என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வேண்டிக் கொண்டு நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யுங்கள். சந்தான பாக்கியத்தை தடையின்றித் தருவாள் ஸ்ரீ சந்தானலட்சுமி.
    நம் வாழ்வில் செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றிக் கொடுப்பாள் ஸ்ரீ சந்தானலட்சுமி. கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வேண்டிக் கொண்டு நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யுங்கள். சந்தான பாக்கியத்தை தடையின்றித் தருவாள். ஜாதகத்தில் உள்ள புத்திரதோஷம் நீங்கும். சகல செல்வங்களையும் தந்து சந்தான லட்சுமி அருள்புரிவாள்.

    சந்தானம் என்றால் குழந்தை என்று அர்த்தம். சந்தானம் எனப்படும் குழந்தை பாக்கியம் தந்தருளும் லட்சுமியாக சந்தானலட்சுமியாத் திகழ்கிறாள். மேலும் நம் சந்ததி வளரவும் செழிக்கவும் சகல ஐஸ்வரியங்களுடன் பரம்பரை பரம்பரையாக வாழவும் வழிவகைகள் செய்து அருளுகிறாள் அன்னை சந்தானலட்சுமி.

    ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம் :

    ஜடாமகுட சம்யுக்தாம்
    ஸ்த்தி தாசந சமந்விதாம்
    அபயம் கடகஞ் சைவ பூர்ணகும்பம்
    புஜத்வயே கஞ்சுகம் ச்சந்த
    வீரஞ்ச மெளக்திகம்
    சாபிதாரீணீம் தீபசாமர நாரீபி:
    சேவிதாம் பார்ச்வ யோர்த்வயோ
    பாலே சேநாநி சங்காசே கருணாபூரி
    தாநநாம் மஹாராஞ் ஞீஞ்ச
    சந்தான லக்ஷ்மீம் இஷ்டார்த்த ஸித்தயே

    இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வாருங்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் பெளர்ணமி முதலான நாட்களில் அவசியம் சொல்லி வாருங்கள். கேசரி அல்லது ஏதேனும் இனிப்பு நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு வழங்குங்கள்.

    நம் வாழ்வில் செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றிக் கொடுப்பாள். கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வேண்டிக் கொண்டு நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யுங்கள். சந்தான பாக்கியத்தை தடையின்றித் தருவாள். ஜாதகத்தில் உள்ள புத்திரதோஷம் நீங்கும். சகல செல்வங்களையும் தந்து சந்தான லட்சுமி அருள்புரிவாள்.
    தீராத துயரத்தை துடைப்பதற்கு நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள பரிகாரம் தான் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு. துர்க்கை அம்மனின் அருளை முழுமையாக நமக்கு பெற்றுத்தரும் அந்த மந்திரம் இதோ!
    ‘ஓம் ஐம் க்ரீம் க்லீம் சாமுண்டாய விச்சே’

    உங்களுக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனையின் மூலம் அதிகப்படியான பாதிப்பு இருக்கின்றதோ, அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து 9 வாரங்கள், 11 வாரங்கள் இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டும். தவறொன்றுமில்லை. உங்களுடைய பிரச்சினைகள் மிகவும் வலிமையாக உள்ளது. தீருவதற்கு வெகு நாட்கள் எடுக்கும் என்றால், பிரச்சனை தீரும் வரை துர்க்கை அம்மன் வழிபாட்டை தொடர்ந்து செய்து வாருங்கள். விரைவில் அந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும்.
    பசியை போக்கும் உணவிற்கு பஞ்சம் வாராமல் இருக்க சொல்ல வேண்டிய சுலோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் 16 முறை பாராயணம் செய்து வந்தால் உணவிற்கு பஞ்சமே இருக்காது.
    அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை ஒரு மனிதனுக்கு சரியாக கிடைக்கப்பெற்றால் அவனே பாக்கியசாலி. அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை ஒரு மனிதனுக்கு சரியாக கிடைக்கப்பெற்றால் அவனே பாக்கியசாலி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அந்த பசியை போக்கும் உணவிற்கு பஞ்சம் வாராமல் இருக்க சொல்ல வேண்டிய சுலோகம் இது.

    இந்த ஸ்லோகத்தை  தினமும் 16 முறை பாராயணம் செய்து வந்தால் உணவிற்கு பஞ்சமே இருக்காது.

    அர்காபாமருணாம் பராவ்ருததநூமாநந்த பூர்ணாநநாம்
    முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்
    தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்
    த்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பாலகாம்

    - அன்னபூர்ணா த்யானம்

    பொருள்:

    அன்னபூரணி அம்பிகை உதய சூரியனைப் பழிக்கும் செந்நிறத்தோடு மந்தஹாஸம் ததும்பும் பூரண சந்திரனைப் போன்ற திருமுகத்தோடு முக்தாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். அன்னையின் கைகளில் அம்ருதம் போன்ற அன்னபாத்திரம் பிரகாசிக்கின்றது. 
    கெட்ட கனவுகள் வராமல், இரவு நிம்மதியாக தூங்க இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு தூங்கச் செல்லுங்கள். உங்களை பாதுகாக்க அந்த ஈசனே வந்துவிடுவார்.
    இரவில் தூங்கச் சென்றாலே தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு, தேவையற்ற கெட்ட கனவுகள் வந்து தூக்கம் கெடுபவர்களுக்கு, வாழ்க்கையில் தீராத துயரத்தின் மூலம் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள ஒரு மந்திரத்தைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

    சிவபெருமானை மனதார நினைத்து, நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு, அதன் பின்பு இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு, சிவபெருமானே நீயே துணை என்று சொல்லிவிட்டு, தூங்கச் செல்லுங்கள். கட்டாயம் மன நிம்மதி கிடைத்து தேவையற்ற மன பயம் நீங்கி, எதிர்மறை ஆற்றலின் மூலம் வரக்கூடிய தாக்குதல்கள் நீங்கி, நிம்மதியான தூக்கம் கட்டாயம் வரும் என்பதில் சந்தேகமே கிடையாது. உங்களுக்காக சிவபெருமானின் மந்திரம் இதோ!

    சவ்வும் நம சிவாய நம
    ஸ்ரீயும் நம சிவாய நம
    அங் உங் வங் சிவாய நம
    ஓம் நம சிவாய நம

    இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு உறங்கினால் கட்டாந்தரையில் படுத்தால் கூட, பட்டு மெத்தையில் சொர்க்கத்தில் தூங்குவது போல ஒரு மன அமைதி கிடைக்கும். திருட்டு பயம் நீங்கும். பேய் பிசாசு கனவு கட்டாயம் வரவே வராது. துஷ்ட சக்திகள் உங்களை நெருங்க முடியாது. இதோடு மட்டுமல்லாமல் சிலருக்கு உடலில் இருக்கும் நோயால், அதன் மூலம் ஏற்படக்கூடிய வலியால் அவதிப்பட்டு வருவார்கள். அவர்களால் உடலில் ஏற்படும் உபாதைகளால் தூங்கவே முடியாது. அப்படிப்பட்ட உபாதைகளைக் கூட கட்டுப்படுத்தக் கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.

    தொடர்ந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் இந்த மந்திரத்தை தூங்கச் செல்லும்போது உச்சரித்துக் கொண்டே வாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை உங்களால் உணர முடியும்.
    வியாழக்கிழமையான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக பறந்தோடும்.
    விநாயகர் ஸ்லோகம்

    ஓம் கணாநாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே
    கவிம் கவீநாம் உபமஸ்ரவஸ்தமம்
    ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மனாம் ப்ரஹ்மணஸ்பத
    ஆந ஸ்ருண் வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்!
    ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ

    “அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
    தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
    குணம் அதிக மாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
    கணபதியைக் கைதொழுதக் கால்.”

    ராகவேந்திரர் ஸ்லோகம்

    ஸ்ரீ பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே.

    ஆஞ்சநேயர் ஸ்லோகம்

    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டுஅயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

    நவக்ரஹம்: வியாழன்

    குணமிகு வியாழ குரு பகவானே
    மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்
    பிரகஸ்பதி வியாழ குருபர நேசா
    கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்!
    சிலருக்கு எந்த தொழில் தொடங்கினாலும் அதில் ஒரு சுனக்கம்,தொடர் நஷ்டம் ஏற்படும். அவர்கள் தினமும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால், செய்யும் தொழிலில் விருத்தியும், லாபமும் அடையலாம்.
    கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர:
    சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்
    யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ
    நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம்

    பொருள்:

    தன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுத்த அசுரனின் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தியருளும் மகாதேவியே, காளியே, நமஸ்காரம். பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தோற்றம் கொண்டவளே, நமஸ்காரம்.
    கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9 இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜா அறையில் ஜெபித்து வரவும். நிச்சயம் பலன் கிடைக்கும்.
    கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9 இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜா அறையில் ஜெபித்து வரவும்.
    நிச்சயம் பலன் கிடைக்கும்.

    ஓம் அகத்தீசாய நமக
    ஓம் நந்தீசாய நமக
    ஓம் திருமூல தேவாய நமக
    ஓம் கருவூர் தேவாய நமக
    ஓம் ராமலிங்க தேவாய நமக
    வாழ்க வளமுடன்...
    முருகனின் அருள் பெற ஏழு நாட்களிலும் சொல்ல வேண்டிய படைவீட்டு ஸ்லோகங்களை கிருபானந்த வாரியார் இயற்றியுள்ளார். நாள்தோறும் முருகனை வழிபட்டு இந்த மந்திரங்களை உச்சரித்து வந்தால் சகல வளங்களையும் பெற முடியும்.
    தெய்வங்களில் முதன்மையானவனும், தமிழ் கடவுளுமாகிய முருக பெருமானை நாள்தோறும் பூஜிப்பது வாழ்க்கையில் பல நலன்களை பெற உதவும். அப்படியான பரம்பொருள் முருகனை பூஜிப்பதிலேயே வாழ்க்கையை கழித்தவர் கிருபானந்த வாரியார். முருகனின் அருள் பெற ஏழு நாட்களிலும் சொல்ல வேண்டிய படைவீட்டு ஸ்லோகங்களை அவர் இயற்றியுள்ளார். நாள்தோறும் முருகனை வழிபட்டு இந்த மந்திரங்களை உச்சரித்து வந்தால் சகல வளங்களையும் பெற முடியும்.

    ஞாயிற்றுக்கிழமை

    தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
    சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
    மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
    ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

    திங்கட்கிழமை

    துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
    சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
    சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
    திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

    செவ்வாய்க்கிழமை

    செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
    எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
    தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
    செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

    புதன்கிழமை

    மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
    பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
    உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
    புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

    வியாழக்கிழமை

    மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
    தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
    தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
    வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

    வெள்ளிக்கிழமை

    அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
    வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
    வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
    வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

    சனிக்கிழமை

    கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
    முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
    இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
    சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
    மந்திரம் தெரியாமல் போனால் பரவாயில்லை. ஸ்லோகங்கள் தெரியவில்லையே என்று கவலைப்படவேண்டாம். இதை மட்டும் தினமும் சொல்லி வந்தால் தரித்திர நிலையில் இருந்தும் மீட்டெடுத்து அருளுவாள் தேவி.
    ‘எனக்கு ஸ்லோகமும் தெரியாது, மந்திரமும் புரியாது’ என்று சிலர் வருந்தலாம்.‘அம்பாளை வழிபட எனக்கு எந்த ஜபமும் தெரியாதே...’ என்று கவலைப்படலாம்.

    கவலையே வேண்டாம். மந்திரம் தெரியாமல் போனால் பரவாயில்லை. ஸ்லோகங்கள் தெரியவில்லையே என்று கவலைப்படவேண்டாம். ஸ்தோத்திரங்கள் தெரியாதே என்று புலம்பவே வேண்டாம்.

    ‘ஓம் லலிதாதேவியே நமஹ’ என்று சொன்னால் போதும். இதை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னால் போதும். பூஜையறையில் அமர்ந்து, 108 முறை சொல்லி, அம்பிகையை வழிபடுங்கள். தினமும் காலையும் மாலையும் சொல்லி வழிபடுங்கள்.முடியும்போதெல்லாம் சொல்லுங்கள். அனைத்து நலன்களையும் தந்தருள்வாள் தேவி.

    இப்படி 108 முறை சொல்லும் போது, அம்பாள் படத்துக்கோ அல்லது விக்கிரகத் திருமேனிக்கோ செவ்வரளி மலர்களோ அல்லது செந்நிற மலர்களோ கொண்டு அர்ச்சித்து ஆத்மார்த்தமாக வழிபடுவது இன்னும் விசேஷம். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். ஐஸ்வரியம் குடிகொள்ளும். சந்தோஷமும் நிம்மதியும் நிலைக்கும்.

    எல்லா நாட்களிலும் இதை சொல்லலாம். செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் மறக்காமல் சொல்லுங்கள். மாங்கல்ய வரம் தருவாள். மாங்கல்ய பலம் தருவாள். கடன் தொல்லையில் இருந்தும் தரித்திர நிலையில் இருந்தும் மீட்டெடுத்து அருளுவாள் தேவி.
    அகம்பாவம் கொண்டவர்களிடம் வெற்றி எனும் தேவதை நிலைப்பது இல்லை. இது போன்றவர்கள் இந்த அந்தாதி பாடல் தினமும் பாராயணம் செய்தால் மிகப்பெரிய வெற்றியையும் தன்வசம் ஆக்கிக் கொள்ளலாம்.
    நான் என்னும் அகந்தை அழிய கீழ்வரும் இந்த அங்காள பரமேஸ்வரி பாடலை பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நான் தான் எல்லாம்! என்று சிலருக்கு ஒரு நினைப்பு இருந்து கொண்டே இருக்கும். ஆணவமும், அகம்பாவமும் உச்சிக்கு ஏறி, தான் தான் எல்லாம்! தனக்குத்தான் எல்லாம் தெரியும்! என்ற எண்ணங்கள் மேலோங்கும். இப்படிப்பட்டவர்கள் சீக்கிரமே அழுது வடியும் சூழ்நிலை உருவாகும் என்பதை உணராதவர்கள் என்று தான் கூற வேண்டும்.

    எவ்வளவு பெரிய பேரும், புகழும் கிடைத்தாலும் தலைகணம் கொள்ளாமல் யாரால் சாதாரணமாக இருக்க முடிகிறதோ அவர்களுக்கே வெற்றி எப்போதும் நிரந்தரமாக இருக்கும். அகம்பாவம் கொண்டவர்களிடம் வெற்றி எனும் தேவதை நிலைப்பது இல்லை. இது போன்றவர்கள் இந்த அந்தாதி பாடல் தினமும் பாராயணம் செய்தால் மிகப்பெரிய வெற்றியையும் தன்வசம் ஆக்கிக் கொள்ளலாம்.

    ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதிப் பாடல்:

    தான் தோன்றி தரணியில் தந்திடும் நின் புகழ் முன்பே
    வான் தோன்றி வருமுன்னை வந்தம்மா நின்
    புகழ் பாட யான் தோன்றி என்றும் நின்னருள் பரப்பியே
    நினைவில் நானெனும் நீ தோன்றியே நின்றாடுவாய் பராசக்தியே!
    எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின் அருளை எங்களுக்குக் குறைவில்லாமல் அளித்தருளும் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வாருங்கள்.
    ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
    அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே
    ஸர்வ வியாபிதம் லோகரக்ஷகாம்
    பாபவிமோசன துரித நிவாரணம்
    லட்சுமி கடாட்ச சர்வாபீஷ்டம்
    அநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா

    ஐயனே! லட்சுமி நரசிம்ம பிரபோ! மிக பயங்கரமான உருவமும் சிங்கமுகமும் உடையவரே! கருணை நிரம்பியவரே! அபயம் காக்கும் கரத்தினை உடையவரே! உலகைக் காக்கும் பொருட்டு எங்கும் நிறைந்த பெருமானே! எங்களது பாவங்களை உடனடியாகக் களைந்து நலம் தருபவரே! எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின் அருளை எங்களுக்குக் குறைவில்லாமல் அளித்தருளும்.
    கோபத்தை குறைக்கவும், நிதானத்தை வரவழைக்கவும் இந்த மந்திரங்கள் பயனுள்ளதாக இருக்கும். இதை எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
    வீட்டில் வடகிழக்கு திசையாகிய ஈசானிய மூலையை ஆதிக்கம் செலுத்துபவளும், அம்பாளின் தோளிலிருந்து உதித்தவளும் ஆன ஈஸ்வரி என்பவள் தான். இவளின் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு கோபம் குறைந்து நிதானம் உண்டாகும் என்பது நியதி. மகேஸ்வரி காயத்ரி மந்திரம் 108 முறை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். இதனை வீட்டின் வடகிழக்கு திசையைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டு உச்சரித்து பாருங்கள். நிச்சயம் உங்களுடைய கோபமான குணம் மாறும்.

    இதோ உங்களுக்கான மஹேஸ்வரி மந்திரம்:

    ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே!
    சூல ஹஸ்தாயை தீமஹி!
    தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.
    ×