாலதாரியே போற்றி
    ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
    ஓம் கர்வ பங்கனே போற்றி
    ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
    ஓம் கதாயுதனே போற்றி
    ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
    ஓம் கருமேக நிறனே போற்றி
    ஓம் கட்வாங்க தாரியே போற்றி

    ஓம் களவைக் குலைப்போனே போற்றி
    ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    ஓம் கால பைரவனே போற்றி
    ஓம் காபாலிகர் தேவனே போற்றி
    ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
    ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
    ஓம் காசிநாதனே போற்றி
    ஓம் காவல்தெய்வமே போற்றி
    ஓம் கிரோத பைரவனே போற்றி
    ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

    ஓம் சண்ட பைரவனே போற்றி
    ஓம் சட்டை நாதனே போற்றி
    ஓம் சம்ஹார பைரவனே போற்றி
    ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
    ஓம் சிவத்தோன்றலே போற்றி
    ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
    ஓம் சிக்ஷகனே போற்றி
    ஓம் சீர்காழித்தேவனே போற்றி
    ஓம் சுடர்ச்சடையனே போற்றி
    ஓம் சுதந்திர பைரவனே போற்றி

    ஓம் சிவ அம்சனே போற்றி
    ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
    ஓம் சூலதாரியே போற்றி
    ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
    ஓம் செம்மேனியனே போற்றி
    ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
    ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
    ஓம் தலங்களின் காவலனே போற்றி
    ஓம் தீது அழிப்பவனே போற்றி
    ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

    ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    ஓம் நவரச ரூபனே போற்றி
    ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
    ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
    ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
    ஓம் நாய் வாகனனே போற்றி
    ஓம் நாடியருள்வோனே போற்றி
    ஓம் நிமலனே போற்றி
    ஓம் நிர்வாணனே போற்றி

    ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    ஓம் நின்றருள்வோனே போற்றி
    ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
    ஓம் பகையளிப்பவனே போற்றி
    ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
    ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
    ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
    ஓம் பால பைரவனே போற்றி
    ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
    ஓம் பிரளயகாலனே போற்றி

    ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
    ஓம் பூஷண பைரவனே போற்றி
    ஓம் பூதங்களின் நாதனே போற்றி
    ஓம் பெரியவனே போற்றி
    ஓம் பைராகியர் நாதனே போற்றி
    ஓம் மல நாசகனே போற்றி
    ஓம் மகோதரனே போற்றி
    ஓம் மகா பைரவனே போற்றி
    ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
    ஓம் மகா குண்டலனே போற்றி

    ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
    ஓம் முக்கண்ணனே போற்றி
    ஓம் முக்தியருள்வோனே போற்றி
    ஓம் முனீஸ்வரனே போற்றி
    ஓம் மூலமூர்த்தியே போற்றி
    ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
    ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
    ஓம் ருத்ரனே போற்றி
    ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
    ஓம் வடுக பைரவனே போற்றி

    ஓம் வடுகூர் நாதனே போற்றி
    ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
    ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    ஓம் வாரணாசி வேந்தே போற்றி
    ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
    ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
    ஓம் விபீஷண பைரவனே போற்றி
    ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

    மாலை வேளைகளில் சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, மேற்கண்ட மந்திரத்தை 27 முறை கூறி வழிபட மரண பயம் நீங்கும். வறுமை ஏற்படாமல் காக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும்.
    கால பைரவர் மந்திரம் பின்வருமாறு,

    ”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
    ஸ்வாந வாஹாய தீமஹி
    தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

    "ஓம் திகம்பராய வித்மஹே
    தீர்கதிஷணாய தீமஹி
    தந்நோ பைரவ: ப்ரசோதயாத்"

    மாலை வேளைகளில் சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி,  மேற்கண்ட மந்திரத்தை 27 முறை கூறி வழிபட தீவினைகள் நீங்கும். மனதிலிருக்கும் வீண் பயங்கள் ஒழியும். குறிப்பாக மரண பயம் நீங்கும். வறுமை ஏற்படாமல் காக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும்.
    இந்த காமதேனு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, பாலாபிஷேகம் செய்து வந்தால் எல்லா செல்வங்களும், பணவரவும் பெற்று குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.
    கீழே உள்ள மந்திரத்தை 54 முறை உச்சரிக்க வேண்டும்.

    ஓம் சுபகாயை வித்மஹே!
    காமதாத்திரியை, சதீமஹி
    தந்னோ தேனு ப்ரசோதயத்.

    இந்த காமதேனு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, பாலாபிஷேகம் செய்து வந்தால் எல்லா செல்வங்களும், பணவரவும் பெற்று குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கடன் தொல்லைகள் நீங்கும். பசுவை தெய்வமாக நினைத்து போற்றுபவர்களுக்கு எந்த விதமான கஷ்டங்களும் வாழ்வில் ஏற்படாது. பசுவிற்கு தானம் அளிப்பது ஏழேழு ஜென்மத்தில் செய்த பாவங்களையும் போக்கி விடும். கர்ம பலன்கள் குறைய தொடர்ந்து பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசுவின் கோமியத்தை வீட்டை சுற்றி தெளித்து வர எந்த கெட்ட சக்தியும் உங்களது குடும்பத்தையே நெருங்கவிடாமல் செய்யும். நோய் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும்.
    குரு மந்திரத்தை வியாழக் கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, தானியங்களை கொண்டு வழிபாடு செய்தால் மிக நல்ல பலன்களை தரும்.
    குரு பகவான் நிறைவான செல்வங்கள், செய்தொழிலில் முன்னேற்றத்தைத் தருபவர் மட்டுமல்லாமல், குழந்தை பாக்கியம் எனும் மகத்தான பலனை தரக் கூடியவர். புத்திர பாக்கியத்தை பெற சொல்ல வேண்டிய குரு மந்திரத்தை இங்கு பார்ப்போம்...

    குழந்தை பாக்கியம் பெற குரு பகவானுக்குரிய மந்திரத்தை வியாழக்கிழமை தோறும் சொல்லி வர கிடைக்கும் என நம்பப்படுகிறது. குரு பகவான் என்பவர் ஆசிரியராக மட்டுமல்லாமல் நம் உடலுக்கு ஏற்படும் பிரச்னை, நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்புரிகிறார்.

    குரு பகவான் புத்திர பாக்கியத்தை தருவதோடு, காது, கல்லீரல், இடுப்பு உள்ளிட்ட நோய்களுக்கு அவர் மருந்தாக குருவின் மந்திரம் இருக்கிறது. குரு மந்திரத்தை வியாழக் கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, தானியங்களை கொண்டு வழிபாடு செய்தால் மிக நல்ல பலன்களை தரும்.

    குரு பகவான் காயத்ரி மந்திரம்:
    வருஷபத் வஜாய வித்மஹே
    க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
    தந்நோ குரு ப்ரசோதயாத்
    அரசமரம் ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிப்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதிலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அரச மரத்தை சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
    அரசமரம் ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிப்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதிலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அரச மரத்தை சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

    ஓம் ஜாடினே நமஹ:
    ஓம் சர்மினே நமஹ:
    ஓம் சிகண்டினே நமஹ:
    ஓம் ஸர்வாங்காய நம:
    ஓம் ஸர்வபாவனாய நமஹ:
    ஓம் ஹராய நம நமஹ::
    ஓம் அரிணாக்ஷாய நமஹ:
    ஓம் ஸர்வபூதாய நமஹ:
    ஓம் ப்ரபவே நமஹ:
    ஓம் ப்ரவ்ருத்தயே நமஹ:
    ஓம் நிவ்ருத்தயே நமஹ:
    ஓம் நியதாய நமஹ:

    மற்றொரு ஸ்லோகம்

    மூலதோ பிரம்மரூபாய
    மத்யதோ விஷ்ணு ரூபினே
    அக்ரத: சிவ ரூபாய
    விருக்ஷ ராஜயதே நம

    இந்த ஸ்லோகத்தை 108 முறை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வர வேண்டும். கூடவே உங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ பூஜை சார்ந்த பொருட்களோ மரத்தின் முன்னே சமர்ப்பிக்க வேண்டும்.

    108 முறை பிரகார வலம் முடிந்ததும் அந்த பொருட்களை தானம் அளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த நாளில் நீங்கள் செய்யும் அன்னதானம் பலமடங்கு புண்ணியங்களை கொண்டு சேர்க்கும். துணிகளை தானமாக கொடுக்கலாம். இந்த அமாவாசையை மறந்துவிடாமல் உங்கள் அருகில் உள்ள அரசமரத்தை வலம்வந்து எல்லா நன்மையையும் பெறுங்கள்.

    திருமணத்தடையை போக்கும், கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும், அருணகிரிநாதர் அருளிய இந்த சக்திவாய்ந்த மந்திரத்தை மனமுருகி வேண்டிக் கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் கை மேல் பலன் உண்டு.
    திருமணம் ஆகாத தங்களுடைய குழந்தைகளுக்காக, பெற்றோர்களும் இந்த மந்திரத்தை உச்சரித்து, தங்களுடைய பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளலாம். திருமணம் ஆன கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினை, சண்டை சச்சரவுகள் என்று குடும்பத்தில் வந்து கொண்டே இருந்தால், அவரவரே இந்த மந்திரத்தை, அவரவர் வாயினால் உச்சரித்து மனதார, மனமுருகி வேண்டிக் கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் கை மேல் பலன் உண்டு. பிரிந்த தம்பதியினர், மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கூட, தாராளமாக இந்த மந்திரத்தை உச்சரிக்க, கைமேல் பலன் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள், 6 முறை உச்சரிக்க வேண்டும். ஜாதக தோஷத்தின் மூலம் திருமணம் ஆகாதவர்களுக்கு கூட, அந்த தோஷத்தினால், ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைக்க கூடிய சக்தி, இந்த மந்திரத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களுக்காக அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல் இதோ!

    விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
    மிகவானி லிந்து …… வெயில்காய
    மிதவாடை வந்து தழல்போல வொன்ற
    வினைமாதர் தந்தம் …… வசைகூற

    குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
    கொடிதான துன்ப …… மயல்தீர
    குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
    குறைதீர வந்து …… குறுகாயோ

    மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
    வழிபாடு தந்த …… மதியாளா
    மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
    வடிவேலெ றிந்த …… அதிதீரா

    அறிவால றிந்து னிருதாளி
    றைஞ்சு மடியாரி டைஞ்சல் …… களைவோனே
    அழகான செம்பொன் மயில்மேல
    மர்ந்து அலைவாயு கந்த …… பெருமாளே.

    திருமணமாகாத ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், இந்த மந்திரத்தை உச்சரிப்பதோடு சேர்த்து, சுமங்கலிப் பெண்களுக்கு, வெற்றிலை, பாக்கு, பூ சேர்த்த தாம்பூலத்தை, தானமாக கொடுத்து, 11 சுமங்கலி பெண்களை ஒன்றாக நிற்க வைத்து, அவளுடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்வது, எப்படிப்பட்ட தோஷத்தையும் நிவர்த்தி செய்யும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முடிந்தால், உங்கள் வீட்டிற்கு சுமங்கலி பெண்களை அழைத்து, உங்களால் முடிந்த உணவை பரிமாறி, தாம்பூலம் கொடுத்து, ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
    ×