என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    வியாபாரிகள் வெள்ளிக் கிண்ணத்தில் காசுகளை வைத்து அதையே தனலட்சுமியாக வழிபடலாம். வழிபட்ட காசிலிருந்து சில நாணயங்களை எடுத்துச் சென்று வியாபாரம் தொடங்க மிகுந்த லாபம் கிட்டும்.
    கிரீட மகுடோபேதாம் ஸ்வர்ணவர்ண ஸமன்விதாம்
    ஸர்வாபரண ஸம்யுக்தாம் ஸுகாஸன ஸமன்விதாம்
    பரிபூர்ணம்ச கும்பம்ச தக்ஷிணேந கரேணது
    சக்ரம் பாணம்ச தாம்பூலம்த தாவாம  கரேணது
    சங்கம் பத்மம்ச சாபஞ்ச கண்டிகாமபி தாரிணீம்
    ஸத்கஞ்சுக ஸ்தனீம் த்யாயேத் தனலக்ஷ்மீம் மனோஹராம்.

    - தனலட்சுமி தியானம்.

    பொதுப் பொருள்: நிறைந்த அழகு கொண்ட பொன்னிற மேனியை உடையவளே. சகல அணிகலன்களும் அணிந்திருப்பவளே. மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒளிமயமான மண்டபத்தில்  திகழ்பவளே. நிறைகுடம், சக்கரம், அம்பு, வெற்றிலை, சங்கு, தாமரை, வில், ஏந்தியருளும் அழகே உருவான தனலட்சுமியை வணங்குகிறேன். வணங்குவோர்க்கு தனம் எனும் செல்வச் செழிப்பை  அருள்பவளே தங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

    சிவந்த திருக்கரங்களை உடையவள். சகல கலைகளையும் தந்தருளுபவள் . இவள் மயில் போன்ற அழகுடையவள். நுரை பொங்கப் பாய்ந்தோடும் கங்கை உதிக்கும் இடமான சடாமுடியை கொண்ட பரமனின் இடப்பாகத்தை தனதாக்கி கொண்டவள்.
    மங்கலை செங்கலை ,சம்முலையாள், மலையாள் வருணச்
    சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவுகங்கை
    பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
    பிங்கலை நீலி செய்யாள், வெளியாள் பசும்பெண் கொடியே!

    பொருள்

    அன்னை அபிராமி என்றுமே மங்கலத்தை தருபவளாக இருக்கிறாள். செம்மையான கலசம் போன்ற தனங்களை உடையவளே. இவளே மலைமகளாய் பிறந்தவள். வெண் சங்கு போன்ற வளையல்களை அணியப்பெற்றவள். சிவந்த திருக்கரங்களை உடையவள். சகல கலைகளையும் தந்தருளுபவள் . இவள் மயில் போன்ற அழகுடையவள். நுரை பொங்கப் பாய்ந்தோடும் கங்கை உதிக்கும் இடமான சடாமுடியை கொண்ட பரமனின் இடப்பாகத்தை தனதாக்கி கொண்டவள். பொன் நிறம் படைத்த பிங்கலை. நீல நிறத்தினை உடைய காளி. செந்நிறம் உடைய லலிதாம்பிகை. வெண்ணிறம் படைத்த வித்யா தேவி இவள். பச்சை நிறம் உடைய உமா தேவி.
    சிலருக்கு எந்த தொழில் தொடங்கினாலும் அதில் தொடர் நஷ்டம் ஏற்படும். அவர்கள் தினமும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால், செய்யும் தொழிலில் விருத்தியும், லாபமும் அடையலாம்.
    சிலருக்கு எந்த தொழில் தொடங்கினாலும் அதில் ஒரு சுனக்கம்,தொடர் நஷ்டம் ஏற்படும். அவர்கள் தினமும் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால், செய்யும் தொழிலில் விருத்தியும், லாபமும் அடையலாம்.

    கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர:

    சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்

    யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ

    நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம்

    பொருள்:

    தன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுத்த அசுரனின் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தியருளும் மகாதேவியே, காளியே, நமஸ்காரம். பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தோற்றம் கொண்டவளே, நமஸ்காரம்.
    எந்த ஒரு நபரும் வாழ்வில் இன்பங்களை அனுபவிக்க அருள்புரிபவர் “சுக்கிர பகவான்” ஆவார். வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய அவருக்கு உகந்த ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஹிமகுந்த ம்ருணாளாபம்
    தைத்யானாம் பரமம் குரும்!
    ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்
    பார்கவம் ப்ரணமாம் யஹம்!!

    தமிழாக்கம்

    சுக்கிர மூர்த்தி சுபமிக ஈவாய்
    வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
    வெள்ளிச் சுக்ர வித்தக வேந்தே
    அள்ளிக்கொடுப்பாய் அடியார்க்கு அருளே !

    தொண்டு: துணி அல்லது வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணிடம் வெண்ணெய்  அல்லது தயிர் நன்கொடை கொடுக்கவேண்டும்.
    நோன்பு நாள்: வெள்ளிக்கிழமை.
    பூஜை: தேவி பூஜை.
    ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

    சுக்கிர காயத்ரி மந்திரம்

    அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி|
    தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||
    திருமண தடை, வேலை கிடைக்காமை போன்ற பிரச்சனைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி குரு பகவானை வழிபாடு செய்து வந்தால் படிப்படியாக அனைத்தும் நிறைவேறும்.
    தேவானாம் ச ரிஷஷீணாம் ச
    குரும் காஞ்சன ஸந்நிபம்!
    புத்தி பூதம் த்ரிலோகேசம்
    தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!

    தமிழாக்கம்

    குணமிகு வியாழ குருபகவானே
    மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
    ப்ரகஸ்பதி வியாழப்பர குருநேசா
    க்ரஹதோஷமின்றி கடாஷீத் தருள்வாய் !

    தொண்டு: வியாழனன்று நன்கொடையாக குங்குமப்பூ அல்லது மஞ்சள் அல்லது சர்க்கரை கொடுக்கவேண்டும்.

    குரு காயத்ரி மந்திரம்

    வருஷபத்வஜாய வித்மஹே
    க்ருணி ஹஸ்தாய தீமஹி|
    தந்நோ குரு: ப்ரசோதயாத்|
    சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும். இந்த மந்திரம் செல்வ நிலையை உயர்த்த உதவும்.
    ஆதித்ய பைரவ மந்திரம்
    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆதித்ய பைரவாய |
    சௌபாக்கியம் ப்ரசீத ப்ரசீத |
    ஹ்ரீம் ஸ்ரீம் க்ரித்யாய ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் |

    இம்மந்திரம் தொழில் மற்றும் வேலையில் முன்னேற உதவும். செல்வ நிலையை உயர்த்த உதவும். நல்ல நிர்வாகத்திறன் அருளும். கிரக தோஷங்கள் நீங்கும்


    இந்த ஸ்லோகத்தை செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை தினங்களில் படித்து காளிகாம்பாளை வழிபட செய்வினை பாதிப்புகள், திருஷ்டி தோஷங்கள், எதிரிகளின் தொல்லை நோய் மற்றும் கடன் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
    காக்கும் தெய்வமான ஸ்ரீ காளிகாம்பாள் தேவியை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை தினங்களில் படித்து காளிகாம்பாளை வழிபட செய்வினை பாதிப்புகள், திருஷ்டி தோஷங்கள், எதிரிகளின் தொல்லை நோய் மற்றும் கடன் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். அதோடு கஷ்டங்கள் அனைத்தும் ஒழிந்து அஷ்டமாசித்திகள் கைகூடும்.

    முழு முதற் கடவுளே மூஷிக வாகனனே
    முக்கண்ணன் புதல்வனே மோதகப்ரியனே
    பார்வதி மைந்தனே பாலனின் சோதரனே
    பார்புகழ் நாயகனே பாடினேன் உனையே’
    காட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும்
    காளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன்
    கருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட
    காத்தருள்வாயே கற்பக கணபதியே
    அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்
    ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே
    இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே
    ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே
    உலகம் உய்யவே உலகில் உதித்தவளே
    ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே
    எங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே
    ஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே
    ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
    ஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே
    ஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே
    ஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்
    அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
    அல்லல்கள் போக்கிடும் அபிராமி அன்னையே
    கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே
    கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே
    காளிகாம்பாள் எனும் காமாட்சித்தாயே
    கமடேஸ்வரருடன் காட்சி தருபவளே
    பாரதிபாடிய பரமகல்யாணியே
    வீரமிகு சிவாஜிக்கு வீரத்தைக் கொடுத்தவளே
    வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே
    பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே
    பன்னிரு தலங்களில் காமாட்சி எனும் நாமமுடன்
    மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே
    சென்னைப்பதியில் சீருடன் அமர்ந்து
    சென்னியம்மன் எனும் நாமமும் கொண்டவளே
    எங்கும் நிறைந்திருந்து எமபயம்நீக்கிடுவாய்
    எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்
    குங்குமத்தில் குடியிருந்து குடும்பத்தைக்காத்திடுவாய்
    சங்காபிஷேகத்தில் மகிழ்ந்து சந்ததியைக்காத்திடுவாய்
    சத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்
    வித்தைகள் கற்போர்க்கு விளக்கம் தந்திடுவாய்
    கரும்பேந்திய கையினளே கண்ணினைக்காத்திடுவாய்
    விரும்பியே வருவோர்க்கு வீரத்தை அளித்திடுவாய்
    நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்கொடுத்திடுவாய்
    பன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்
    மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்
    நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்காத்திடுவாய்
    நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்
    தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம் அளித்திடுவாய்
    வம்பு பேசுவோரையும் வரமளித்துக்காத்திடுவாய்
    கும்பிடவருவோரின் குறைகளைக்களைந்திடுவாய்
    பாமாலை சூட்டுவோர்க்கு பூமாலை சூட்டிடுவாய்
    காமாலை நோயையும் கடிதே போக்கிடுவாய்
    ஆடிவருவோர்க்கு ஆறுதல் தந்திடுவாய்
    தேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்
    வாடி வருவோரின் வ்றுமையைபோக்கிடுவாய்
    நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்
    பாடி வருவோரின் பாரத்தை போக்கிடுவாய்
    கூடிவருவோர்க்குக் குலவிலக்க்காயய்த்திகழ்ந்திடுவாய்
    காளிகாம்பாள் கவசம் ஒதுவோர்க்கேல்லாம்
    கஷ்டங்கள் ஒழியுமே கவலைகள் தீருமே
    அஷ்டமா சித்தியும் அடைந்திடச்செய்யுமே
    நஷ்டம் என்பதே எதிலும் வாராமல்
    இஷ்டமுடன் இனிமையாய் வாழ்ந்திடச்செய்யுமே
    போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி
    போற்றி போற்றி கற்பகவல்லியே போற்றி போற்றி
    போற்றி அங்கயற்கண்ணியே போற்றி போற்றி
    போற்றி மூகாம்பிகை அன்னையே போற்றி
    ஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி
    ஓம் நற்பவி நற்பவி நற்பவி ஓம்
    நமது விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம். எடுத்த காரியம் வெற்றியாகும். பகைவர்கள் விலகுவர்.
    பொதுவாக பல இடங்களில் ஆஞ்சநேயர் இடது கையால் சஞ்சீவி மலையையும், வலது கையால் கதையையும் தாங்கியபடி இடுப்பில் சிவந்த ஆடையை உடுத்திக்கொண்டும், மார்பில் மணிமாலையை அணிந்தபடியும், இதயத்தில் ஸ்ரீராமரின் சரணங்களையும், வாக்கில் ஸ்ரீராம நாமத்தையும் தரித்துக் கொண்டு, பக்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் தோற்றத்தில் காணப்படுகிறார். நமது விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம்.

    ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்

    ‘ஓம் ஆஞ்சநேயா வித்மஹே
    வாயுபுத்ராய தீமஹி
    தன்னோ ஹனுமன் பிரசோதயாத்’

    நாம் ஆஞ்சநேயரை அறிந்து கொள்வோம். வாயுவின் புத்திரனான அவர் மீது தியானம் செய்வோம். அனுமன் என்னும் பெயர் கொண்ட அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.

    இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால், தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். எடுத்த காரியம் வெற்றியாகும். பகைவர்கள் விலகுவர். கவலைகள் அகலும். நாவன்மை பிறக்கும். குறிப்பாக மூச்சு பிரச்சினைகள் நீங்கி மன தைரியம் பிறக்கும்.
    ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில் பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
    நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
    பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
    நித்யாய சுத்தாய திகம்பராய

    தஸ்மை நகாராய நம:சிவாய

    மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
    நந்தீச்வர ப்ரமத நாத மகேஸ்வராய
    மந்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
    தஸ்மை மகாராய நம:சிவாய

    சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த
    ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய
    ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
    தஸ்மை சிகாராய நம:சிவாய

    வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
    முனீந்த்ர தேவார்ச்சித சேகராய
    சந்த்ரார்க்க வைச்வாநர லோச்சனாய
    தஸ்மை வகாராய நம:சிவாய

    யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
    பினாக ஹஸ்தாய சனாதனாய
    திவ்யாய தேவாய திகம்பராய
    தஸ்மை யகாராய நம:சிவாய

    பஞ்சாஷரமிதம் புண்யம்ய: படேச் சிவசன்னிதௌ
    சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

    பொதுப்பொருள்: ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில் பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
    எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக, அனுமனை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெறலாம்.
    பஞ்ச முக ஆஞ்சநேயரை தியானிப்பதன் மூலம் நம் வாழ்வில் நினைத்த காரியம் யாவும் வெற்றியாகும்.

    அசாத்ய சாதக ஸ்வாமிந் அ
    சாத்யம் தவகிம்வத  
    ராம தூத க்ருபாசிந்தோ மத் கார்யம் சாதய ப்ரபோ

    எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக, அனுமனை மனதில் நினைத்து இந்த ஸ்லோகத்தை 27 முறை ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெறலாம்.
    நிம்மதியற்ற குடும்பங்களில் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும். காலையில் நீராடிய பின் மூன்று முறையும் இரவில் உறங்கப் போகுமுன் ஒரு முறையும் சொல்வது அளவற்ற நன்மைகள் தரும்.
    உலக மக்களின் நன்மை கருதி மரீசி மகரிஷி நமக்கு அளித்துள்ள அரிய சக்தி வாய்ந்த சம்மோஹன கிருஷ்ண ஸ்லோகம். நிம்மதியற்ற குடும்பங்களில் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும். காலையில் நீராடிய பின் மூன்று முறையும் இரவில் உறங்கப் போகுமுன் ஒரு முறையும் சொல்வது அளவற்ற நன்மைகள் தரும். முக்கியமாய் திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்வை தரும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும்.

    க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்
    த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
    பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
    ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
    இஷீசாபம் வேணுவாத்தியம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:
    ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
    ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே

    பொருள்:

    தாமரை இதழ் போன்ற கண்களும் பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும் அழகிய வில் போல் வளைந்த திருமேனியும் அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமாகத் திகழ்பவரும் சரிபாதி புருஷாகார சரீரரும் சரிபாதி பெண்மையான சரீரமும் வலது நான்கு இடது நான்கு கைகளில் - சங்கு, சக்கரம், அங்குசம், கரும்புவில், புஷ்பபாணம், தாமரை மலர், இரண்டு கைகளில் வேணுவாத்தியம் (புல்லாங்குழல்) வாசித்தபடி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவிதமான மனோகரமான புஷ்பங்களைத் தரித்தவரும் இன்னல்படும் மக்களை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தரவல்லவருமான மோஹனரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும் ஸ்ரீகிருஷ்ணனைத் தியானிக்கிறேன்.
    பணப்பிரச்சனை, வீட்டில் பிரச்சனை, எதிரிகளால் தொல்லை போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அனுமன் கவசத்தை படித்து வந்தால் வழி பிறக்கும்.
    ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
    ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

    ஆஞ்சநேயம் அஞ்சனா புத்ரம்
    ராம நாம ரஸானுபம் ராமதூதம்
    லங்க தகனம் ராவண கர்வபங்கம்
    வாக் சாதுர்யம் வானர ச்ரேஷ்டம்
    வீர ப்ராதம் வினாயகரம்
    வாயுஸீனும் வாதாத்மஜம்
    ஆயுர் ஆரோக்ய ஸமன்விதம்
    ஆத்மானந்த ராமரஹிதம்
    மாருதிம் மனஸா ஸ்மராமி

    அஞ்சனை மைந்தன் அனுமனை போற்ற.
    நெஞ்சினில் வரும் பலம்
    வஞ்சனை தீர்க்கும் வாயுவின் மகனால்
    வல்வினை தீரும் நிஜம்

    சீரஞ்சீவி அனுமன் என் சிரசினை காக்க
    ஸ்ரீ ராம பக்தன் என் சீர் சடை காக்க
    நெறி மேவி நின்றவன் என் நெற்றியை காக்க
    புவியினில் நீண்டவன் என் புருவங்கள் காக்க
    இமயத்தில் நிற்பவன் என் இமைகளைக் காக்க
    சமயத்தில் வந்தெனை சடுதியாய் காக்க
    வீரத்தின் வீரன் என் விழிகளை காக்க
    வீசிடும் காற்றோன் என் விழி மூடி காக்க
    நாரணப் பிரியன் என் நாசியை காக்க
    காரணப் பொருளே என் காலமே காக்க
    முழுஞானம் கொண்டவன் என் மூக்கினை காக்க
    முன்நின்ற வானரன் என் வாயினை காக்க
    வெற்றிலை பிரியன் என் வெற்றியை காக்க
    பற்றியே வந்தெனை பற்றுடன் காக்க
    பல் நலம் கொண்டவன் என் பற்களைக் காக்க
    நல் மனம் கொண்டவன் என் நாவினைக் காக்க
    நாடியே வந்தவன் என் நாடியை காக்க
    தேடியே வந்தென்னை தேவனே காக்க
    கரிமலை கடந்தவன் என் கன்னங்கள் காக்க
    கடுகதியில் வந்தென் கழுத்தினை காக்க
    கையிலையின் வாசன் என் கைகால்கள் காக்க
    கதிரொளியாய் வந்து கருணையாய்க் காக்க
    நல்லன செய்பவன் என் நகங்களைக் காக்க
    அல்லனதீர்ப்பவன் என் அகம் தனை காக்க
    நெடு மேனியானவன் என் நெஞ்சினைக் காக்க
    சுடுமேனி யாய் வந்த சூட்சுமம் காக்க
    இடுக்கண் கழைபன் என் இடுப்பினை காக்க
    இரு கண்ணின் மணிகளை இருட்டிலும் காக்க
    தோழமை கொண்டவன் என் தோழ்களை காக்க
    தோன்றிய புகழவன் என் தோலினைக் காக்க
    குரங்கினத் தவைவன் என் குறியினைக் காக்க
    குருவாகி வந்து என் குருதியை காக்க
    திசையெலாம் திரிந்தவன் என் தசையினை காக்க
    விசையெனப் பாய்ந்து என் செவிகளை காக்க
    நடுவாகி நின்று என் முதுகினை காக்க
    நவின்றிடும் தேவன் என் நரம்புகள் காக்க
    ஒன்பது வாசலை ஓப்பிலா காக்க
    புண்படா வண்ணமே புவனமே காக்க
    இளமையும் முதுமையும் இனியவா காக்க
    இரவிலும் பகலிலும் என்றும் நீ காக்க
    உலகத்தின் நாயகன் என் உயிரினைக் காக்க
    கலகத்தில் இருந்தென்னை கதி தந்து காக்க
    நிலையற்ற வாழ்வினில் நிமலனார் காக்க
    சிலையற் இருந்தென்னை சீலனார் காக்க
    இராமனின் பக்தன் என் இதயத்தை காக்க
    சுக்ரீவன் தோழன் என் சுவாசத்தை காக்க
    உடல் உள்ளம் என்றுமே உறுதியாய் காக்க
    கடல்தாண்டி வந்தவன் என் குடல்களைக் காக்க
    வளமிக்க வாழ்வினை வளத்துடன் காக்க
    வாழையடி வாழையாய் வாழ்திடக் காக்க
    எம்மை எந்நாளும் உன் நிழலினில் காக்க
    இம்மையிலும் மறுமையிலும் ஈடிலா காக்க
    நோய் நொடிகள் வாராமல் நொடியினில் காக்க
    தாய் மடியில் தவழ்ந்தயென் மேனியை காக்க
    நவகோளின் தோசங்கள் நீக்கி நீ காக்க
    தவக்கோலம் கொண்டவன் தரணியை காக்க
    தீராத நோய்களைத் தீர்த்து நீ காக்க
    வாராத செல்வங்கள் வந்திடக் காக்க
    ஈரேழு புவனத்து உறவுகள் காக்க
    பாராளும் மன்னர்கள் நட்புகொள் காக்க
    பஞ்சபூதங்கள் எனை பகைக்காது காக்க
    வஞ்சங்கள் இல்லாது மனம் தனை காக்க
    பில்லி பேய் சூன்யங்கள் அணுகாது காக்க
    பிள்ளை என்றன்பாய் பிரியமாய் காக்க
    அரக்கர்கள் பூதங்கள் அண்டாமல் காக்க
    இரக்கமறு மாந்தர்கள் பகை இன்றி காக்க
    சிறை சென்று வாடாமல் சீருடன் காக்க
    மறையெலாம் போற்றும் உன் பொன்னடிகள் காக்க
    இல்லாமை நீக்கி எனை இறைவா நீ காக்க
    நில்லாத பசி எனை அண்டாது காக்க
    கடன் தொல்லை தீர்த்தெனை கருணையே காக்க
    கலியுகக் கொடுமைகள் கழிந்திடக் காக்க
    செய்தொழில் கருமங்கள் செய்வதை காக்க
    மெய் வருந்தாமல் எனை மேன்மையாய்க் காக்க
    புலத்திலும் நிலத்திலும் புகழனார் காக்க
    தலத்திலே வந்து உன் தனையனை காக்க
    கொடுவிச யந்துக்கள் கொட்டாது காக்க
    கொடுமைகொள் நுண்ணுயிர் வாட்டாது காக்க
    வானமும் வையமும் வளம் பெறக் காக்க
    தானமும் தர்மமும் தழைத்திடக் காக்க
    நல்லோர்கள் உறவுகள் நலிவின்றி காக்க
    வல்லோரும் எனை கண்டு வணங்கிட காக்க
    கனவிலும் நனவிலும் கருத்துடன் காக்க உன்
    நினைவுகள் நீங்காது நிலைபெறக் காக்க
    மானத்தில் பங்கங்கள் நேராது காக்க
    ஊனத்தில் துவண்டிங்கு வாடாது காக்க
    நீள் ஆயுள் நிறைசெல்வம் தந்தெனை காக்க
    வால் கொண்ட மணியினால் வந்தென்னை காக்க
    மரணத்தின் வாசலில் மாருதி காக்க
    சரணத்தை தந்தெனை மரணத்தில் காக்க
    பிறவிப் பிணியதை தீர்த்து நீ காக்க
    பிறவாமை தந்தெனை பிரியாமல் காக்க
    முனிவரும் தேவரும் எனக் அருள் செய்ய
    பனிதரும் திங்களின் மூலனே காக்க
    இனிவருங் காலங்கள் இனித்திட காக்க
    பிணிவருந்தாமல் என் துணிவினை காக்க
    பார்க்க நீ பார்க்க பாவங்கள் போக்க
    தீர்க்க நீ தீர்க்க தீ வினைகள் தீர்க்க
    வார்க்க நீ வார்க்க உன் அருளினை வார்க்க
    காக்க நீ காக்க உன்கதி தந்து காக்க
    ஆஞ்சநேயனே காக்க வாயுதேவனே காக்க
    வீர அனுமனே காக்க ராம பக்தனே காக்க
    ஸ்ரீ ராம பக்தனே காக்க காக்க.
    ×